Wednesday, March 14, 2012

பொன்னூஞ்சல் , கன்னூஞ்சல் ...மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்று கைகாட்டி அழைக்கும் பொன்னப்பன் மணியப்பன் என்னப்பன் ஒப்பார் மிக்கார் இல்லாத ஒப்பிலியப்பன் 

திருமகள் நாயகனாம் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில், நெஞ்சை அள்ளும் தஞ்சை மாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீ வன ஷேத்ரத்தில் எம்பெருமான் 
தன் ஒப்பார் இல் அப்பனாக எழுந்தருளியுள்ளார். 
"மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர்..
உப்பை தியாகம் பண்ணி தன் பெண்ணை மணக்கச் சித்தமான வயோதிகரை புறக்கண்ணை மூடி அகக்கண்ணை திறந்து பார்த்தால் தானே தெரிகிறது நிற்பவர் ஓங்கி உலகளந்த உத்தமன், பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று....
 மனமகிழ்ந்து தன் பெண்ணை பூமிதேவிப்பிராட்டியை கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறார் "மார்க்கண்டேய மகரிஷி 
மீனாய் ஆமையாய் பன்றியாய் அரி உருவாய்
வானாய் உயர்ந்த வாமன்னாய் கோவ ராமனாய்
ரகு ராமனாய் அண்ணனாய் கள்ள கண்ணனாய்
வெண்பரி 
மன்னனாய் காண்பது வண்புகழ் நாரணனே.

கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்
ஸ்ரீபூமிதேவி கன்னூஞ்சல் ஆடிருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து மன்னன் விண்ணகரனுடன்

மார்க்கண்டர் மனம் மகிழ
கல்யாண.. திருக்கல்யாண.. திருக்கல்யாண உத்ஸவத்தில்
கண்ணூஞ்சல் ஆடிருந்தாள்

திவ்ய தம்பதிகள் திருக்கல்யாண வைபோகத்தில் 

அஸ்ய யஜமானஸ்ய தைர்ய ஸ்தைர்ய 
வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய 
ஐஸ்வர்ய அபிவிருத்த யர்த்தம், 
இஷ்ட காம்யார்த்த சித்த யர்த்தம்,
 பாகவத ப்ரீத யர்த்தம்
ஸ்ரீ பூமி நாயிகா சமேத ஸ்ரீ ஓப்பிலியப்ப ஸ்வாமி, 
திவ்ய சரணார விந்தயோஹோ, ஸமஸ்த லோக சாந்த்யர்த்தம்
துளசீ தள குங்குமார்ச்சன சகஸ்ர நாம பூஜாம் கரிஷ்யே 

DSC0297027 comments:

  1. அட 0 இன்று நான் தான் முதலா - அப்பப் பொறுமையாப் படிச்சிட்டு படம் பாத்துட்டு பதில் போடறேன் - சரியா

    ReplyDelete
  2. பொன்னூஞ்சலில் க்ண்ணூஞ்சல் - அருமையான தலைப்பு - ஒப்பிலியப்பன் - பூமாதேவி திருமணம் நன்று. மாங்கல்யம படம் நன்று - எத்தனை படங்கள் - அத்தனையும் அருமை - கண்டு களித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. cheena (சீனா) said...
    அட 0 இன்று நான் தான் முதலா - அப்பப் பொறுமையாப் படிச்சிட்டு படம் பாத்துட்டு பதில் போடறேன் - சரியா//

    தாங்கள் அருமையாக பொறுமையாக அத்தனைப் ப்திவுகளையும் படித்து சாரமான கருத்துரைகள் வழங்கி பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா.. பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  4. முதலிடத்தைப் பிடித்து விட்ட அன்பின் சீனா ஐயா அவர்கள் வாழ்க வாழ்கவே!

    மீண்டும் வாருங்கள்! காத்திருக்கிறோம்.
    அழகான தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கி!

    ReplyDelete
  5. ”பொன்னூஞ்சல்.. கன்னூஞ்சல்”

    தலைப்பு அழகோ அழகு !

    அவரவர்களின் திருமணத்தில் விடிய விடிய நடந்த பொன்னூஞ்சல் .. கன்னூஞ்சல் .. என்ற மிகவும் மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சியை நினைவு படுத்தி மகிழ்விக்கிறதே!

    அப்போதெல்லாம் தினமும் இரு வேளை ஒளபாஸன ஹோமத்துடன் நான்கு நாட்கள் கல்யாணம். அக்ரஹாரத்தையே அடைத்தபடி பந்தலிட்டு, முதல் நாள் விடிய விடிய ஊஞ்சலில், புதுமண தம்பதியை உட்கார வைத்து
    ஊரில் உள்ள பாகவதர்களும், பெண்மணிகளும் ஏதேதோ பாடிக்கொண்டே இருந்தனர்.

    பசுமையான இனிமையான சுகமான நிகழ்வுகளை நினைவலைகளைத் தட்டியெழுப்பியது இந்தத் தங்களின் இன்றைய தலைப்பு! ;)))))

    ReplyDelete
  6. அஸ்ய யஜமானஸ்ய.......
    குங்குமார்ச்சன சகஸ்ர நாம பூஜாம் கரிஷ்யே!

    சூப்பரான சங்கல்ப்ப மந்திரம் மகிழ்விக்கிறதே!

    ReplyDelete
  7. நூல் சுற்றிய வெள்ளிக்குடம், அதன் கழுத்தில் மனதை மயக்கும் மணமுள்ள மல்லிகைச்சரம், அதன்மேல் மாவிலைக்கொத்து, அதன் மேல் முரட்டுத் தேங்காய், அதில் தாம்புக்கயிறு போல 10 பவுனுக்குக் குறையாத தங்கச் சரடு. அதில் சங்கு சக்கரத்துடன் கூடிய முத்துக்களும் ரத்தினங்களும் மாதுளை முத்துக்கள் போல பதித்த திருமாங்கல்யம் .... அடடா அருமை.

    இன்று காரைடையான் நோன்பு நாளில் காட்டியுள்ள இந்தப்படமே மங்களமான இனிமையான நினைவுகளைத் தந்து மகிழ்விக்கிறது.

    இன்றைய படங்களில் இதற்கே நான் கொடுக்கும் FIRST RANK உங்களுக்கே உங்களுக்கு!

    மனதைக் குஷிப்படுத்தும் குதூகலப்படமாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  8. அனைத்துப்படங்களும் அழகான விளக்கங்களும் அருமை தான்.

    கீழிருந்து மூன்றாவதாக ராயஸமாக அமர்ந்திருக்கும் அம்மனுக்கு நான் ஏற்கனவே ஒரு நாள் நிறைய வர்ணனைகள் கொடுத்திருந்தேன்.
    அதை தயவுசெய்து நினைவு படுத்திக் கொள்ளவும்.

    படங்களைப்பார்த்து ரஸிப்பதா, விளக்கங்களைப்படித்து மகிழ்வதா, நடுவில் பின்னூட்டங்களில் என்மகிழ்வினைப் பகிர்ந்து கொள்வதாக என்பதில் தான் எனக்கு அடிக்கடி குழப்பங்கள் வந்து விடுகின்றன.

    ஏற்கனவே இங்கு எனக்குள்ள ஒருசில குழப்பங்களுடன் இது வேறு ........

    என்ன செய்வ்து அன்றாடக் குழப்பங்களுக்கு நடுவில் உங்கள் பதிவே எனக்கு சற்று மன ஆறுதல் தருவதாக உள்ளது.

    மன சந்தோஷம் அளித்த பகிர்வுக்கு
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    [மிகுந்த வருத்தத்துடன் இப்போது விடைபெற வேண்டிய சூழ்நிலை
    So, Bye for now.]

    ReplyDelete
  9. After the Karadayan nonbu I am able to visual Amman Thali.

    I dont have words dear.
    Thankyou.
    This word Thankyou can tell you all mind.
    viji

    ReplyDelete
  10. viji said...
    //After the Karadayan nonbu I am able to visual Amman Thali.

    I dont have words dear.

    Thankyou.

    This word Thankyou can tell you all mind.

    viji//

    Thank you very much Mrs. VIJI, Madam.

    You have expressed the correct WORD
    which in fact I wanted to tell.

    You have seen the Thirumangalyam after performing the Karadaiyaan Nonbu at your home where as we have performed in our house after seeing/studying this very Super Post of our Favourite, Respectable & Great Madam.

    All the best to all of you!

    vgk

    ReplyDelete
  11. ஒப்பிலியப்பன் தரிசனம் அற்புதம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  12. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. என்னவென்று சொல்ல சகோதரி..
    பாற்கடல் வாசனின் படங்கள்
    என்னை மிகவும் மகிழ்விக்கிறது..

    ReplyDelete
  14. உப்பிலியப்பனின் திருவுருவம் எங்கும் காணக்கிடைக்காதது! தாயாருக்குத் தனி சன்னிதி இல்லை! திருப்பதி போலவே இங்கும் தினசரி கல்யாணௌத்சவம் நடக்கிறது!

    மனம் கவர்ந்த பதிவு!

    ReplyDelete
  15. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  16. ஒப்பிலியப்பனின் திருக்கல்யாண கண்டு களித்தேன்.

    படங்கள் எல்லாம் கண்ணையும், கருத்தையும் கட்டிப் போடுகிறது.

    பாற்கடலில் கண்மூடி தூங்குவது போல உள்ள மாதவனின் மாயக் கோலம் அழகு, அற்புதம்.

    ReplyDelete
  17. கண்ணுஞ்சல் ஆடும் எம்பெருமான் மற்றும் அன்னையின் அருளை பெற்றேன். படங்கள் அருமை

    ReplyDelete
  18. கண்ணை விட்டு நீங்கினாலும்,மனதை விட்டு நீங்காத படங்கள்

    ReplyDelete
  19. கோவில் டைரக்டரி ஒன்று வைத்திருக்கிறீர்களா? நம்பவே முடியாத அதிசயம் உங்களின் தொடர்ந்த பதிவு. மல்லிகைப்பூ பந்து கண்ணைக் கவர்கிறது.

    ReplyDelete
  20. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

    ReplyDelete
  21. Awesome pictures. After a long time I am seeing Uppliappan. Thanks.

    ReplyDelete
  22. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. 48. பாஹிமுராறே கோவிந்தா

    ReplyDelete