Wednesday, June 27, 2012

நடம் புரியும் நடராஜப்பெருமான்


உலக இயக்கத்திற்கு ஆதாரமானது நடராஜர் திருநடனம்.

மனிதன் கருவில் இருக்கும்போதே இதயத்தின் இயக்கம் துவங்கி விடுகிறது..

எவ்வளவு காலம் வாழ்கிறானோ அதுவரை இதயத்தின் வேலை தொடர்கிறது. 

ஒருகணப்பொழுதும் இதயம் தன் இயக்கத்தை நிறுத்துவதில்லை. 

நடராஜப்பெருமானும் இவ்வுலகத்தின் மூச்சாக இருந்து எப்போதும் நடம் செய்து இவ்வுலகத்தின் இதயகமலமாய்த் திகழ்கிறார்.

நீர், நெருப்பு, காற்று, விண், மண் என்று பஞ்சபூதங்களால் 
இவ்வுலகம் இயங்குகிறது. 

கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது. 

நெருப்பு தன் ஜுவாலையான நாக்கை சுழற்றி எரிகிறது. 

காற்று தென்றலாய், புயலாய் வலம் வருகிறது. 

வானம் இடியாய், மின்னலாய், மழையாய் வர்ணஜாலம் செய்கிறது. 

பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனைச் சுற்றி வந்து 
இரவையும், பகலையும் உண்டாக்குகிறது. 

இந்த பஞ்சபூதங்களால் தான் உலக இயக்கமே நடக்கிறது. 

இந்த இயக்கத்திற்கு ஆதார சுருதியாய் இருப்பது 
சிவபெருமானின் திருநடனம் தான். 

ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை 
நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். 

இதைத்தான் "அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோம்...

சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று 
மூன்று விதமான கோலங்கள் உண்டு. 

போகநிலை - மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் 
கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார். 

வேகநிலை - தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். 

கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி 
என்ற வடிவங்களில் தீமைகளைப் போக்குகிறார். 

யோகநிலை - மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். !
இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும். 

இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே 
நடராஜர் வடிவாகும். 

உல்லாசமாக தேவியுடனும், 
கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், 
பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் நடராஜர் ஆடுகிறார். 
 நடராஜர்ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு. 
நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம்.

அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே "மறைத்தல் தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்
உணர்வற்ற நிலையிலும் பாதுகாப்பவர் சிவபெருமான்..

14 comments:

  1. அழகிய படங்களுடனும் விளக்கங்களுடனும் கூடிய இந்த ஆண்டின் 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நடராஜரின் நடனத்தினைப் பற்றிய தங்கள் விளக்கமும் படங்களும் அருமை.போகநிலை, வேகநிலை , யோகநிலை நடராஜரின் வடிவத்தின் அற்புதம்தான்.

    ReplyDelete
  3. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகிய படங்களுடனும் விளக்கங்களுடனும் கூடிய இந்த ஆண்டின் 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    அழகிய கருத்துரைக்கும் , வாழ்த்துரைக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  4. விச்சு said...
    நடராஜரின் நடனத்தினைப் பற்றிய தங்கள் விளக்கமும் படங்களும் அருமை.போகநிலை, வேகநிலை , யோகநிலை நடராஜரின் வடிவத்தின் அற்புதம்தான்.

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ...

    ReplyDelete
  5. நடராஜர் பற்றிய சிறப்பான விளக்கங்கள்!அழகான படங்கள்;ஓம் நமச்சியாய!

    ReplyDelete
  6. நடராஜரின் நடனத்தை பற்றிய விளக்கமும்,பஞ்ச பூத விளக்கங்களும்,படங்களும் மிக அருமை.

    ReplyDelete
  7. அருமையான விளக்கம் அழகான படங்கள் நடம்புரியும் நடராஜரைப்பற்றிய நல்ல பதிவு அம்மா

    ReplyDelete
  8. நடராஜரை பற்றிய நிறைய அருமையான தகவல்கள் படங்களை தந்து அசத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. படங்களும் பதிவும் அசத்துகின்றன....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. உறக்கத்திலும் உடனிருந்து காப்பவர் சிவந் அருமையான விஷயம்.

    ReplyDelete
  11. தத்துவங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  12. ஆஹா! அருமை!

    ReplyDelete