Monday, December 5, 2011

கார்த்திகை விளக்கீடு



deepamdeepam



தீபம், அத்தனை மாதங்களிலும் ஒளிர்ந்தாலும்,
உன்னதம் என்னவோ கார்த்திகையில் தானே!.
கார்த்திகைக்கும் தீபத்திற்கும்,
காலம் தொட்ட,கலாச்சார உறவு உண்டு

அந்த உறவின் தன்மை  ஒளிமயமானது. . .
பார்ப்பவர்களை லயிக்கச் செய்கிறது.
. .

“அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவில் அறிவால் உணர் கழலோனே
குறுமுனிவர் ஏத்தும் முத்தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே”

என்று கார்த்திகைப் பெண்கள் எடுத்து 
வளர்த்த கந்தப் பெருமானை அருணகிரியார் பாடி மகிழ்வார்.
சிவபெருமான் அருட்பெரும்ஜோதியாக தரிசனம் தரும் திருநாள். 

ஞானப் பேரொளி உமையையும், தீப லட்சுமியையும் 
திருவிளக்கில் போற்றும் நாள். 

திருமால் திரிவிக்கிரமனாக அவதரித்து 
மாவலியைப் பாதாளத்தில் அமிழ்த்திய நாள். 
பரணி தீபம், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் 
என்று எல்லா ஆலயங்களிலும்,  கொண்டாடப் படும் திருநாள் இது. 

சிறு சிறு குடிசைகள் கூட விளக்குகளால் அலங்கரிக்கப் படும் நாள் 
கார்த்திகையில் கார்த்திகை நாள் கார்மேனிக் 
கமலக் கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள். 

உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் 
கடவுள் அடக்கிய நாள்… 


      
பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள். 

வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை 
நிலையின் வனப்பை எய்திய நாள். 
[Shiva+jyotirlinga.jpg]
மறமிடர்ப்படுக்கப் பட்ட மகிமைப் பெருநாள். 
அறம் தழைத்தோங்க ஆரம்பித்தத ஆனந்தத் திருநாள். 
தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள். 
வாணவேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள். 
பாரத மக்கள் ஸ்ரீ பகவானருள் பெற்ற நாள். 
கிருபாநிதிக் கடவுள் கருணை பொழிந்திடு நாள். 
பார் உவந்த உத்தமத் திருநாள் கார்த்திகையில் 
கார்த்திகை நாளே. என்பார் மகாகவி பாரதி..

இத்திருநாளில் நாம் ஏற்றும் தீபங்கள் புற இருளை அகற்றுவது போல், ஞானம் என்ற பேரொளி நம் மன இருளை மாய்க்க வேண்டும்.
 “மனத்து இருளேதுமின்றி” என்று அபிராமி அந்தாதியும், 
“மனத்திருள் மூழ்கி கெடலாமோ” என்று திருப்புகழும் சுட்டுவது 
இதைத் தான்.
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே !

ஒளியை ஒலிக்கும்- திருமந்திரம்  பாடல்வரிகள் உள்ளத்தில் ஒளியேற்றும்...


 சென்னை திருமயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் வந்தபோது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன்வைத்துசிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் 
விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.

இந்து தர்மத்தின் சமய ஒருமையைப் பறை சாற்றும் திருநாள் கார்த்திகை.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “கார் நாற்பது” என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் -மூலம் இந்த தெய்வீகத் திருநாளின் தொன்மையை அறியலாம். 


சைவமும், வைணவமும் செழித்து வளர்ந்த காலகட்டங்களிலும் 
இத்திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. 


நாம் ஏற்றும் தீபங்கள் அக இருள் அகற்றும் தெய்வீக ஞானத்தின் உருவகங்கள் என்பதையும் பல பாடல்கள் உணர்த்தும்.

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழித்
தூதொடு வந்த மழை

இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது . 

மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. மாட்டுத் தலயுடன் கொண்ட சிந்திக்கா அசுரனை வீழ்த்தும் சக்தியை ஒரு இந்துவாக நம்மில் பலர் வணங்குகிறோம்...

அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். 
எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். 
நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!

- ரவீந்திர நாதத் தாகூரின் கவிதை

அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம்.

திருநாவுக்கரசருக்குபெற்றோர் இட்ட பெயர் மருள்நீக்கியார். 
இருள் நீக்க வந்த்வருக்கு என்ன பொருத்தமான பெயர் !!!


http://www.vallamai.com/?p=11541
வல்லமை மின் இதழில் வெளியான எமது.. ஆக்கம் ..!

Karthigai Deepam

Visit Us @ www.MumbaiHangOut.OrgVisit Us @ www.MumbaiHangOut.Org

35 comments:

  1. இன்று உங்களுக்கு என்னால் பின்னூட்டம் கொடுக்க பேருதவி செய்த [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மீண்டும் வருவேன். vgk

    ReplyDelete
  2. ஜொலிக்கும் முதன் சிவனும், பூ மழை பொழிய நின்று நிலையாக எரியும் குத்து விளக்கும் ஆரம்பமே ஜோர் தான்.

    ReplyDelete
  3. ஆஹா! அடுத்தபடம் பிரும்மாண்ட கோயிலின் பிரகாரம், ஜொலிக்கும் படி காட்டியுள்ளது அற்புதம்.

    ReplyDelete
  4. அடுத்த படத்தில் சூர்ய கோடிப் பிரகாசமாய், சங்கு சக்கரங்களுடன், கையில் ghathai யுடன், தாமரை மலருடன் எழுந்தருளியுள்ளது சூப்பராகக் காட்டப்பட்டுள்ளது. தன்வந்தரியை ஞாபகப்படுத்துவதாகவும் இருந்தது.
    அமிர்த கலசம் மட்டுமே இல்லை.

    ReplyDelete
  5. அடுத்த படத்தில் வீட்டு வாசலில் அழகாக மிகவும் நேர்த்தியாக தீபங்களை ஏற்றிக்கொண்டிருப்பதும், திரிகளைத் தூண்டிக்கொண்டிருப்பதும், எண்ணெயை ஊற்றிக்கொண்டே இருப்பதும், நம் பெண்களுக்கே உரித்தான வெகு அழகான செயல் அல்லவோ. எவ்ளோ ஜோராக உள்ளது. கண்களுக்கு நல்லதொரு விருந்தல்லவோ! ;))))

    ReplyDelete
  6. வட்டவடிவமான அந்த அகல் விளக்குகளும் வெகு அருமையாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருப்பினும் புதிதாக ஒருசில அகல்விளக்குகள் வாங்கி அவற்றை தண்ணீரில் ஊறப்போட்டு பிறகு காய வைத்து உபயோகிக்க வேண்டும், என்பது சாஸ்திரம் என்பார்கள்.

    இதில் அந்த அகல்களை நமக்குச் செய்து தரும் கலைஞர்களின் வாழ்வாதரமும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பது தான் முக்கியமான விஷயம்.

    ReplyDelete
  7. பல்வேறு அலங்கார விளக்குகளும், அந்த சிவலிங்கமும், பாரதியார் பாடலும் மிகச்சிறப்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மஹாதீபம் நாங்களும் உங்களால் தரிஸிக்க முடிந்தது.

    சூரிய தேவனிடம் சிறிய அகல் விளக்கு பேசியது, அதன் தன்னம்பிக்கையையே வெளிப்படுத்துவதாக உள்ளது. அடிக்கடி பவர்கட் ஆகும் போதும் சமயத்தில் இன்று கூட அகல் விளக்கு தேவைப்படக்கூடுமே!

    அகலில் எளிமையான அந்தச் சொற்கள் அழகானவை. எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

    ReplyDelete
  8. வல்லமை மின் இதழ் வெளியீட்டுப்படங்களும், மொய்மொய் என்ற ஜனங்கள் கூட்டமும்,அந்த புஷ்பப்பல்லாக்குப்பந்தலும், கட்டை குட்டையான நம் தொந்திப்பிள்ளையார் புறப்பாடும், (கைலி கட்டியதுபோன்ற)
    அவரின் முரட்டு மூஷிக வாகனமும்,
    பூக்கோலத்தில் உள்ள சிவலிங்கமும், ரிஷப வாகன ஸ்வாமி அம்மனும், ஜகத்ஜோதியாகக் காட்டப்பட்டுள்ள செஞ்சி அருணாசலேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்த சிவலிங்கமும் அபாரம் அபாரம்.

    சபாஷ்!

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இன்று உங்களுக்கு என்னால் பின்னூட்டம் கொடுக்க பேருதவி செய்த [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மீண்டும் வருவேன். vg/

    கற்றலும் கேட்டலும் என்றும் பேருதவி செய்யும் என்பதை நிரூபித்திருக்கும் திருமதி ராஜி மேடத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  10. குட்டிகள் ஏற்றும் குட்டிக்குட்டி அகல்களும், அசைந்தாடும் அந்த ஆப்பிள் பழங்களும், ரோஜாப்பூக்களின் நடுவே மிகுந்த பாதுகாப்புடன் எரியும் அந்த தீபமும் நல்ல அழகு. அதன் அடிப்புறம் எண்ணெய் உள்ளதா என்று பார்க்கும் விதமாக வடிவமைத்துள்ளதும் அதற்கு டீக்கப் போல கைப்பிடி கொடுத்துள்ளதும் சிறப்பானதொரு பயனுள்ள Product design அல்லவா!

    தயாரித்தவர் நல்ல புத்திசாலி தான்.

    மொத்தத்தில் மிக நல்ல பதிவு.
    படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் வெகு அருமை.

    கடும் உழைப்பு தீபம் போலவே நன்கு பளிச்சிடுகிறது.

    கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஜொலிக்கும் முதன் சிவனும், பூ மழை பொழிய நின்று நிலையாக எரியும் குத்து விளக்கும் ஆரம்பமே ஜோர் தான்./

    ஜோரான கருத்துரையால் பதிவை ஒளிரவைத்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா! அடுத்தபடம் பிரும்மாண்ட கோயிலின் பிரகாரம், ஜொலிக்கும் படி காட்டியுள்ளது அற்புதம்./

    ஜொலிக்கும் கருத்துரைக்கு மனம் நிறைந்த ந்ன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அடுத்த படத்தில் சூர்ய கோடிப் பிரகாசமாய், சங்கு சக்கரங்களுடன், கையில் ghathai யுடன், தாமரை மலருடன் எழுந்தருளியுள்ளது சூப்பராகக் காட்டப்பட்டுள்ளது. தன்வந்தரியை ஞாபகப்படுத்துவதாகவும் இருந்தது.
    அமிர்த கலசம் மட்டுமே இல்லை./

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வட்டவடிவமான அந்த அகல் விளக்குகளும் வெகு அருமையாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருப்பினும் புதிதாக ஒருசில அகல்விளக்குகள் வாங்கி அவற்றை தண்ணீரில் ஊறப்போட்டு பிறகு காய வைத்து உபயோகிக்க வேண்டும், என்பது சாஸ்திரம் என்பார்கள்.

    இதில் அந்த அகல்களை நமக்குச் செய்து தரும் கலைஞர்களின் வாழ்வாதரமும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பது தான் முக்கியமான விஷயம்./

    எத்தனை அருமையான வாழ்வாதரங்களைப் பின்னிப்பிணைந்து விழாக்கள் கொண்டாட்ப்பட்டு வருகின்றன என்பதை விளக்கிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said...
    பல்வேறு அலங்கார விளக்குகளும், அந்த சிவலிங்கமும், பாரதியார் பாடலும் மிகச்சிறப்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மஹாதீபம் நாங்களும் உங்களால் தரிஸிக்க முடிந்தது.

    சூரிய தேவனிடம் சிறிய அகல் விளக்கு பேசியது, அதன் தன்னம்பிக்கையையே வெளிப்படுத்துவதாக உள்ளது. அடிக்கடி பவர்கட் ஆகும் போதும் சமயத்தில் இன்று கூட அகல் விளக்கு தேவைப்படக்கூடுமே!

    அகலில் எளிமையான அந்தச் சொற்கள் அழகானவை. எனக்கு மிகவும் பிடித்துப்போனது./

    சிறப்பான அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா,

    ReplyDelete
  16. கார்த்திகை விளக்குகள் அற்புதம்.
    காய்கனிகளை சாப்பிடும் ஆவலைத்தூண்டுகிறது.

    கடலலை கால்நனைக்க ஆசைப்படுகிறது மனம்.

    அனைத்துபடங்களும் கண்களை அதைவிடடு திருப்பவே விடவில்லை.

    ReplyDelete
  17. இறைவனை ஜோதிரூபமாக வழிபடும் நாள்! பட்டி தொட்டி, வசிப்பிடங்கள், ஆலயங்கள் எங்கினும் தீபஒளி பரவும் நாள்! இந்நாளையொட்டிய தங்களின் பதிவு பரவசம் தருகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. இனிய காலை வணக்கம் மேடம் கார்த்திகை தீபம் பற்றி அழகாக பகிர்வு

    ReplyDelete
  19. வித விதமான விளக்குகளாலும் பல தகவல்களாலும் பதிவு ஜொலிக்கின்றது.

    ரபீந்திரநாத் தாகூரின் அந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது.தன்னம்பிக்கை தரும் அந்த வரிகளை குறிப்பிட்டிருப்பது பலம் தருகிறது.

    ReplyDelete
  20. காலையில் அழகான படங்களுடன் நல்ல சுவாமி தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.மகிழ்ச்சி.

    ReplyDelete
  21. வலைப்பூவில் ஒளி ஒலி காட்சி. வியக்க வைக்கிறது படங்கள்.

    ReplyDelete
  22. தாகூரின் கவிதை, விளக்கு படங்கள், மலர் கோலங்கள் எல்லாம் அழகு.

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  23. தீபம்,விளக்கு படங்கள் அத்தனையும் அசத்தல்.தீபத்தன்று விளக்கு திருடும் சிறுவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள்.எல்லா இடங்களிலும் அப்படி இருக்கிறதா?

    ReplyDelete
  24. அழகிய படங்களுடன் கார்த்திகை விளக்கு பற்றிய சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. விளக்கொளியில் புவனத்தையே அழகாக்கும்
    கார்த்திகைத் தீபப் பதிவு .. மனதை கொள்ளைகொள்ளும் படங்களுடன்
    மிக அருமை சகோதரி..

    ReplyDelete
  26. அந்தப் பிரகாரம்!மாரி மாறி வரும் படங்கள்!எல்லாமே சூப்பர்!

    ReplyDelete
  27. தீபம் போல ஒளிர்கிறது
    உங்களிம்
    படங்களூம் பதிவும்
    அருமை.

    ReplyDelete
  28. அத்தனையும் மிகச் சிறப்பு . அருமையான படங்களும் ஆக்கமும் சகோதரி. வாழ்க!.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  29. தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம். அற்புதமான படங்கள்.

    ReplyDelete
  30. அருமையான பதிவு.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  31. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - திருவண்ணாமலைத் தீபம் இன்று ஏற்ற இருக்கும் வேளையில் - நான் இருக்கிறேன் சூரிய தேவா எனக் கூறிய அகல் விளக்கு - கைலி கட்டிய எங்களுக்கு மிகவும் பிடித்த விநாயகர் - என பல தகவல்கள் - படங்கள் - மிக மிக மகிழ்ந்தேன் . இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. மிக மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  33. 1493+10+1=1504 ;))))))))))

    மகிழ்வுடன் கொடுத்துள்ள நிறைய பதில்களுக்கு சந்தோஷம். நன்றி.

    இதற்கு முதல்நாள் கம்ப்யூட்டர் பிரச்சனையால் நேரிடையாக என்னால் பின்னூட்டம் இடமுடியாமல் போனதில் இருவருக்குமே வருத்தம் தான்.

    அந்த மனக்குறை நீங்க உதவியவர் கற்றலும் கேட்டலும் திருமதி ராஜி அவர்கள். அவர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete