Friday, February 14, 2014

தங்கிய தங்கத் தருணங்கள்..!


சிங்காரமாய் சிறகடித்துப் பறக்கும் பறவைகளுடன் பழகும் சின்னக்குழந்தை..!

பள்ளியில் நடைபெற்ற மாறுவேடப்போட்டியில் பரிசு பெற்ற எங்கள் வாரிசின் வாரிசு - ஸ்ரீதர்ஷன் ...!Photo

32 comments:

 1. பறவைகளுடன் அழகான விளையாட்டு அம்மா...

  ReplyDelete
 2. வணக்கம்
  அம்மா....
  சின்னக் குழந்தை மிக அழகு.... மற்ற படங்கள் எல்லாவற்றையும் ரசித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. ஸ்ரீ தர்ஷனுக்கு வாழ்த்துக்களும், ஆசிகளும் பல.

  ReplyDelete
 4. மனதில் தங்கிய தங்கத் தருணங்கள் தான் நீங்கள் பகிர்ந்த பகிர்வுகள். பறவைகளுடன் குழந்தை பயப்பாடாமல் உட்கார்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இளங்கன்று பயமறியாது அல்லவா!
  ஸ்ரீ தர்ஷ்னுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அது சரி, புறாவை ஓட்டும், கொள்ளை அழகான, குட்டிப்பையனின் பெயர் என்ன?

  ReplyDelete

 6. படங்களும் குழந்தைகளும் நல்ல விளக்கம்! குழந்தைகள் என்றாலே கள்ளங் கபடம் இல்லாதவர்கள். அவர்களோடு அவர்களாய் நாமும் குழந்தைகளாய் இருக்கும் நேரங்கள்! – நீங்கள் சொல்வது போல் தங்கிய தங்கத் தருணங்கள் தான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. முதலில் காட்டியுள்ள காணொளி ஏனோ தற்சமயம் திறக்க மறுக்கிறது. பிறகு மீண்டும் முயற்சிப்பேன்.

  >>>>>

  ReplyDelete
 8. மொட்டை மாடி வெயிலில், வெறும் தரையில், வெதர் ஹோஸ் சூட்டில், அமர்ந்துள்ள குழந்தை அழகோ அழகு தான்.

  ஏனோ அதன் முகத்தில் சற்றே சோகம். சிணுங்குவது போலவும் உள்ளது.

  நம் பாட்டி இப்படி நம்மைப்பாடாய்ப் படுத்தி, பம்பரமாய் ஆட்டி, பதிவிட நினைக்கிறார்களே என நினைக்கிறதோ, என்னவோ. ;)

  >>>>>

  ReplyDelete

 9. மொட்டைமாடி கைப்பிடிச்சுவருக்கு அந்தப்புறம் உள்ள தூண்களில் அமர்ந்து அழகாகப் போஸ் கொடுத்திடும் காகங்களையும் சேர்த்து கவரேஜ் செய்துள்ளது, மிகவும் இயற்கையாக அருமையாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 10. அடுத்த படத்தில் ஸ்டைலாகத்திரும்பி அந்தப்புறாக்கள் கொத்திக்கொத்தித் தின்பதை பார்த்து ரஸிக்கும் அந்தக்குழந்தையின் அழகு நம்மையும் ரஸிக்க வைக்கிறது.

  பார்க்கவே மிகவும் பரவஸமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 11. ஸ்ரீதர்ஷனின் தரிஸனம் மகிழ்வளிக்கிறது.

  பள்ளியில் மாறுவேடப்போட்டியில் பரிசு பெற்ற அவருக்கு என் அன்பான இனிய வாழ்த்துகள் + பாராட்டுக்களைச் சொல்லி விடவும்.

  தங்களின் வாரிசின் வாரிசு என்றால் பரிசுகளுக்காப் பஞ்சம் ! ;)))))

  >>>>>

  ReplyDelete
 12. கடைசியில் காட்டியுள்ள படத்தின் மூலம் யாருக்கோ பிறந்த நாள் என்பதும் புரிகிறது. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  குட்டிப்பயல் விஸ்வநாதன் ஆனந்த் + ஸ்ரீதர்ஷன் ஆகிய இருவருக்கும் என் ஆசிகள் / வாழ்த்துகள் / பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 13. தங்கியத் தங்கத் தருணங்களை, கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமாய், தாங்கள் இன்று எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது, மிகவும் ஆனந்தம் [அதுவும் விஸ்வநாத் ஆனந்த் என்ற ஆனந்தம்] அளிப்பதாக உள்ளது. சந்தோஷம்.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  o o o o o o o

  ReplyDelete
 14. ஸ்ரீதர்சனுக்கு நல்வாழ்த்துக்கள். தங்கிய தங்கத் தருணங்கள் அழகு.நன்றி.

  ReplyDelete
 15. காணொளியை இப்போது தான் கண்டு மகிழ்ந்தேன். சூப்பர் !

  டார்க் நீலக்கலர் அரை டிராயருடன், பாடிப்பாவாடை போன்று தோளில் முடிச்சுப்போட்ட வெள்ளைச்சட்டையில் சும்மா ஜொலிக்கிறான் அந்தப்பொடியன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
   கருத்துரைகள் அனைத்துக்கும் நிறைந்த நன்றிகள்..!

   பதிவில் காணொளியை இணைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள பயிற்சி செய்து வெளியிட்டு சரிபார்த்துக் கொண்டிருந்தபோதே எதிர்பாராத விதமாக கருத்துரைகள் நிறைய ஆரம்பித்துவிட்டன..

   எனவே அப்படியே முழுமைபெறாமல் பதிவு நின்று
   வரவேற்பு பெற்றது ஆச்சரியம்தான் எனக்கு ..

   இதற்கு முந்தைய பதிவு சிரமப்பட்டு செய்திகளும் படங்களும் சேகரித்து கோர்த்து சிரத்தையுடன் கொடுத்தும் பார்க்க ஆளில்லை தங்களைத்தவிர..

   Delete
  2. //வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
   கருத்துரைகள் அனைத்துக்கும் நிறைந்த நன்றிகள்..!//

   நன்றியெல்லாம் எதற்கு? அபூர்வமான அதிசயமான காணொளியையும், பதிவினையும் காணக்கொடுத்து வைத்த நான் தான் தங்களுக்கு நன்றி சொல்லணும்.

   //பதிவில் காணொளியை இணைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள பயிற்சி செய்து வெளியிட்டு சரிபார்த்துக் கொண்டிருந்தபோதே எதிர்பாராத விதமாக கருத்துரைகள் நிறைய ஆரம்பித்துவிட்டன..//

   எப்படியோ கற்றுக்கொண்டு விட்டீர்களே. அதுவரை சந்தோஷமே. எனக்கு இதுவரை அதுபற்றி எதுவுமே தெரியாது.

   ஆமாம், ஏன் அந்த அழகியக் காணொளியை இப்போது நீக்கியுள்ளீர்கள் ????? ;(

   //எனவே அப்படியே முழுமைபெறாமல் பதிவு நின்று
   வரவேற்பு பெற்றது ஆச்சரியம்தான் எனக்கு ..//

   இது லேடஸ்டு பதிவாக மேலே உள்ளதாகையாலும், தாங்கள் தினசரி பதிவுகள் கொடுப்பவர் என்பதாலும், அடிக்கடி வருகை தருவோர் மேலாக மட்டும் வருகை தந்து விட்டுப் போய் இருப்பார்கள்.

   //இதற்கு முந்தைய பதிவு சிரமப்பட்டு செய்திகளும் படங்களும் சேகரித்து கோர்த்து சிரத்தையுடன் கொடுத்தும் பார்க்க ஆளில்லை தங்களைத்தவிர.. //

   தங்களின் வலைப்பக்கத்தில் எனது பார்வை என்பது மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறு பட்டதாகும். அது தங்களுக்கே நன்றாகத்தெரியும்.

   மேலும் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் கொடுத்தால், யாருக்கே இதுபோலத்தான் ஆகிவிடுகிறது.

   ஏனெனில் பொதுவாக பதிவுகளுக்கு வருகை தருவோர் மேலாக உள்ள ஒரேயொரு பதிவினை மட்டுமே தான் பார்க்க வாய்ப்பு உண்டு.

   நானும் இதனை என் அனுபவத்தில் நன்றாகவே உணர்ந்துள்ளேன்.

   குறைந்தது ஒரு 10-12 மணி நேர இடைவெளியிலாவது பதிவுகளை வெளியிட்டால் மட்டுமே நல்லது.

   பிரியமுள்ள VGK

   Delete
  3. மீண்டும் இப்போது அந்தக்காணொளியை இணைத்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம். நன்றி. ;)))))

   Delete
  4. காணொளியை நீக்க தெரியாதே..!

   காணொளிக்காட்சி அப்படியேதான் இருக்கிறது..நன்றாகத்தான் தெரிகிறது ..!

   இன்னமும் பயிற்சி வேண்டும் போல இருக்கிறது ..

   பிள்ளைகளிடம் சொன்னால் நொடியில் சரி செய்வார்கள்

   நான் தான் கற்றுக்கொள்ளவேண்டுமே என்று எதை எதையோ படித்துப்படித்து முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்..!

   Delete
  5. மேலே உள்ள என் பின்னூட்டத்தில் //மேலும் ஒரே நாளில்// என ஆரம்பிக்கும் பத்தியில் [Paragraph]

   'யாருக்கே’ என்றுள்ள வார்த்தையை ‘யாருக்குமே’ என தயவுசெய்து மாற்றி வாசிக்கவும்.

   Delete
  6. அந்த குட்டியூண்டு நொங்குத்தலையனை தூக்கிக்கொஞ்சணும் போல எனக்கு ஆசையாக உள்ளது. ;)

   Delete
 16. அவன் கைகால்களின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் தகுந்தபடி அந்தப்புறாக்களும் அசைவதும், சற்றே பறப்பதும், அவனைக்கண்டு அவை பயப்படுவதுபோலச்செய்வதும், அதை அழகாக எப்படித்தான் வீடியோ கவரேஜ் செய்தீர்களோ !! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 17. அவனை நெருங்கி நெருங்கி வரும் அந்தப்புறாக்கள் அவனைக் கொத்திவிடப்போகிறதே என என் மனம் பதைபதைக்கும் போது, அவன் தன் வலது கையை ஊன்றி காலை சரிசெய்து தவழ ஆரம்பிக்கும் கட்டம் எக்ஸலெண்ட் ஷாட். ;)))))

  பறவைகள் பறந்ததும் இவரும் கஷ்டப்பட்டு ஓரடி தவழ்ந்தும் காட்டி விட்டரே !!

  பலே பலே ...... சபாஷ் ! ;)))))))))))))))))))))))))))))))))))

  >>>>>

  ReplyDelete
 18. மதிப்பிற்குரிய சிரஞ்சீவி மாப்பிள்ளை அவர்களின் பெயர் Mr. Viswanathan ஆக இருக்கும், குழந்தையின் பெயர் ஆனந்த் ஆக இருக்கும் .............. என நான் எனக்குள் யூகித்துக்கொண்டேன்.

  காணொளியாவது காட்டி மகிழ்வித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள். சந்தோஷம். பிரியமுள்ள VGK

  oo oo oOo oo oo

  ReplyDelete
 19. அழகான படங்கள்! பறவைகளுடன் விளையாடும் குழந்தையும் மாறுவேட போட்டியில் கலக்கும் குழந்தையும் அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. தங்களின் பேரனுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி .
  சுட்டிப் பையன் மிகவும் அழகாக உள்ளான் .

  ReplyDelete
 21. ஆன்மீகப் பதிவுகள் இடுகையாய் இடுவதிலும் செல்லக் குழந்தைகள் பற்றி இடும் பதிவு நிறைவைத்தரும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. Wow Superb...

  How are you amma and all?

  ReplyDelete
 23. எவ்வளவு தத்ரூபமான காட்சி நேரில் பார்த்தது போல் அழகான பேரன் பறவைகள் அனைத்தும் கண்கொள்ளக் காட்சியாக இருந்தது நன்றி.
  வாழ்த்துக்கள் .....!

  ReplyDelete
 24. ஸ்ரீ தர்ஷனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. படங்களும், காணொளியும் மிக அருமை....

  ReplyDelete