Saturday, March 31, 2012

ஸ்ரீ ராம நாம மகிமை !



நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே, 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,
சென்மமும் மரணமும் இன்றி தீருமே, 
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்"
Ramnavami Ki Bahut Bahut Badhai
‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. 

இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார். 
அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.

விஷ்ணுவும் சிவமும் கலந்த கலவை ராம நாமம் ....

 “ஓம் நமோ நாராயணாயா” என்று அஷ்டாட்சரத்திலிருந்துள்ள ‘ரா’ என்ற சப்தத்தையும், “ஓம் நமசிவாயா” என்ற பஞ்சாட்சரத்திலிருந்து ‘ம’ என்ற சப்தத்தையும் வேறுபடுத்தி விட்டால் “நாயணாயா” என்றும் “நசிவாயா” என்றும் மாறுபடும். 
Wishing You A Blessed Ram Navami
அப்பொழுது அதன் அர்த்தமே அனர்த்தமாக ஆகிறது. அப்படியானால் இந்த இரண்டு நாமாக்களுக்கும் ஜீவனானது ‘ரா’வும் ‘ம’வுந்தான். அந்த இரு ஜீவன்களையும் ஒன்று சேர்த்தால் வருவதே ‘ராம’ மந்திரம்.

 இந்த சப்த ஒலியினால் அந்த மந்திரம் மகாமந்திரம் என்று பெருமை உடையதாகிறது. இரு மத சாராருக்கும் இந்த மந்திரம் பொதுவாகிறது என்பதால் இதுவே ‘தாரக மந்திரமாகும்’. “தாரகம்” என்றாலே சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதாகிறது. 
நம்மைக் கரையேற்றும் அல்லது கரை சேர்க்கும் மந்திரம் ‘ராம’ மந்திரம்.

ரகு வம்ச மணி ராமன் விஸ்வரூபனுடைய ஒவ்வோர் அங்கத்திலும் லோகங்கள் இருக்கிறது. பாதாளம் அவரது சரணம் (பாதங்கள்). பிரம்மலோகம் அவரது சிரசு. கதிரவன் அவனது கண். மேகம் அவனது கேசம். 
அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி. அவர் இமைப்பதே இரவு பகல்.
பத்து திசைகளும் அவனது செவி. அவனது நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது, என்று வேதம் ஒலிக்கிறது. 

எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. 
 
இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.

 எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும். 

ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.
sri rama navami
ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர். சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
sriramanavami 2010

21 comments:

  1. ஆஹா! இன்றும் ஸ்ரீராமநாம மகிமை பற்றிய பதிவு. ருசியோ ருசி தான்.

    இன்றும் நாளையும் ஸ்ரீராமநவமி அல்லவா! அதனால் தானோ அனைத்துப்படங்களும் ஜொலிக்கின்றதே!
    ;)))))

    ReplyDelete
  2. ஸ்ரீ ராமந்வமி வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. ரகு வம்ச மணி ராம விஸ்வரூபன் என்பதற்குக் கீழே காட்டப்பட்டுள்ள படமே இன்றைய மிகச்சிறப்பு வாய்ந்த படமாகும்.

    சும்மா ஜொலிக்கிறது ... அம்மா!

    இரவு முழுவதுமே முற்றிலும் தூங்காமல் இருந்ததில் அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீராமநவமியாகிய இன்று இந்தப்பதிவினை வெளியிட்ட உடனேயே ஸேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    என்ன பாக்யம் செய்தேனோ என நினைத்து மகிழ்ந்தேன். ;)))))

    ReplyDelete
  4. ஸ்ரீராமர் பாதங்களில் ஆரம்பித்து சிரசு வரை ஒவ்வோர் அங்கங்களிலும் ஒவ்வொரு லோகங்கள் உள்ளன என்னும் இரகசியத்தகவல், அதுவும் தகவல் களஞ்சியத்தால் கொடுக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. ;)))))

    ReplyDelete
  5. ராமனைவிடவும், ராமபாணத்தை விடவும் சிறந்தது ராம நாமம் என்பது என்பதை நிரூபித்த வியாகரண பண்டிதரும் சிரஞ்ஜீவியுமான ஹனுமார்! என்கிற ராமபக்தன், ராமதூதன்.

    மிக அழகான சத்யமான வாக்கு! ;)))))

    குரங்கார் ஒருவர் ஸ்ரீராம பட்டாபிஷேகப் படத்தருகே வந்து அமர்ந்திருப்பது குதூகலம் அளிப்பதாக உள்ளது.

    வலைவீசிப் பிடித்திருப்பீர்களோ ![இந்தக்குரங்குப்படத்தை கூகுளில்]

    படத்தேர்வுகளில் தான் பட்டத்து மஹாராணி ஆயிற்றே நீங்கள்! ;)))))

    ReplyDelete
  6. இன்று மின்னிடும் அனைத்துப்படங்களும்,
    அழகான விளக்கங்களும், தொடர்ந்து 4 நாட்களாக தந்துவரும் ஸ்ரீராமநவமி பற்றிய செய்திகளும் மிகச்சிறப்பாக உள்ளன.

    ராம என்ற சொல்லே விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பொதுவானது என்பதால் நடுவில் சொரக்கொன்னை பற்றிய சிவனுக்கு உகந்த தங்கமலர் பற்றியதோர் பதிவு!

    அதுவும் சும்மாவா! மஞ்சள்பூசிய தங்க நகைகள் தாராளமாக அணிந்த நங்கையுடன் ஓர் ஒப்பீடு வேறு !!

    மொத்தத்தில் 4 நாட்களாக ஒரே கலக்கல் தான்.

    உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகலாம். உடல் நோய்களை மட்டுமெ மருத்துவரால் குணப்படுத்த முடியும்.

    ஆனால் நம் உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ’ராமநாமத்திற்கு’ மட்டுமே உண்டு.

    அதே சக்தியைத் தங்கள் பதிவுகளும் எனக்குத் தந்து வருகின்றன.

    அதனாலேயே பல்வேறு மனப்போராட்டங்கள் + பிரத்யேகமான சொந்தப் பிரச்சனைகள் ஆயிரம் இருப்பினும், அவற்றையெல்லாம் மறந்து விட்டு, உங்கள் பதிவுகளைப் படிக்கவும், பின்னூட்டம் இடவும், நேரம் ஒதிக்கி வருகிறேன்.

    எப்படியோ என் மனதுக்கு சாந்தி கிடைக்கவே தொடர்ந்து ராமநாமமும் ஜபித்து வருகிறேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதே ”தாரகம்” என்பது.

    ’ராம’ நாமமோ “தாரக மந்திரமாகும்”

    மிகச்சரியான அருமையான விளக்கம்.

    ReplyDelete
  8. //ரகு வம்ச மணி ராம விஸ்வரூபன்//

    தங்கள் இல்லத்தின் சன்னதியில் எடுத்ததோ?

    ”யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
    தத்ர தத்ர க்ருதம் ஹஸ்த: அஞ்சலிம்”

    (எங்கெல்லாம் ரகு நாதனின் கீர்த்தனம் ஒலிக்கிறதோ, ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் கைகளை சேர்த்து வணங்கியபடி அனுமன்)

    ’ஆஞ்ஜூ’ அதை நிருபிக்கிறார்

    இரு மந்திர சேர்க்கையான ராம நாம விளக்கம் அற்புதம்.

    லோகங்களைக் கொண்ட திருமேனி விளக்கம் சர்க்கரைப் பந்தலில் தேனாய்....

    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  9. காலையில் முதன்முதலாக உங்கள் தளத்துக்கு வருவது மனதுக்கு இதமாக உள்ளது

    ReplyDelete
  10. ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள்

    ReplyDelete
  11. அற்புதம்! ராம நாமத்தின் மகிமையை விளக்கியிருப்பது அருமை-"ரா" வும் "ம" வும் இணைந்த விதம். அதிலும் 'ம' பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  12. Dear thozi,
    superb rendition on the account of
    Sri RamaNavami.

    ReplyDelete
  13. Dear thozi,
    You have given out very good blog on the account of Sri Rama navami.

    ReplyDelete
  14. ஜொலிஜொலிக்கும் படங்களுடன் அருமையான பகிர்வு.

    ஜெய் ஸ்ரீராம்.

    ReplyDelete
  15. ராம நாம மகிமை சொல்லும்
    அழகிய பதிவும் படங்களும்...

    ReplyDelete
  16. ஸ்ரீ ராம நவமி ஸ்லோகம்

    "ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
    சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
    அங்குல் யாபரண சோபிதம்
    சூடாமணி தர்ஸன் கரம்
    ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
    வைதேஹி மனோகரம்
    வானர ஸைன்ய ஸேவிதம்
    சர்வ மங்கல கார்யானுகூலம்
    சத்தம் ஸ்ரீ ராமசந்த்ரம் பாலயமாம்."

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. 68. காஞ்சணாம்பாதர கோவிந்தா

    ReplyDelete