Monday, April 15, 2013

கூடல்மாணிக்கம்







ராமாயண நாயகன் ராமனின் இளவல் பரதன்  கூடல்மாணிக்கம் 
கோவில்  கொண்டிருக்கிறார்..கோவிலின் தெய்வம் பரதன் ...

திரிபயாரில் ராமன்,  
இரிஞ்சலகுடா கூடல்மாணிக்கம் கோவிலி்ல் பரதன்,  
மூழிக்குளத்தில் லட்சுமணன்,  
பையமாளில் சத்ருக்கனன் கோவில்கள் உள்ளன.
ஒரே நாளில் நால்வரது கோவில்களையும் சென்று தரிசிப்பது 
" நாலம்பல யாத்திரை "என அழைக்கப்படுகிறது.  


கேரள மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும்  ஜீவன் . யானைகளை "மேற்கு மலைத்தொடரின் குழந்தை" என்றே  அழைக்கிறார்கள்.  
யானைகளின்றி கேரளத்தில் எந்த ஒரு விழாவும் கொண்டாடப்படுவதில்லை
குறைந்தது ஒரு யானையாவது கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.  
யானைகள் நெற்றிப்பட்டம் ,கழுத்தாபரணம், மணிகள் அணிந்து வெண்சாமரம் வீசி, ஆலவட்டம் சுழற்றி, பஞ்ச மேளம் ஒலிக்க , திருவீதி ஊர்வலம் காண்பது அழகு . திருச்சூர் பூரத்திருவிழா இதற்கு ஒரு சான்று.  
பொதுவாக கோவில்களில் ஒவ்வொரு நாளும் ஐந்து கால பூஜை, மூன்று முறை சிவேலி(சுவாமி ஊர்வலம்) நடத்துவது வழக்கம்
இதற்கு மாறாக உள்ளது கூடல்மாணிக்கம் கோவில்
இக்கோவிலில்,மூன்று கால பூஜை மட்டுமே, சிவேலி இல்லை
திருச்சூர் பூரத்திருவிழாவிற்கு மறுநாளான சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தன்று பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கும் போது மட்டுமே காலை, மாலை இரு நேரமும் நடைபெறும் சிவேலியில் பங்கேற்கும் பதினேழு யானைகளில் ஏழு பிரதான யானைகளின் முகப்படாம் சுத்தமான தங்கத்தாலும், மற்றவை  வௌ்ளியாலும் செய்யப்பட்டவைவேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு...
செண்டைதாளம்,கொம்பு, குழல் வாத்தியங்கள் முழங்க வரும் திருவீதி உலாவில், இறைவனை சுமந்திருக்கும் யானையின் இருபுறமும் குட்டியானைகள் நடந்து வருவது மற்றுமொரு சிறப்பு.



14 comments:

  1. விளக்கம் தகவல் அருமை நன்றி

    ReplyDelete
  2. அருமையான படங்கள்... தகவல்களுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  3. கூடல் மாணிக்கமும், அதன் விவரங்களும், படங்களும் அருமை.

    ReplyDelete
  4. கூடல்மாணிக்கம் அறியாத தகவல் மிகவும் நன்றி படங்க அதுவும் யானை களுடன் இருக்கும் படங்கள் அருமை

    ReplyDelete
  5. மிகவும் அருமையான அழகான பதிவு.

    அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு மனதை மிகவும் கவர்வதாக உள்ளன.

    படங்களும் விளக்கங்களும் வழக்கப்படி வெகு ஜோர்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பிரமிக்க வைக்கும் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 880 ooooo

    ReplyDelete
  6. புதிய தகவல்களுடன் அழகிய படங்களும். அருமை...
    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அருமையான படங்கள். பரதனுக்கும்,இளையாழ்வாருக்கும்,சத்ருக்னனுக்கும் கோவில்கள் அமைந்திருப்பது புதிய செய்தி. தங்கள் சேவை மிக அருமை இராஜராஜேஸ்வரி. மிக நன்றி. யானைகளின் அழகு மனதை அள்ளுகிறது.

    ReplyDelete
  8. பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பார்கள்.

    யானை பிடித்துள்ள நீங்கள் யோக்கியசாலியும் கூட.

    ஆனை பிடித்துள்ள அதிர்ஷ்டசாலி, புத்திசாலி வாழ்க வாழ்கவே! ;)

    ReplyDelete
  9. பார்க்கப்பார்க்க அலுக்காத படங்கள்.

    ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் பலமுறை சிவேலி பார்க்கும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன்.

    ReplyDelete
  10. பரதனுக்கு கோவில் என்பது செய்தி எனக்கு. உஹ்ன்களால் இந்த கோவில் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி பகிர்விற்கு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  11. த்ரிப்பரையார் சென்றிருக்கிறோம் . நாலம்பல தரிசனம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை சாத்தியப் படவில்லை. யானைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பரத,இலக்குவ,சத்துருக்கனனுக்குக் கோவில்களா!அரிய தகவல்.அருமையான படங்களும் விளக்கமும்

    ReplyDelete
  13. முதல் படம் அப்படியே கொள்ளை கொள்ளும் அழகு.....

    தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete