Sunday, February 13, 2011

ஆஸ்திரேலிய ஆரஞ்சு










ஒரு வலைப்பை நிறைய உலகப் புகழ் ஆஸ்திரேலிய ஆரஞ்சு பழங்கள் வாங்கி வந்தோம். 
உரித்துக் கொடுத்தாலும் சாப்பிட மறுத்தார்கள் ..


 எட்டுத் துண்டுகளாக நறுக்கினால் தோல் மிகச் சுலபமாக உரிந்தது. 

சாப்பிட்டுப் பார்த்தால் மிகச்சுவையாக இருந்தது.

ஆந்திராவில் ரஸாலு என்றொரு மாம்பழம் உண்டே! சாப்பிட்டால் ரசம் மட்டுமே உணரமுடியும். சக்கை ஏதும் தட்டுப் படாதே அந்த மாம்பழத்தை நினைவுபடுத்தி ஆரஞ்சு வாசனையுடன் இனிமையாக இருந்தது.








பிரிஸ்பேன் அரசாங்கம் தினசரி உணவில் ஐந்து வகை காய்கள் மற்றும் இரண்டு வகை பழங்கள் இடம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறதாம். 

அதனால் பதப்படுத்தப்பட்ட சாறுகள் வெவ்வேறு வகைப் பழங்கள்,  காய்களின் படங்களுடன் குளிரூட்டப் பட்டு தயாராகக் கிடைக்கிறது. சுவையும் அருமையாக இருந்தது.

இதன் விழிப்புனர்வுக்காக http://www.gofor2and5.com.au என்னும் இனையதளத்தை நிர்வகித்து தெரியப் படுத்துகிறார்கள்.

பால் பல்வேறு வகையான கொழுப்பு அளவுகள், மணங்களுடன் பிளாஸ்டிக் கேன்களில் கையாளுவதற்கு எளிமையான வடிவில் இருக்கிறது.

வெண்ணையும் அதே போல். பிரட் வகை வகையாக், வேறுபட்ட சுவை, மணம், அளவுகளில் கிடைக்கிறது.

அலுவலகங்களில் ரொட்டி வாட்டு மின்கலம், குளிர்பதனப் பெட்டி, காபி மேக்கர் இருப்பதால் ரொட்டி, ஜாம், பால் அகியவை வாங்கி தங்கள் பெயரிட்டு வைத்துக் கொள்கிறார்கள்.









அலுவலகத்தின் உள் நுழைந்தவுடன் கணிணியை இயக்கிவிட்டு, அது தயாராவற்குள் ரொட்டி வாட்டி, காபி தயாரித்து சாப்பிட்டு வேலக்கு தயாராகி விடுகிறார்கள். 

மதியமும் தொழில்முறை உணவு (Business lunch / Working lunch) என்ற பெயரில் எளிமையாகச் சாப்பிட்டுவிட்டு தத்தம் கடமையைத் தொடர்வார்களாம்.

8 comments:

  1. உங்களது வலைப்பூவில் Tamil0,ta.indli, ஓட்டுப்பட்டைகளை நிறுவுவதன் மூலம் உங்களது தளத்துக்கு வருபவர்களின் எண்ணிககையை அதிகரிக்க முடியும்.-->Abi

    ReplyDelete
  2. சுவையான சத்தான பதிவு.

    ReplyDelete
  3. Interesting info.
    2+5 is a great formula!

    ReplyDelete
  4. Interesting info.
    2+5 is a great formula!

    ReplyDelete
  5. பார்க்கவே பளிச்சென்று உள்ள நல்ல கலரான சுவையான சுளைகள் கொண்ட பழங்கள். ;)

    ReplyDelete
  6. ஆரஞ்சை உரித்து பிரித்து விரித்து கடித்து ருசித்து மகிழ வேண்டும் போல ஆசையாக உள்ளதே !

    நான் என்ன செய்வேன்? ;(

    ReplyDelete
  7. ;)
    “ராம” “ராம” ”ராம”
    ”கோவிந்த தாமோதர மாதவ”

    ReplyDelete