Thursday, March 21, 2013

பேரூர் தேர்த்திருவிழா



கொங்குநாட்டு வைப்புத்தலங்களில் பிரசித்த பெற்ற சிவன் தலம்.-தக்ஷிண கைலாயமான பேரூரில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா மிக பிரசித்தி பெற்றது ...

"தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை." என்றபடி பேரூர் பெருமானை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது.என்பது ஐதீகம்..

அறவாணர்கள் போற்றிடும் பேரூர்  அழியாமெகக்கோர் இடமாகி
உறவாம் அதனால் எமைப்போல உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு 
இறவாப்பனை ஒன்று பேரூரின் சதுர் யுகப் பழமையைப்பறைசாற்றுகிறது ..

ஆரூரார் பேரூரார்” என்றும் “பேரூர் பிரம்மபுரம் பேராவூர்” என்றும் அப்பர் பெருமான் தமது ஷேத்திரக்கோவையில் இரண்டு இடங்களில் பாடிப்பரவிய
பெருமை பெற்றது பேரூர் திருத்தலம் ...


பங்குனி உத்திரத் தேர் திருவிழா , கொடியேற்றத்துடன் துவங்கும்...
மலர்பல்லக்கு நிகழ்ச்சி மணம் பரப்பும் ..

ஒன்பது நாட்களுக்கு, வேள்விபூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா சந்திரபிரபை, சூர்யபிரபை திருவீதி உலா,  பூதவாகனம், சிம்மவாகனம், மலர்ரதம், காமதேனுவாகனம்,  பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபவாகன காட்சி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் காட்சியும், திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை சேவையும் கோலாலகலமாக கொண்டடப்படுகிறது ..



17 comments:

  1. அரிய தகவல்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  2. superb pictures with information

    ReplyDelete
  3. அற்புத படங்கள் பிரமாதம் அம்மா...

    ReplyDelete
  4. ”பேரூர் தேர்த்திருவிழா”

    முதல் படத்தில் ஸ்வாமியும் அம்பாளும் அற்புதமான தரிஸனம்.

    >>>>>

    ReplyDelete
  5. படம்: 2 இல்

    காமதேனு சூப்பராக புதுமையாகக் காட்டி அசத்தியுள்ளீர்க்ள்.

    அடியில் உள்ள

    ‘கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’

    அட்டகாசம் போங்கோ ! ;)))))

    >>>>>> இடைவேளைக்குப்பின் தொடரும் >>>>>>

    ReplyDelete
  6. படம்: 3

    சிவ சிவ ; ))))) அருமை.

    படம்: 4

    நெல்லிக்கனிகளுடன் அம்பாளுக்குப்போடப்பட்டுள்ள மாலை அழகோ அழகு ! ;)))))

    கிரீடம் + இதர புஷ்ப அலங்காரங்களும் மிகவும் ரஸிக்கத்தக்கவையாக உள்ளன.

    படம்: 5

    பூக்கோலம் + விளக்குகள் கோலாகலமாக உள்ளன.


    >>>>>>>

    ReplyDelete
  7. படம் 6 முதல் 9 வரை காட்டியுள்ள

    அனைத்துத் ‘தேர்’களும் ஜோர் ஜோர் ! ;)))))

    படம் 10 இல்

    யானையார், தன் துதிக்கையைத்தூக்கி குழைந்து கொண்டு சலாம் போடுவது அழகோ அழகு! ;)

    >>>>>>

    ReplyDelete
  8. படம் 11 + 12

    கோயில் பிரகாரம் + கோபுர நுழைவாயில் போட்டோ கவரேஜ் அருமை.

    அப்பர் பெருமானால் பாராட்டிப்பாடப்பட்டுள்ள ஸ்தலத்தின் பெருமைகளை அழகான படங்கள் + விளக்கங்களுடன் பதிவாகத்தந்துள்ள தங்களின் இந்தப் படைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

    ooooooo

    ReplyDelete
  9. பேரூர் தேர் திருவிழா தரிசனம் அற்புதம்!

    ReplyDelete

  10. பேரூரைப் பற்றிய உங்கள் பதிவு என் நினைவலைகளை எழுப்பிவிட்டது. 1950- 1951-ம் வாக்கில், நாங்கள் கோவை பழைய சுங்கம் அருகில் ரெட் ஃபீல்ட்ஸில் இருந்தோம். என் பெரிய அண்ணா சைக்கிளில் பேரூர் வரை சென்று வரலாம் என்று என்னைக் கூப்பிட்டார். அவர் ஒரு வாடகை சைக்கிளில் ஏற நான் பின்னால் காரியரில். . சிறிது தூரம் போவோம். தூரத்தில் காவல்காரர் ( போலிஸ்)தென்பட நான் இறங்கி அவருடனோட, மறுபடியும் சைக்கிள் சவாரி. மறுபடியும் போலிஸ் கூடவே ஓட்டம்/ இப்படியே பேரூருக்கு பாதி தூரத்துக்கு மேல் ஓடியே போனது நினைவில். .தல மூர்த்தியின் பெயர் பட்டீஸ்வரர் என்று நினைவு. பிறிதொரு சமயம் சென்றபோது, அருகில் ஓடும் ஆறு மிகவும் பராமரிப்பற்று இருந்ததும் நினைவுக்கு வருகிறது. படங்களுடன் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அழகிய படங்களும் நல்ல தவல்களும் இன்று உங்களால் அறியக்கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி!

    நன்றி சகோதரி பகிர்வுக்கு!

    ReplyDelete
  12. தேர் இழுத்துவிட்டேன் மனதினில் நன்றி நன்றி பகிர்ந்த்திற்க்கு

    ReplyDelete
  13. மலர் பல்லாக்கில் நெல்லிக்காய் மாலையோடு அழகாய் அம்மன் அருள் பாலிக்கிறாள்.

    பேரூர் தேர் அழகு.

    ReplyDelete
  14. பேரூர் திருத்தல மகிமை அறிந்தேன். எவ்வளவு பெரிய கோவில்! காமதேனு மிக அழகு!
    தேரில் சுவாமியை தரிசிப்பதற்கு ஈடு இணை எது? தேர் திருவிழா மிக அழகான ஒரு திருவிழா. தேர் ஓடும்போது வடம் பிடிப்பது ரொம்பவும் விசேஷம். ஸ்ரீரங்கத்தில் போன வருடம் பங்குனித் தேர் சேவித்துவிட்டு வந்தேன்.
    பேரூர் தேர் உங்கள் பதிவில் சேவித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  15. இந்த ஊர் பற்றியும் தேர் பவனி பற்றியும் இப்போதே தெரிந்துகொண்டேன்.நன்றிங்க.

    ReplyDelete
  16. வீட்டில் இருந்தே தேர்த்திருவிழா பார்த்து விட்டேன்!

    ReplyDelete
  17. திருவிழாவில் பங்கு பற்றிய அனுபவம் கிடைத்தது
    சகோதரி பகிரப்பட்ட படங்கள் அப்படி .வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete