Sunday, May 22, 2011

நொடியில் கோடி வரமருளும் நிமிஷாம்பாள்










[Nimishamba+temple.jpg]



Nimishamba, bengaluru

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்
அன்னைக்கு அண்டசராசரங்களோடு இந்த
அகிலத்தையும் படைத்து, காத்து, லயப்படுத்திகொள்ள
ஆவதெல்லாம் கண் இமைப் பொழுதே!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
என்று அருளாளர்களால் பாடிப் பரவும் பரமசிவனின் இடப்பாகம்
ஏற்று அறம் வளர்த்துச் சுடரும் கற்பகக் கொழுந்து அவள்!
ஐயம் இன்றி அருள அவளுக்கு ஒரு நொடி போதாதா என்ன?!
"உன்மேஷ நிமிஷோத் பன்ன விபன்ன புவனாவளி " என்று லலிதா சகஸ்ரநாமத்தின் நாமாவளி உணர்த்தும் உண்மை இதுதானே!

வழிபடும் மக்களின் உளமார்ந்த உயர்ந்த கோரிக்கைகள் ஒரு கோடியளவுக்கு இருந்தாலும் , கண்மூடி திறப்பதற்குள் நிறைவேற்றி வைக்கும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாமில் அருள்புரிகிறாள்.
தல வரலாறு: முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத் தொடங்குவான். ஒருசமயம், ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனையும், அவன் நாட்டு மக்களையும் துன்புறுத்தினான். முக்தராஜனால் அவனை அடக்க முடியவில்லை. மனிதசக்தியால் இயலாதபோது, தெய்வீக சக்தியின் துணையை நாடுவதே பக்தியின் படிநிலை. இஷ்டதெய்வமாகிய பராசக்தியை நோக்கி, உணவு, நீரின்றி தவத்தில் ஆழ்ந்தான். உயிர் மட்டும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்க உடல் கரைந்து விட்டது. தன் மீது உயிரையும் பொருட்படுத்தாமல் பக்தி செலுத்திய,பக்தனுக்கு உதவ பராசக்தி உக்ரரூபம் எடுத்து பூமிக்கு வந்தாள். மன்னனுக்கு காட்சி கொடுத்தாள். அநியாய சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் உயர்ந்த பொதுநல கோரிக்கையை ஏற்றாள். ஜானு சுமண்டலன் முன்பு சென்று, கண்ணை மூடித் திறந்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பாலாகி விட்டான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு, அசுரவதம் நடந்த இடத்தில் கோயில் எழுப்பினான் மன்னன். என்றென்றும் அங்கு தங்கியிருந்து, மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கவும், அவர்களின் பொதுநலக் கோரிக்கைக்கு உடனடியாக அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். கணநேரத்தில் அருள்புரியும் அம்பிகை என்னும் பொருளில் "நிமிஷாம்பாள்' என்று பெயர் சூட்டப்பட்டது.


நிமிஷாம்பாள் ஜெயந்தி: வைகாசி மாதம் வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இவளது தலைக்கு மேலுள்ள குடை தர்மச்சக்கரத்தின் அம்சமாக கருதப்படுகிறது. நான்கு கைகளில் இரண்டில் சூலம் உடுக்கையும், மற்றவை வரத (வரம் தருதல்) அபய ஹஸ்தமாகவும் (அடைக்கலம் தருதல்) உள்ளன. மும்முடி கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்தபோது அம்பாள் முன்பு சக்கரப்பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜெயந்தி நாளில் 108 கலசாபிஷேகம், துர்காஹோமம் நடக்கும்.
கிருஷ்ண சிலா' என்னும் கருமை நிறத்தில், தரிசிப்பவரைப் பரவசத்தில் ஆழத்துகிறாள் தேவி. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.





Nitya Chandika Homa at 

Shri Nimishamba Temple 




பவுர்ணமி பூஜை: பவுர்ணமியன்று, பக்தர்கள் இங்கு வந்து விரதமிருந்து அம்பாளைத் தரிசிக்கின்றனர். அன்று மட்டும் லட்சம் பேர் கூடுகின்றனர். திருமணத்தடை, எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கவும், குழந்தை பாக்கியம், வழக்கில் வெற்றி ஆகியவற்றுக்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமி நாட்களில் பாலபிஷேகம் செய்பவர்க்கு விரைவில் மணவாழ்வு கைகூடும். கோயில் வாசலில் காவிரி நதி ஓடுகிறது. காவிரியில் நீராட மிக அகன்ற படித்துறையும், விநாயகர் சந்நிதியும் உள்ளன.
vinayaka nmshmba tmpl 290311

ஐந்து சந்நிதிகள்: காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் நடந்தே சென்று பக்திநெறியைப் பரப்பினார். விநாயகர், சிவபெருமான், பார்வதி, சூரியன், மகாவிஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களையும் ஒன்றிணைத்து சனாதன தர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டினார். ஆதிசங்கரரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்விதமாக இக்கோயிலில் ஐந்து தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரிவார மூர்த்திகள்: பரிவாரமூர்த்திகளில் சூரியன், அனுமன் சந்நிதிகள் மேற்குநோக்கி அமைந்துள்ளன. கேரளபாணியில் அர்ச்சகர்கள் அமர்ந்தே பூஜை செய்கின்றனர். வெண்ணெய், மலர் அலங்காரம், வெள்ளிக்கவசம் என்று சந்நிதிகளில் தெய்வங்கள் மிக நேர்த்தியாக உள்ளனர்.
திருமணத்தடை, நீங்கவும், கல்வி அபிவிருத்திக்கும் அனுமனுக்கு வெண்ணெய்காப்பு சாத்துகின்றனர்.


அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை விஷேசம்.
 இக்கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளும், கிருஷ்ணசிலா என்னும் கருப்பு கல்லால் செய்யப்பட்டுள்ளனனர். எல்லா சந்நிதிகளிலும் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
சூரியபகவான். விஷ்ணுவின் அம்சமாக "சூரியநாராயணர்' என்னும் பெயரில் அருள்கிறார். உத்ராயணம், தட்சிணாயனம், ரதசப்தமி நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
திருவிழா: நிமிஷாம்பாள் ஜெயந்தி, மாத பவுர்ணமி, நவராத்திரி, மகாசிவராத்திரிதிறக்கும் நேரம்: காலை 6- இரவு 8.30 மணி. இருப்பிடம்: மைசூருவில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் கஞ்சாம் உள்ளது. பஸ் உண்டு.போன்: 08236 252 640, 098458 01632
ஒரு கொடியில் இருமலர்கள் :அசுரனை வதம் செய்த பாவம் நீங்க நிமிஷாம்பாள் சிவனை ஸ்தாபித்து வழிபட்டாள். அவர் "மவுத்திகேஸ்வரர்' என்னும் திருநாமத்தோடு லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். லிங்கத்தில் முகம் போன்ற கவசம் சாத்தப்பட்டுள்ளது. பிரதோஷவேளையில் மவுத்திகேஸ்வரரைத் தரிசித்தால் ஆயுள் அபிவிருத்தி உண்டாகும். சிவபெருமானின் வலப்புறத்தில் லட்சுமிநாராயணர் சந்நிதி உள்ளது. அன்பின் காரணமாக பூலோகத்திற்கு தனது சகோதரியைக் காண வந்த பெருமாள் இங்கே தங்கிவிட்டார். ஒரு கொடியில் பூத்த இருமலர்களான லட்சுமிநாராயணரையும், நிமிஷாம்பாளையும் தரிசித்தால் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு
மறைந்து ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம்.
கர்நாடக தேச கோவில்களில் மிகவும் சிரத்தையுடன் பக்தியுடன் செய்யப்படும் பூஜைகள் மனநிறைவை அளிக்கும்.

ALL IS MOTHER & MOTHER IS ALL













1.King Sumanaska requested Sage Muktaka to perform 
the sacrifice on behalf of the kingdom.
2.Selecting a spot at the confluence of the rivers Kaveri 
and Lokapavani in a village called Ganjam near Mysore, 
the Sage began the rituals.
3.But alas, every good deed is always confronted with obstacles. 
Even as the Sage was commencing the sacrifice,two demons – 
namely Jaanu and Sumandala – caused havoc and devastation.
4.With total surrender, the Sage called upon the 
Supreme Cosmic Energy to destroy these demons.
5.Instantaneously, there emerged from the fire the 
resplendent form of the Divine Mother, armed 
with a trishula and dhamaru.
6.Within a minute, She had slain the demonic forces 
and enabled the smooth completion of the sacrifice.
7.She stood, radiant and victorious, blessing the world- 
the ever-compassionate Mother.
8.Then, walking 48 steps backward, She established Herself as
Shri Nimishamba Devi, and Her temple thus came into existence.
Jai Guru Nimishananda.
[DSC05520.JPG]

[DSC05517.JPG]

[DSC05518.JPG]

[DSC05522.JPG]
[DSC05548.JPG]


[DSC05546.JPG]

View of Karighatta from Nimishamba 

“Kari” in Kannada means black and “Ghatta” means hill.
[DSC05547.JPG]


[ambal+in+gokarneswar+temple.mangalore..JPG]

[nitya+chandika+homa.jpg]

 The gathering for the kumbhabhisheka at the new 
Sri Nimishamba Devi Temple in Bangalore 



planets (animated GIF)
NASA space (animated GIF)

33 comments:

  1. நிமிஷாம்பாள்...புதிய பெயர், விவரங்கள். அருமை.

    ReplyDelete
  2. பதிவு, படங்கள், பகிர்ந்து கொண்ட தகவல்கள் அருமை.

    ReplyDelete
  3. Very nice pictures.
    I remember the day when i participated the chanti homam, when my daughter was at bangalore.
    Thanks Rajeswari. Today morning I had Devis darshan.
    viji

    ReplyDelete
  4. அழகான படங்கள் அருமையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  5. அழகான படங்கள் அருமையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  6. நிமிஷாம்பாளை பற்றி
    நிமிஷாமா
    ஒரு மிகப்பெரிய பதிவு
    போட்டுட்டீங்க.

    பொறுமையாப்படிச்சு
    பின்னூட்டமிட
    எனக்கு மணிக்கணக்காக
    ஆகுங்க !

    பொறுத்தருளுங்கள் தாயே !

    மீண்டும் வருவேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  7. நல்ல புகைப்படங்கள், அருமையான தகவல்கள்…. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. ஆதிசங்கரர், விநாயகர், சிவபெருமான், பார்வதி, சூரியன், மகாவிஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களையும் ஒன்றிணைத்து சனாதன தர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டினார். //

    இதுவே பஞ்சாயதன பூஜை தத்துவம்.
    ரத்த வர்ண விநாயகர், ஆவுடையாருடன் கூடிய லிங்கம், ஐம்பொன்னால் ஆன பராசக்தி விக்ரஹம், ஸ்படிகத்தில் சூரியன், சாலிக்கிராமத்தில் மஹாவிஷ்ணு என என் தந்தை தினமும் சிவபூஜை செய்து வந்தார். அந்த பூஜை என் பெரிய அண்ணா அவர்களின் பிள்ளையிடம் (வேதம் படித்தவர்) தற்போது கொடுத்துள்ளேன். அவரும் தினமும் மிகவும் ஸ்ரத்தையுடன் பூஜை செய்துவருகிறார்.

    //வழிபடும் மக்களின் உளமார்ந்த உயர்ந்த கோரிக்கைகள் ஒரு கோடியளவுக்கு இருந்தாலும் , கண்மூடி திறப்பதற்குள் நிறைவேற்றி வைக்கும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாமில் அருள்புரிகிறாள்.//

    ஆஹா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

    //சுடரும் கற்பகக் கொழுந்து அவள்!
    ஐயம் இன்றி அருள அவளுக்கு ஒரு நொடி போதாதா என்ன?!
    "உன்மேஷ நிமிஷோத் பன்ன விபன்ன புவனாவளி " என்று லலிதா சகஸ்ரநாமத்தின் நாமாவளி உணர்த்தும் உண்மை இதுதானே!//

    உண்மை தான். அவளின் கடைக்கண் திறந்தால் போதுமே நம் கஷ்டமெல்லாம் நொடியில் பறந்தோடிப்போகுமே!

    //ALL IS MOTHER & MOTHER IS ALL//
    அம்மாவே எல்லாம் !
    எல்லாமே அம்மா!!

    என்று அழகாக முடித்துவிட்டீர்கள்.

    படங்களெல்லாம் வெகு அருமை.

    மைசூர் அருகே உள்ள கோவிலின் ஊர் பெயர் & தொலைபேசி எண்கள் கொடுத்து உதவிசெய்து விட்டீர்கள்.

    பெங்களூரில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற புதிய நிமிஷாம்பாள் கோவில் எங்குள்ளது எப்படிச்செல்வது என்ற விபரம் தெரிந்தால் தெரிவித்தால், நல்லது.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  9. நிமிஷாம்பாளின் பெருமையினை விளக்கும், படங்களோடு கூடிய பதிவு அருமையாக இருக்கிறது சகோ.

    ReplyDelete
  10. தெளிவான புகைப்படத்துடன் தாங்கள் கொடுத்துள்ள
    அரிய தகவல் அருமை!...வாழ்த்துகள் அத்துடன்
    எனது வோட்டுக்களும் உங்களுக்கு.பகிர்வுக்கு நன்றி......

    ReplyDelete
  11. @ ஸ்ரீராம். said...
    நிமிஷாம்பாள்...புதிய பெயர், விவரங்கள். அருமை.//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. @ SANKARALINGAM said...
    பதிவு, படங்கள், பகிர்ந்து கொண்ட தகவல்கள் அருமை.//
    பகிர்ந்து கொண்ட கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. நல்ல தகவல்! புதிய தகவல்களை தருவதே புதுமைதான்! இது போன்ற அருமையான தகவல்களை தர அந்த நிமிஷாம்பாள் தங்களை ஆசிர்வதிக்கட்டும்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  14. மனிதசக்தியால் இயலாதபோது, தெய்வீக சக்தியின் துணையை நாடுவதே பக்தியின் படிநிலை

    சத்தியமான வார்த்தைகள் மேடம்
    உங்களின் ஒவ்வொரு பதிவும்
    பதிவுலகத்திற்கு கிடைக்கும்
    பிரசாதங்கள் , அருள் அமுது
    வழங்கிகொண்டே இருங்கள்
    மனம் மகிழ்ந்த நன்றி

    ReplyDelete
  15. @ viji said...//
    அருமையான கருத்துக்கு நன்றி தோழி.
    சண்டி ஹோமம் பூர்ணாகுதியில் அம்பாளையே நேரில் தரிசித்த உணர்வு ஏற்படுமே.!

    ReplyDelete
  16. @
    யாழ். நிதர்சனன் said...
    அழகான படங்கள் அருமையான தகவல்கள் நன்றி//
    கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  17. @ வை.கோபாலகிருஷ்ணன் said.//
    பஞ்சாயதன பூஜையை என் தாத்தா செய்யும் போது பார்த்திருக்கிறேன். அது பற்றி மேற்கொண்டு தகவல் தேடிக்கொண்டு இருந்தபோது கிடைத்த தங்கள் அபூர்வ தகவல் சாதகப் பட்சிக்குக் கிடைத்த மழைத்துளி.
    மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @வை.கோபாலகிருஷ்ணன் said..//
    பெங்களூரில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற புதிய நிமிஷாம்பாள் கோவில் எங்குள்ளது எப்படிச்செல்வது என்ற விபரம் தெரிந்தால் தெரிவித்தால், நல்லது.//
    அதே கோவிலின் முதல் கும்பாபிஷேகப்படம் தான் அது.

    ReplyDelete
  19. @ வெங்கட் நாகராஜ் said...
    நல்ல புகைப்படங்கள், அருமையான தகவல்கள்…. பகிர்வுக்கு நன்றி.//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  20. @அம்பாளடியாள் said...
    தெளிவான புகைப்படத்துடன் தாங்கள் கொடுத்துள்ள
    அரிய தகவல் அருமை!...வாழ்த்துகள் அத்துடன்
    எனது வோட்டுக்களும் உங்களுக்கு.பகிர்வுக்கு நன்றி......//
    நன்றி அம்மா தங்களின் கருத்துக்கு.

    ReplyDelete
  21. @dowsarpaandian said...
    நல்ல தகவல்! புதிய தகவல்களை தருவதே புதுமைதான்! இது போன்ற அருமையான தகவல்களை தர அந்த நிமிஷாம்பாள் தங்களை ஆசிர்வதிக்கட்டும்! வாழ்க வளமுடன்!//
    நன்றிங்க. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  22. @ A.R.ராஜகோபாலன் said...

    சத்தியமான வார்த்தைகள் மேடம்
    உங்களின் ஒவ்வொரு பதிவும்
    பதிவுலகத்திற்கு கிடைக்கும்
    பிரசாதங்கள் , அருள் அமுது
    வழங்கிகொண்டே இருங்கள்
    மனம் மகிழ்ந்த நன்றி//
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
  23. நிமிஷாம்பாள் கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை என்றால் கோபிக்கிறார்கள்.கவுளுக்காக நீங்கள் அர்ச்சனை செய்யக் கூடாது. உங்களுக்காக வேண்டுங்கள் என்கிறாகள். கோயிலில் கை கட்டி நின்றாலும் கோபிக்கிறார்கள். ஒரு சேதிக்காக பகிர்ந்து கொண்டேன். பாராட்டுக்கள்

    ReplyDelete
  24. @G.M Balasubramaniam said...//
    சேதி பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  25. Karighatta இயற்கை அழகு சூழ நிமிஷாம்பாள் தர்சனம் மனத்தை பறிக்கிறது.

    ReplyDelete
  26. ஒரு முறை குடும்பத்துடன் சென்று வந்திருக்கிறேன்.
    நல்ல தரிசனம்.

    அங்கு அம்பாளுக்கு சாத்திய புடவைகளும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அவற்றில் ஒன்றை வாங்கினேன். உங்கள் பதிவை படித்துப் பார்த்த உடன் நான் பல ஆண்டுகளுக்கு முந்திய நினைவுகளுக்குள் சென்று மூழ்கிவிட்டேன்.
    நன்றி.

    இந்த கோவிலுக்கு சென்று வர விருப்பம் உள்ளவர்களுக்கு பின்வரும் தகவலை உங்கள் பதிவுக்கு அணி சேர்க்கும் முகமாக தேடி தந்துள்ளேன்.

    Place Statistics:
    Type of Place: Temple
    Situated: Ganjam, Srirangapatna Taluk
    Distance: 2 Km from Srirangapatna, 17 Km from Mysore, 127 Km from Bangalore
    Transport: Well connected by road, buses ply to this place from Mysore. Nearest railhead and bus station is Srirangapatna. Autos ply for Rs20 each from Srirangapatna bus station to Nimishamba temple.
    Facilities: Rest rooms are available, special darshana tickets can be bought at Rs. 10 per head, snack and cool drinks joints and many hawkers sell pooja items like Lemon, bangles, flowers, fruits, coconut etc.

    ReplyDelete
  27. Advocate P.R.Jayarajan said...//


    மிகப் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  28. ;)

    அச்யுதா!

    அனந்தா!!

    கோவிந்தா!!!

    ReplyDelete
  29. 501+3+1=505 ;)

    [தங்களின் பதில்கள் மகிழ்ச்சியளித்தன. நன்றி]

    ReplyDelete
  30. மிக அற்புதமான தகவல்கள்பா... அங்கே கண்ணதாசன் பகிர்வில் நல்லவேளை நீங்கள் லிங்க் தந்தீர்கள். நிமிஷாம்பாள் பற்றிய அற்புதமான ஸ்தல வரலாறும் அழகிய படங்களும் தரிசிக்க இயன்றது. இம்முறை இந்தியா சென்றபோது மைசூர் சென்றோம்பா. ஆனால் இந்தக்கோயிலை மிஸ் பண்ணிவிட்டோமே என்று அம்மாவிடம் கேட்டேன். அம்மா சொன்னாங்க. நீங்கள் குவைத் சென்றப்பின் நானும் என் சூப்பர்வைசர்களுடன் சென்று தரிசித்தோம் என்று அம்மா சொன்னார்கள்பா... அடுத்தமுறை இந்திய பயணத்தில் கண்டிப்பாக தரிசிக்க செல்வோம் துர்க்கை அம்சமுள்ள நிமிஷாம்பாளை. பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.

    ReplyDelete