Thursday, May 1, 2014

சுபிட்சம் தரும் ஸ்ரீலட்சுமி குபேர சிறப்பு வழிபாடு




ஸ்ரீஸ்துதி

1.ஓம் நமோ லட்சுமியை மகாதேவ்யை பத்மாயை சததம் நம!  
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!! 

2.த்வம் சாட்சாத் ஹரி ஷஸ்தா சுரே ஜேஷ்டா வரோத்பவா! 
பத்மாட்சீ பத்ம சம்சா தாநா பத்ம ஹஸ்தா பராமயீ!! 

3.பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி! 
அருணா நந்தினீ லட்சுமி மகாலட்சுமி, திரி சக்திகள்!! 

4.சாம்ராஜ்யா சர்வ சுகதா நிதிநாதா நிதிப்ரதா! 
நிதீச பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோன்னதி:!! 

5.ஸம்பத்தி சம்மதா சர்வசுபகா சமஸ்து தேஸ்வரி! 
ரமா ரட்சாகரீ ரம்யா ரமணீ மண்ட லோத்தமா!

 16 வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் ஸ்ரீ கோலமிட்டு ஸ்ரீஸ்துதியை கூறுபவர்களுக்கு லட்சுமி குபேரரின் அருட்பார்வை  கிடைக்கும். 



12 குபேரன்கள் காட்சிதரும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் அபூர்வமானது  
உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் ஆட்சி செய்தபோது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வியாபாரம் செய்ய வடக்கு திசை நோக்கி பயணமானான்.

அந்த வணிகன் கடம்ப வனத்தை அடைந்தபோது இருள் சூழ்ந்துவிட்டது. . ஓர் ஆல மரத்தின் மீது ஏறி அயர்ந்து தூங்கத் தொடங்கினான்.
நள்ளிரவில் திடீரெனக் கேட்ட ஒலியால் எழுந்தவன் கண்ணெதிரே ஒளிமிகுந்த தீப்பிழம்பு தோன்றியது. அத் தீப்பிழம்பின் நடுவே ஒரு சிவலிங்கம் இருக்க, தேவர்களும் முனிவர்களும் வழிபடும் காட்சி பளிச்சென்று தோன்றி மறைந் தது.


விடிந்ததும் உறையூரை அடைந்த வணிகன், மன்னன் பராந்தக சோழனிடம் தான் கண்ட காட்சியை விவரித்தான்.

அப்போது சோழ மன்னனின் விருந்தினராய் அரண்மனையில் தங்கியிருந்த குலசேகர பாண்டி யனும் வணிகன் சொன்னதைக் கேட்டான்

உடனே சோழனும், பாண்டியனும் கடம்ப வனத்திற்கு வந்தனர். அந்த சிவலிங்கத்தை தேடி அலைந்தனர்.

அப்போது கையில் கரும்புடன் அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர், சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டிவிட்டு, ஜோதி வடிவாகி மறைந்தார்.
ஜோதி மறைந்த திசை நோக்கிய மன்னர்கள், தொலைவில் ஒரு குன்றின் மீது முருகபெருமான் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கக் கண்டு சிலிர்த்தனர்.

பக்திப் பரவசத்தில் ஆழ்ந்த சோழனும் பாண்டியனும் தண்டாயுதபாணி சுவாமிக்கு குன்றிமீது ஓர் ஆலயமும், சிவபெருமானுக்கு அதே இடத்தில் ஓர் ஆலயமும் கட்டினர்.

ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பில் அழகிய ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

ராஜகோபுரத்தைக் கடந்ததும் முன் பிராகார மும், அதனைத் தொடர்ந்து ஸ்தபன மண்டபமும் உள்ளன. துவார பாலகர்களின் திருமேனிகள் நம்மை வரவேற்கின்றன.

உட்பிராகார மண்டப நுழைவாயிலின் மீது சிவபெருமானும் பார்வதியும் காளை வாகனத் தின் மீது அமர்ந்திருக்க, மயில் வாகனத்தில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்திருக்க, விநாயகரும் உடன் இருக்கிறார். இந்த குடும்ப சகிதமான காட்சியினை சப்த ரிஷிகள் வணங்க, சிவாச்சாரியார் பூஜை செய்யும் காட்சி அற்புத சுதை வடிவமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

உட்பிராகார மண்டபம். அழகிய வேலைப்பாடுடன் கூடிய இசைத் தூண்களை நளினமாய்  தட்டும் போது இனிய ஓசை எழுகிறது.

கன்னி மூலையில் வரகுண கணபதியும், ஐந்து தலை நாகரும் காட்சி தருகின்றனர்.

 கருவறையில் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். .[Gal1]
தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை,  அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் நாயன்மார்கள், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. சண்டிகேசுவரர், சூரியன், பைரவர், நவகிரக சன்னதிகளும் இருக்கின்றன.
[Gal1]
இறைவிகாமாட்சி அம்மன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு!
[Gal1]
அன்னையின் கருவறை தேவகோட்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, லட்சுமிதேவி, பிரதோஷ நாயகர், சரஸ்வதி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. துர்க்கையின் எதிர்ப்புறம் சண்டிகேசுவரி சன்னதி உள்ளது. ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.

தேரோடும் வடக்கு வீதியில் வடமேற்கில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. சிவபெருமான் தலை யினின்று தோன்றிய கங்கை நீர் இக்குளத்தில் சேர்ந்துள்ளதாக ஐதிகம்.

இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபடுவதால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும், நம் மேனியில் உள்ள பிணிகளும் அகலும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.

தலத்திற்கே தனிச்சிறப் பான 12 குபேரன்களின் தரிசனம் பெறலாம்.
குபேரனின் உருவம் சிலாரூபமாகவோ சுதை வடிவிலோ இன்றி ஆலயத்தில் உள்ள கல்தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என பன்னிரண்டு இடங்களில் அற்புதமாக வடி வமைக்கப்பட்டுள்ளன.
[Gal1]
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என பன்னிரண்டு ராசிகளுக்கும் தனித்தனியே இந்த குபேர வடிவங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரவர் ராசிக் குரிய குபேரனை வணங்குவதன் மூலம், வறுமைத் துன்பம் ஒழிந்து வற்றாத செல்வம் பெற்று வாழ இயலும் என்பது நம்பிக்கை.
குறிப்பிட்ட குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்துவதால் தடைப்பட்ட திருமணமும், தள்ளிப் போகும் திருமணமும் நடந்தேறுவதுடன், இழந்த பொருளும், கைவிட்டுப்போன சொத்துகளும் மீண்டும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
12 ராசிகளுக்கு உரிய குபேரர்களைத் தவிர, 13வது குபேரனாக மகா குபேரனின் சிற்பம் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

இப்படி பதின்மூன்று குபேரர்கள் உள்ள அமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்த ஆலயத்தி லும் இல்லை என்கின்றனர்.

ஆலயத்தின் உள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்த பின், நம் ராசிக்குரிய குபேரன் முன் சில நிமிடங்கள் அமைதியாக நின்று பிரார்த்தனை செய்கிறோம். பின்னர் ஆலய கோபுரத்தில் உள்ள மகா குபேரனை வணங்கி வெளியே வரும்போது மனச்சுமையும், கடன்சுமையும் நிச்சயம் தீரும் என்ற நம்பிக்கை ஒளி மனதில் படருவது நிஜம்!
திருச்சிக்கு அருகே உள்ள துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செட்டி குளம் என்ற இந்தத் தலம்.

[Image1][Gal1]

13 comments:

  1. அருமையான பதிவு.

    அழகழகான படங்கள்.

    அற்புதமான விளக்கங்கள்.

    செட்டிக்குளம் சிவன் கோயிலுக்குப் போய் வந்துள்ளேன். என் ராசிக்கான [மிதுனம்] குபேரன் என்னைக்கண்டதும் எங்கோ போய் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார்.

    அவ்வளவு தூரம் போனவன் அவரைப் பார்க்காமல் விட்டு விடுவேனா என்ன? குருக்கள் உதவியுடன் தேடிக்கண்டுபிடித்து தரிஸித்து வந்தேன்.

    இளமையில் குசேலனாக இருந்தேன். இளமையில் வறுமை என்பது கொடுமை தான். இருப்பினும் அப்போது இருந்த ஏதோவொரு குழந்தைப்பருவ சந்தோஷம், மன நிம்மதி, பெற்றோர்களின் நேரடி மேற்பார்வையில் கிடைத்த அன்பு + பாசம் + பாதுகாப்பு; தேக ஆரோக்யம் முதலியன இப்போது இல்லை.

    அன்று ஆசைப்பட்டும் கிட்டாத எதையும் இன்று நினைத்தால் ஒரு நொடியில் என்னால் நான் இருக்கும் இடத்திற்கே வரவழைத்து அனுபவிக்க முடியும் தான். ஆனால் இன்று ஆயிரம் ஆயிரம் கட்டுப்பாடுகள். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை.

    தேக ஆரோக்யம், மன நிம்மதி, பாதுகாப்பு உணர்வு, எதிலும் எப்போதும் சந்தோஷம் + உற்சாகம் உள்ளவனே பாக்யவான். அவனே உண்மையில் குபேரன்.

    எவ்வளவு பணமும் வசதி வாய்ப்புகளும் இருந்து என்ன பிரயோசனம். அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்து வைத்துள்ளவன் மட்டுமே குபேரன்.

    -oOo-

    ReplyDelete
  2. கீழிருந்து நான்காவது படம், எப்படிக்கூட்டினாலும் 72 வரும் குபேரக்கோலம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சந்தோஷம்.

    ReplyDelete
  3. காலையில் குபேர தரிசனம்.. மனம் மகிழ்கின்றது.

    ReplyDelete
  4. செட்டிகுளம் குபேரன் தரிசனம் கிடைத்தது... நேரிலும் எப்போது செல்ல முடியுமோ செல்ல வேண்டும்....

    ReplyDelete
  5. குபேரனின் தரிசனம் அற்புதம். சிறப்பான பதிவு.நன்றி.

    ReplyDelete
  6. மக்களில் சிலருக்கும் அரசர்களுக்கும் தான் இருக்குமிடம் அறிவித்து கோவில் கட்டச் சொல்லி குடியமர்ந்த கோவில் கதைகளில் இதுவும் ஒன்றா. அழகான படங்களுடன் பதிவிடும் நேர்த்திக்குப் பாராட்டுக்கள். எப்படிக் கூட்டினாலும் 72 என்னும் எண் வருகிறதே. அதன் கதை என்ன.?

    ReplyDelete
  7. குபேர வழிப்பாட்டைப் பற்றிய இந்த பதிவு மிகவும் அருமை அம்மா.

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள்! செட்டிக்குளம் குபேரர், ஏகாம்பரேஸ்வரர் பற்றிய தகவல்கள் புதியவை! நன்றி!

    ReplyDelete
  9. குபேர சிறப்பு வழிபாடு அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  10. குபேரன் கோவில் படம் போட்டு வாசகர்களுக்கும் சுபிட்சம் கிடைக்கும் படி செய்து விட்டீர்களே. நன்றி மேடம்.

    ReplyDelete
  11. பன்னிரண்டு ராசிகளுக்கும் பன்னிரண்டு குபேரர்களா? வியப்பான தகவல். கடைசியில் இருக்கும் படம் மிக அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  12. வியக்க வைக்கும் தகவல்களுடன் சிறப்பான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. வியக்க வைக்கும் தகவல்களுடன் சிறப்பான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete