Sunday, February 2, 2014

அதிசயப் பூனைகளும் ஆடம்பர ஹோட்டல்களும் .!







வெள்ளை நிறத்தில் ஒரு பூனை எங்கள் வீட்டில் வளர்ந்தது கண்டீர்,
பிள்ளைகள் பெற்றது அப்பூனை அவை பேருக்கு ஒரு நிறமாகும்,
சாம்பல் நிறமொரு குட்டி, கருஞ்சாந்து நிறமொரு குட்டி,
பாம்பின் நிறமொரு குட்டி, வெள்ளை பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும், அது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

என்கிற பாரதியின் பாடலில் மனம் மயங்காதவர் உண்டா ...!


பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பூனைகளுக்கான ஆடம்பர ஹோட்டல் 
 துன்பத்தில் வாடுகின்ற பூனைகளுக்கு  தீர்வாக அமைந்துள்ளது..!.
பூனைகளுக்கு மருத்துவ சிகிச்சை,
மசாஜ் சிகிச்சையும்  வழங்கப்படுகின்றன.  
பூனைகளுக்கு இரு முறை உணவு வழங்கப்படுகின்றது.
பூனைகள் உறங்குவதற்கு சொகுசான சோபா வழங்கப்படுகிறது. 
 
தொலைக்காட்சியும், பல வண்ண மீன்கள் கொண்ட  மீன் தொட்டிகளும், எலிகளும், பறவை காட்சிகளும்,  நான்குபக்கமும் கண்ணாடிகள் கொண்ட படுக்கயறைகளும் கொண்டு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்..!
பூனைகளை வளர்ப்பவர்கள் பல நாட்கள் விடுமுறையில் செல்லும்போது இந்த ஹோட்டலில் பூனையை விட்டுச் செல்ல விரும்புகிறார்களாம். 

இந்த ஹோட்டலில் பூனைகள் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 
(சுமார் 3000 ரூபாய் கட்டணமாம...! 

நோய் பிணியால் துன்புறும் மிருகங்களுக்கு வைத்தியம் செய்ய 
அசோக மன்னனால் உலகத்தில் முதலாவது மிருக வைத்தியசாலை கட்டப்பட்டதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது.

சீன நாட்டில்  புத்தகப் பிரியரின் வளர்ப்புப் பூனை ஒன்று புத்தகங்களை வாசிப்பதில் ஆச்சரியப்படும் வகையில் நிரம்ப ஆர்வம் காட்டி வருகின்றதாம்..!

வீட்டில் அவர் புத்தகங்களை வாசிக்கின்றபோது எல்லாம் பூனையும் அருகில் நின்று புத்தகங்களை ஆவலுடன் பார்வையிடும் .. 

பூனையின் ஆர்வத்தை புரிந்து கொண்டு படங்களுடன் கூடிய புத்தகங்களை பூனைக்கு வாங்கிக் கொடுத்ததால் .பூனையும் புத்தகங்களுடனேயே பொழுது போக்குகிறதாம்..!


பூனை நாய் ,மாடு போன்ற வளர்ப்பு பிராணிகள் ஆவிகளையும் , வாழ்நாளையும் முன்கூட்டியே கண்டறியும் திறன் பெற்றதாக நம்பிக்கை நிலவுகிறது..! 
 
லண்டன் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் வளர்க்கப்படுகின்ற பூனை ஒன்று அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளின்இறுதியை சரியாக தீர்க்கதரிசனமாக உணர்த்துகிறதாம்..!

இது வரை ஐம்பதுக்கும் அதிகமான நோயாளிகளை சரியாக 
கணித்து  கூறி உள்ளதாம்..!

ஒஸ்கார்.என்னும் பெயர் கொண்ட  இந்த பூனை ஒரு குறிப்பிட்ட நோயாளி மேலுலகு போகின்றார் என்று உணர்ந்தவுடன்  இப்பூனை அந்நோயாளிக்கு அருகில் சென்று அமர்ந்து விடும், 24 மணித்துளிகளுக்குள்  நோயாளியும் டிக்கெட் வாங்கி விடுவாராம்,,,

எந்த நோயாளிக்கு அருகில் இப்பூனை போய் அமர்கிறதோ  அந்த நோயாளியின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு நோயாளிக்கு பிரியா விடை சொல்ல அனுமதிக்கப்படுவார்களாம் ..!. 

சில வேளைகளில் பாதிரியார்களை அழைத்து  விசேஷ  பிரார்த்தனைகள் நடத்துவார்கள்.உணர் திறனை வைத்தே இப்பூனை இறுதிக்காலத்தை எதிர்பார்த்து கூறும் சக்தியை பெற்று உள்ளது.

ஐந்து வருடங்களாக மருத்துவமனையில் வசிக்கும்  இந்த அதிசயபூனையைப்பற்றி அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரான டேவிட் ரோஸா என்பவர் பூனையின் அபார திறமையை புகழ்ந்து புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் ..!

அலுவலக பணிகளில் எத்தனை உதவி செய்கிறார் பாருங்கள்...!


இந்தப்பூனை படங்களை பதிவேற்றிக்கொண்டிருந்தபோது 
நள்ளிரவு மணி சரியாக 12.. 

மியாவ் என்று பக்கத்தில் குரல் கேட்டது .. 
கணிணியிலிருந்துதான் பூனைப்படங்களிலிருந்து சத்தம் 
வருகிறது போல என்று எண்ணியிருந்தேன்..
பக்கத்திலிருந்த ஜன்னலில் வெள்ளை வெளேரென்று மிகப்பெரிய 
பூனை ஒன்று அமர்ந்து கணிணியை பார்த்துக்கொண்டிருந்ததைப் 
பார்த்து திடுக்கிட்டேன் ..
ரொம்பத்தான் தொல்லையாக இருக்கிறது..!

பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்!
உயிர் அல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள தெல்லாம் என்னாகுமோ?

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது

மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாற்போலத் தானே ....

விநாயகர் படம் தேடி பதிவிட்டால் அவர் வாகனமான 
எலி வந்து காலைக் கடிக்கிறது..
தேள் கொடுக்கு எடுத்தால் தேள்குட்டிகள் மொய்க்கின்றன.. 
பைரவர் பற்றி பதிவிட்டால் நாய் வந்து குரைக்கிறது..
கிளி பற்றி பதிவிட்ட அன்று இரண்டு கிளிகள் 
அதிகாலையில் வேப்பங்கொட்டைகள் போட்டுச்சென்றன .. 

அவற்றை வீட்டின் முன்  விதைத்து தினமும் வாசல் தெளிக்கும் 
போது தண்ணீர் ஊற்றி , வேலி போட்டு பேணி வளர்த்து வந்தேன் ..

யுகாதி அன்று வேப்பம்பூக்கள் தேடி நகர் வலம் வந்தோம் .. அப்போது மழை இல்லாததால் நிறைய மரங்கள்  செழிப்பின்றி பூக்கள் கிடைக்கவில்லை ..

வீட்டுக்கு வந்து நம் மரம் மட்டும் தான் செழிப்பாக பசுமையாக இலைகளுடன் இருக்கிறது தினமும் தண்ணீர் ஊற்றியதால் என்று பாசத்துடன் பார்க்க எங்களுக்குத்தேவையான நான்கு கொத்து வேப்பம்பூக்கள் புஷ்பித்து எங்கள் தேவையை பூர்த்திசெய்து ஆச்சரியப்படவைத்தது - விதைத்து சில ஆண்டுகளே ஆகிய அந்த சின்னஞ்சிறு மரம் ..

வேறு யாராவது இதை சொல்லி இருந்தால் எங்காவது கிளி வந்து நீங்கள் பார்க்குமாறு விதை கொடுக்குமா - பகுத்தறிவுக்குப்பொருந்தவில்லையே என கேலி செய்யலாம்..

 தினமும் கிளிகளுக்கு தானியங்களும் தண்ணீரும் 
மாடியில் வைப்பேன் ..பறவைகள் நிறைய வரும் 

நமக்கே நமக்கு  என்று கண்முன்  கதைகளில்  வந்தால் கூட நம்பமுடியாத நிகழ்ச்சிகள் கண்கூடாக நடக்கும்போது  வியப்படையாமல் இருக்கமுடியவில்லைதான் ..!



23 comments:

  1. அழகான பூனை படங்களை ரசித்துக் கொண்டே இருக்கலாம்... முடிவில் நடந்தவற்றை சொன்னவை, மேலும் மேலும் வியப்பளித்தது அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.

    பூனை பற்றிய தகவல் மிக அதிசயமாக உள்ளது... தங்களின் பதிவின் வழி அறியக்கிடைத்துள்ளது படங்கள் எல்லாம் கண்னைக் கவரும் வகையில் உள்ளது..வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம் தோழி !
    நன்றாகவே இருக்கிறது அழகான பூனையின் படங்களும் விபரங்களும்.
    விதை பற்றிய விபரமும் ஆச்சரியமாகவே இருந்தது.
    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  4. நல்ல பதிவு.. பூனையைப் போலவே நம்முடன் வாழும் மற்ற உயிரினங்களும் - நம்மைப் பற்றிய தகவல்களை அறிந்திருக்கின்றன.
    அவற்றுக்கு நிறைய நிறைய உதாரணங்கள் ..

    அழகான படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.

    ReplyDelete
  5. கொடுத்துவைத்த பூனைகள்.மனிதர்களே பொறாமைப் படும் வாழ்க்கை...! அலுவல்களில் உதவுவது நாயல்லவா. ?பூனைகள் பற்றி பலவகையான நம்பிக்கைகள் உலா வருகின்றன. அந்த மருத்துவ மனையில் பூனை அருகில் வந்தால் நோயாளி மனம் என்ன பாடுபடும்.

    ReplyDelete
  6. பூனைகளின் அணிவகுப்பை நானும் ரோஷ்ணியும் கண்டுகளித்தோம்..

    ReplyDelete
  7. பூனைகளின் படங்கள் பூனைகளைப் பற்றிய செய்திகள் எல்லாம் மிக அருமை.

    அலுவலகத்தில் உதவி செய்யும் நாயும், கயிறு தாண்டும்(குதிக்கும்) நாய்களும் அழகு. பாடல்கள் அருமை.

    வேப்ப மரம் பூக்களை கொடுத்தது அன்பால். அன்பை கொடுத்தால் கிடைக்காதது எதுவும் உண்டா?

    ReplyDelete
  8. புனைகளின் படங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து. நாளை என்னுடைய மகள்களுக்கு, இந்த புகைப்படங்களை காட்டப்போகிறேன். அவர்கள் மிகவும் ரசித்துப்பார்ப்பார்கள்.

    கடைசிப் படத்தில் இருக்கும் வரிகள் சிந்திக்க வைக்கூடிய வரிகள்

    ReplyDelete
  9. பூனைகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை, அழகிய படங்களுடன் தந்தமைக்கு நன்றி! உங்கள் பதிவைப் படித்துக் கொண்டு இருந்தபோது எங்களோடு வாழ்ந்து மறைந்த ஜாக்கி என்ற செல்ல நாயின் நினைவு வந்தது.

    ReplyDelete
  10. பூனைகளுக்கு ஒரு ஹோட்டலா? ஆச்சர்யமான செய்தி. உங்கள் பாடல்களோ அற்புதம்.
    நீங்கள் சொல்வது போல் ,"Truth is stranger than fiction" உண்மை தான் என்று சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  11. புதிய தகவல்கள். பிரமிப்பூட்டும் படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    இயற்கையோடு இணைந்த வாழ்வின் இரகசியம் வியப்பூட்டுகிறது. பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete

  12. பூனையோ யானையோ, நாயோ நரியோ, கிளியோ எலியோ, இஞ்சியோ மஞ்சளோ, ரோஜாப்பூவோ தாமரைப்பூவோ, எதைப்பற்றி தாங்கள் எழுதினாலும் அதற்கேற்ற பல்வேறு அனிமேஷன் படங்கள் கொடுத்து அசத்தி விடுகிறீர்களே ..... அது எப்படி எப்படி எப்படி எப்படி !!!!!! என்று வியப்பளிப்பதாக உள்ளது. ;)

    முதலில் படங்களைத் தேர்வு செய்து கொண்டுவிடுவீர்கள் ..... பிறகு அதற்கேற்ற செய்திகள் சேகரிப்பீர்கள் ...... உடனே சினிமா பாடல்களோ, பாரதியார் பாடல்களோ, புராணக்கதைகளோ, விளக்கங்களோ .... அவைகள் தானே தங்கள் மனதில் பளிச்சென கொடிமின்னல்போல உதித்துவிடும்.

    தங்களின் இந்தக்கடும் உழைப்பு எங்களின் கண்களுக்கு தினமும் விருந்தாக அமைந்து விடும். ;)))))

    >>>>>

    ReplyDelete
  13. பாரதியாரின் பாடலுடன் ஆரம்பித்துள்ள இந்தப்பதிவு மிகவும் அமர்க்களமாக உள்ளது. படங்களில் ஒவ்வொன்றும் செய்யும் அமர்க்களங்களை வெகு நேரம் ரஸித்துப்பார்த்து மகிழ்ந்து போனேன்.

    காதை ஆட்டும் அந்த வரிப்புலியின் முன்பு அனல் காற்று போல வீசுகிறதே ! புலி உறுமுகிறதோ ! அல்லது தங்களின் இந்தப்பதிவினைப்பார்த்து என்னைப்போலவே பெருமூச்சு விடுகிறதோ !!

    ஒற்றுமையாக ஸ்கிப்பிங் ஆடும் நாய்க்குட்டிகள் ஜோர் ஜோர். அந்த கயிற்றினைப்பிடித்து ஆட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்கள் கைகளை ஆட்டி ஆட்டி, சுழட்டிச்சுழட்டி கை அசந்து போகாதோ !!!!!''

    கீழிருந்து ஆறாவதாகக் காட்டியுள்ள பாப்பாப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
  14. பகுத்தறிவாளர்கள் நம்பாவிட்டால் போகட்டும். நான் நம்புகிறேன் தாங்கள் எது சொன்னாலும் நம்புகிறேன்.

    கசப்பான வேப்பங்கொட்டைகளை அந்தக்கிளி கொடுக்க, இந்தக்கிளி விதைக்க, தங்கக்கைகளால் தண்ணீர் ஊற்ற, மரம் செழிப்பாக வளர்ந்துள்ளதில் ஆச்சர்யமே இல்லை. இந்தச் செய்திகள் வேப்பம்பழம் போல இனிப்பாகவே உள்ளன.

    நானும் உடனே ஒரு கிளியாக மாறி, பறந்து தங்கள் இல்லத்தின் மாடிக்கு வந்து, தங்களையும் தரிஸித்துவிட்டு, தாங்கள் தங்கள் தங்கக்கைகளால் வைக்கும் தானியங்களைக் கொத்தித்தின்றுவிட்டு, தாகத்திற்கு தண்ணீரையும் அருந்தி வரமாட்டோமா என என்னை ஏங்க வைக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  15. அச்சச்சோ எலி வந்து காலைக் கடிக்கிறதா? ;((((( ஜாக்கிரதையாக இருங்கோ, ப்ளீஸ்

    என் நெருங்கிய நட்பு ஒருவருக்கும் இதே போல பெருச்சாளி ஒன்று 23.02.2013 சனிக்கிழமையன்று அவரின் இடது கால் நடுவிரலைக்கடித்து விட்டது. அவர் அப்போது கணினியில் சுவாரஸ்யமாக தங்களைப்போல ஏதோ பதிவு ஒன்றை தயாரித்துக்கொண்டிருந்தார் .... பாவம். கேள்விப்பட்டதும் நான் துடித்துப்போனேன்.

    அது நடந்து சரியாக ஒரு வருஷம் ஆக இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பெருச்சாளி ரூபத்தில் வந்துள்ள சனீஸ்வரன், சனிக்கிழமையன்று அவரை சரணாகதி அடைவது போல அவரின் காலைக் கடித்துவிட்டு, உடனே ஓடாமல் ஆடாமல் அவரைப்பார்த்து முறைத்தவாறு நின்று கொண்டே இருந்ததாம். என்ன ‘தில்’ பாருங்கோ.

    கடித்த அந்த எலி அதை மறந்தாலும், கடிபட்ட அவரே அதனை மறந்திருந்தாலும், எனக்கு மட்டும் இன்னும் தேதி, நேரம், காலம், சூழ்நிலை எல்லாமே பசுமையாக நன்றாக நினைவிருக்கிறது, பாருங்கோ. அதுதான் என் நினைவாற்றல் ;)

    நெருங்கிய நண்பர் என்பதால் இதையெல்லாம் என்னால் மறக்க முடியுமா என்ன ? ;)

    >>>>>

    ReplyDelete
  16. நள்ளிரவு 12 மணிக்குப் பூனைகளைப்பற்றி பதிவிடும் போது, வெள்ளை வெளேர் என்ற நிஜமான பூனையொன்று ‘மியாவ்’ சப்தத்துடன் தங்களையும் தங்களின் கணினியையும் பார்த்துக்கொண்டு ஜன்னலில் அமர்ந்திருந்ததைப் பார்த்து திடுக்கிட்டுப்போனீர்களா !!!!! ஆச்சர்யமாக உள்ளது !!!!!

    திகில் ஸ்டோரியாக உள்ளது. பூனைக்கும் பெரிச்சாளிக்கும் கூட தங்களை சந்திக்கும் பாக்யம் கிடைக்கின்றன. ஆனால் ....... ;(((((

    >>>>>

    ReplyDelete
  17. கடைசி படத்தில் அவ்வளவு பெரிய உயரமான மணிக்கூண்டையே அந்த ஆட்டு ஆட்டும் பூனை ....... அடடா கீழே தள்ளிவிட்டுடும் போலல்லவா உள்ளது..... அதின் உச்சியில் தொங்கிடும் பூனையார் நெசுங்கிப்போய் விடுவாரே என நேக்கு பயமாக்கீதூஊஊஊஊ.

    >>>>>

    ReplyDelete
  18. லண்டன் மருத்துவமனை ஒஸ்கார் பூனை பற்றி நானும் எதிலோ படித்து வியந்து போனேன். தங்களின் பதிவினில் இன்று அதைப்பற்றிய மேலும் பல விளக்கங்கள் கண்டு மகிழ்ந்தேன்.

    தங்களைப்போன்றவர்களையும், என் பேத்தி பவித்ரா போன்றவர்களையும் புத்தக்கபுழு என்பார்கள்.

    சீனாவின் புத்தகம் படிக்கும் பூனைகள் பற்றிய செய்திகள் மிகவும் வியப்பாக உள்ளன.

    பிராணிகள் மேல் கருணை கொண்டு மிருக வைத்தியசாலைகள் அமைத்த மன்னர் அசோகர் பாராட்டுக்குரியவர் தான்.

    >>>>>

    ReplyDelete
  19. பிரிட்டனின் ஆடம்பர ஹோட்டல் செய்திகள் யாவும் அசத்தலாக உள்ளன.

    கைக்குழந்தைகளுக்குக் ‘க்ரீச்’ போல பூனைகளைப் பராமரிக்க ஓர் ஸ்டார் ஹோட்டலா !

    ஒரு பூனைக்கு ஒரு நாளைக்கு பராமரிப்புச் செலவுகள் ரூ 3000 மட்டுமே. மலிவோ மலிவு தான்.

    மருத்துவ சிகிச்சை, மஸாஜ், உணவுகள், பொழுதுபோக்குகள், படுக்க ஸோஃபா கம் பெட், அதில் இங்குமங்கும் தாவிக்குதித்து ஜம்பிங் செய்யும் ஒரு பூனை, இசைக்கருவிகளை வாசிக்கும் பூனைகள் என எல்லாமே ஜோர் ஜோர் ! ;)

    >>>>>

    ReplyDelete
  20. மிகவும்

    அற்புதமான
    அசத்தலான
    அழகான

    வித்யாசமான,
    விசித்திரமான,
    வியப்பளிக்கும்

    பூனைப் பதிவு.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும்
    பகிர்வுக்கும்
    படத் தேர்வுகளுக்கும்

    நன்றியோ நன்றிகள்.

    பிரியமுள்ள VGK

    ooo ooo ooo

    ReplyDelete
  21. பூனை பற்றிய படங்களும் செய்திகளும் வியப்பளிக்கின்றன..!

    ReplyDelete
  22. ' மியாவ்' அருமையான படங்களும் தகவல்களும் கண்டு களித்தோம்.

    ReplyDelete
  23. சொகுசு ஹொட்டேல் சூப்பர்! கொடுத்து வச்ச பூனைகள்.

    நம்ம நியூஸியில் இவ்ளோ வசதிகள் இல்லை:(

    பெரும்பாலும் பூனைகள் தனியாக இருக்கவே விரும்பும். சின்னதா ஒரு அறை. அதில் சுவரில் தட்டுப்பலகை ரெண்டு மூணு அடுக்குகளாக. வெளியே வேடிக்கை பார்க்க ஒரு பெரிய கண்ணாடி ஜன்னல். இன்னொரு அறையில் மேடை ஒன்னு. அதுதான் படுக்கை அறையாக்கும் கேட்டோ!

    இந்த சிறைக்கு தினம் 900 ரூ கட்டண்ம்.

    ReplyDelete