Thursday, February 28, 2013

செல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்










‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே 
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; 
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’ 

என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கும் சொர்ண நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை ...
கோனார்பாளையம் சொர்ண நரசிம்மர் ஆலயத்தில் அனுமனுக்கும் தனி சந்நதி அமைந்துள்ளது. 
ஐந்து முகங்களை கொண்ட ருத்ரனுடைய அவதாரமாக தோன்றிய அனுமனை ஐந்து முகங்களுடன் வழிபடுகிறோம். 

கிழக்கு பக்கம் அனுமன் முகம், 
மேற்கில் கருடன், 
வடக்கில் வராகம், 
தெற்கில் நரசிம்மம், 
மேல்நோக்கி குதிரை முகம் 
என்று ஐந்து முகங்களுடன் கோயிலின் கோபுரத்தில்  தரிசிக்கலாம் 

 வேண்டுதல்கள் நிறைவேற வெள்ளை காகிதத்தில் ‘ஸ்ரீ ராமஜெயம்’ என்ற ராம மந்திரத்தை எழுதி, அதனுடன்  தேங்காய் ஒன்றையும் சேர்த்து கோயில் அர்ச்சகரிடம் கொடுக்கின்றனர். அவற்றை ஆஞ்சநேயரின் பாதங்களில் வைத்துப் பூஜை செய்வதன் மூலம்  பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறது 

மிக நீண்ட பிராகாரம் பலவிதமான தெய்வ சந்நதிகளோடு திகழ்கிறது ... 
 சொர்ண நரசிம்மரின் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களையும்  ஒருசேர வழிபட்டு மனநிம்மதி பெறலாம். 

கிருஷ்ணருக்கு கருவறைக் கோபுரத்தோடு கூடிய தனி  சந்நதி விசாலமாக அமைந்துள்ளது. 

கோயிலின் இடதுபுறத்தில் நந்தவனத்தில் கோபியர் புடை சூழ கோபால கிருஷ்ணனின் அற்புதமான வண்ணச் சிலை கருத்தைக்கவருகிறது. 

வெளிப் பிராகாரத்தைச்  சுற்றி வந்தால் ராகு-கேது, சப்த மாதாக்கள், விநாயகர், முருகர் மற்றும் நவகிரகங்கள் ஆங்காங்கே அருள்பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 

 மதுரை கள்ளழகர் கோயில் 18ம் படி காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி, இங்கு திருமாலின் அம்சமாகவும் கொண்டாடப்படுபவர்.


கருப்பண்ண சுவாமி மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கே கருதப்படுகிறார். 

இவர் முன்னிலையில் பக்தர்கள் தங்களுக்குள்  ஏற்படும் வம்பு, வழக்குகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்வதைக் காணலாம். 

கருப்பண்ண சுவாமிக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப்  பொங்கல். 
உகந்த காணிக்கை குதிரைச் சிலையும் அரிவாள், ஈட்டி, மணி போன்றவையும் ஆகும். 

இவருக்குப் பொங்கல் படைக்கும்போது, இங்குள்ள  ஏழு கன்னிமார்களுக்கும் சேர்த்துப் படைக்க வேண்டும். 

ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய தினங்கள் கருப்பண்ண சுவாமிக்கு மிகவும் உகந்த  நாட்கள். 

இந்த தினங்களில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு நேர்ச்சை வைத்தால், அடுத்த ஆண்டில் அதே நாளுக்குள் வேண்டுதல் நிறைவேறி விடும் என்று சொல்கிறார்கள். 

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், யதகிரிகுட்டா.




24 comments:

  1. ;))))) GOOD MORNING ! ;)))))
    0=======================0

    மீண்டும் வருவேன்.

    இப்போது இடைவேளை.

    >>>>>>

    ReplyDelete
  2. நரசிம்ஹர் அனுக்கிரஹம் சித்திக்கட்டும்.

    ReplyDelete
  3. நல்லதொரு தகவலுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  4. ஆஹா!!, ஸ்ரீ நரசிம்மப்பெருமானின் இன்னருள் பெற்று நன்மைகள் பல அடைய வழிகாட்டும் அருமையான பதிவு. சொர்ண நரசிம்மர் ஆலய தரிசனம் கண்டு இன்புற்றோம். ஸ்ரீ நரசிம்மருக்கு,பானக‌ நிவேதனம் விசேஷமானது என தாங்கள் கூறியது அற்புதமான கூற்று. இதை இல்லங்களிலும் செய்யலாம். குறிப்பாக, செவ்வாய்க்கிழமை இவ்வாறு வழிபாடு செய்வோருக்கு கடன் தொல்லை விரைவில் தீருகிறது என்பது கண்கூடு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  5. நல்ல விளக்கம் , தகவல் நன்றி

    ReplyDelete
  6. Very nice post dear. What a kindness in the eyes of God at the first post!!!!!!!!
    Nice.
    viji

    ReplyDelete
  7. படங்களும் தகவல்களும் சிறப்பாக இருக்கு,மேடம். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  8. ஜ்வாலா நரசிம்மர் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
    ' அஹோபிலம் " பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். உங்கள் பாணியில் அருமையாகப் போட்டோக்களுடன் பதிவு செய்வீர்கள்.

    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  9. இன்று குருவாரம் [வியாழக்கிழமை] அதிகாலை மணி 4.45 இருக்கும். நான் கணினியில் தங்களின் வெறொரு கிளிப்பதிவு படித்துக்கொண்டிருந்தேன்.

    மிகச்சரியாக 5 மணிக்கு தங்களின் புதிய வெளியீடு ஆட்டோமேடிக் செட்டிங் மூலம் வெளியிடப்படுவதை ஏற்கனவே அறிந்திருந்தேன். இன்று தான் அதன் செயலை என்னால் அழகாக கவனிக்க முடிந்தது.

    கணினி நேரம் 4.59 க்கு உங்களின் நேற்றைய பதிவே தெரிந்தது.

    கணினி நேரம் 5.00 என மாறிய உடன் நான் F5 என்னும் REFRESH பட்டனைத்தட்டியதும், பதிவு மாறிவிட்டது.

    அதனால் பிரகலாதனுக்காக உடனே உதித்த உத்தமரான ஸ்ரீ நரசிம்ஹரை முதல் தரிஸனம் என்னால் செய்ய முடிந்தது.

    இது கணினியில் நடக்கும் ஒரு சாதாரண அன்றாட நிகழ்ச்சியே ஆகினும், அதை உற்று இன்று கவனித்த நான் ஒரு சிறு குழந்தை போல வியப்படைந்தேன்.

    உடனே அதே நேரம் GOOD MORNING! என்று ஒரு பின்னூட்டம் அளித்தேன். அதுவும் மிகச்சரியாக 5 மணிக்கே கொடுத்தேன்.

    பிறகு நீங்கள் அதை வெளியிட்ட பிறகு அதே 5.00 A.M. என்று காட்டியதும் எனக்கு மேலும் வியப்பாகவே இருந்தது. இந்த சந்தோஷத்தை முதலில் உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

    >>>>>>>

    ReplyDelete

  10. //‘‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
    தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
    தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்’’

    என்ற சொர்ண லட்சுமி நரசிம்மரின் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும் சகல நலன்களும் உண்டாகும்.//

    இந்த காயத்ரி மஹாமந்திரத்தை பகிர்ந்து கொண்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>>>

    ReplyDelete
  11. //ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், குருவரெட்டியூர் அருகே அமைந்திருக்கும் கோனார் பாளையத்தில் மேற்கு முகமாக வீற்றிருக்கும் சொர்ண நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் கரைத்து நிவேதித்து, இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும் என்பது நம்பிக்கை //

    பொதுவாகவே ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரக்கதைகள் சொல்லும் போதும் கேட்கும் போதும் இதுபோல பானகம் கரைத்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்து விநியோகிப்பது தான் வழக்கம்.

    அப்போது தான் ஸ்வாமியின் உக்கிரஹம் தணியுமாம்.

    [ பானக நைவேத்யத்திற்கு ”கரீதம் ” என்று சொல்லுவோம் ]

    >>>>>>>

    ReplyDelete
  12. /கருப்பண்ண சுவாமிக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல்.
    உகந்த காணிக்கை குதிரைச் சிலையும் அரிவாள், ஈட்டி, மணி போன்றவையும் ஆகும். //

    ;))))) இங்கும் கருப்பரா? மகிழ்ச்சி.

    >>>>>>

    ReplyDelete
  13. இன்றைய தங்களின் பதிவான

    ”செல்வ வளம் அருளும் சொர்ண நரஸிம்ஹர்” இல்

    எல்லாப்படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல அருமை.

    கீழிருந்து மூன்றாவது படம் மட்டும் திறக்க மறுக்கிறது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    oooooooooo

    ReplyDelete
  14. ஓ...நரசிம்ஹரைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கோ...
    அற்புதம். அழகிய படங்கள்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!

    ReplyDelete
  15. கண்ணையும் மனதையும் நிறைத்தது தெரியாததை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  16. சொர்ண நரசிம்மர் தரிசனம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  17. நரசிம்மர் விளக்கம் பதிவிற்கு நன்றி-
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. நரசிம்மர் விளக்கம் பதிவிற்கு நன்றி-
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. அருமையான பகிர்வு. தரிசித்தேன் நரசிம்மரை...

    ReplyDelete
  20. என்ன ஒரு அற்புதமான படைப்பு அதைவிட படங்கள் மிகவும் அருமை அக்கா பார்க்க பார்க்க பிடிக்கிறது இன்னும் பார்த்துக்கொண்டே இருக்க துடிக்கிறது

    ReplyDelete
  21. அருள்மிகு நரசிம்மரைப் பற்றிய பதிவு அருமை.நாங்கள் எல்லோருமே பக்த பிரஹலாதன் ஆகிவிட்டோம்.

    சொர்ண நரசிம்மரை கட்டாயம் தரிசித்து வரவேண்டும்.

    ReplyDelete
  22. thanks for information. we get blessing. how to prepare panagam?. kindly help me

    ReplyDelete
  23. very fruitful information. we got blessing. how to prepare panagam?. kindly help me.

    ReplyDelete