Saturday, February 22, 2014

விஸ்வரூப தரிசனம்..




தென் திருமலை -கோயமுத்தூர்.. -சுட்டவும் ..!


New Hanuman Statue near Agara, Bangalore

ஸ்ரீராமதூத மகாதீர ருத்ர வீர்ய சமுத்பவ,
அஞசனா கர்ப சம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வ வாபாத்கன வாரகம்
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சனேயம் நமாம்யஹம்

ஸர்வ கல்யாண தாதாரம் =எல்லா மங்களங்களுக்கும் ஆதாரமானவனே!

ஸர்வ வாபாத்கன வாரகம் = எல்லா விதமான எதிரிகளிடம் இருந்தும் காப்பவனே!

அபார கருணா மூர்த்திம் =மிகுந்த கருணை உடைய தலைவனே!

ஆஞ்சனேயம் நமாம்யஹம் =ஆஞ்சநேயா, உன்னை வணங்குகிறேன்!


மங்களூர் கோகர்நாதேஸ்வரர் ஆலயம்..The Gokarnanatheshwara Temple -Mangalore


அனுமனது ரூபமே  குணத்தைச் சொல்லிவிடும்.

தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், 
கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.

கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். அனுமனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.

கைகூப்பி வணங்கியபடி  இருந்தால், அனுமன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். அனுமன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன்.

நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவர்

தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.

இப்படி அனுமன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு. 

இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் அனுமன் பல இடங்களில காட்சி தருகிறான்.  அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும்

விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை 
மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.

அனுமன் சாலீசா சொல்லும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகி 
எதிலும் வெல்லும் ஆற்றல் ஏற்படும். 

அனுமனின் பல உபாசனா மந்திரங்கள் அனுமனை கட்டி இழுத்து வீட்டுக்கே அழைத்து வந்துவிடும். சக்தி பெற்றவை ..!

அப்படி அனுமன் எதிர்வந்து, "அழைத்தீர்களா?' என்று கதையும் கையுமாக நின்று கேட்கும்போது மேனி சிலிர்த்துப் போகும்! அதெல்லாம்தான் அனுமன் மகிமை. 

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள்.

இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. ஆகும் ..!

 ‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் அபிஷேகம் என்னும் நீராட்டுதலைக் குறிக்கும். - 

நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். 

ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். 

காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். 
அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு - 

பகவானுக்கே இல்லாத விஸ்வரூபம் இராமயணத்தில் 
அனுமனுக்கு மட்டும் தான் உண்டு.

இராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், இராமனின் பெயரோ, 
சீதையின் பெயரோ கூட வைக்கவில்லை!
ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு பாகம் 
சுந்தர காண்டம் என்று பிரசித்தி பெற்றது ..!
இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! 
தொண்டர்தம் பெருமை சொல்ல்வும் அரிதே..!
அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! 
அந்த  பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது..!

அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரி மலை!
Biggest Hanuman statue on foot way of Tirumala.

 The Trimurti Temple on the southernmost outskirts of Bangalore, past all kinds of farmland and winding roads, has three large sections: one each for Ganesh, Hanuman, and Shiva. Here is a wonderful picture of Lord Hanuman, the Monkey God, against a lovely cloudy sky.

Hanuman's Robotic statue at display during Sai-Festival'09 in Vasai.This statue is 
lifted Up in the sky to portray Hanuman's Lift with the Dronagiri Mountain.

 அனுமன் சஞ்சீவி மலையை தாங்கி பறந்து இயங்கும்படியான 
தானியங்கி இயந்திர விக்ரஹம்  அற்புத காட்சி..!


Statue of Bhagavan Hanuman, near Nelamangala which is on the way to 
Tumkur District (Karnataka, India.)


85ft Karya Siddhi Hanuman statue in Sri Swamiji's Trinidad ashram,
the world's tallest Hanuman outside of India.



Asia's tallest idol of Hanuman at Phillaur, District Jalandhar, Punjab State, India. ..




Recently the temple has been renovated and a 50' height Hanuman statue erected.

Hanumantha Devaru near Rama temple installed by Sugreeva -Hampi

Kengal Anjeneya Swamy Temple, Channapattana dist, Karnataka.

17 comments:

  1. தரிசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. அனுமன் கண்டு வியந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. அற்புதமான படங்கள்... அனுமன் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அசாத்திய சாதகன் ஆன அனுமனை தரிசிக்க
    நாமக்கல் அல்லது நங்கநல்லூருக்கு சென்று தரிசிக்க
    கூட எனக்கு இதுவரை இயலவில்லை.

    பறந்து ஒரு பர்வதத்தையே கொண்டு வரும்
    அந்த அசாத்திய சாதகனை, பாரதமெங்கிலும்
    போற்றப்படும் அவனது திரு உருக்களைக் கண் முன்னே
    இன்று நான் காணப்பெற்றேன் என்றாலும்
    அந்த அருள் சாத்தியமானது
    தங்கள் பதிவினாலே .

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. சனிக்கிழமை அருமையான ஆஞ்சநேயர் தரிசனம்...நன்றி

    ReplyDelete
  7. //தென் திருமலை - கோயமுத்தூர் - சுட்டவும்.//

    சுட்டினேன். கண்டு களித்தேன். மிகவும் ரம்யமான சூழ்நிலை என் மனதுக்கு சுகமாக இருந்தது.

    உடனே பறந்து கோவைக்குச் சென்று தியானத்தில் அமர்ந்து விடலாமா என்ற ஆசைதான் ஏற்பட்டது. ;)

    கூடவே வழிகாட்டிய விளக்கம் சொல்ல தங்களைப்போல ஒருவர் வராமல் தனியாகச் சென்று, எதை நாம் புரிந்துகொள்ள முடியும் என நினைத்து, ஏக்கப்பெருமூச்சுடன், இங்கேயே கற்பனையிலான தியானத்தில் அமர்ந்து விட்டேன்.

    அதனால் இந்தத் தங்களின் இன்றைய பதிவுக்கு என் வருகையிலும் சற்றே தாமதமாகிவிட்டது.

    >>>>>

    ReplyDelete
  8. இன்றைய படங்கள் எல்லாமே பளீச் ..... பளீச் தான்.

    புத்தம் புதிதாக பெயிண்ட் அடித்தது போல சும்மா ஜொலிக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  9. எத்தனை எத்தனை ஆஞ்சநேயர்கள் !!!!

    அத்தனையும் புதுமை, இனிமை, கண்களுக்குக் குளிர்ச்சி.

    சனிக்கிழமைக்கு ஏற்ற ’சுந்தரனைப் பற்றிய’ அழகான சுந்தரமான இனிய பதிவு.

    எத்தனை முறை பார்த்தாலும் ருசியோ ருசி தான்.

    தானியங்கி இயந்திரம் போன்ற ஒருசில படங்கள் இன்று புதிதாகச் சேர்த்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  10. கீழிருந்து ஆறாவது படமான ஆர்டினரி அனுமன், உடல் பூராவும் சந்தனம் குங்குமம் இடப்பட்டு இயல்பாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    எங்கள் ஊர் மாம்பழச்சாலை + நந்தி கோயில் தெரு ஆஞ்சநேயர்களை நினைவு படுத்தினார்.

    தன் வாலைத்தலைக்கு மேல் தூக்கி அபயஹஸ்தம் காட்டுவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. விஸ்வரூபம் என்றால் என்ன ? அதன் சிறப்புகள் என்ன ? என்று தங்களின் தங்கமான தனிப்பாணியில் புட்டுப்புட்டு வைத்துள்ளது வழக்கம் போல மிகவும் அருமை.

    >>>>>

    ReplyDelete
  12. ஆரம்பத்தில் முதன்முதலாக ஒரே வரிசையில் காட்டியுள்ள இரு படங்களும் மட்டும் இதுவரை திறக்காமல் உள்ளன.

    நான் அவரைப்பார்க்க நினைத்தேன். அது சாதா தரிஸனம். அதனால் காட்சியளிக்கவில்லை, போலும்.

    அவராகவே என்னை பிறகு பார்க்க வருவார். அது தான் விஸ்வரூப தரிஸனமாக அமையும். ;)))))

    >>>>>

    ReplyDelete
  13. என் உயிர் நண்பர் ஒருவரின் இடது கால் நடுவிரலை, சனிபகவானாக வருகை தந்து, பெருச்சாளியொன்று கடித்து இன்றுடன் மிகச் சரியாக ஓராண்டு ஆகிறது.

    அதுவும் ஓர் சனிக்கிழமை தான் [23.02.2013] நடைபெற்றது.

    இன்றும் சனிக்கிழமையாகவே உள்ளது.

    நல்லவேளையாக அவரும் இன்றுவரை செளகர்யமாக உள்ளதில் என் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    ஹனுமனை வேண்டினால் சனியும் ராகுவும் மற்ற நவக்கிரஹங்களும் நம்மை ஒருபோதும் படுத்தாது தானே !

    தங்களுக்குத் தெரியாததா .... நான் புதிதாகச் சொல்லிவிடப்போகிறேன் !

    >>>>>

    ReplyDelete
  14. அனைத்துக்கும் என் பாராட்டுக்கள்.

    மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    பிரும்மாண்ட விஸ்வரூபப் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள். வாழ்க !

    oo oo oo oo

    ReplyDelete
  15. ஒரே இடத்தில் இருந்துகொண்டு பல இடங்கள் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம். நன்றி.

    ReplyDelete
  16. அழகிய படங்களுடன் - ஆஞ்சநேயரின் விஸ்வரூப தரிசனம் .
    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  17. செய்திகள் மற்றும் படங்கள் மனதிற்கு நிறைவு. நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete