Thursday, July 14, 2011

பெரியபாளையத்தம்மன்



திருவ‌ள்ளூரை அடு‌த்து‌ள்ள பெ‌ரிய‌பாளைய‌த்‌தி‌ல் அமை‌ந்‌து‌ள்ள பவா‌னி அ‌ம்ம‌ன் கோ‌யில்.


அருள்மிகு பவானி அம்மன் என்னும் சக்தி வாய்ந்த நாயகி, இங்கே குடி கொண்டு தன் அரசாட்சியை செலுத்தி வருகிறாள். மஞ்சளின் மணம் துலங்க... வேப்பிலையின் வாசம் விளங்க... இவள் குடி கொண்டிருக்கும் பெரிய பாளையம் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும்... அருள் மழை சுரக்கும்.


பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிப்பதற்கு அவள் சந்நிதியை நாடி நித்தமும் வரும் பக்தர்கள் ஏராளம். தன் அருளுக்குப் பாத்திரமாகும் அடியவர்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு, அவர்களைக் குறை இல்லாமல் வாழ வைத்து வருகிறாள் பவானி அம்மன்.

[Click-0008.jpg]

அ‌ம்ம‌ன் கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் ‌பிர‌சி‌த்‌தி பெ‌ற்ற‌க் கோ‌யி‌ல் இ‌ந்த பெ‌ரிய‌பாளைய‌ம் பவா‌னி அ‌ம்ம‌ன் கோ‌யிலாகு‌ம். கோ‌யிலு‌க்கு‌ள் நுழ‌ை‌ந்தது‌ம் ‌விநாயக‌ர் ச‌ன்ன‌தி‌யி‌ல் வண‌ங்‌கி‌வி‌ட்டு அ‌ம்மனை த‌ரி‌சி‌க்க செ‌ல்ல வே‌ண்டு‌ம். அ‌ம்மனை த‌ரி‌சி‌க்க ஆ‌யிர‌ம் க‌ண்க‌ள் வே‌ண்டு‌ம் எ‌ன்று சொ‌ல்லு‌ம் அள‌வி‌ற்கு அ‌ம்ம‌ன் கா‌ட்‌சி தருவா‌ர். அம்மன் மார்பளவு தான் இருக்கிறார். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அவரும் மார்பளவுதான்.  அ‌ம்மனை வண‌ங்‌கி‌வி‌ட்டு வெ‌ளியே வரு‌ம்போது நமது மன‌ம் லேசா‌கி இரு‌ப்பதை உணரலா‌ம்.

[81+Periyapaalaiyam-Periyapaalaiyattamman.jpg]

பவா‌னி அ‌ம்ம‌ன் கோ‌யிலு‌க்கு‌ள் மாத‌ங்‌கி அ‌ம்மனு‌க்கு த‌னி ச‌ன்ன‌தி‌யு‌ம் உ‌ள்ளது.


 பு‌ற்று‌க் கோ‌யிலு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பவா‌னி அ‌ம்ம‌ன் கோ‌யி‌லு‌க்கு வ‌ந்து அ‌ம்ம‌னிட‌ம் வே‌ண்டி‌க் கொ‌ண்டா‌ல் ‌நிறைவேறாதது‌ம் ‌நிறைவேறு‌ம் எ‌ன்பது ப‌க்த‌ர்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கை. பொதுவாக ஆடி மாத‌த்‌தி‌ல் கோ‌யி‌லி‌ல் கூ‌ட்ட‌ம் அலைமோது‌ம்.

ச‌னி, ஞா‌யிறுக‌ளி‌ல் ஏராளமானோ‌ர் குடு‌ம்ப‌த்துட‌ன் வ‌ந்து கோ‌யி‌லி‌ல் இரவு த‌ங்‌கி காலை‌யி‌ல் செ‌ல்வா‌ர்க‌ள். கோ‌யிலு‌க்கு‌ள் பொ‌ங்க‌ல் வை‌ப்பது, வே‌ப்ப‌ஞ்சேலை கொடு‌ப்பது, மொ‌ட்டை அடி‌ப்பது, அ‌ங்க‌ப்‌பிரத‌ட்சண‌ம் செ‌ய்வது என ப‌ல்வேறு வே‌ண்டுத‌ல்களை ‌நிறைவே‌ற்றுவா‌ர்க‌ள். கோ‌ழி, ஆடுகளை கோ‌யிலு‌க்கு நே‌ர்‌ந்து ‌விடுவது‌ம் உ‌ண்டு.

வாகன‌ங்க‌ளி‌ல் குடு‌ம்ப‌த்துட‌ன் வ‌ந்து த‌ங்‌கி, அ‌ங்கேயே சமை‌த்து சா‌ப்‌பிடு‌ம் குடு‌ம்ப‌த்தாரையு‌ம் அ‌திக அள‌வி‌ல் பா‌ர்‌க்க முடி‌கிறது.

கோ‌யிலு‌க்கு‌ள் த‌ங்குவத‌ற்கான அறைகளு‌ம் உ‌ள்ளன. பொதுவான ப‌ந்த‌‌ல்களு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. கோ‌யி‌லி‌ன் அருகே பவா‌னி ஆறு ஓடு‌கிறது. இது மழை‌க் கால‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம்தா‌ன் த‌ண்‌ணீ‌ர் ‌நிர‌ம்‌பி இரு‌ப்பதா‌ல், பெரு‌ம்பாலு‌ம் மண‌ல் ‌தி‌ட்டாகவே இரு‌க்கு‌ம். எனவே, கோ‌யிலு‌க்கு வரு‌ம் ப‌க்த‌ர்க‌ள் ஆ‌ற்று மண‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு செ‌ல்வா‌ர்க‌ள்‌.

அ‌ங்கு‌ம் த‌ற்போது ‌சிறு குடி‌ல்க‌ள் போட‌ப்ப‌ட்டு, அவையு‌ம் ப‌க்த‌ர்களு‌க்கு வாடகை‌க்கு‌க் ‌கிடை‌க்‌கிறது.

ப‌க்த‌ர்க‌ள் வ‌ந்து செ‌ல்லவு‌ம் வச‌தியாக பெ‌ரிய‌பாளைய‌த்‌தி‌ற்கு அ‌திகமான பேரு‌ந்துகளு‌ம் இய‌க்க‌ப்படு‌கி‌ன்றன. பெ‌ரிய‌பாளையம் பேரு‌ந்து ‌நிறு‌த்த‌‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌மிக அருகாமை‌யி‌ல்தா‌ன் கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது. ‌திருவ‌ள்ளூ‌‌ரி‌ல் இரு‌ந்து‌ம், ஆவடி, அ‌ம்ப‌த்தூ‌ர், மூல‌க்கடை, ஊ‌த்து‌க்கோ‌ட்டை போ‌ன்ற பல இட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ப்படு‌கி‌ன்றன. ர‌யி‌ல் மா‌ர்கமாக வர வே‌ண்டுமெ‌னி‌ல் ‌திருவ‌ள்ளூ‌ர் வரை ர‌யி‌லி‌ல் வ‌ந்து‌ அ‌ங்‌கிரு‌ந்து பேரு‌ந்‌தி‌ல் வரலா‌ம்.

‌மிகவு‌ம் மு‌க்‌கியமான அ‌ம்ச‌ம் சொ‌ந்த வாகன‌ங்க‌ளில‌் பெ‌ரிய‌பாளையு‌ம் தரிசிப்பது‌ ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம். பெ‌ரிய‌பாளையு‌ம் போகு‌ம் வ‌ழிக‌ள் அனை‌த்து‌ம் ‌கிராம‌ங்களாக இரு‌ப்பதா‌ல் ஆ‌ங்கா‌ங்கே இற‌ங்க‌ி இளை‌ப்பாறலா‌ம். வய‌ல் வெ‌ளிகளை‌க் காணலா‌ம். ‌சிறு ஓடைகளை‌க் கட‌க்கலா‌ம், ‌பூ‌‌ந்தோ‌ட்ட‌ங்களையு‌ம், பழ‌த் தோ‌ட்ட‌ங்களையு‌ம் ர‌சி‌க்கலா‌ம்.

எனவே முடி‌ந்தவ‌ர்க‌ள் சொ‌ந்த வாகன‌ங்களை ஏ‌ற்பாடு ச‌ெ‌ய்து கொ‌ண்டு செ‌ல்லலா‌ம். பொதுவாக கூ‌ட்ட‌ம் ‌நிறை‌ந்த நா‌ட்க‌ளி‌ல் செ‌ல்லாம‌ல், சாதாரணமாக ‌தி‌ங்க‌ள், புத‌ன், ‌வியாழ‌ன் போ‌‌ன்ற நா‌ட்க‌ளி‌ல் கோ‌யிலு‌க்கு‌ச் செ‌‌ன்றா‌ல் கூ‌ட்ட‌ம் இ‌ல்லாம‌ல் அ‌ம்மனையு‌ம் எ‌ளிதாக த‌ரி‌சி‌க்கலா‌ம், கடைக‌ளி‌ல் விரு‌ப்ப‌ப்படி பொரு‌ட்களை வா‌ங்கலா‌ம்.

43 comments:

  1. நீங்க பெரிய பாளையம் வந்து இருக்கீங்களா தோழி..
    எங்க வூர் பக்கத்துல தான் இந்த கோயில் இருக்கு,,,

    பகிர்வுக்கு நன்றி,..

    ReplyDelete
  2. பெரியபாளையம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்த முறை சென்னை செல்லும்போது தரிசிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நீங்க பெரிய பாளையம் வந்து இருக்கீங்களா தோழி..
    எங்க வூர் பக்கத்துல தான் இந்த கோயில் இருக்கு,,,

    பகிர்வுக்கு நன்றி,.//

    தரிசித்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. @Gopi Ramamoorthy said...
    பெரியபாளையம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்த முறை சென்னை செல்லும்போது தரிசிக்க வேண்டும்//

    தரிசித்துவாருங்கள். நன்றி.

    ReplyDelete
  5. பெரியபாளயம் பவானி அம்மனை
    கண்குளிர கண்டு தொழுதோம்.நன்றி
    படங்களும் விளக்கங்களும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. @ Ramani said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. @kavitendral panneerselvam to//

    எங்கள் ஊருக்கு பக்கத்தில்தான் பெரியபாளையம் உள்ளது.
    கோயிலை பற்றி தாங்கள் கூறிய விளக்கங்கள் மிக அருமை .//

    நன்றி.

    ReplyDelete
  8. sami ellarium kaapathu...

    enaku blog padikka neram kidaikkanum..

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி சகோ....

    ReplyDelete
  10. கருண் உங்க ஊருக்கு பக்கத்துல இருக்கா? ஒரு நாள் வருவோம்.

    ReplyDelete
  11. ரொம்ப சக்திவாய்ந்த அம்மன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மன் அருள் இருந்தால் விரைவில் தரிசிக்கிறேன். படஙகள் அருமை.

    ReplyDelete
  12. ஆமாம் ,கூட்டம் இல்லாத நாட்களில் சென்றால் தான் மூலவரை மன நிம்மதியுடனும் , ஆத்ம திருப்தியுடனும் தரிசிக்க முடியும் .மனதிர்க்கு ஒரு நிறைவு கிடைக்கும்.

    ReplyDelete
  13. ஐ... எங்க கோயில்...


    இந்த வாரம் ஆடி முதல் வார விழா ஆரம்பிக்கிறது..

    நாளை முதல் நானும் பாதுகாப்பு பணிக்காக செல்கிறேன்...

    ReplyDelete
  14. அடுத்த முறை இந்த கோயிலுக்கு வந்தால் தகவல் கெர்டுங்கள்...

    சிறப்பு தரிசனம் உண்டு..

    ReplyDelete
  15. //////
    தமிழ்வாசி - Prakash said...

    கருண் உங்க ஊருக்கு பக்கத்துல இருக்கா? ஒரு நாள் வருவோம்./////


    கண்டிப்பாக வாங்க பிரகாஷ்..
    இங்க வேப்பஞ்சேலை உடுத்துவது விஷேசம்...
    வேண்டுதலுடன் வாங்க...

    ReplyDelete
  16. பெரியபாளையம் சென்றுவந்தது போல இருந்தது
    உங்களின் படைப்பை வாசித்த போது

    நன்றி

    ReplyDelete
  17. வழக்கம் போல் அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அழகிய படங்களுடன் அருமையான பதிவு இராஜி மேடம்...

    ReplyDelete
  19. @ siva said...
    sami ellarium kaapathu...

    enaku blog padikka neram kidaikkanum..//
    நன்றி.

    ReplyDelete
  20. @வெங்கட் நாகராஜ் said...
    பகிர்வுக்கு நன்றி சகோ...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. @ தமிழ்வாசி - Prakash said...
    கருண் உங்க ஊருக்கு பக்கத்துல இருக்கா? ஒரு நாள் வருவோம்.//

    சென்று தரிசித்துவாருன்கள். நன்றி.

    ReplyDelete
  22. @ koodal bala said...
    நன்றி அக்கா .//

    நன்றி.

    ReplyDelete
  23. @ நேசமுடன் ஹாசிம் said...
    நல்ல பகிர்வு நன்றி//

    நன்றி.

    ReplyDelete
  24. @கடம்பவன குயில் said...
    ரொம்ப சக்திவாய்ந்த அம்மன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மன் அருள் இருந்தால் விரைவில் தரிசிக்கிறேன். படஙகள் அருமை.//

    சென்று தரிசித்துவாருங்கள். நன்றி.

    ReplyDelete
  25. @ M.R said...
    ஆமாம் ,கூட்டம் இல்லாத நாட்களில் சென்றால் தான் மூலவரை மன நிம்மதியுடனும் , ஆத்ம திருப்தியுடனும் தரிசிக்க முடியும் .மனதிர்க்கு ஒரு நிறைவு கிடைக்கும்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  26. @# கவிதை வீதி # சௌந்தர் said...
    அடுத்த முறை இந்த கோயிலுக்கு வந்தால் தகவல் கெர்டுங்கள்...

    சிறப்பு தரிசனம் //

    அத்த்னை சிற்ப்பு கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. @ மகேந்திரன் said...
    பெரியபாளையம் சென்றுவந்தது போல இருந்தது
    உங்களின் படைப்பை வாசித்த போது

    நன்றி//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  28. @Rathnavel said...
    வழக்கம் போல் அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  29. @ RAMVI said...
    அழகிய படங்களுடன் அருமையான பதிவு இராஜி மேடம்...//

    கருத்துக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  30. பெரியபாளையம் போகும் வழியில் இருப்பதை நீங்கள் எடுத்துச் சொல்லியிருப்பதும் அங்கே போகத் தூண்டுகிறது.

    ReplyDelete
  31. சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  32. பெரியபாளயம் பவானி அம்மனை தரிசிக்க வழி செய்தமைக்கு
    நன்றி தோழி... http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  33. பெரியபாளயம் பவானி அம்மனை தரிசிக்க வழி செய்தமைக்கு
    நன்றி தோழி...
    அருமையான பதிவு வாழ்த்துக்கள். http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  34. // மஞ்சளின் மணம் துலங்க... வேப்பிலையின் வாசம் விளங்க... இவள் குடி கொண்டிருக்கும் பெரிய பாளையம் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும்... அருள் மழை சுரக்கும்.//

    அருள் மழை இந்தத் தங்களின் பதிவினிலேயே சுரக்கக்கண்டேன்.

    வழக்கம் போல நல்ல பதிவு.
    அருமையான தகவல்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  35. ராமாய ராமபத்ராய
    ராமசந்த்ராய வேதஸே!

    ரகுநாதாய நாதாய
    ஸீதாயா: பதயே நம:!!-4

    அக்ரத: ப்ருஷ்டதச்சைவ பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!

    ஆகர்ண பூர்ணதந்வாநெள
    ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5

    ஸந்நத்த: கவசீ கட்கீ
    சாபபாணதரோ யுவா!

    கச்சந் மமாக்ரதோ நித்யம்
    ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6

    ReplyDelete