Wednesday, February 1, 2012

கருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி                                


காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். 

தேனி மாவட்டத்திலிருக்கும் சில முக்கியக் கோயில்களில் ஒன்று பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்....
காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதால் காஞ்சியைப் போல் இங்கும் புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் வழக்கமாக உள்ளது.  

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருப்பது போல் இங்கும் அம்மன் பூஜை மண்டப மேல் விதானத்தில் கௌலி உருவம் உள்ளது. 

சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்த, வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சூலபாணி எனும் அசுரன் மன்னன் ..தனக்கு தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்ற அரிய வரத்தின்படி பிறந்த வச்சிரதந்தன் என்ற அசுரன்காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். 

அவன் பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால்
அசுரனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.

துர்க்கையம்மனாக வந்து வதம் செய்த காஞ்சிகாமாட்சியம்மன், அசுரனைக் கொன்ற பாவம் நீங்க மஞ்சள் நீராடிய பின்பு தலையாறு நீர்வீழ்ச்சிக்கருகே மூங்கில் புதருக்குள் தவம் இருந்தாள். 

எதேச்சையாக இதை பார்த்துவிட்ட பசு மேய்க்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனதையறிந்த அவ்வூர் ஜமீன்தாரும் பூஜை செய்து வழிபட்டார்.

அம்மன் அசரீரியாக ., ஒரு வாரம் கழித்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து வரும் என்னை எடுத்து வழிபட்டால் கண்பார்வை தெரியும் என்று கூற, அதன்படியே பெட்டி வந்தது. அதை எடுத்து வழிபட்டு அந்த இடத்தில் சின்ன குச்சு கட்டி வழிபட்டனர்.

மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கப்படுகிறது..
அடைத்த கதவுக்குதான் பூஜை என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது.
கருவறை திறக்கப்பட்டதே இல்லை. 

அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கர்ப்பகிரக 
கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.

 தேவதானப்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது.

இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை.

கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது.

உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது.

குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை
குலதெய்வமாக வழிபடலாம்.

இங்கு ஆடு, மாடு, கோழி பலியிடுவது கிடையாது.
பொங்கல் வைக்கும் பழக்கமும் இல்லை.

துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.

தேவதானப்பட்டி கோயிலுக்கு மேற்கே 3 கி.மீ., தொலைவில் மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள அருவியில் அம்மாமெச்சு என்று ஒரு இடம் உள்ளது. அங்கிருந்துதான் இந்த அம்மன் இருந்த பெட்டி மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு மூலவரோ, உற்சவரோ கிடையாது. 

எனவே 5 நாள் திருவிழா காலத்தில் முதல் நான்கு நாட்கள் கோயில் அருகில் உள்ள ஆற்றுக்கு மூங்கில் தட்டில் மா, பலா, வாழைப்பழம், தேங்காய், மாலை, அபிஷேக சாமான் எடுத்து செல்வர். 

கோடாங்கி நாயக்கர் மேள தாளத்துடன் பூஜை பொருள்களை கோயிலுக்கு எடுத்துவந்து இரவு முழுவதும் வைத்திருப்பார். 

மறுநாள் காலையில்தான் பூஜை செய்கின்றனர்.  

இதற்கு பள்ளயம் என்று பெயர்.
 5வது நாள் வரும் பள்ளயம் ஜமீன்தார் வீடு செல்லும். 

நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது. 

திருவிழா காலத்தில் சேரும் இந்த 50  பானை நெய் 
வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். 

இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.

காமாக்காள் திவசம் : பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீன்தார் மனைவி காமாக்காள். இவர் தன் கணவர் மறைவிற்கு பின் ஒரே மகனுடன் கோயில் கட்டடத்தில் தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்தார்.

இந்த காமாக்காள் அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்றவர். இவர் இரவில் தனியே கோயிலுக்கு செல்வதில் பயந்த மகன், தானும் அம்மனை பார்க்க தாய் தடுத்தும் கேளாமல் தாயுடன் சென்றான். இதனால் அவர் தலை வெடித்து இறந்தான்.

காமாக்காள் தை மாதம் ரத சப்தமியில் மறைந்தார்.

அம்மனின் வாக்குப்படி ராஜ கம்பள நாயக்கர் அவருக்கு திவசமிட்டனர்.

அதுமுதல் ஒவ்வொரு வருடமும் ரத சப்தமியில் கோயிலில் காமகாக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது.

காமாக்காள், அவரது மகன் இருவரின் சமாதியும் கோயிலுக்கு
கிழக்கே ஒரு பர்லாங் தூரத்தில் உள்ளது.

திவசம் முடிந்த அன்றே கோயிலின் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. 

பகைவர்கள் வெல்லும் சக்தியை மூங்கிலணை காமாட்சி அம்பாள் தருகிறாள்.

 திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி
ஆகியவை கிடைக்கப் பெறலாம்..
KASI VISWANATHAR, DEVADANAPATTI 

மூலவர் விமானம்


தங்கத்தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் உற்சவர்

29 comments:

 1. பலமுறை அந்த ஊர் வழியாக சென்றிருப்பினும், இக்கோவில் பற்றி இன்றுதான் அறியப் பெற்றேன்! நன்றி!

  ReplyDelete
 2. அழகான படங்களுடன்.ஒரு புதிய கோவில் பற்றிய அருமையான பகிர்வு.

  ReplyDelete
 3. அழகான படங்களுடன் அருமையான காட்சிகள்

  ReplyDelete
 4. மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பற்றிய சிறப்பான தகவல்.படங்கள் அருமையாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நன்றி அம்மா இந்த கோயிலின் வரலாற்றினையும் தங்கத் தேர் காட்சியினையும் பதிவு செய்ததற்கு அருகில் இருக்கும் நெய் மடத்தில் பலவருடங்களான நெய்ப் பானைக்கள் எந்த பூச்சியும் இல்லாமல் இருப்பதைப் நேரில் பார்த்தேன் கதவில் அம்மனைத் தரிசித்த போதுதான்  அதன் வரலாறை தேடினேன் அறங்காவலர்கள் விரைவில் நூல் தருவதாக கூறினார்கள் இரண்டு வரு டமாகின்றது  அந்தக் குறையை தீர்த்த உங்களுக்கு இந்தச் சின்னவனின் நன்றிகள் பல.

  ReplyDelete
 6. தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ஓட்டுப் போடமுடியவில்லை!

  ReplyDelete
 7. கடைசியில் காட்டப்பட்டுள்ள காஞ்சி காமாக்ஷியம்மன் தங்கத்தேர் அருமை. பலமுறை தரிஸித்துள்ளேன். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் இழுக்கும் பாக்யம் கிடைத்தது. இனிய நினைவலைகளை இந்தப்படம் இப்போது ஞாபகப்படுத்தியது. நன்றி.

  ReplyDelete
 8. தேவதானப்பட்டி காசி விஸ்வநாதர் படம் நன்கு பளிச்சென்று காட்டப்பட்டுள்ளது.

  முதல் படமான யானை வாகனம் நேற்றைய பதிவிலும் பார்த்த ஞாபகம் வந்தது.எரியும் ஏழு தீபங்களும், அழகாக அமைதியாக ஆடாமல் அசையாமல் பிரகாசிக்கும், இரு பஞ்சமுக குத்து விளக்குகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ;))))

  ReplyDelete
 9. நாகதம்பிரான் வாகனத்தில், வைரவ சூலம், கீழே சிவலிங்கம்.... என்ன ஒரு அற்புதமான படம்.

  ReplyDelete
 10. இந்த அம்மன் கோயிலில் வேல் ஆயுதம் மட்டும் வைக்கப்பட்டு, அதையே அப்படியே அம்மன் போல வடிவமைத்து, அந்த ஜொலிக்கும் நிலைப்படிகள், கதவுகள், திருவாசி, மேலே கஜலக்ஷ்மி, கீழே பீடம், ஆள் உயர இரு குத்து விளக்குகளும், பட்டையிட்டுப் பளபளப்பாகத் தொங்கும் மணி என மிக அருமையாக எல்லாமே படத்தில் கவேரேஜ் செய்யப்பட்டு காட்டப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 11. அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்ற காமாக்காள் கதையைப் படித்ததும், மிகவும் பயமாகவே உள்ளது.

  இத்தகைய அபூர்வ சக்தி பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள், இப்போதும் கூட ஒரு சிலர் எங்கோ ஒருசில இடங்களில் இருக்கக்கூடும். அவர்களை நாம் சரியாக அடையாளம் காண்பது தான்
  மிகவும் கஷ்டமான காரியம். அதற்கும் நமக்கு ஓர் பாக்யம் வேண்டும்.

  ReplyDelete
 12. கருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி என்ற ஓர் கோயில் உள்ளது; அது இன்ன இடத்தில் உள்ளது; அதற்கு இவ்வளவு சிறப்புகளும் வரலாறும் உள்ளன என்றெல்லாம் அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன் கொடுத்துள்ளது எங்களில் பலருக்கும் புதிய செய்தியாகவே இருக்கும்.

  அனைத்துச் சிரமங்களும் எடுத்துக்கொண்டு, பதிவிட்டுத் தந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.நன்றிகள்.

  ReplyDelete
 13. அழகான படங்களுடன். அருமையான பகிர்வு.

  ReplyDelete
 14. சிறப்பான படங்களும், தகவல்களும் பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 15. அம்மனை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 16. அழகான படங்களுடன் விளக்கங்களும் நல்லா இருக்கு நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. நேராவே தரிசனம் செஞ்ச மாதிரி இருக்கு போங்க இந்த போஸ்ட் பாத்தா...சூப்பர்

  ReplyDelete
 18. அருமையான பதிவு.
  உங்கள் பதிவு ஒரு பொக்கிஷம்.
  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 19. வித்யாசமான அருமையான தகவல் பகிர்வு.நன்றி.

  ReplyDelete
 20. படங்கள் அனைத்தும் அருமை

  ReplyDelete
 21. அழகழகான படங்களுடன் அருமையான பதிவு. மிக்க நன்றியும் பாராட்டும்.

  ReplyDelete
 22. மூங்கிலணை காமாட்சிப் பற்றி பத்திரிக்கைகளில் படித்து இருக்கிறேன்.
  போனது இல்லை.

  சிறிய வயதில் தேனியில் இருந்து இருக்கிறோம். அப்போது தெரிந்து இருந்தால் என் அப்பா கூட்டி போய் இருந்து இருப்பார்கள்.

  உங்கள் பதிவை படித்தவுடன் பார்க்கும் ஆவல் வந்து விட்டது.

  ReplyDelete
 23. chakra naayakiyum moongilaNai kaamaakshiyum arumai. kathaigaLudan solvathu pidithirukkirathu.

  ReplyDelete
 24. பிரகாரமும் கோவில் அமைப்பும் மிக மிக அருமையாக உள்ளது
  பதிவும் திரு உருவப் படங்களும் அவசியம்
  தரிசிக்கவேண்டும் என்கிற அவாவை தூண்டிப் போகிறது
  ம்னம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. தனிமரம் said...
  தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா ஓட்டுப் போடமுடியவில்லை!

  பலமுறை முயன்றும் தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை!

  ReplyDelete
 26. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 27. ;)
  கோவிந்த நாமாவளி ஆரம்பம்:
  ============================
  1) ஸ்ரீ நிவாஸா கோவிந்தா

  ReplyDelete
 28. நேற்றுதான் தஞ்சை பங்காரு ஸ்ரீகாமாக்ஷியைப் பற்றிப் படித்தேன்.
  இன்று மூங்கிலணை காமாட்சி மனம் கொண்டாள் வீடு வர,உங்கள் பெரும் தயவினால்.படங்கள் மிக அருமை. நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete