Wednesday, December 7, 2011

மயில் மேல் அழகன் முருகன்!



Peacock graphics
சிவனின் அம்சமாக அவதரித்தார் ஆதிசங்கரர்.
"சிவானந்த ரூபம் சிவோஹம்'  -. 
"சிவானந்தமயமான சிவனே நான்' என்றார் ஆதிசங்கரர் ...

, ஜீவனும் பரமனும் ஒன்றே என்னும் அத்வைதக் கொள்கையை ஸ்தாபித்தார்.., 

ஞான முதிர்ச்சி அடையாதவர்கள் உய்வுறும் வண்ணம் உருவ வழிபாட்டையும் போதித்து, அவரவர் உணர்வுகளுக்கேற்ப வழிபாடியற்ற காணாபத்யம் (விநாயகர்), சைவம் (சிவன்), சாக்தம் (சக்தி), வைணவம் (திருமால்), கௌமாரம் (முருகன்), சௌரம் (சூரியன்) ஆகிய ஆறு சமயங்களைப் பகுத்து வழிபடும் நெறியை விளக்கினார். 


சிருங்கேரி, துவாரகா, பதரி, பூரி, காஞ்சி போன்ற இடங்களில் தலைமை மடங்களை அமைத்து, சீடர்களையும் நியமித்து விட்டு கயிலாயம் ஏகினார்.
அந்த ஆதிசங்கரரே அருணகிரியாக அவதரித்தார்....


சுவாமிமலை சுவாமிநாதா வேலாயுதா!
சுப்ரமண்ய மானவரே வேலாயுதா!!


சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து முருகப் பெருமான் தகப்பன் சுவாமியானார்...



சிவன்,  பிரணவப் பொருளை  அறிந்த விதம் கேட்க,  தாய் உமைக்கு உபதேசம் செய்தபோது, அவள் மயிலின் அழகைக் கண்டு ரசித்தாள். அதனால் கோபம் கொண்ட சிவன் அன்னையை மயிலாக மாறும்படி சபிக்கவே அன்னை மயிலையில் மயிலுருவில் தவம் செய்து மீண்டும் சுய உரு பெற்றாள். அப்போது பிரணவப் பொருளைக் கேட்டதும் உணர்ந்ததும் அன்னை மடியிலிருந்த  முருகப் பெருமான்.

""அப்படியானால் அது முறையாக உபதேசம் பெற்றதற்குச் சமம் ஆகாது. எனவே நீ பூவுலகில் பிறந்து தன்னைப் பாட  வரமருளினார் சிவன்.

 பூவுலகில் பிறக்கும் சமயம் சிவமே தனக்கு ஞானமளிக்க வேண்டும். சிவனும்  பூவுலகில் பிறந்து தீந்தமிழால் தனைப் பாட  வரம் கேட்டார் சிவகுமாரன்...

முருகனே சீர்காழி யில் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் ஞானசம்பந்தராகப் பிறந்து, சிவ- பார்வதி வந்து ஞானப் பாலூட்ட, 
"தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி ஏராளமான பாசுரங்களை இறைவன்மேல் பாடினார். சிவன் வேறு, குமரன் வேறல்ல. 
சூர சம்ஹாரத்திற்காக சிவனின் ஜோதியே முருகனாக அவதரித்தது!




சிவாம்சம் ஆதிசங்கரராக அவதரித்து மீண்டும் ஈசனுடன் கலந்த
சிவாம்சமே முருகனின் வேண்டுகோளுக்கிணங்க திருவண்ணாமலையில் ஆனி மாதம், மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில் அருண கிரியாகப் பிறந்தது.


அருணகிரிக்கு ஜெபமாலை தந்த முருகன் -ஜெபமாலை தந்த சற்குருநாதன் , 
"முத்தைத் தரு பத்தித் திருநகை' என்று முதல் அடியெடுத்துக் கொடுத்தார் 
அந்தப் பாக்களுக்கு "திருப்புகழ்' என்று பெயருமிட்டார்.

 விராலி மலையில் 
புறா, காகங்களைப்போல ஏராளமான மயில்கள் இருப்பதைக் காணலாம். நாம் "முருகா' என்றால், அவை "குஹா' என்று எதிர்க்குரல் கொடுக்கும்.
animated gifs peacocksanimated gifs peacocks




அருணகிரியார் பாடல்களின் இறுதி அடி "பெருமாளே' என்று முடியும். பெருமாள் என்னும் சொல் திருமாலையும் குறிக்கும்; முருகனையும் குறிக்கும்

அருணகிரியார் ஷண்முகத்தில் ஷண்மதங்களையும் பாடி, "யாவும் ஒன்றே; உருவ பேதங்களால் மயங்கக்கூடாது. அருவமாய் இருப்பவன் உருவமாகவும் உள்ளான்' என்று உணர்ந்து பாடியுள்ளார்.



கடைசியாக கந்தர் அனுபூதி பாடி, கிளி வடிவமாக திருத்தணிகை கந்தன் கையில் அமர்ந்து, ஆனி மாத மூல நட்சத்திரத்தன்று இறையுடன் கலந்தார்





Bird Image Gallery
peacock with closed feathers wallpapers
Wallpapers / Peacock

32 comments:

  1. ஆஹா! அழகழகான மயில்கள். உடனே மயிலேறி வந்து விடுகிறேன். vgk

    ReplyDelete
  2. ஆதி சங்கரர் படமும், அத்வைத கொள்கைகளும், காணாபத்யம், சைவம், சாக்தம்,வைணவம், கெள்மாரம், செளரம் போன்ற ஆறு சமய வழிபாடுகளும் பற்றிய விளக்கங்கள் அருமையோ அருமை.

    ReplyDelete
  3. தகப்பன் ஸ்வாமியான அந்த ஸ்வாமிமலை முருகன் எவ்ளோ அழகாக புஷ்ப அலங்காரங்களுடன் காட்டியுள்ளீர்கள். சூப்பர் ஆக உள்ளது. பூமணத்தால் பார்த்ததும் மயக்கமே வருகிறது. அவ்வளவு சிறப்பான அலங்காரம். அடடா! அழகோ அழகு.

    ReplyDelete
  4. ஓம் என்ற எழுத்து ஓங்காரமான டிசைனில் உள்ளதே1

    முருகனே ஞானசம்பந்தராகப் பிறந்து சிவ-பார்வதி ஞானப்பால் ஊட்ட “தோடுடைய செவியன்” பாடலைப் பாடினார். அருமையான பெருமையான தகவல் அன்றோ!!

    ReplyDelete
  5. எத்தனைவிதமான அழகழகான மயில்களைக்காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    அதில் ஒன்று தோகையை விரித்துக்கொண்டு முன்னழகு பின்னழகு என்று போஸ் கொடுக்குது பாருங்களேன்.

    ReplyDelete
  6. மயில்கள் அற்புதம்,முருகனின் வேண்டுகோளுக்கிணங்க திருவண்ணாமலையில்...இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.நன்றி

    ReplyDelete
  7. கீழிருந்து மூன்றாவது படத்தில் மயிலு சப்பாணியுடன்.

    கீழிருந்து இரண்டாவது படத்தில் அந்தத் தோகை மிகவும் ப்ரைட்டாக விரிவாக சூப்பராகக் காட்டப்பட்டுள்ளது.

    கடைசிப்படத்தில் கலர் மயிலுக்கும் வெள்ளை மயிலுக்கும் காதல், முத்தமழை பொழிகின்றனவோ! ;))))

    ஆங்காங்கே பட்டாம்பூச்சிகள் வேறு காதலிக்கும் மயில்களை ரஸித்தவாறே தெரிகின்றனவே! ஜோர் ஜோர்

    ReplyDelete
  8. கீழிருந்து ஐந்தாவது பட மயில் ரொம்ப அழகு. கழுத்தழகு, கொண்டையழகு, தோகை அழகு அனைத்தும் அழகோ அழகு தங்களின் அன்றாடப்பதிவுகள் போலவே.

    கீழிருந்து நாலாவது படத்தில் உள்ள மயில் அழகாக மலைபோல, குடைபோல அல்லவா தோகையை விரித்துக் காட்டியுள்ளது. இருப்பினும் அது பளிச்சென்ற படமாக இல்லை. மற்றபடி அதுவும் மிக அழகு தான்.

    ReplyDelete
  9. எல்லாப்படங்களும், எல்லா விளக்கங்களும் மிக அருமையாக வழக்கம் போலவே தந்து அசத்தி விட்டீர்கள்.

    இருப்பினும் 8th December க்காக நான் எதிர்பார்த்த இன்றையப்பதிவு வேறு.
    இருப்பினும் அதனால் என்ன
    வேலும் மயிலும் துணையிருக்க, ”யாமிருக்க பயமேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    நேயர் விருப்பத்தைப்போய் Choice இல் விடலாமா?

    பாராட்டுக்கள். நன்றிகள், வாழ்த்துக்கள்.

    [13th December க்காவது என்ன வருகிறது என்று பார்ப்போம்.]

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  10. சாதாரண மனிதர்கள் போல காமக்கலையிலேயே மூழ்கித்திருந்த அருணகிரியாரை, முருகன் தடுத்தாட்கொண்ட கதையையும்,

    என்ன பாடுவது என்று திகைத்தவருக்கு முருகனே அடி எடுத்துக்கொடுத்த வரிகளான

    “முத்தைத் த்ரு பத்தித் திருநகை” என்ற ஆரம்ப வரிகளும், அதில் புதைந்துள்ள அர்த்தமாகியே “பக்தியே முக்தியைத்தரும்” என்ற விளக்கமும் அருமையோ அருமை தான்.

    மிக்க மகிழ்ச்சிகள்.

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said.../

    அருமையாய் ரசனையுடன் கருத்துரைகள் அளித்து பதிவினைப்பெருமைப்படுத்திய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  12. shanmugavel said...
    மயில்கள் அற்புதம்,முருகனின் வேண்டுகோளுக்கிணங்க திருவண்ணாமலையில்...இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.நன்றி

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  13. அசைந்தாடும் மயிலொன்று கண்டேன் நம் அழகன் முருகன் வந்தாரென கூவவும் கேட்டேன்

    ReplyDelete
  14. நிறைய விளக்கங்கள் நான் இப்போதுதான் அறிகிறேன் சகோதரி..
    பிரணவப் பொருளை முருகப்பெருமான் அறிந்த விதமும், அதை முறையல்ல என்று சொல்லி
    பூவுலகில் சம்பந்தராக அவதரித்த கதையும் அற்புதம்....
    அக்காலத்தில் சமயங்களின் ஊடே ஒரு நல்லிணக்கம் ஏற்பட விதைத்த
    நற் சம்பவங்களை அழகுபட சொன்னமை மனதில் நிற்கிறது.
    மயில்களின் படங்கள் நெஞ்சுக்குள் நாட்டிய நாடகமே நடத்துக்கின்றன...

    ReplyDelete
  15. பார்த்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வண்ணமயிலின் குரலுக்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்து கொண்டேன். முருகா-குஹா...

    ReplyDelete
  18. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    வை.கோவின் மறுமொழிகள் படித்தேன் - மகிழ்ந்தேன் - வேறு என்ன எழுதுவது .....

    புகைப்படங்கள எங்கிருந்து கிடைக்கின்றன - அத்தனையும் அருமை - மயில்கள் மனதைக் கவர்கின்றன. சுவாமி மலை முருகப் பெருமான் - புஷ்பாங்கியுடன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கும் அழகே அழகு.

    விளக்கங்கள் அத்தனையும் அருமை - சிவன் தான் முருகன் - ஆதி சங்கரர் சிவன் - அச்சிவாம்சமே அருண கிரி - முருகனே திருஞான சம்பந்தர் - எத்தனை எத்த்னை செய்திகள் - இவை அனைத்தும் எங்கிருந்து கிடைக்கிறது ......

    அதி காலையில் நல்லதொரு பதிவினைப் படித்து மகிழ ஒரு வாய்ப்பு அமைத்த்துக் கொடுத்தமைக்கு நன்றி - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. மயிலின் நடனமும் அருணகிரியார் குறித்த பல தெரியாத
    விளக்கங்களும் தந்து அசத்திவிட்டீர்கள்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. மயில்கள் எல்லாம் கண்களை கவர்ந்தன.
    ஆடும் மயில் அற்புதம்.

    அருமையான செய்திகள்.

    நன்றி.

    ReplyDelete
  21. அழகான மயில் படங்களுடன், புதிய பல தகவல்களையும் தெரிந்து கொண்டோம்.

    தீபத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. படங்கள் ரசித்துப் பார்த்தேன்..

    நன்றி சகோ..

    ReplyDelete
  23. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. அழகிய படங்கள்;அருமையான ஆன்மீக விளக்கங்கள்!

    ReplyDelete
  25. முருகு என்ற சொல்லின் பொருளே அழகுதானே.அவனைச் சுமந்து வரும் (அதுவும் மயில் மேல் ) பதிவல்லவா?
    அதன் சுவையும் அழகே!

    முருகனின் புகழ் பாடும் அருணகிரிநாதரின் பாசுரங்கள் கேட்டதும் மயில் தோகை விரித்துக் கொண்டு ஆடுகின்றதே.அருமையான பகிர்வு.நன்றி

    ReplyDelete
  26. ஆதிசங்கரர் தான் அருணகிரிநாதர் என்ற செய்தி தெரிந்துகொள்ளமுடிந்தது சகோ!

    ReplyDelete
  27. அன்னை மயிலையில் மயிலுருவில் தவம் இருந்ததும், முருகன் பிரணவ மந்திரத்தின் பொருள் உணர்ந்தத விதம் சிவனிடம் முருகன் விளக்கியவிதம் அருமை

    ReplyDelete
  28. முருகன் திருஞானசம்பந்தராக அவதரித்ததும், சிவனும் - குமரனும் ஒன்றே - உண்மைதான்.. இன்றும் பௌர்ணமிக்கு திருவண்ணாமலை கிரிவலம் அடிக்கடி போக முடியாதவர்கள் முருகன் மலையை வலம் வருகிறார்கள். பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  29. பெருமாள் என்பதன் அர்த்தமும் அருணகிரியார் முருகன் என்று சொல்லியிருக்கார் என்றால்... முருகனை வழிப்பட்டால் சிவனையும், பெருமாளையும் வழிப்பட்டதாகவும் நினைத்து கொள்ளலாம்.

    ReplyDelete
  30. அருணகிரியின் வரலாறு தெரிந்துகொள்ளமுடிந்தது.. அவரின் பாடல்கள் படிக்கும் ஆவல் இந்த பதிவு படிக்க தூண்டியுள்ளது.. முக்கியமாக கந்தர் அனுபூதியை படிக்க முயல்வேன்.. அவரின் வரலாறு பற்றி பகிர்வால் அவரின் பாடல்கள் அனைத்தும் படிக்கும் சந்தர்ப்பம் இறைவன் அருளால் வாய்க்கும் என்ற நம்பிக்கையுடன், பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  31. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete
  32. 1513+10+1=1524 ;)))))

    ஒரேயொரு குட்டியூண்டு பதிலுக்கு நன்றி.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete