Monday, February 11, 2013

பேர(ழ)லகுப் பறவை




படிமம்:Keel billed toucan.jpg



சில பற்வைகளின் அலகுகள்  அநத பறவையின் உடலை 
விடப் பெரிதாக காணப்பட்டது கவனத்தை ஈர்த்தது ..

பேரலகுகள் கொண்ட பறவை இனங்களைப்பற்றி விசித்திரமான தகவல்கள் கிடைத்தன .. அவற்றை இங்கே பகிர்கிறேன் ...


Ramphastidae
தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட 
ராம்ஃபசுட்டோசு தோக்கோ (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் அகச்சிவப்புக் கதிர்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்... 

தூக்கான் பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு 
இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. 

சூழ் வெப்பநிலையைப் பொறுத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொறுத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. 
தூக்கான் அலகுகளில் உள்ள இரத்தக் குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.


இப்பறவைகள் அதிகம் இரைச்சல் எழுப்புகின்றன. 
உறங்கும்போது தம் தலையை முதுகுப்புறம் திருப்பி, தன் பெரிய அலகை 
தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன.
பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக (தொகுதியாக) வாழ்கின்றன. நெடுந்தொலைவு வலசையாகப் போவதில்லை.



Blue-footed Boobies are distributed among the continental coasts of 
the easternPacific Ocean to the Galapagos Islands and California.






24 comments:

  1. நல்ல விவரங்கள். ஆன்மீகத்திலிருந்து விஞ்ஞானம்?

    ReplyDelete
  2. எவ்வளவு நீளமான அலகுகள்... பறவை அழகாக இருந்தாலும் கொஞ்சம் பயங்கரமாக இருக்கிறது... நன்றி...

    ReplyDelete
  3. பறவைகள் பகிர்வு அருமை.
    அழகு அழகு பேர்(ழ) லகுப்பறவை தான்.

    கூடு கட்டுக் சின்ன குருவி அழகு. மீனை பிடிக்கும் கொக்கு அழகு.
    பகிர்வு படங்கள் எல்லாம் அழகோ அழகு.
    நன்றி, பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செர்ரி பழத்துடன் கூடிய பேரலகுப்பரவை பேரழகு !
    உடல் பாகத்தை விட அலகின் எடை அதிகமாக இருக்கும் போல.

    ReplyDelete
  5. பேரலகு கொண்டவை பேரழகாக இருக்கு. படங்கள் எல்லாம் மிக அழகு.

    ReplyDelete
  6. நல்ல சேகரிப்பு

    ReplyDelete
  7. பறவைகள் பலவிதம். பேரலகு பேரழகு..!

    ReplyDelete
  8. Great site you have here.. It's hard to find excellent writing like yours nowadays. I honestly appreciate people like you! Take care!!

    Here is my page - how to buy A car with bad credit
    Feel free to visit my site ... buying a car with bad credit,buy a car with bad credit,how to buy a car with bad credit,buying a car,buy a car,how to buy a car

    ReplyDelete
  9. மிக அழகான படங்கள்,தெரியாத விடயங்கள்.நன்றிகள்.

    ReplyDelete
  10. அம்மாடியோ .... தலைப்புக்கு ஏற்றர்போல ஒவ்வொன்றின் அலகும்
    பேரழகு மட்டுமல்ல எம்மா நீ.....ள.....ம்! ;)))))

    ஒவ்வொன்றும் அருவாள் போலல்லவா வளைந்து இருக்குதூஊஊஊஊஊ.

    அதிலும் பல்வேறு கலர்கள், கண்ணைப் பறிக்கும் விதமாக ......

    எங்கே தான் பறந்து பறந்து போய்ப் புடிச்சீங்களோ?

    >>>>>>

    ReplyDelete
  11. நம்மால் நம் நாக்கால் மூக்கைத்தொட முடியுமே தவிர, நம் மூக்கால் நாக்கைத் தொட முடிவது இல்லை.

    நடு முதுகு அரித்தால் நம்மால் நம் உடம்பின் அகல நீளத்தால் சொரிந்து கொள்ளவே முடிவதும் இல்லை.

    அதற்கு ஒரு சீப்பையோ அல்லது சீவி முடிச்ச சிங்காரியையோ தேட வேண்டியுள்ளது.

    இவை பாருங்கோ.... தூங்கும் போது தன் பெரிய அலகையே முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ;)))))

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    >>>>>>>

    ReplyDelete
  12. நிறைய படங்கள் திறக்கப்படவே இல்லையாக்கும்.

    ஆனாலும் திறந்துள்ளவைகளில் ஒரு படம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

    அதில் அந்த மஞ்சள் நிறப்பறவை, தலை முழுவதும் சிவப்பாக, விழி பூராவும் ஏதோ ஒரு தேடலுடன், கருநீல நிற குட்டியான அலகுடன், எதையோ சில தென்னங் குருத்தோலைகளைப் பிடித்து தொங்கிய வண்ணம் ... அதுதான் அய்ய்ய்கோ அய்ய்ய்ய்கூஊஊஊஊ.

    அதைப்பார்த்ததும் எனக்கு ஏனோ தைப்பூச ஞாபகமே வந்ததூஊஊஊ.

    எனக்கும் அதுபோல எதையாவது ஒன்றைக் கவ்விப்பிடித்து தொங்க வேண்டும் என ஆசையாக உள்ளதூஊஊஊஊஊ.

    >>>>>

    ReplyDelete
  13. மேலிருந்து மூன்றாவது படத்தில் ஒரு ஜோடிப்பறவைகள் ... சூப்பரோ சூப்பருங்கோ!!!!!!!

    என்னாக் கலரூஊஊஊ

    என்னாஅழகூஊஊஊஊ

    வெளியே தன் கருப்பு அலகில், சிவப்புப் பழத்தைக்கவ்வியுள்ளது ஆண் பறவையோ?

    பொந்தில் அமர்ந்து எட்டிப்பார்ப்பது பெண் பறவையோ?

    பொந்து என்றாலே அது பெண்ணாகத்தான் இருக்க முடியும்.;)

    வெட்கமுள்ள அழகான பெண் பறவை ... அதனாலேயே அது பொந்துக்குள். ;)

    அந்த மரப்பொந்தின் இயற்கை அழகும் ரஸிக்கும் படியாகவே அமைந்துள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  14. இன்றைய தங்களின் பதிவு மிகவும் அழகோ அழகு.

    அருமையான விளக்கங்கள்.

    அற்புதமான படங்கள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இனிய நல்வாழ்த்துகள்.

    பறவைப் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    [பறந்து வந்து நேரில் பாராட்டத்தான் ஆசையாக உள்ளதூஊஊஊஊ.]

    -oOo-



    ReplyDelete
  15. அடடா... அழகாக இருக்கிறதே... வண்ன வண்ணப் பறவைகள்...:)
    அருமை. நல்ல தகவல்கள்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  16. படங்கள் எல்லாமே அழகு...

    ReplyDelete

  17. interesting and informative post. Best wishes.

    ReplyDelete
  18. அலகுகளின் அழகுகளில் மயங்கினேன்..

    ReplyDelete
  19. மிக அழகான படங்கள்,நல்ல
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  20. இறை படைப்பில் எத்தனையெத்தனை அழகுகள்!!

    ReplyDelete
  21. அலகு பெரிது. எத்தனை விதமான பறவைகள் உலகில்!..
    தகவலிற்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. அலகு பெரிது. எத்தனை விதமான பறவைகள் உலகில்!..
    தகவலிற்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  23. நீலக்கால் பறவைகள் கொள்ளை அழகு.
    பேரழகான பறவைகளின் பேரலகுலகளை படம் பிடித்துப் போட்டு ரசிக்க வைத்து விட்டீர்கள்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete