Sunday, December 11, 2011

"கொங்கு நாட்டு திருக்கடையூர்'



ஓம் த்ரயம்பகம் யஜாமஹே 
சுகந்திம் புஷ்டிவர்தனம் 
ஊர்வாருகமிவ பந்தனாத் 
மிருத்யோர் முக்க்ஷிய மா அம்ருதாத் 
ஓம் ஸ்வ புவ பூர்...
ஓம் ஸா ஜும் ஹ்ரோம் ஓம்....

மரண பயம் நீங்கி வாழ மிருத்யுஞ்சய மந்திரம்..

வள்ளுவர் எல்லாவற்றையும் சிந்தித்தவர். 
நெய்யும் தறியில் விழும் ஒவ்வொருஅடிக்கும் உதிருமாம் ஒரு சொல். :

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து உலகு..

 உலகின் அழகே இந்த பிறப்பு-இறப்பு என்ற நிகழ்வில்தான் இருக்கிறது. உலகில் பிறக்கும் ஒன்று அழிவதுதான் விதி. அவ்விதிதான் உலகை பெருமை அடையச் செய்கிறது. 

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே
என்பார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்...

முடிசார்ந்த மன்னரும், பிடி சாம்பலவார்' என்பது நியதி. எனினும், பூமிக்கு வந்த பின், மரணத்தைப் பற்றி நினைப்பதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் என்பதும், அப்படி வாழும்போது, பல வசதி வாய்ப்புகளை அனுபவிக்க வேண்டும் என்பதுமே பலருடைய ஆசை. 
இந்த இரண்டையும் நிறைவேற்றி வைக்கிறார்  
கோவை மாவட்டம் கோயில்பாளையம் காலகாலேஸ்வரர். 
தீர்க்காயுள் தரும் தலம் என்பதால் இதை "கொங்கு நாட்டு திருக்கடையூர்' என்கின்றனர்.

 சிவபக்தனும், சிறுவனுமான மார்க்கண்டேயனுக்கு 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. அவனது தந்தை வருந்தினார். 

தந்தையின் துன்பத்தை தாளாத மார்க்கண்டேயன் ஆயுள்நீடிப்பு வேண்டி சிவபெருமானை வணங்கி வந்தான். ஆயுள் முடியும் நாளில் எமதர்மன் அவனது உயிரை எடுக்க வரவே, மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்குள்ள சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான்.

இருப்பினும் எமன் பாசக்கயிற்றை வீசவே, கோபமடைந்த சிவன், "
"என்னைச் சரணடைந்தவர் ஆயுள் நீட்டிப்பு பெறுவர்,'' எனக்கூறி, எமனை எட்டி உதைத்தார். இதனால், எமன் சாதாரண மனிதனுக்கு ஒப்பாகி பூலோகத்தை அடைந்தான். 

மீண்டும் எமபதவி வேண்டி, கவுசிகபுரி என்னும் தலம் சென்று, அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவனாக எண்ணி வழிபட கல், விபூதி, வில்வம், ருத்ராட்சம் ஏதும் கிடைக்கவில்லை. 

அங்கே கிடந்த குச்சியை எடுத்து ஓரிடத்தில் குத்தினான். உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது. மணலுடன் நுரையை சேர்த்து லிங்கம் வடித்தான். 

அருகில் விஸ்வாமித்திரர் தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். எமனைக் கண்ட விஸ்வாமித்திரர், ""இந்த சிவபூஜையால் உன்னுடைய சாபம் நீங்கி விட்டது. நீ மீண்டும் எமபதவி பெற்றாய்,'' என்றார்.


 எமதர்மன் விட்டுச்சென்ற சிவலிங்கத்தை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது.

பெரிய தட்சிணாமூர்த்தி: கோயில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் லிங்கம் இருப்பது சிறப்பு. 

மூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.
இங்கு ஆயுள்விருத்தி ஹோமம், 60 வயது பூர்த்தியானவுடன் சஷ்டியப்தபூர்த்தி, 70 பூர்த்தியானவுடன் பீமரதசாந்தி, 80 பூர்த்தியானவுடன் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தியானவுடன் கனகாபிஷேகம் செய்யப்படுகிறது. அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதைச் செய்வது சிறப்பு.

தேன், சந்தன பிரசாதம்: நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத்தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 

இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது.

பச்சை நந்தி: இங்கு கால சுப்ரமணியர், கருணாகரவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதால் இது "சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் காலபொய்கை (எமதீர்த்தம்) ஆகும்.
திறக்கும் நேரம்: காலை 6- பகல் 12.30 மணி , மாலை 4- இரவு 7.30 மணி.
இருப்பிடம்: கோயம்புத்தூர்- சத்தியமங்கலம் ரோட்டில் 20 கி.மீ., தூரம். பஸ் ஸ்டாண்ட் பின்புற ரோட்டில் கோயில் உள்ளது.
போன்: 0422- 265 4546

http://www.vallamai.com/literature/articles/11078/
வல்லமை இதழில் வெளியானது..

Loard shiva




[15+(www.cute-pictures.blogspot.com).jpg]


PhotobucketLotus

45 comments:

  1. கொங்கு நாட்டுக் கோவைத் தங்கத்தின் புதிய வெளியீட்டைப் பொறுமையாகப்ப் படித்து விட்டு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. படங்களும் பதிவும் உள்ளத்தைக்கொள்ளை கொள்கிரது.

    ReplyDelete
  3. முதல் படத்தில் அசையும் சிவன் நல்ல அழகு. கழுத்தில் பாம்பு, கையில் சூலாயுதம். கொண்டையில் கங்கையும் சந்திரனும். புலித்தோல் போர்வையும், ருத்ராக்ஷமாலைகளுமாக ஜொலிக்கிறார்.

    ReplyDelete
  4. சிவ சிவா...படங்கள்தான் பரவசமாக்குகிறது.பயமுறுத்திற மாதிரியும் இருக்கு !

    ReplyDelete
  5. மரண பயம் நீங்கத்தந்துள்ள மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்ததுமே பாதி பயம் நீங்கி விடுகிறது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    ReplyDelete
  6. காளை மாட்டின் மேல் சிவனும்,
    புலியின் மேல் ஷக்தியும் வீற்றிருப்பதை காட்டியிருப்பது தனி அழகு. அதுவும் முதலில் காட்டியுள்ளதை விட பிறகு காட்டியுள்ளது நல்ல பளிச், பளிச் ! ;)))

    ReplyDelete
  7. அதாவது புலியைவிட சிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் தேவி நல்ல பளிச்சென்று உள்ளது என்றேன்.

    ReplyDelete
  8. மார்க்கண்டேய சரித்திரம் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அந்த படமும் நன்றாகவே உள்ளது. அப்போ திருக்கடையூர் என்ற பெயரில் இரண்டு உள்ளதா?

    கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் ஒன்றும், கொங்கு நாட்டுத் திருக்கோயிலூரா?

    அங்கும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவை செய்து வைக்கப்பட்டு நடைபெறுகின்றனவா?

    இது நல்ல புதிய தகவல்களே!

    ReplyDelete
  9. 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த [சிவலிங்கத்திற்குக்கீழே அமைந்துள்ள] மிகப்பெரிய தக்ஷிணாமூர்த்தி தரிஸனம் செய்தோம்.

    குருப்பிரும்மா குருவிஷ்ணு
    குரு தேவோ மஹேஷ்வரஹா!
    குரு சாக்ஷாத் பரப்பிரும்ம
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்.

    நல்லதொரு தரிஸனம் உங்களால் இன்று. ;))))

    ReplyDelete
  10. சிவ சிவ இத்தனை அழகாக யாராலும் முடியுமோ?

    ReplyDelete
  11. விஷக்கடி நீங்க நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம். ஆஹா! அந்தப்படமும் நல்ல அழகாகவே காட்டி விட்டீர்களே! ;))))

    கோயில் அமைந்துள்ள இடம், விலாசம், போன் நம்பர் உடன் கொடுத்திருப்பது சிறப்பு.

    கோவை-சத்தியமங்கலம் ரூட் தானே.
    இப்போ பயமில்லாமல் போகலாம் என்று நினைக்கிறேன்.

    வல்லமை மின் இதழில் வெளியிட்டுள்ளதாகச் சொல்லும் படங்கள் யாவும் மிக அருமை.

    அதுவும் அந்தக்குட்டிப் பயலான குழந்தைப் பிள்ளையார், சிவனுக்கு தன் பிஞ்சுக்கைகளால் மாலை அணிவித்துப் பூஜை செய்வது போல உள்ள படம் மிகச்சிறிய விரல் சைஸுக்கான வெள்ளரிப்பிஞ்சு போல, வற்றல் குழம்பில் போட்ட பிஞ்சு வெண்டைக்காய்த் தான் போல, அழகோ அழகு; ரொம்பப்பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  12. கடைசியில் சிவனே, சிவனே என்று படுத்திருப்பதாகக்காட்டி விட்டீர்களே.

    அதுவும் குழந்தை வடிவில், அவர் தலைக் கொண்டையிலிருந்து புறப்படும் கங்காஜலம் சிவசிலிங்த்திற்கு அபிஷேகம் செய்வது போலக் காட்டப்பட்டுள்ளதே!

    சூலாயுதம், உடுக்கை, கெண்டி எல்லாவற்றிருக்குமே சற்று ஓய்வோ!

    கழுத்தில் பாம்பும் கால்மாட்டில் காளையும் விழிப்புடன் பாதுகாத்திட, புலித்தோலையே விரிப்பாகவும், அதையே கொஞ்சம் ஆடையாகவும் அணிந்து, சிவனே இப்படி சிவனே என்று படுக்கையைப்போட்டு விட்டால், அழிக்கும் தொழிலை யார் கவனிப்பது? 700 கோடியாக உள்ள ஜனத்தொகை 7000 கோடியாகிவிடுமே. பூபாரம் தாங்காதே!

    அதெல்லாம் எமன் (எமகாதகப்பயல்) பார்த்துக்கொள்வான் என்ற தைர்யமாக இருக்குமோ! ;))))

    அதே படத்தில் ஓம் என்ற எழுத்திலிருந்து ஒளிக்கற்றைகள் சிவனாகிய குழந்தை மேல் பரவுவது போலக் காட்டியுள்ளதும், மற்ற இயற்கைக் காட்சிகளும் அருமை.

    ReplyDelete
  13. கடைசியில் நம் செந்தாமரையை ஜொலிக்கச் செய்து Have a Nice Day என்று சொல்லி, தங்கள் பொற்கரங்களால், ரோஜா இதழ்களையும் அள்ளித்தருவது போல முடித்துள்ளது அழகோ அழகு.

    அதைக்காணக் கண்கோடி வேண்டும்.
    இரண்டே கண்கள் போக 99,99,998 கண்களுக்கு நான் எங்கு போவேன்?

    இந்த 2011 ஆம் ஆண்டுக்கான 360 ஆவது பதிவையும் வெற்றிகரமாகக் கொடுத்து விட்டீர்கள். பெரிய கின்னஸ் ரிகார்ட் ஆகத்தான் தெரிகிறது.

    சும்மாவா, கொடுத்தது யார்? எங்கள் கொங்கு நாட்டுத்தங்கமாம் கோவை திருமதி இராஜராஜேஸ்வரி அம்மன் அல்லவா! அது எங்களுக்கு அல்வா அல்லவா! ;)))))

    கடும் உழைப்புக்கும், அழகிய பதிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    மனமார்ந்த அன்பான ஆசிகள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  14. அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் அருமை நண்பர் வை.கோ

    வழக்கம் போல் மறு மொழிகளை இரசித்த பின் பதிவினைப் படித்தேன் - படங்கள் பார்த்தேன் - மிக மிக இரசித்தேன்.

    கொங்கு நாட்டுத் திருக்கடையூர் - செய்திகளூம் படங்களும் புதிது - நன்று நன்று.

    மிருத்யுஞ்சய் மந்திரம் - சிறப்பான குறளின் இயல்பான விளக்கம் -கம்பனின் கடவுள் வாழ்த்து - மார்க்கண்டேயனின் ஆயுள் நீட்டிப்பு நடந்த தல வரலாறு - விட்ட பதவியை மறுபடி பிடிக்க கவுசிகபுரி - 1300 ஆண்டு - ஆசியாவின் மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி - அச்சிலைக்கு மேல் லிங்கம் - இளநீர் அபிஷேகத்தின சிறப்பு - பச்சை நந்தி - வல்லமை தளத்தில் வெளியான படங்கள் - பொறுமையின் சிகரம் இராஜ இராஜேஸ்வரி.....

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said...
    முதல் படத்தில் அசையும் சிவன் நல்ல அழகு. கழுத்தில் பாம்பு, கையில் சூலாயுதம். கொண்டையில் கங்கையும் சந்திரனும். புலித்தோல் போர்வையும், ருத்ராக்ஷமாலைகளுமாக ஜொலிக்கிறார்./

    கலைக்கண்ணோட்டத்தில் அருமையாக அளித்த கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அதாவது புலியைவிட சிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் தேவி நல்ல பளிச்சென்று உள்ளது என்றேன்.

    புலியைவிட சிம்மம் கம்பீரமானதுதானே

    ஆகவே பளிச்சிட்டிருக்கும்..

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மார்க்கண்டேய சரித்திரம் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அந்த படமும் நன்றாகவே உள்ளது. அப்போ திருக்கடையூர் என்ற பெயரில் இரண்டு உள்ளதா?

    கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் ஒன்றும், கொங்கு நாட்டுத் திருக்கோயிலூரா? /

    எமனுக்கு மீண்டும் அதிகாரம் அளித்த தலமாகையால் ,எமனை அழித்த திருக்கடையூரை விட சக்திமிக்க தலம் என்று ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது..
    கோவில் அரபிகடலின் கரையில் முற்காலத்தில் கட்டப்பட்டிருந்ததாம்..

    காலப்போக்கில் கடல் பின்வாங்கி விட்டதற்க்கு அடையாளமாக கோவிலைச்சுற்றி கடற்கரை போன்ற மணல் பரவியிருப்பதை அர்ச்சகர் சுவாமி தெரிவித்தார்..

    ReplyDelete
  18. பதிவை ஓப்பன் செய்ததுமே படிக்க விடாமல் என் பதினாறு வயது மகள் எல்லா படங்களையும் பார்த்து விட்டுத்தான் என்னை படிக்க விட்டாள்.

    அந்த குட்டிப் பிள்ளையார் சிவலிங்கத்துக்கு மாலை போடற படம் எங்க பிடிச்சீங்க?கொள்ளை அழகு.பிள்ளையாருக்கு த்ருஷ்டி சுற்றிப் போடணும்.என் கண்ணே பட்டுடும் போலருக்கு.

    அதே போல் சிவன் குழந்தையாய் நான் எந்த படத்திலும் பார்த்ததே இல்லை.இன்றுதான் இப்படி ஒரு படம் பார்க்கிறேன்.நல்ல பகிர்வு.நன்றி

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த [சிவலிங்கத்திற்குக்கீழே அமைந்துள்ள] மிகப்பெரிய தக்ஷிணாமூர்த்தி தரிஸனம் செய்தோம்.

    குருப்பிரும்மா குருவிஷ்ணு
    குரு தேவோ மஹேஷ்வரஹா!
    குரு சாக்ஷாத் பரப்பிரும்ம
    தஸ்மை ஸ்ரீ குரவே நம:

    என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்.

    நல்லதொரு தரிஸனம் உங்களால் இன்று. ;))))/

    குருவைக்காண கோடிக்கண்கள் வேண்டும் கண்க்கொள்ளாக்காட்சி..
    வியாழக்கிழ்மைகளில் கொண்டைக்கடலை மாலை அணிவிப்போம்..

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    விஷக்கடி நீங்க நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம். ஆஹா! அந்தப்படமும் நல்ல அழகாகவே காட்டி விட்டீர்களே! ;))))/

    பிரதோஷபூஜை வெகு சிற்ப்பாக நடைபெறும் கூட்டம் அதிகம் இருக்கும்..

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசியில் நம் செந்தாமரையை ஜொலிக்கச் செய்து Have a Nice Day என்று சொல்லி, தங்கள் பொற்கரங்களால், ரோஜா இதழ்களையும் அள்ளித்தருவது போல முடித்துள்ளது அழகோ அழகு.

    அதைக்காணக் கண்கோடி வேண்டும்.
    இரண்டே கண்கள் போக 99,99,998 கண்களுக்கு நான் எங்கு போவேன்?

    அழகான கருத்துரைகளால் பதிவினை சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  22. cheena (சீனா) said.../

    பதிவின் சிறப்புகளை அருமையாக பட்டியலிட்டுப் பெருமைப்படுத்தி ந்ல்வாழ்த்துகள் நல்கிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  23. Lakshmi said...
    படங்களும் பதிவும் உள்ளத்தைக்கொள்ளை கொள்கிரது./

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா..

    ReplyDelete
  24. ஹேமா said...
    சிவ சிவா...படங்கள்தான் பரவசமாக்குகிறது.பயமுறுத்திற மாதிரியும் இருக்கு !/

    பய பக்திப்பரவசம்?????

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிக்கள்..

    ReplyDelete
  25. shanmugavel said...
    சிவ சிவ இத்தனை அழகாக யாராலும் முடியுமோ?//

    சிவ சிவ ..அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  26. raji said...
    பதிவை ஓப்பன் செய்ததுமே படிக்க விடாமல் என் பதினாறு வயது மகள் எல்லா படங்களையும் பார்த்து விட்டுத்தான் என்னை படிக்க விட்டாள்./

    மகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..

    பிறவா யாக்கைப் பெரியோனான சிவனும் பக்தர்களின் பிரியத்திற்காக குழந்தையாக உறங்கும் படம் என்னையும் வெகுவாகக்கவர்ந்தது..

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  27. கொங்கு நாட்டு திருக்கடையூர் தல வரலாறு தகவலுக்கு நன்றி.
    படங்கள் கண்ணை கொள்ளை கொள்கின்றன.
    திருக்கடையூர் போல இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளலாமா...?

    ReplyDelete
  28. ஒவ்வொரு படைப்புகளுக்கும் எவ்வளவு மினக்கடுகிறீர்கள் என்று படங்களிலும் விசயங்களிலும் விளங்குது நீங்கள் இறைவனின் அருள் பெற்றவர்

    ReplyDelete
  29. பலதடவை அந்த வழியில் சென்றும், அக்கோவிலைப் பற்றி அறிந்திலேன்! அறியப்பெற்றமைக்கு நன்றி! மகிழ்ச்சி!

    ReplyDelete
  30. Advocate P.R.Jayarajan said...
    கொங்கு நாட்டு திருக்கடையூர் தல வரலாறு தகவலுக்கு நன்றி.
    படங்கள் கண்ணை கொள்ளை கொள்கின்றன.
    திருக்கடையூர் போல இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளலாமா...?/

    திருக்கடையூர் போல இங்கும் சஷ்டியப்த பூர்த்தி சிறப்பாக செய்து கொள்கிறார்கள்..

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  31. கவி அழகன் said...
    ஒவ்வொரு படைப்புகளுக்கும் எவ்வளவு மினக்கடுகிறீர்கள் என்று படங்களிலும் விசயங்களிலும் விளங்குது நீங்கள் இறைவனின் அருள் பெற்றவர்

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  32. ரமேஷ் வெங்கடபதி said...
    பலதடவை அந்த வழியில் சென்றும், அக்கோவிலைப் பற்றி அறிந்திலேன்! அறியப்பெற்றமைக்கு நன்றி! மகிழ்ச்சி!

    அருமையான கோவில்..சென்று அருள்பெறுங்கள்..

    மகிழ்ச்சியான கருத்துரைக்கு
    மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  33. DrPKandaswamyPhD said...
    ரசித்தேன்./

    மகிழ்ந்தேன் ஐயா..

    ReplyDelete
  34. மிகச் சிறப்பாக இருந்தது கொங்குநாட்டு திருக்கடையூர். படங்கள் சிறப்பு.
    எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.

    ReplyDelete
  35. பாலசிவன் மனதைத் திருடிவிட்டார். மிகப் பெரிய தட்சிணாமூர்த்தியைக் கண்டதில் பரவசம்! வழக்கம் போல படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  36. படங்கள் அசத்தல்...பகிர்வு அருமை...மொத்தத்தில் கலக்கல் ரகம் நன்றி மேடம்!

    ReplyDelete
  37. சிவனின் பரிபூரண அருள்பெற்றேன்.

    ReplyDelete
  38. I like to see the temple during my next visit.
    Thanks Rajeswari for sharing.
    Thanks again today is Karthigai somavaram. Without going to temple, sitting at home you made me prey Shiva by your writings.
    Thanks again.
    viji

    ReplyDelete
  39. கொங்குநாட்டு திருக்கடையூர்,பற்றிய தகவல்கள் அருமை.அழகிய படங்களுடன் மற்றும் ஒரு சிறப்பான பகிர்வு. நன்றி

    ReplyDelete
  40. சிவனின் அருமையான படங்களை பார்த்து மகிழ்வுற்றேன்.

    ReplyDelete
  41. பதிவு & படங்களும் உள்ளத்தைக்கொள்ளை கொள்கிரது.நன்றி

    ReplyDelete
  42. பதிவும் படங்களும் சுவாரசியமாக இருக்கு

    ReplyDelete
  43. ஆஹா ஆஹா!!!!!

    பதிவும் படங்களும் அப்படியே அள்ளிக்கொண்டு போகுதே!!!!!

    அப்ப இதுதான் பழனி கந்தசாமி ஐயா சொன்ன கோவிலா????

    அவருக்குக் கமிஷன் போச்சு:(

    அவர்வேணாமுன்னுதான் சொல்லி இருக்கார் ஆனாலும்...தக்ஷிணை கொடுக்கத்தானே வேணும்:-)))))

    கோவைப்பயணம் செய்யத்தான் வேணும் போல!!!

    நன்றிகள்.

    ReplyDelete
  44. 1571+11+1=1583 ;)

    தங்களின் ஆறு பதில்கள் ஆறுதல் அளித்தன. நன்றி.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete