Thursday, February 20, 2014

தென் துவாரகை ஸ்ரீ குருவாயூரப்பன்
அஸ்மின் பராத்மன் அநு பாத்ம கல்பே 
த்வம் இத்தம் உத்தாபித பத்மயோனி:
அனந்த பூமா மம ரோக ராசிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
    (நாராயணீயம் தசகம்-8 பாடல்-13) 
குருவாயூரில் என்றும் நித்யவாசம் செய்யும் பெருமாளே, 
விஷ்ணுவே நமஸ்காரம்.
பாத்ம கல்பத்தில் நான்முகனைப் படைத்தவனே, 
அளவில்லாத பெருமைகளையுடைய நீ என்னுடைய 
நோய்கள் அனைத்தையும்  நீக்கியருள வேண்டும் பெருமாளே. 

(பொதுவாக, இதுநாள்வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இல்லை என்பார்கள். ஆனால்,  இந்த(நாராயணீயம் தசகம்-8 பாடல்-13-ஸ்லோகத்தை மனமுருகிசொல்லி மருத்துவமும் மேற்கொண்ட சிலர் அந்த உபாதையிலிருந்து மீண்டிருப்பதாக அறிய முடிகிறது. குருவாயூரப்பன் திருவருளால் புற்று நோயும் நீங்கும் என காஞ்சி மகாசுவாமிகள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் தமது அருளுரையில் சொல்லியிருக்கிறார்.)
[Guruvayoorappan+at+Guruvayur+Temple.jpg]
குருவாயூர் திருக்கோயிலில் தரிசனம் தரும் மூலவர் ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். மிகவும் புனிதமானபாதாள அஞ்சனம் எனும் கல்லில் மூலவர் விக்கிரகம் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த விக்கிரகத்தை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்து வழிபட்டு வந்தார்.

அதன் பிறகு அந்த விக்கிரகத்தை பிரம்மதேவனிடம் அளித்தார்.

பிறகு பிரம்மனிடம் இருந்து கைமாறி காசியாபா பிரஜாபதி, வசுதேவர் ஆகியோரிடம் போனது.

கடைசியில் வசுதேவரிடம் இருந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே இந்த விக்கிரகம் வந்து சேர்ந்தது.

துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்தது.

அதற்கு முன்னதாகத் தன் பக்தரான உத்தவரிடம், ‘இன்னும் ஏழு நாட்களில் துவாரகையைக் கடல் கொள்ள இருக்கிறது.

அந்த வெள்ளத்தில் இந்தக் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும்.

அதை குரு பகவான் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்றார் கிருஷ்ண பகவான்.

அடுத்த ஒரு சில தினங்களில், பகவானின் வாக்குப்படி பெரிய பிரளயம் ஒன்று துவாரகையைத் தாக்கியது.

 அந்த வெள்ளத்தில் மிதந்து வந்த விக்கிரகம் ஸ்ரீகிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது.

இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும் அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து ஒரு நல்ல இடத்தைத் தேடி அலைந்து கேரள தேசத்தை அடைந்து  பரசுராமரை சந்தித்தனர்.

இந்த விக்கிரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான் என்று பரசுராமரே இருவரையும் கூட்டிக் கொண்டு போய் ஓரிடத்தைக் காண்பித்தார்.

பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தரும் அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.
அந்த இடத்தில் விக்கிரகம் பிரதிஷ்டை ஆனது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் இந்த க்ஷேத்திரம் பின்னாளில் ‘குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.

மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.
கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும், கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் கண்களைக் கவர்கிறது.

இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும்போது காணக் கண் கொள்ளா காட்சியாக அமையும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்போது மனத்தில் பரவசம் ஏற்படுகிறது.


கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே ஸ்ரீகிருஷ்ணனை துவாரகையில் 
இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் 
வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன. 

தினமும் இவர்களுக்கு நைவேத்தியமாக அன்னம், 
பூ, தீர்த்தம் அளிக்கப்படுகிறது.

17 comments:

 1. ஸ்ரீகுருவாயூரப்பனைப் பற்றிய தங்களின் இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 2. நாராயணீயம் தஸகம் 8 ஸ்லோகம் 13 எங்கள் ஆத்தில் [இல்லத்தில்] பல இடங்களில் எழுதி ஒட்டி வைத்துள்ளேன். எல்லோரும் தினமும் மறக்காமல் ஒரு முறையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக.

  அதுதவிர, தங்கள் இல்லத்துக் கஷ்டங்களை, தீராத வியாதிகளை பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளும் பல பதிவர்களுக்கும் இதே ஸ்லோகத்தை நான் மெயில் மூலம் அனுப்பி சொல்லச் சொல்லியிருக்கிறேன்.

  மாமருந்தான இந்த ஸ்லோகத்தை தங்களின் இன்றைய பதிவினில் மேலாக எடுத்தவுடன் பார்த்ததும் மெய்சிலிர்த்துப்போனேன்.

  >>>>>

  ReplyDelete
 3. அழகழகான படங்களை வழக்கம்போல அளித்து மகிழ்வித்துள்ளீர்கள். இருப்பினும் ஒருசில படங்கள் மட்டும் இப்போது காட்சியளிக்காமல் உள்ளன. பிறகு ஒருவேளை அவை திறந்து காட்சி அளிக்கும் என நம்புகிறேன்.

  >>>>>

  ReplyDelete
 4. ஸ்ரீ குருவாயூரப்பனின் மூல விக்ரஹம் கிடைத்த கதை தங்கள் பாணியில் அழகாகச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 5. குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் குருவாயூரப்பன் என்ற பெயர் வந்த கதை சுவையாகவும் ஒத்துக்கொள்ளும்படியாகவும் உள்ளது.

  தென் துவாரகை என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

  மும்மூர்த்திகளின் அருள் பெற்றுள்ள இவரை வணங்கினாலே போதும் நம்மை எந்த தோஷங்களும் அண்டாது என்பது நல்லதொரு ஆறுதல் அளிக்கும் செய்திதான்.

  >>>>>

  ReplyDelete
 6. 3000 பித்தளை அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் சுடர் விட்டு எரிவதையும் காட்டி அசத்தியுள்ளீர்கள் ! ;)

  பார்க்கப் பார்க்க மனதுக்குப் பரவசமாகவே உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 7. கீழிருந்து இரண்டாவது படத்தில் என் மனம் அப்படியே லயித்துப்போனது ! ;)))))))))))))))))))))))))))))))))))

  எத்தனை எத்தனை கிருஷ்ணர்கள்.

  அடடா, அது தான் சூப்பரோ சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  >>>>>

  ReplyDelete
 8. படங்கள் + பதிவு + விளக்கங்கள் அனைத்துக்கும் என் நன்றியோ நன்றிகள்.

  மனம் நிறைந்த அன்பான இனிய பாராட்டுக்கள்.

  நல்வாழ்த்துகள். வாழ்க !!

  அஷ்டமியில் பிறந்துள்ள அந்த ஸ்ரீகிருஷ்ணனுக்கும், இந்த கோபாலகிருஷ்ணனுக்கும் ’எட்டு’ என்பதே ராசியான எண்ணிக்கை என்பதால் எட்டுப் பின்னூட்டங்களுடன் முடித்துக்கொண்டு, எட்டிப் பார்க்காமல் ஓடி விடுகிறேன். ;))))) [இப்போதைக்கு மட்டும்]

  oo oo oo oo

  ReplyDelete
 9. குரு வாயு ஊர் அப்பன் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 10. சிறப்பான தகவல்களும், படங்களும் என பதிவு அருமை.

  ReplyDelete
 11. ஆச்சர்யமான விஷயம்பா.. புற்றுநோய் குணமாகும் ஸ்லோகம் சொல்வதால் புற்றுநோய் குணமாகிறது என்று படித்தது. எல்லோரும் நலன் பெறட்டும் இந்த கோயிலுக்கு வந்து.. க்ருஷ்ணவிக்ரஹம் மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் பூஜை செய்து அதன்பின் எல்லோரிடமும் கைமாறி க்ருஷ்ணனிடமே வந்து அதன் பின் பெருமழையால் துவாரகை அழிந்தாலும் க்ருஷ்ண சிலை குருபகவானால் பூஜிக்கப்பட்டு வாயுபகவான் துணையோடு பரசுராமனின் சொல்லால் கேரளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கு.

  மிக அருமையான ஸ்தல புராணத்துடன் படங்களுடன் எங்களை வசப்படுத்திட்டீங்கப்பா..

  நான் 10த் படிக்கும்போது அம்மா அப்பா இருவரும் ஒரே கன்சர்ன்ல வேலை செய்துக்கொண்டு இருந்தார்கள். ஆபிசு டூர் போகும்போது அதில் குருவாயூரும் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அனுமதிகக்வில்லை செல்ல, கேட்டால் புடவை மாற்றிக்கொண்டு வரச்சொல்லிட்டாங்க. திரும்ப போய் சுரிதார் மாற்றி புடவைக்கட்டிக்கொண்டு வந்து குருவாயூரப்பனை தரிசித்தோம். இதோ இப்போது மீண்டும் உங்கள் உபயத்தால்.

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 12. படங்கள் அனைத்தும் அருமை அம்மா... காலையிலே தரிசனம் செய்து விட்டேன்... கருத்துரை இடுவதற்குள் மின் வெட்டு... சற்று முன் தான் வந்தது... சிறப்பான தகவல்களுக்கும் நன்றி அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. குருவாயுரப்பன் தரிசனம் மண் நிறைவைத் தந்தது.

  ReplyDelete
 14. குருவாயூர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பல விஷயங்கள் புதியவை. அடுத்தமுறை போகும்போது உங்களின் இந்தக் கட்டுரையையும் எடுத்துச் செல்லவேண்டும்.
  வியாழக்கிழமை எங்களை குருவாயூருக்கு அழைத்துப் போய் தரிசனம் செய்து வைத்துள்ளீர்கள். நன்றி!

  ReplyDelete
 15. இந்த ஸ்லோகம் பற்றி ஒரு முறை வார இதழ் ஒன்றிலும் தகவல் வெளி வந்திருந்தது.......

  சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. பக்தி மணம்கமழும்
   பரவசமூட்டும் பதிவு
   நன்றி.

   இவன் வரைந்த படம்-தங்கள் பார்வைக்கு

   http://tamilbloggersunit.blogspot.in/2014/03/blog-post_16.html

   Delete
 16. படங்களுடன் பரவசமூட்டும் பக்தி பதிவு
  பாராட்டுக்கள் நன்றி.


  இவன் வரைந்த படம்-தங்கள் பார்வைக்கு-link
  http://tamilbloggersunit.blogspot.in/2014/03/blog-post_16.html

  ReplyDelete