Saturday, December 3, 2011

கார்த்திகை ஜோதி


Maa Laxmi Glitter Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs


 
மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் மாதம் கார்த்திகை மாதம்..

சிவபெருமானையும் மகா விஷ்ணுவையும் முருகப் பெருமானையும் கார்த்திகையில் வழிபட்டுப் பேறுகள் பல பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகித்து, 
வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சித்து, இனிப்புப் பொருட்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
மகா விஷ்ணுவை துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். 
முருகப் பெருமானுக்கு சந்தனாபிஷேகம் செய்து, இனிப்பான பழங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும்.
கார்த்திகையில் விளக்கு தானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. 

வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, தீபஒளியுடன் 
வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட 
சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.
Swami in Pushpa Yagam
கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெறமுடியும்.

மக்கட்செல்வம் இல்லாத தம்பதியர் பக்தியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட மக்கட் செல்வம் கிட்டும்.  அழகிய அறிவுள்ள குழந்தை பிறக்க வழி வகுக்கும். 

அதனால்தான் இம்மாதத்தினைத் திருமண மாதம் மக்கட் செல்வத்தை அருளும் மாதம் என்று சொல்வர்.
கார்த்திகை பெளர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வருவதால், சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும்.

அன்று சிவபெருமான் தன் தேவியுடன் பூமிக்கு அருகில் வந்து அருள்புரிவதாக ஐதீகம்.

அதனால், கார்த்திகைப் பெளர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

கிரிவலம் வருவதற்குப் பல மலைகள் உள்ளன. இதில் மிகவும் சிறப்புப் பெற்றது திருவண்ணாமலை.
கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

லட்சம் மழைத்துளிகளில் ஒன்று தேவசக்தி பெற்றது
என்று சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலையை கார்த்திகைப் பெளர்ணமி அன்று
தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள்.
Pushpa Yagam
இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.

மகா விஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் இறைவனே தன் தேவியுடன் இம்மலையை தீபத் திருநாளுக்கு மறு நாளும், தைப்பொங்கல் சமயத்தில் மாட்டுப் பொங்கல் அன்றும் வலம் வருகிறார்.

அப்பொழுது அவர்களுடன் நாமும் வலம் வந்தால்
கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
 பஞ்ச பூதத்தில் அரச மரம் ஆகாயத்தையும்,
 வாதராயண மரம்.  காற்றையும், 
வன்னி மரம் அக்கினியையும், 
நெல்லி மரம். தண்ணீரையும், 
ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது .

2ahi8fr 3D   model tree
தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள். 

பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளி அமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி. 

அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.
கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. 

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். 

நெல்லி மரம் இல்லாதபட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர். 

கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. 
இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.

சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. 

சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.
விருச்சிக மாதமாகிய கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியுடன் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.
கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும் அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.
சிவபெருமான் கார்திகைத் தீபத் திருவிழா அன்று
திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி தருகிறார்

இதனைத் தரிசித்தால் நோயற்ற வாழ்வும் பசித்த வேளையில்
உணவும் வளமான வாழ்வும் கிட்டும் என்று ஆன்றோர் சொல்வர்.
Lord Shiva meditating at the Waterfall screenshot
.ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்..
 பெருமாளையும் சொக்கப்பனையும் தரிசிக்கும் பக்தர்களின்
வாழ்வில்என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.




39 comments:

  1. கார்த்திகை ஜோதியை தரிஸித்து விட்டு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. அடேயப்பா!கார்த்திக மாதத்திற்கு இத்தனை பெருமைகளா?நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.பகிர்விற்கு நன்றி

    அந்த பளிச் பளிச் மூன் லைட் படம் பிரமாதம்

    ReplyDelete
  3. அடேயப்பா!கார்த்திக மாதத்திற்கு இத்தனை பெருமைகளா?நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.பகிர்விற்கு நன்றி

    அந்த பளிச் பளிச் மூன் லைட் படம் பிரமாதம்

    ReplyDelete
  4. ஓம். முதல் படத்தில் சங்கு சக்ர பாணியாக கருடனுடன் ஸ்ரீ மஹாவிஷ்ணு, கஜலக்ஷ்மி கையில் பூர்ண கும்பத்துடன், அழகிய எனக்கு மிகவும் பிடித்த தாமரை மலரில் ஒய்யாரமாக வீற்றிருப்பது அருமை.

    ReplyDelete
  5. பார்வதி பரமேஸ்வரர் தன் குட்டிக்குழந்தைகளை மடியில் அமர்த்தி எலியார், மயிலார், காளையாருடன் காட்சி தருவது அருமையோ அருமை தான். அழகோ அழகு தான். ;))))

    ReplyDelete
  6. நான் பிறந்த கார்த்திகை மாதத்திற்கு இவ்வளவு சிறப்புகள் உண்டென்று தாங்கள் சொல்லித்தான் நானும் இப்போது தெரிந்து கொண்டேன்.
    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;))))

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    பார்வதி பரமேஸ்வரர் தன் குட்டிக்குழந்தைகளை மடியில் அமர்த்தி எலியார், மயிலார், காளையாருடன் காட்சி தருவது அருமையோ அருமை தான். அழகோ அழகு தான். ;))))/

    அழ்கழகான அருமையான கருத்துரைகளால் பதிவை ஜொலிக்கச்செயதமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  8. raji said...
    அடேயப்பா!கார்த்திக மாதத்திற்கு இத்தனை பெருமைகளா?நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.பகிர்விற்கு நன்றி

    அந்த பளிச் பளிச் மூன் லைட் படம் பிரமாதம்/

    பளிச்சிட்ட அருமையான் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  9. எரியும் தீபங்கள் யாவும் பளிச் பளிச் அந்தப்பெண் குழந்தையின் முகம் போல.

    ஆஹா! தாழம்பூ தடாகம் போல விக்ரஹங்களையே மறைக்கும் படியான தாழம்பூக்கள் மலைபோலக் குவிக்கப்பட்டுள்ளதே! அழகு!!;))))

    கார்த்திகை மாத ஒரே நாள் காவிரி ஸ்நானத்தில் துலாஸ்நான புண்ணியமா? அடடா! அருமையான தகவல் தான்.

    ReplyDelete
  10. கார்த்திகைப் பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிப்பிரதக்ஷணம் செய்வதோ, அப்போது மழைத்துளி படுவதோ அது நம் மீது தெளிப்பதோ
    இதில் இவ்வளவு விஷயங்கள் ஒளிந்துள்ளனவா! ஆச்சர்யமாக உள்ளதே!

    புஷ்பக்கூடையுடன் செல்லும் பக்தர்கள் கூட்டம் வெகு அழகாக படமெடுக்கப்பட்டுள்ளது. சூப்பரோ சூப்பரான படம். அந்தப்பூக்களைப்போலவே அழகாக!

    ReplyDelete
  11. பஞ்சபூத மரங்கள் பற்றிய விளக்கங்கள் புதிய அரிய செய்தியாகும் எனக்கு. சந்தோஷம்.

    அந்த பசுமையான மரம் கீழே வட்டமான புல்வெளியுடன் ... சபாஷ்!

    கார்த்திகை ஞாயிறு விசேஷம் கேள்விப்பட்டுள்ளேன். அதுபோல கிருத்திகா ஸோமவாரமும் அதாவது திங்கட்கிழமையும் கூட. அதாவது இன்று விடிந்தால் கார்த்திகை ஞாயிறு. மறுநாள் கிருத்திகா ஸோமவாரம். தக்க நேரத்தில் தந்துள்ள அழகான பதிவு. மிக்க மகிழ்ச்சி ; ))))

    துளசிச்செடியும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete
  12. நெல்லிக்கனிகளை படத்தில் பார்த்து விட்டு பரவசப்பட்டு, தண்ணீர் அருந்தினேன். வாயெல்லாம் இனித்தது. அவ்வளவு தத்ரூபமான படமாக தந்துள்ளீர்கள். எங்கு தான் தேடித்தேடி பிடிப்பீர்களோ! ஜோர் ஜோர்!! பலே பலே!!!

    ReplyDelete
  13. அழகிய நிலவொளியில், நக்ஷத்திரக் கூடங்களுக்கு இடையே உருக்கிய வெள்ளிபோல கொட்டும் அருவியும், கீழே அதன் பிரதிபிம்பமும் அடடா .. எவ்ளோ அழகு! குற்றாலத்தில் குளித்தது ஞாபகம் வந்தது.

    ”நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்தொடாதே” பாடல் நினைவுக்கு வருகிறதே! அந்த மங்கி மங்கிப் பிரகாசிக்கும் நிலவுப்படத்தைப் பார்த்ததும்.

    ஸ்ரீ + ஓம் உடன் நம் தொந்திப்பிள்ளையார் படா ஸ்டைலாக, அருகே இரண்டு ஜோதிகளுடன் .. சூப்பர்.

    நிரம்பிய எண்ணெய் + திரிகளுடன் உயிர்ப்புடன் காட்டியுள்ள இரு பஞ்ச முக விளக்குகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    தொந்திப்பிள்ளையாரை சிவனார் தூக்கிக்கொண்டுள்ளது, ரொம்ப ஜோர். கொழுகொழுப்பொடியன் [குழந்தை அநிருத்] ஞாபகமே வந்தது. ;))))

    ReplyDelete
  14. கடைசியாகக் காட்டியுள்ள இரண்டு பூக்கோல டிசைன்கள் கலைக்கண்ணோடு காண வேண்டியவை. ரொம்ப ஜோராக உள்ளன.

    இந்த 352 ஆவது பதிவும் மிகச் சிறப்பாகவே அமைந்து விட்டது.

    அழகான படங்களுடன், அற்புதமான விளக்கங்களுடன், தங்கள் மனது போலவே தாராளமாக, ஏராளமாக தினமும் பஞ்சமில்லாமல் தந்தருள எவ்வளவு கடும் உழைப்பு உழைக்கிறீர்கள், அதுவும் எங்கெங்கோ இருக்கும் எங்களுக்காக.

    நன்றி, நன்றி, நன்றி.

    வாழ்க, வாழ்க, வாழ்க!

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  15. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  16. என்னுடைய கமென்ட்டுகள் டெம்ப்ளேட் கமென்ட்டுகளாக இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். வார்த்தைகளை அதிகமாகப் போட்டால்தான் ரசனை வெளிப்படும் என்று நான் நினைப்பதில்லை.இதுவே பழக்கமாகி விட்டது.அவ்வளவுதான்.

    ReplyDelete
  17. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  19. படங்களும் , விளக்கமும் வழக்கம் போல அருமை ...

    ReplyDelete
  20. இப்படி தாங்கள் பல தகவல்கள் கூறியிருக்கும் இந்த கார்த்திகைப் பௌர்ணமியில்தான் என் மகள் பிறந்தாள்
    :)

    ReplyDelete
  21. தகவலும்... படங்களும் மிக சிறப்பு

    ReplyDelete
  22. தொடரட்டும் உங்க ஆன்மீக தகவல்கள்.

    ReplyDelete
  23. கார்த்திகை என்றால் வானம் மூடி மழை பொழயும் காலம் என்றுதானிருந்தேன்.

    அம் மாதம் பற்றிய புனித தகவல் மழையால் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  24. கூடை கூடையாக பூக்களும் மருக்கொழுந்தும் எடுத்துச் செல்லும் படம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கார்த்திகைக்கு ஸ்பெஷலாக தின்பண்டம் உண்டே? அவல் பொறி அரிசிப்பொறி கடலை உருண்டை என்று நினைக்கிறேன்.. ம்ம்ம்ம்.

    ReplyDelete
  25. கூடை கூடையாக மலர்கள்! மிகவும் அருமை. இறுதியில் மின்னும் 3 முகம் கருடபுராணத்தில் வருகிறதா?

    ReplyDelete
  26. ஒளி வீசும்,ஜொலிக்கும் பதிவு.

    ReplyDelete
  27. கார்த்திகை பௌர்ணமி அன்று முனிவர்களும், தேவர்களும் வலம் வந்திருப்பதாக சொல்லும் செய்தி மிகவும் உபயோகமானது... பௌர்ணமி அன்று சென்றிருக்கிறேன்.. இனி கார்த்திகை பௌர்ணமி செல்ல முயல வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  28. தகவலும்,படங்களும் மிக சிறப்பு...

    ReplyDelete
  29. அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ

    பதிவினைப் படித்தேன் - மறுமொழிகள் கண்டு மகிழ்ந்தேன் - படங்களை இரசித்தேன் - அத்தனை படங்களும் கண்ணைக் கவர்கின்றன. மிக மிக நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  30. // cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ

    பதிவினைப் படித்தேன் - மறுமொழிகள் கண்டு மகிழ்ந்தேன் - படங்களை இரசித்தேன் - அத்தனை படங்களும் கண்ணைக் கவர்கின்றன. மிக மிக நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    அன்பின் ஐயா, வணக்கம் ஐயா,

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், எங்கள் இருவரையும் சேர்த்துப் பாராட்டி, நல்வாழ்த்துகள் வழங்கியுள்ள்தற்கும், எங்களின் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

    என்றும் அன்புடன் தங்கள்
    vgk

    ReplyDelete
  31. //cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ

    பதிவினைப் படித்தேன் - மறுமொழிகள் கண்டு மகிழ்ந்தேன் - படங்களை இரசித்தேன் - அத்தனை படங்களும் கண்ணைக் கவர்கின்றன. மிக மிக நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    அன்பின் ஐயா, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், எங்கள் இருவரையும் சேர்த்துப் பாராட்டி, நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ளதற்கும், எங்களின் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    ReplyDelete
  32. ;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!

    ReplyDelete
  33. 1476+13+1=1490 ;)))))

    ஜொலிக்கும் குட்டியூண்டு பதிலுக்கு நன்றிகள்.

    இதிலும் அன்பின் சீனா ஐயா நம் இருவரையும் பாராட்டியுள்ளார்கள் ;)

    ReplyDelete
  34. அன்பின் வைகோ ஆறு மறுமொழிகள் இட்டுள்ளார் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. //cheena (சீனா) has left a new comment on the post "கார்த்திகை ஜோதி":

      அன்பின் வைகோ ஆறு மறுமொழிகள் இட்டுள்ளார் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

      தங்களின் கணக்கில் ஏதோ குளறுபடிகள் உள்ளது ஐயா. ஆடிட் செய்யப்பட வேண்டும் ஐயா. ஏற்கனவே 14 இதையும் சேர்த்தால் 15 ஆகிறதே ஐயா.

      முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தது போல ஆறே ஆறு மட்டும் என்று இப்படி அநியாயமாக என் கடும் உழைப்பினை குறைத்து மதிப்பீடு செய்து விட்டீர்களே, ஐயா !

      எவ்வளவு மறுமொழிகள் கொடுத்துத்தான் என்ன? இந்த என் அம்பாள் எனக்கு பிரஸாதம் போல கொஞ்சூண்டு அதாவது ஒரே ஒரு பதில் மட்டுமே அளித்துள்ளார்கள், பாருங்கள் ஐயா !! ;(

      Delete
    2. அன்பின் வை.கோ

      நான் அந்தக் காலத்தில் காம்போசீட் மாத்ஸ் எடுத்துப் படித்தேன். அல்ஜீப்ரா ( மத்ததெல்லாம் மறந்து போச்சு ) - என்ன கணக்குலெ கொஞ்சம் வீக்கு - 9வதுல 100./100

      அது சரி இப்ப என்ன - 15ன்னு சொல்லணூம் அவ்வளவுதானே ! சொல்லிட்டாப் போச்சு

      வை.கோன்னு சொன்னாலே பதிவுலகத்துல தனிப் பெயர் - அவருக்குன்னு இரசிகர்கள் இரசிகைகள் அதிகம் - அனைவரும் அருமையாக மறுமொழி இடுவார்கள் - இவரும் சளைக்காம்ல் மறுமொழிகளுக்கு மறுமொழி இடுவார்.

      வலைச்சரத்திற்கு ஆசிரியர் பரிந்துரைப்பதில் மன்னர். கேட்டதும் கொடுப்பவர் -

      காலத்தி னாற்செய்த நன்றி சிறிதுஎனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது

      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா

      Delete
    3. அன்பின் வை.கோ - அம்பாள் பிரசாதம் அள்ளிக் கொடுக்க முடியாது - கொஞ்சூண்டு குடுத்தாலும் மதிப்பே தனி தான் . இருந்தாலும் அவங்க கிட்டே பரிந்துரைக்கிறேன் .

      இராஜராஜேஸ்வரியின் நீண்ட படைப்புகள் - படங்கள் - விளக்கங்கள் - அத்தனையும் அருமை யிலும் அருமை - நாமெல்லாம் தினந்தினம் முதலில் படிப்பது அவரின் படைப்பினைத்தான்.

      அதுவும் தாங்களோ அவர்களின் பரம இரசிகர் - பதிது விட்டு எத்தனை மறுமொழிகள் இடுவீர்கள் - அவர்களோ இரத்தினச் சுருக்கமாக சாரத்தினைப் பிழிந்து சிறு மறுமொழியாக்ப் போட்டு விடுவார்கள் , எத்தனை எத்தனை மறுமொழிகள் - அத்த்னைக்கும் மறுமொழிகள் இடுவார்கள்

      தங்களுக்குத் தெரியாததல்ல - இருப்பினும் பாசத்தின் காரணமாக உரிமையுடன் வருந்துகிறீர்கள் - பாத்துக் கிட்டெ இருங்க - இப்பக் கொடுக்க்ற கொஞ்சூண்டோட இன்னும் கொஞ்சூண்டு சேத்துக் குடுக்கச் சொல்லி பரிந்துரைக்கிறேன்.

      அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா

      Delete
    4. //cheena (சீனா) has left a new comment on the post "கார்த்திகை ஜோதி":

      அன்பின் வை.கோ

      நான் அந்தக் காலத்தில் காம்போசீட் மாத்ஸ் எடுத்துப் படித்தேன். அல்ஜீப்ரா ( மத்ததெல்லாம் மறந்து போச்சு ) - என்ன கணக்குலெ கொஞ்சம் வீக்கு - 9வதுல 100./100

      அது சரி இப்ப என்ன - 15ன்னு சொல்லணூம் அவ்வளவுதானே ! சொல்லிட்டாப் போச்சு

      வை.கோன்னு சொன்னாலே பதிவுலகத்துல தனிப் பெயர் - அவருக்குன்னு இரசிகர்கள் இரசிகைகள் அதிகம் - அனைவரும் அருமையாக மறுமொழி இடுவார்கள் - இவரும் சளைக்காம்ல் மறுமொழிகளுக்கு மறுமொழி இடுவார்.

      வலைச்சரத்திற்கு ஆசிரியர் பரிந்துரைப்பதில் மன்னர். கேட்டதும் கொடுப்பவர் -

      காலத்தி னாற்செய்த நன்றி சிறிதுஎனினும்
      ஞாலத்தின் மாணப் பெரிது


      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா //

      ஐயா, வணக்கம். நானும் காம்போஸிட் மேத்ஸ் தான். எப்போதுமே 100க்கு 100 மட்டுமே வாங்கியவன். கணக்குப் பரீக்ஷையில் மட்டும் ஒரு மார்க் அல்லது அரை மார்க் குறைந்தாலும் நான் அழுதுவிடுவேன்.

      இத்துடன் 15 அல்ல 16. என்றும் பதினாறு. மாலை சந்திப்போம் ஐயா. ;))))))

      Delete