Tuesday, December 20, 2011

ஓம்கார ரத உற்சவம்



 கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் ஆறு கி.மீ. சென்று, அங்கிருந்து கொடுவாயூர் பாதையில் ஐந்து கி.மீ. சென்றால் கேரளபுரம் எனப்படும் கொடுவாயூர் திருத்தலத்தை அடையலாம். 


இங்கு ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் அருள்புரியும் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனத்தின்போது 
(மார்கழி மாத வளர்பிறை திருவாதிரை நாளில்) தேர்த்திருவிழா 
நடைபெறும்  நாளில் வாணவேடிக்கைகள், வாத்திய கோஷங்கள் 
என ஊரே அமர்க்களப்படும்.

கேரளபுரம்  ஆலயம் தமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆலயத்தின் 
வாஸ்து முறையில் கட்டப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. 


மூலசந்நிதிகளுடன் கணபதி, சுப்ரமணியர், சூரியன், பைரவர், தட்சிணா மூர்த்தி, நவகிரகங்கள் உட்பட அனைத்து சந்நிதி களும் ஆகம முறைப்படி அமைந்திருக்கும் இந்த ஆலயம், தோற்றத்தில் கேரள கட்டிடக் கலை பாணியிலும், பூஜை முறையில் தமிழக பழக்க வழக்கங்களிலும் உள்ளது! 


மேற்கு முகமாக ஈசன் அருள்புரியும் மிகச் சில தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மாலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேர்முக மாக ஆலயத்தில் வீழ்வதால், இந்த ஆலயப் பிரதிஷ்டைக்கு மகத்துவமும் கூடுதல் சக்தியும் உண்டென்று நம்பப்படுகிறது.

தலபுராணத்தில், லக்ஷ்மியம்மாள் என்ற மூதாட்டி தென்காசியிலிருந்து கொண்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றுதான் கொடுவாயூர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

கேரளபுரத்தில் நடக்கும் தேரோட்டத்திற்கு சிறப்பு அதிகம். தகப்பனாரான ஸ்ரீவிஸ்வநாதசாமி, தன் மைந்தர்கள் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆகியோருடன் ஒன்றாகச் சேருவார். 1600 மீட்டர் நீளத்தில் ஓம்கார ரூபத்தில் அமைந்திருக் கும் ரதவீதி வழியாக ரதம் செல்லும். 

இவ்வாறு செல்லும்போது சென்ற வழியே திரும்பி வராமலும், 
எதிரிட்டுப் பின்னோக்கிப் போகாமலும் தேரும் பக்தர்களும் செல்கின்றனர். 

ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதங்களும் ரதச் சக்கரங்களும் பூமியின்மீது ஓம்கார மந்திரம் எழுதிய பின்னரே இந்த ரத உற்சவம் பூர்த்தியாகிறது. 


அன்றிரவு ஒரு மணிக்கு பதினோரு ருத்ர ஜபங்கள் செய்யப்படுகின்றன. 

தொடர்ந்து பதினோரு அபிஷேகங்கள், வேதபாராயணம், அலங்காரம், தீபாராதனை என காலை ஐந்து மணி வரை நடைபெறுகிறது. 

பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், நெய், இளநீர், பால், தயிர், கரும்புச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது.

பக்தர்களின் முன்பாக தீபாராதனை முடிந்தவுடன், விரத சுத்தியுடன் உள்ள அர்ச்சகர்கள் தெய்வ விக்ரகங்களைத் தோளில் சுமந்து, மூன்று முறை ஆலயத்தை வலம் வந்து, பின்னர் மேலை நடையில் உள்ள அரச மரத்தைப் பதினோரு முறை வலம் வந்து, அதன்பின் விக்ரகங்களைத் தேரில் ஏற்றுகின்றனர். 


ஆருத்ரா தரிசன முகூர்த்தத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவானின் வாகனமான கருடன் ஆலய வீதியில் மூன்று முறை பிரதட்சிணம் செய்யும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது


கேரளபுரத்தில் பதினொன்று என்னும் எண்ணிக்கையில்தான் எல்லாம் நடைபெறுகிறது!










Padayani is a festival celebrated in the central travancore region of Kerala ...



Fireworks

32 comments:

  1. ஓங்கார ரத உத்ஸவத்தைக் கண்டு களித்து விட்டு மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. /1600 மீட்டர் நீளத்தில் ஓம்கார ரூபத்தில் அமைந்திருக்கும் ரதவீதி வழியாக ரதம் செல்லும்/

    ஆஹா கேட்கவே சந்தோஷமாக அல்லவா உள்ளது. நேரில் பார்த்தால் எப்படியிருக்கும், அதுவும் சிவபெருமான் தன் இரு குமாரர்களுடன் தேரில் பவனி வரும் காட்சி.

    ReplyDelete
  3. தேரின் படங்களை தனியாகவும், ஸ்டேஜ்-பை-ஸ்டேஜ் ஆகவும் பிரித்துக் காட்டியுள்ளது மிகவும் அழகாக ரஸிக்கும் படியாக உள்ளது.

    அருகே சென்று பார்ப்பது போல உள்ளது. தேரின் தொங்கும் மணிகள், முன்புறம் 2 குதிரைகள், தேர் சக்கரங்கள், பக்தர் கூட்டங்கள் எல்லாமே நன்கு கவரேஜ் செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. முதல் படத்தில் சிவனார் ஜொலிக்கிறார்.கழுத்திலும் ஜடா முடியிலும் பாம்புகள், திரிசூலம்,கமண்டலம், காதில் ஜொலிக்கும் குண்டலங்கள், பிறைச்சந்திரன், பின்புற ஒளிவட்டம்,உடுக்கை போன்ற அனைத்துடனும், அருள் பார்வை அழகான விபூதிப்பட்டையுடன் குங்கமப்பொட்டு என அனைத்துமே அழகு தான்.

    ReplyDelete
  5. ஆடாதே அசங்காதே கண்ணா போல எரியும் அழகிய தீபம் அழகு அடுத்த படத்தில்.

    ஓம்கார ரூபத்தில் செல்லும் ரதவீதி விளக்கு வெளிச்சத்தில் நன்கு ஜொலிக்குது.

    11 முறை ருத்ர ஜபங்கள் 11 அபிஷேகங்கள் என விடியவிடிய எல்லாமே 11 சிறப்பான செய்தி தான்.

    ReplyDelete
  6. போட்டுள்ள கோலம் ரொம்பவும் சிறப்பாக பெரியதாக உள்ளது.
    கோலம் போட்ட மகராசி யாரோ. அவர்கள் க்ஷேமமாக இருக்க வேண்டும்.

    ஓரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பான இழைகளால் கோலம் சற்றே Projection ஆக தூக்கலாகத் தெரிவது மிகச்சிறப்பானதொரு ஆர்ட் வொர்க்.
    3 D effect போல்.

    அவர்களுக்கும் உங்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    அடுத்த படத்தில் யானை நல்ல அழகாக நடந்து வருகிறது அதன் Make-up ஜோர் ஜோர்

    ReplyDelete
  7. படிக்கட்டுடன் கூடிய குளக்கரையும், அங்குள்ள ஜனங்கள் நீரில் பிரதிபலிப்பதும் நல்ல அழகாக படமெடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்துள்ள படத்தில் பல்வேறு மரங்களுடன் கூடிய நீரோட்டம் அமைதியாக ஜனங்கள் ஆரவாரமின்றி காட்டப்பட்டுள்ளது.

    ReplyDelete
  8. கேரளாவின் திருவாங்கூரின் படயானி திருவிழா பண்டிகை பற்றிய விளக்கங்கள் ஏதும் இன்றி, ஏதோ எரியும் தீவட்டிகளுக்கு அருகே ஒரு பெரிய சங்கும், அதன் தலையில் சிறிய சக்கரமும் மட்டும் காட்டப்பட்டுள்ளன.
    அதுபற்றி நாளை தொடருமோ என்னவோ?

    கடைசி படம் எல்லாவற்றையும் விட வெகு அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
    ஒரே மகிழ்ச்சிக்கொண்டாட்டம் போல அந்தப்படம் ஆட்டம் போடுவது ஒரு தனி அழகு தான், தங்கள் பதிவுகள் போலவே! ;)))))

    ReplyDelete
  9. கேரளபுரம் எனப்படும் கொடுவாயூர் பற்றிய செய்திகள், இன்று சிறப்பான படங்களுடன், ஓரளவு சிறிய பதிவாக மிகச்சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    தாங்கள் சென்றுவருவதால் மட்டுமே, அதைப்பற்றி பதிவுகள் போடுவதால் மட்டுமே, இது போல ஆங்காங்கே உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றியும், அவற்றின் மகிமைகள் பற்றியும், கொஞ்சமாவது நாங்களும் அறிந்து கொள்ள முடிகிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி. vgk

    ReplyDelete
  10. இப்போது அங்கே போக முடியுமா? ஒரே பிரச்சினையா இருக்கே!படங்கள் வழக்கம்போல அருமை!

    ReplyDelete
  11. இந்த ஒரே ஆண்டின் 369 ஆவது வெற்றிகரமான வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

    Target 380 or even more ?
    Advance Congratulations.

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இந்த ஒரே ஆண்டின் 369 ஆவது வெற்றிகரமான வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

    Target 380 or even more ?
    Advance Congratulations.//

    குறிகோள் எண்ணிக்கை எதுவும் எட்டவில்லை ஐயா...

    பின்னூட்டம் என்னும் ஊக்குவிப்பு உள்ளவரை பயணம் தொடர பிரார்த்திக்கிறேன்..

    வாழ்த்துகளுக்கும் அருமையாய் ரச்னையுடன் அளித்த அத்தனை பின்னூட்டங்களுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  13. shanmugavel said...
    இப்போது அங்கே போக முடியுமா? ஒரே பிரச்சினையா இருக்கே!படங்கள் வழக்கம்போல அருமை!

    நிலைமை விரைவில் சீரடைய பிரார்த்திப்போம்..

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்...

    ReplyDelete
  14. நன்றாக ரசித்தேன்.

    ReplyDelete
  15. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - படங்கள் எல்லாம் அருமை - விளக்கமோ அதனை விட அருமை. அத்தனையையௌம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். படித்துப் படித்து இரசித்தேன், தல புராணம் துவங்ஜி திருவாதிரை வரை விளக்கிய விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. படங்களுடன் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சுவாமி படங்கள்லாம் வழமை போலவே செம கலக்கல்

    ReplyDelete
  18. ஓம்கார ரத உற்சவம் - பக்தர்களின் பாதங்களும், ரதச்சக்கரங்களும் பூமியின் மீது ஓம்கார மந்திரம் எழுதிய வடிவில் இழுத்து ரத உற்சவம் பூர்த்தியாகிறது என்றால் எவ்வளவு நேர்த்தியாக ஐதீகத்தை இன்னும் பின்பற்றி ஓம்கார மந்திரத்தின் மகிமையை அறியசெய்கின்றனர்... அருமையானதொரு ஆன்மீக பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  19. படங்களும் இடுகையும் சிறப்பு கண்டேன் காட்சியை பாராட்டுகள்

    ReplyDelete
  20. படங்கள்லாம் செம கலக்கல்....

    ReplyDelete
  21. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  22. தேர்க் காட்சிகள், இரவு ஒளிக்காட்சி,குளம் என கவர்கின்றது பதிவு.

    ReplyDelete
  23. ஓங்கார ரத உத்ஸவத்தைக் கண்டு மகிழ்ந்தேன் ரசித்தேன் நன்றி

    ReplyDelete
  24. ஒம்கார ரத உற்சவம் மிக அருமை.

    கோலங்கள் தேர் படங்கள் எல்லாம் கண்ணைக் கவர்கிறது.

    ReplyDelete
  25. வழக்கம்போல படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    தேரினை பகுதி பகுதியாக ரசிக்கும்படி கொடுத்தது
    மிக மிகச் சிறப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அருமை. மிக மிக அருமை.
    அற்புதமான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. கேரளபுரம் எனப்படும் கொடுவாயூர் பற்றிய சிறப்பான படங்களுடன் அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. ;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!

    ReplyDelete
  29. 1673+10+1=1684 ;)

    ஒரேயொரு பதில், இருபினும் சற்றே ஆறுதலாக. நன்றி.

    ReplyDelete