Monday, December 22, 2014

அழகுமலர்களில் ஆரோக்கிய பானம்





உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஒயிட் டீ, பிளாக் டீ, ஜாஸ்மின் டீ, ஒலங் டீ, ஹெர்பல் டீ என
1,000-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருக்கின்றன.

தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் புத்துணர்வு தரக்கூடியது என்கிறார்கள். குறிப்பாக கெமோமில் தேநீர், க்ரீன் டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இதை ஜப்பானியர்கள் விரும்பி அருந்துகிறார்கள்

கெமோமில் எனப்படும் வெள்ளை இதழ்களை கொண்ட மூலிகைப்பூவை சூடான தேநீராக பருகினால் நல் தூக்கத்தை தூண்டுவதாக தெரிவிக்கின்றனர்.

கெமோமில் தேநீர் அருந்துவதால், நரம்பு தளர்வை செயல்படுத்தி உடலில் அமினோ அமிலம் கிளைசின் அளவை அதிகரிக்கிறது.

மேலும் தசைப்பிடிப்பு  வலிகளையும் குறைக்க உதவுகிறது..

குட்டையான செடியில் பூக்கும் மலர்களைக் கொண்ட சீமைச்சாமந்தி(Chamomile) மருந்திற்கு பெரிதும் பயன்படுகிறது..

புதிய மற்றும் உலர்ந்த கெமோமில்   பூக்கள் தேநீர் தயாரிக்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு  பல்வேறு சுகாதார நலன்களை கொடுக்கிறது.

ஒரு கப் டீக்கு தேவையான 3 உலர்ந்த கெமோமில் பூக்களை ஒரு கோப்பையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சுடு தண்ணீரை ஊற்ற வேண்டும்.  ஒரு 3 நிமிடங்களுக்கு மட்டுமே சுடு தண்ணீரில் அனுமதிக்கவும்.  சுடு தண்ணீரில் போட்டு வைத்துள்ள  மலர்களை நன்கு கலக்க வேண்டும். பின்னர் மலர்களை தனியாக நீக்க  வடிகட்டி கிரீன் டீயாக குடிக்கலாம்

சுவைக்கு  தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தலாம்.

 இரவு நேரத்தில் இந்த தேநீரை அருந்தி விட்டு படுத்தால் நல்ல தூக்கம்  வரும். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்

டீ வகைகளில் ஒன்றான   கெமோமில்ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்ட பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ்  செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

கெமோமில் பூக்களில் தயாரிக்கப்படும் தேநீர் தசை தளர்வை நீக்கவும், மனதை ஆறுதல் படுத்தவும் உதவுகிறது.

சீமைச்சாமந்தியின் தேநீர்  தூக்கம் வராமல் அவதிபடுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இப்பூக்களின் தேநீரை தினசரி எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவை  சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.        

 ஆக்ஸிஜனேற்ற பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளது.

சீமைச்சாமந்தியின் தேநீர் ஒவ்வாமைக்கு  எதிரான சத்துகளையும், இயற்கையாக பாக்டீரியாவை எதிர்க்கும் சக்திகளையும் கொண்டுள்ளது.

தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள  உதவுகிறது.

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

குளிர்ந்த அல்லது சூடான நிலையிலும் தேநீர் செய்து  பருகலாம்.
 சுவைக்காக விரும்பினால் தேநீருடன் தேன்  அல்லது எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கப்  தேநீர் பருகுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சீமைச்சாமந்தி தேநீர் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

ஆஸ்துமா, அலர்ஜி, மற்றும் உணர்வு திறனை  ஏற்படுத்தும் தோலை கொண்டவர்கள் தேநீர் மற்றும் மலர்களைக்கூட சுவாசிக்ககூடாது. 

16 comments:

  1. இன்றைய எனது டேஷ் போர்டில் முதல் பதிவு உங்களது பதிவு.உங்கள் பதிவைப் படித்ததும் சூடாக ஒரு கப் டீ குடித்தது போன்று மனதிற்கு இதமான ஒரு பதிவு. ஆன்மீகப் பதிவரான உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு. அடிக்கடி இது மாதிரி வித்தியாசமான பதிவுகளையும் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. தேநீர் பற்றிய புதிய தகவல்களை அறிந்தேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. கெமோமில் தேநீர் - இங்கே - குவைத்தில் கிடைக்கின்றது.
    ஆனால் அருந்தியதில்லை..
    இனி தொடர்கின்றேன்..

    ReplyDelete
  5. பழத் தேநீர் சுவைத்ததுண்டு. சீமைச்சாமந்தி தேநீர்....அறிமுகம் செய்தமைக்கு நன்றி அம்மா.....

    ReplyDelete
  6. கேமோமைல் டீ அடிக்கடி குடிப்பது வழக்கம். அதன் பலன்களும் அறிந்திருந்தாலும் இத்தனை விளக்கமாக அதனைப்பற்றி அறியத்தந்ததற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  7. ஆரோக்கிய பகிர்வு அருமை.

    ReplyDelete
  8. புதிய தகவலாக இருக்கிறதே...

    ReplyDelete
  9. கெமோமில் தேநீர் பற்றி அருமையான தகவல்கள். இதை இங்கு கமிலன் ரீ(kamillen tee) என்பார்கள்.இங்கு பிரபல்யம் மிக்கது. அதேபோல் சோம்பு தேநீரும்.(Fenchel tee.) பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. நல்ல தகவல்
    நன்றி ..

    ReplyDelete
  11. தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. நாங்கள் தடிமன் காய்ச்சல் வந்தால் இங்கு கமெலி ரீ என்று குடிப்போம்.
    நல்ல தகவல்கள்.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. உண்மைதான் கமோமைல் ரீ குடித்தால் றிலாக்ஸ் ஆகும்.. உடம்புக்கு ரொம்ப நல்லது என்றார்கள்.. புதிதாக வாங்கி வந்து, வந்த வேகத்திலயே அடுத்தடுத்து 2 பக்கட்டில் 2 கப் குடித்தேன்ன்ன்.. சூப்பர் சுவை... ஆனா என்ன காரணமோ அடுத்த நாள் தலை சுத்தி மயக்கம் எல்லாம் வந்து.. கஸ்டப்பட்டிட்டேன்:).. இப்போ கமோமைல் பெட்டி கபேட்டில் இருந்து என்னை பார்க்கிறது:) குடிக்க மாட்டாயா என:).. கிட்டப் போகவே பயமாக இருக்கு:).

    ReplyDelete
  14. பயனுள்ள ஆரோக்கிய பானம் பற்றிய பதிவும் படங்களுடன் மிக அருமை.

    ReplyDelete
  15. அழகு மலரின் ஆரோக்கியம் பானம் பற்றி தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  16. I have learnt about the benefits of drinking tea. Informative post miga arumai.

    ReplyDelete