Tuesday, March 1, 2011

விந்தை விலங்கு பிளாடிபஸ்


[20c.jpg][20c.jpg]
ஆஸ்திரேலிய இருபது செண்ட் 
நாணயத்தில் பிளாடிபஸ்ஸின் உருவத்தைப் பார்த்து 
திரட்டிய தகவல்கள் இவை.:

முட்டையிட்டு குஞ்சு பொறித்து பறவையையும்.
வளை தோண்டி எலியையும்
அசை போடுவது போல் உணவு உண்பதில் பசுவையும்
நீரில் நனையாத உடலமைப்பு வாத்தையும்
அலகின் பை போன்ற அமைப்பு மீன்கொத்தியையும்
நினைவூட்டிய ஆஸ்திரேலியாவிற்கே உரிய வித்தியாச விலங்கு.
[pty1.jpg]
பிளாடிபஸ் ஆஸ்திரேலியாவின் வித்தியாசமான விலங்கு.
முட்டையிட்டு,குஞ்சு பொறித்து, பாலூட்டும்.

அலகு வாத்தின் அலகைப் போல சற்றுப் பெரிதாக  அமைந்திருக்கிறது.

மீன்கொத்திப்பறவையின் அலகில் உள்ள பை போன்ற அமைப்பு கொண்டு,மிருதுவாகவும்,அங்குமிங்கும் அசையக்கூடியதாக  நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்.

எனவே இது (duck-billed)  -வாத்து அல்கு பிளாடிபஸ் என்றும் கூறுவர்.

தவளைபோல் நீரிலும் நிலத்திலும் வாழும். நிலத்துக்கு அடியில்
பெருச்சாளி போல வளை தோண்டி வசிக்கிறது. மிக நீண்ட சுமார்
ஐம்பது அடி நீளமான வளை தோண்டும் வல்லமை பெற்றது.
வளை தோண்டுவதற்கு நதிக்கரையிலுள்ள ஈரமண் எளிதாக, 
இலகுவாக இசைந்து கொடுக்கிறது.

பிளாடிபஸ்ஸின் தோல் நீருக்கடியில் உணவு தேடி உலாவர ஏற்றதாகவும்,விரைவில் உலர்ந்துவிடும் தன்மை பெற்றதாகவும், உரோமங்களைக் கொண்டுநீண்ட வாலில் தேக்கி வைக்கப் பட்டிருக்கும் கொழுப்பு பனிக்காலங்களில்பனிக் கொடும் குளிரில் உறைந்துவிடாதபடி, இயற்கையன்னையால் ஆசீர்வதிக்கப்பெற்றிருக்கிறது.

நெருப்புக்கோழி தன்னை துரத்தி வருபவர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கமண்ணுக்குள் தலையைப் புதைக்கும் முட்டாள் பறவை என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

அதே போல் பிளாடிபஸ்ஸும் கண்களை மூடிக்கொண்டுதான்
இரையைப் பிடிக்குமாம்.

அலகிலுள்ள் மின்சார உந்து சக்தியின் தூண்டுதலால் 
அருகில்வரும் இரையைபிடிக்கிறதாம். 

நீரில் வாழும் சிறு சிறு பிராணிகளைப் பிடித்தவுடன் சாப்பிடாமல்தன் அலகில் உள்ள பை போன்ற அமைப்பில் அடைத்து வைத்துக் கொண்டுதண்ணீருக்கு வெளியே வந்து பையிலிருந்து எடுத்து உண்கிறது.
ஆடு, மாடு, ஒட்டகமெல்லாம் அசை போடும் நினைவு வருகிறது.
[sp1.jpg]
ஆண்-பிளாடிபஸின் பின்கால்களில் மிகச்சிறிய விஷமுள்ள கொம்பு
வடிவ நகத்தால் எதிரிகளிடமிருந்து தப்பிக்கிறது. !

ஒரு நாயைக் கொல்லும் அளவு விஷமுள்ள விஷக் கொடுக்கு மனிதர்களுக்கு  நோயை உண்டாக்குமே அல்லாது கொல்லுமளவிற்கு இருக்காதாம்.

பெண்-பிளாடிபஸ்ஸின் இரு பைகள் போன்ற அமைப்பு குட்டிகளுக்குப்
பாலூட்டப் பயன்படுகிறது.





17 comments:

  1. படங்களுடன் நல்ல பகிர்வு. நன்றிங்க... இதை பற்றிய டிவி நிகழ்ச்சியை விரும்பி பார்த்து இருக்கிறேன்.

    ReplyDelete
  2. வித்தியாசமான தகவல், பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நிறைந்த தகவல்களுடன் நல்ல பதிவு.

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு.எழுத்தாளனின் தரத்திற்கும்
    அவன் எழுத்தின் தரத்திற்கும் நிச்சயம்
    தொடர்பு உண்டு என நம்புபவன் நான்.
    தரம் என்பது வசதி வாய்ப்பு சம்பத்தப்பட்டதல்ல
    அவன் மனம் சம்பத்தப்பட்டது.
    தொடரட்டும் உங்கள் தரம்மிக்க பதிவுலகப் பணி
    .வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. புதிய இதுவரை தெரியாத தகவல்களை
    படங்களுடன் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்
    நல்ல பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி
    .வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. Ramani said...//

    புதிய இதுவரை தெரியாத தகவல்களை

    படங்களுடன் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்
    நல்ல பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி//
    Thank you Sir.

    ReplyDelete
  7. சாமி சாரின் வலையிலிருந்து உங்க வலைக்கு வந்தேன். அதிசயமான விலங்குதேன். கொஞ்சம் கவனமாதான் இருக்கணும் போல !!

    ஆனா நான் ஆஸ்திரேலியாவில இல்லையே??? :))

    கோவைல நீங்க எந்த எடத்துல இருக்கீங்க? நான் கணபதி. இப்ப அமரிக்காவில் எப்படா ஊர்க்கு வருவோம்னு இருக்கு :((

    ReplyDelete
  8. புன்னைநல்லூர் மாரி அம்மன் கோவில் தரிசனத்தை நேரில்
    பார்த்தது போன்ற மகிழ்ச்சி என்னுள் ! அழகான பகிர்வு !

    ReplyDelete
  9. @அன்னு said...//
    ஆமாங்க எங்கு சுற்றியும் ரங்கனைச் சேவி என்பதைப் போல எங்கு சென்றாலும் எப்போது கோவை செல்வோம் என்று தான் நினக்கத் தோன்றும்.
    கோவை வந்தால் கணபதியிலிருந்து மெயில் அனுப்புங்கள். உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேன். மிகச் சிறப்பானவை.நன்றி.

    ReplyDelete
  10. வித்தியாசமான தகவல், பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. நல்ல பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி//

    ReplyDelete
  12. நல்ல பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி
    .வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  13. அருமையான பகிர்வுகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. இதுவரை கேள்விப்படாத ஒரு பிராணியைப்பற்றி, அக்குவேறு ஆணி வேறாகப் புட்டுப்புட்டு, தகவல்களை அளித்து, படத்தையும் இணைத்து, அமர்க்களப்படுத்தியுள்ளீர்கள்.

    ’விந்தை விலங்கு பிளாடிபஸ்’ போலவே தாங்களும் ஓர் விந்தைப் பதிவர் போலத்தான், தெரிகிறீர்கள்.

    பாராட்டுக்கள். ;)))))

    ReplyDelete
  15. மிகச் சிறப்பான ஆக்கம். அறியாத பலரும் அறிந்துகொள்ளும் வகையில் நல்லதொரு முயற்சி. படங்கள் கூடுதல் பலம். மனமார்ந்த பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete