Tuesday, May 10, 2011

மகான் சதாசிவ பிரமேந்திரர்!


Sadhasiva Bramendirar
கரூர் அருகே உள்ள நெரூரில் புகழ் பெற்ற அருள்மிகு சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில்  புகழ் பெற்றது சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி. 
கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் உள்ளது நெரூர்.

காவிரி ஆற்றின் அருகில் அமைதியின் சின்னமாக அமைந்துள்ள கிராமத்தில்
மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. 

நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ள.
 அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் இயற்கை அழகு மிக்க அமைதியான சூழலில் அமைந்துள்ளது சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி.

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தார்.

அவர் தந்தை பெயர் சோமநாத அவதானியார். தாயார் பெயர் பார்வதி அம்மையார். 

இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்ற சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் .

திருவிசலூர் மகா வித்வான் ராமசுப்ப சாஸ்திரிகளிடம்  வேதாந்த பாடம் பயின்றார். 

 ஞான குருவை நாடிய சுவாமிகள்  காஞ்சி காமகோடி பீடாதிபதியாக, ஸ்ரீ பரமசிவந்திர சுவாமிகளிடம் தஞ்சம் அடைந்தார். 

சிவராமகிருஷ்ணனுக்கு சதாசிவம் என பெயர் சூட்டி, ஞான ஆசிரியர் ஆனார்.

பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். 

மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார்.

சதாசிவத்தின் மெய்யறிவு திறனும், தேஜசும் கண்டோரை அஞ்ச வைத்தன.  

குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.

உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து கடும் தவம் செய்து ஞானநிலை அடைந்தார்.

சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றும் பல ஆன்மீக புருஷர்கள் ஆச்சர்யத்துடன் சொல்லும் விஷயம் ஒருமுறை சதாசிவ பிரமேந்திரர் உடல்,ம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் திகம்பரராய் ஒரு அரசரின் அரண்மனைக்குள் நுழைந்து விட்டாராம்.

 பார்த்த  அரசன் பிரமேந்திரரைப் பற்றி அறியாததால்,  தன் அவையில் நுழைந்த பிரமேந்திரரின் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டாராம்..


ஆனாலும் பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தாராம். 

 அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான் ...


சதாசிவ பிரமேந்திரின் குருவான பரமசிவேந்திராளின் ஜீவ சமாதி புதன் கேந்திரம் என்று அழைக்கப்படும் திருவெண்காட்டில் உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள்: மிக சக்தி வாய்ந்த ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி உள்ளது. 

இவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் (நெரூர்) 10வது நாளில் அந்த இடத்தில் வில்வமரம் வளரும், அதன் அருகிலேயே சுயம்பு லிங்கம் தோன்றும் என்று கூறினார். அதே போன்று நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

 வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைப்பதால் மக்கள் பக்தியுடன் வந்த வண்ணம் உள்ளனர். 

பெளர்ணமி பூஜை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூஜை, சித்திரை மாத குரு வார பூஜை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படும். 

சதாசிவபிரமேந்திராளின் உடல் நெரூரிலும், ஆவி மானாமதுரையிலும், ஜோதி கராச்சியிலும் அடக்கம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.


காஞ்சி சங்கராச்சாரியார், சிருங்கேரி சுவாமிகள் ஆகியோரும் இங்கு வழிபாடு நடத்தியுள்ளனர் 

ஸ்ரீபிரஹ்மேந்திராளின் ஜீவசமாதியை பிரதட்சிண நமஸ்காரம் செய்பவர்களுக்கு ஜனன மரணங்களுக்கு ஹேதுவான பந்தங்கள் அகலும்.


சிருங்கேரியில் ஆசார்யராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு ப்ரம்ம ஞானத்தில் ஏதோ சந்தேகம் எழுந்ததாம். அப்போது அதைப் பற்றி கலந்து உரையாடித் தெளிய யாரும் இல்லாத நிலையிருந்ததாம். அதாவது ப்ரம்ஹ ஞானத்தை அடைந்தவர், உணர்ந்தவர் மட்டுமே தெளிவிக்க முடியும் என்பதால் அவ்வாறான ஒருவரைத் தேடியபோது, ஸ்ரீசதாசிவர் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். தமது விஜய யாத்திரையில் தென் பகுதிக்கு வரும் போது சதாசிவ பிரம்மேந்திரரது அதிஷ்டானத்தை அடைந்து பிரார்த்தனை செய்ய முடிவு செய்கிறார்.

















பல்லக்குடன் முன்னே செல்கையில் தம்மை யாரோ பின்புரம் தள்ளுவதாக உணர்வதால் எதிர்த்துச் செல்வது சிரமாக, அதிக நேரம் பிடிப்பதாகச் சொல்கின்றனர். தமது திருஷ்டியில் இது பிரம்மேந்திரரைப் பார்க்கச் செல்லும் முறையல்லஎன்று உணர்ந்து, பல்லக்கிலிருந்து இறங்கி தமது கை நீட்டி அது நீளூம் வரையில் நடந்து, பிறகு ஒரு நமஸ்காரம் செய்து பின்னர் இன்னொரு கை தூரம் நடந்து மீண்டும் நமஸ்காரம் செய்வதுமாகச் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெரூரை அடைந்தாராம்.
















ஸ்ரீ ஸ்வாமிகள் வெளியில் வருகையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தை போற்றி 45 ஸ்லோகங்களை [ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவம்] எழுதி எடுத்து வந்து சதாசிவ பிரம்மத்திற்குதாம் பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னாராம். 

அங்கிருந்து கிளம்பும் போது ஸ்ரீ சதாசிவ பிரம்மத்தின் படத்தை பல்லக்கில் வைத்து சிருங்கேரிக்கு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போதும் சிருங்கேரி ஆசார்யர்கள் தமது தமிழக விஜயத்தில், குறிப்பாக பட்டமேற்ற பிறகு வரும் முதல் பயணத்தில் நெரூர் வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள் அளிப்பதைக் காணலாம்.


ஒரு சமயம் தஞ்சாவூருக்கு அருகே இருந்த புன்னைவனக் காட்டில் சதாசிவர் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அப்போது தஞ்சையை ஆண்டு வந்த மன்னன் மராட்டி அரச வம்சத்தைச் சேர்ந்த சஹாஜி என்பவன் பெண் குழந்தைக்குகண் நோய் நீங்குவதற்காக சமயபுரம் மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு, தங்கத்தில் கண் செய்து வைப்பதாய் மன்னர் பிரார்த்தித்துக் கொண்டார். அன்றிரவு அவர் கனவில் ஓர் பெண் குரல், “நான் இங்கேயே இருக்கிறேனே? நீ ஏன் சமயபுரம் செல்லவேண்டும்?” என்று கேட்க, விழித்த மன்னர் மறுநாள் தன் மந்திரி, பிரதானிகளிடம் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எங்கே அம்மன் எழுந்தருளி இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க நாலாபுறமும் ஆட்களை அனுப்புமாறு கட்டளையிட்டான். ஆனால் யாருக்கும் அம்மன் கோயில் எதுவும் தென்படவே இல்லை. ஆனால் சில சிறு பெண்குழந்தைகள் ஓர் இடத்தில் உள்ள சிறு புற்றுக்கு வேப்பிலை வைத்து, அதை மாரியம்மன் என்று பெயர் சூட்டி விளையாடுவதைக் கண்டனர். உடனேயே மன்னனிடம் கூற மன்னனும், தன் பரிவாரம் புடை சூழ அங்கே வந்தான்.

வந்த மன்னன் கண்களில் ஒரு புன்னை மரத்தடியில் கண்மூடி யோக நிஷ்டையில் இருந்த சதாசிவர் கண்ணில் பட்டார். மன்னன் அவரை பணிவோடு வணங்கி, “இங்கே மாரியம்மன் கோயில் இருப்பதாய்க் கனவில் வந்தது. ஆனால் புற்று ஒன்று தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகள் விளையாடும் புற்றாய்த் தெரிகிறது. கோயில் எங்கே உள்ளது என்பதைத் தாங்கள் கண்டறிய வேண்டும்.” என்று வணங்கி நின்றான். பிரம்மேந்திரர் கண் திறந்து பார்த்து, “அந்தப் புற்றே கோயில்! அவளே மாரியம்மன்!” என்று அருளிச் செய்தார். “ஐயனே! இந்தப் புற்றில் அம்மனின் உருவம் இல்லையே?” என மன்னன் வேண்ட, பிரம்மேந்திரரும் மன்னனைப் புனுகு, ஜவ்வாது, சந்தனம் ஆகியவற்றைக் கொண்டுவருமாறு பணிக்க. மன்னனும் அவ்வாறே அந்தப் பொருட்களைத் தயார் செய்தான். அவற்றை அங்கிருந்த மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து மாரியம்மனின் உருவை உருவாக்கினார் பிரம்மேந்திரர். கூடவே ஜன-ஆகர்ஷண யந்திரமும் எழுதி அம்மன் முன்னால் வைத்தார். மன்னனை இவற்றுக்கு வழிபாடு நடத்தும்படி சொல்ல மன்னனும் அவ்வாறே வழிபட்டான். குழந்தையின் கண்களும் பூரண குணம் அடைந்தது.

மன்னன் பக்தியைக் கண்ட சதாசிவரும், அங்கேயே இருந்த மணலிலேயே தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காட்டினார். மன்னனும் மந்திரத்தைக் கற்றுக் கொண்டதோடல்லாமல் அந்த மணலையும் வெகு சிரத்தையாகவும், பக்தியுடனும், தன் மேல் துண்டில் எடுத்துச் சென்று அரண்மனையில் ஒரு தங்கப் பேழையில் வைத்து பூஜை அறையில் வழிபடத் தொடங்கினார். 

அந்த மணல் வழிபாடு இன்றளவும் புதுக்கோட்டை புராதன அரண்மனையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் நடந்து வருவதாகவும், இந்த ஆலயம் கிழக்கு ராஜவீதியில் உள்ள சாந்தநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகே இருப்பதாகவும் சொல்லுகின்றனர். மேலும் இவர் தனது அவதூதநிலை பிறர் கண்களில் புலப்படாமல் இருக்கப் பல்வேறு மிருகங்களின் உருவத்தை எடுத்துக் கொள்ளுவார் என்றும் சொல்லுகின்றனர்.
 இதைப் பற்றித் திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலத்துக்குச் சென்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தான் நேரிடையாகப் பார்த்த அனுபவம் என்று எழுதி இருக்கிறார்.
“உண்மையிலேயே ஞானிகளும், சாதுக்களும் உள்ள ஆன்மீகநாடுதான் இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், "இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே' என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார்.

கரூரில் வசித்த வைதீகக் கனபாடிகள் ஒருவர் திருப்பதி போக ஆசைப்பட்டும் போகமுடியாமல் பெருமாளைத் தரிசிக்க முடியாமல் இருந்தார். அவர் பிரம்மேந்திரரை அணுகி, “ஸ்வாமி, திருப்பதி செல்வதும், பெருமாளைத் தரிசிப்பதும் மிகக் கஷ்டமான ஒன்றாய் இருக்கிறது. தாங்கள் இவ்வூரின் அருகே உள்ள மலைக்காட்டில் குடி இருக்கும் தான் தோன்றிப் பெருமாள் என்னும் பெயர் கொண்ட தானாகத் தோன்றிய ஸ்வயம்பு மூர்த்தியைத் தரிசித்தால் திருப்பதி சென்ற பலன் வரவேண்டும் என்று ஆசீர்வதியுங்கள். நான் அந்தப் பெருமாளைத் தரிசிப்பதோடல்லாமல், மற்றவர்களும் பயனடைவார்கள்.” என்று பிரார்த்தித்தார். பிரம்மேந்திரரும் ஆசிகளை வழங்கியதோடு தான் தோன்றி மலையப்பருக்கு ஜன-ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி வழிபட்டார்.


அன்றிலிருந்து திருப்பதிக்குச் சென்று வந்த பலன்கள் மட்டுமில்லாமல் வேண்டுவோர் வேண்டியதைக் கொடுக்கும் தான் தோன்றிப் பெருமாள் என அனைவரும் பலன் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையில் அந்த ஊர் மக்கள் சதாசிவ பிரம்மேந்திரர் ஜன ஆகர்ஷண யந்திரம் வழிபட்ட நாளாகச் சிறப்பாய்க் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வருஷமும் நெரூரில் வைகாசி சுத்தபஞ்சமி அன்று தொடங்கி சுத்த தசமி வரை தொடர்ந்து வைதீக முறையில் உற்சவம், ஆராதனைகள் நடைபெறும். முக்கிய ஆராதனை அன்று நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து ஒலிக்க, பக்தர்களுக்கு அன்னதானமும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்களின் அங்கப் பிரதக்ஷிணமும் நடைபெறும். நாம சங்கீர்த்தனம் என்றாலே சதாசிவ பிரம்மேந்திரர்தான் நினைவில் வருவார்.

அவர் இன்னமும் ஜீவசமாதியில் இருந்து கொண்டு நாமசங்கீர்த்தனம் செய்து வருவதாய் அந்த அதிஷ்டானம் சென்று வந்தவர்கள் அதன் சாந்நித்தியத்தின் மூலம் தெரிய வருவதாய்ச் சொல்கின்றனர்.

22 comments:

  1. நன்றி. இந்த மகான் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். பொறுமையாகப்படித்து விட்டு, இன்று மாலை பின்னூட்டம் அளிக்கிறேன்.

    ReplyDelete
  2. இன்று பிரபலமாக இருக்கும் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு சித்தர் ஜீவசமாதி இருப்பதாக கேள்விபட்ட்ருகிறேன். அருமையான தகவல்களை ஆன்மீக உணர்வுடன் சொல்லிருக்கீங்க! பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. மகான் சதாசிவ பிரமேந்திரர் பற்றிய விரிவான செய்திகள் அறிந்து கொண்டோம். படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. பக்தியில் மனதை
    நிறுத்தி
    அமர்த்தி
    செலுத்தி
    செதுக்கி உள்ள
    பொக்கிஷ பதிவு

    உணர்வுகளை
    ஊடுருவும்
    உங்களின்
    உயர்ந்த
    உத்தம பதிவுகளுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  5. சதாசிவ பிரும்மேந்த்ராள் பற்றி எல்லா விபரங்களும் வெகு அருமையாக வெளியிட்டுள்ளீர்கள். நான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களும் அதற்கு மேலும் விரிவாகவே தரப்பட்டுள்ளன. நன்றி. வாழ்த்துக்கள்.

    //முக்கிய ஆராதனை அன்று நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து ஒலிக்க, பக்தர்களுக்கு அன்னதானமும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்களின் அங்கப் பிரதக்ஷிணமும் நடைபெறும்.//

    ஆம். ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    ReplyDelete
  6. My God!!!!!
    What a great writings dear.
    I Realy, really enjoyedd well. Thanks a lot for the article.
    viji

    ReplyDelete
  7. Seenivasan KalaiyarasiMay 11, 2011 at 10:57 PM

    Nerur Sri Sadasiva Brahmendirar jeeva samadhi matrum Sivan Parvathi Thiru thalam pattriya thangal pathivirku manamarndha Nandrigal.. Sri Ramakrishna Paramahamsar kanavil Sadasiva Brahmendirar katchi thandha pothellam thanaku itharku mun kidaithiratha mana amaidhi pettradhaga therivithu ullar.. Athu pondra mana amaidhiyai ulaga makkal anaivarum pera vazhikaattiyai amaindha thangal pathivirku Vazhthukkal..

    ReplyDelete
  8. @ Seenivasan Kalaiyarasi said...//தங்களின் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும். தங்கள் கருத்தைப் பார்த்தவுடன் நேரில் சென்று உணர்ந்த தங்களின் அனுபவம் மனதைத் தொட்டது.
    ஆம். ராமகிருஷ்ண பரமஹம்சர் - பிரம்மேந்திராளின் காட்சி பெற்று அமைதி பெற்ற அனுபூதி அனைவருக்கும் கிட்ட அவர்களைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  9. @வை.கோபாலகிருஷ்ணன் //
    ஆழ்ந்தகருத்துகளுக்கு நன்றி ஐயா.
    மிகச்சிறப்பாக நடைபெறும் விழா பற்றியும்,பொறுமையாக படித்து கருத்துக்களை கூறி ஊக்குவிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. @FOOD said...//
    தங்கள் கருத்து மிகச் சரி ஐஆ. பழனி, திருப்பதி, மருதமலை, திருவரங்கம், மற்றும் பல தலங்கள் மகான்களின் சமாதிகள் அமைந்து அருள் சாந்நித்யங்கள் நிறைந்தவை.

    ReplyDelete
  11. @கோமதி அரசு said...//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

    ReplyDelete
  12. @ A.R.RAJAGOPALAN said...//
    அருமையான கவிதையுடன் கூடிய தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. @viji said...//
    மகிழ்ச்சியான தங்களின் கருத்துக்கள் எனகு மிகவும் உவகை அளிக்கின்றன. நன்றிங்க.

    ReplyDelete
  14. VERY NICE AND THE MOST IMPORTANT WORSHIP PLACE

    ReplyDelete
  15. பதிவு மெய் சிலிர்க்க வைத்தது. பாலகுமாரன் அவர்களின் "தோழன்" கதையைப் படித்து, சதாசிவ பிரமேந்த்ரை பற்றி மிக உயர்வான பக்தி எழுந்தது. இவரின் ஜீவ சமாதியை சென்று தரிசிக்க வேண்டும் என்பதும் என் அவா.

    http://www.noolulagam.com/product/?pid=5485


    இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.

    ReplyDelete
  16. மிக அருமையாய் விளக்கி இருக்கிறீர்கள்.நன்றி.

    Plz check the Following link for AthmaBpdendra Swamigal

    http://goo.gl/108G2

    Thanks

    ReplyDelete
  17. இது வரை நான் அறிந்திராத ஒரு சித்தரின் வரலாற்றை பதிவிட்டுள்ளீர்கள் .....நன்றி!

    ReplyDelete
  18. ;)

    கேஸவா
    நாராயணா
    மாதவா
    கோவிந்தா
    விஷ்ணு
    மதுசூதனா
    திருவிக்ரமா
    வாமனா
    ஸ்ரீதரா
    ஹ்ருஷீகேஷா
    பத்மநாபா
    தாமோதரா
    -oOo-

    ReplyDelete
  19. An excellent work. One thing, I could not copy this to my folder. Can I get a copy of this to my email?

    ReplyDelete