Tuesday, May 10, 2011

வாழும் அதிசயங்கள்....



எல்லை காணமுடியாத சமுதிரக்கடலில் பயணிக்கும்
ஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் 



சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின் பற்றி
நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. 

தமது நேர்கோட்டுப் பாதையில் இருந்து குறைவாகவே வளைகிறது...
சீரற்ற கால நிலை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களிலும் அதன் பாதையிலிருந்து விலகுவதில்லை என்பது அதிசயமே !
moving tail script
ஆழ்கடலில் துல்லியமாக பயணிப்பது எளிதானதல்ல
 கண்டறியப்படாத நுணுக்கங்கள் மூலமாகவே இவ்வளவு தூரம்
 நேர்கோட்டுப் பாதையில் வழி தவறாமல் பயணிக்கின்றன ..

நீலத்திமிங்கிலம் டைனோசர்கள் எனப்படும் மிருகங்களைவிட 
இரண்டு மடங்கு பெரியது இந்த நீலத் திமிஙகிலங்கள்.

இதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும், 
இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது.இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.

இது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும்
64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம். 

இதன் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் 
ஊர்ந்து செல்ல முடியும்.

இது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும்விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின்சத்தத்தை விட அதிகமாக இருக்கும் ஜெட் விமான இஞ்சின் சத்தம் 140 டெசிபல்) நீலத்திமிங்கிலம் எழுப்பும்
 சத்தம் 188 டெசிபல் ஆகும் 

இது தன் சக திமிங்கிலத்துடன் 1600 கிமீ தூரத்துடன் இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும்.

டைனோசர்கள்

டைனோசர்கள் பற்றிய செய்திகள் எப்போதுமே ஆர்வத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.
சாதாரண மக்களையும் `டைனோசர்களைப்பற்றி அறிய வைத்ததிலும், அவற்றைப் பற்றி ஆர்வம் கொள்ள வைத்ததிலும் ஸ்பீல்பெர்க்கின் "ஜுராசிக் பார்க்" படத்துக்கு ஒரு முக்கியப் பங்கு 
உண்டு. 

டைனோசர். ஒரு காலத்தில் இது பூமியின் 
முக்கிய உயிரினமாகத் திகழ்ந்திருக்கிறது ...

அவை, இந்த பூமியுடன் மோதிய ஒரு வேறு கிரக துண்டால் (asteroid) ஏற்பட்ட அதிர்வில் கொலப்பட்டன என சொல்லப்படுகின்றது.


இன்றைய பறவைகள், டைனோசர்களில் இருந்து பரிணமித்தவைதான். 








8 comments:

  1. ரொம்ப சுவாரஸயமான தகவல்கள் சொல்லியிருக்கீங்க. படங்களும் நன்று..

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு, அறிய தகவல்கள்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு,படங்களும் நன்று..நல்ல தகவல்கள் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  4. //இதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும். இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது. இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.

    இது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும் 64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம்.இதன் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் ஊர்ந்து செல்ல முடியும்.

    இது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும் விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின்
    சத்தத்தை விட அதிகமாக இருக்கும் //

    அடேங்கப்பா !
    உங்கள் பதிவுகளில் இதுபோன்ற அதி பயங்கரங்களும் நடுநடுவே, எங்களை நடுங்கவைக்க.

    இன்று அதிகாலை முதல் மாலை வரை கோவிந்தபுரம் பாண்டுரங்கனையும், ரெங்கம்மா மாயீ ரெங்கம்மாவையும், 12 கோடி ரூபாய் திட்டத்தில் எழுப்பபட்டு வரும் புத்தம் புதிய பாண்டுரங்கன் கோவில் கோபுரத்தையும், விட்டல்தாஸ் மகராஜ் [ஜெயகிருஷ்ண தீக்ஷதர்]அவர்களையும், போகேந்திராள் (59 ஆவது பீடாதிபதி) ஜீவ சமாதியையும் பிரதக்ஷணம் செய்து தரிஸித்து, வந்ததால், திமிங்கலம்+டைனோசர் பற்றிய பயமின்றி நிம்மதியாகத்தூங்கலாம் என்று தோன்றுகிறது.

    Good Night அன்புடன் vgk

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  6. மிக விவரமான தகவல்கள் .நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete