Thursday, February 6, 2014

ரத ஸப்தமி! -அர்த்த பிரம்மோற்சவம்’




ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்!

எனும் துதியை ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!

தை மாதம் வளர்பிறை ஸப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை ரத ஸப்தமி! மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் விசேஷமாகத்திகழ்கிறது..!

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி,  செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். 

ரத ஸப்தமி நாளன்று பகலவனின் தேர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம்.
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. 

திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. 

ரத ஸப்தமி தின  விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். 

“அர்த’ என்றால், “பாதி!’. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ எனப்படுகிறது..! 

அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 

திருப்பதி  புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும்.

ஏழு பிரகாரங்களைக் கொண்ட ஸ்ரீரங்கம் கோவிலிலும் 
ரதசப்தமி உற்சவம் உண்டு. 

ரதசப்தமி விரத நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். மவுன விரதம் இருப்பது சிறப்பு. 

ரதசப்தமி நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். 

ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரிய சூரியன்.  நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர்.  நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.

சூரியன்  ஆத்மகாரனாகவும் இருக்கிறார். 
சூரிய வழிபாடு   உடல் ஆரோக்கியமும், நல்ல குணங்கள், 
மன ஆரோக்கியமும் தரும்..! 
ரதசப்தமி நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் 
குளிப்பதால் செல்வ வளம் பெறலாம்..
தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு,  நல்ல நாள்.
ரதசப்தமி விரதம் எளிமையானது, ஏழு எருக்கம் இலைகளை (அர்க்கபத்ரம்) கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் இருத்தும் இலையின் மேல், பெண்கள், மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள், அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்.
சூரியபகவானுக்கு, சர்க்கரை பொங்கலும், உழுந்து வடையும், உடன் தேங்காய், பழம், தாம்பூலம் நிவேதனம் செய்வது விஷேசம்..!



ரத ஸப்தமி கோலம்

16 comments:

  1. அற்புதமான படங்கள்...

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நேரம் கிடைப்பின் : http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_6.html - இங்கும் ஒரு பகிர்வு அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. முற்றிலுமான ஒரு புதிய தகவலுக்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  4. அருமையான படங்கள். படங்களை எங்கிருந்து தேர்வு செய்கிறீர்கள்? நல்ல ரசனை. பதிவின் விபரங்கள் அறிந்தவையே என்றாலும் மீண்டும் படித்து நினைவூட்டிக் கொண்டேன். இன்று ஆசனப் பயிற்சி செய்கையிலும் சூரியனை நினைத்துக் கொண்டேன். உங்கள் பதிவுக்கு அவ்வப்போது வந்தாலும் நேரப் பற்றாக்குறையினால் தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்துப் படிக்க முடிவதில்லை! :)))

    ReplyDelete
  5. சுட்டி கொடுத்த டிடிக்கு நன்றி. அநேகமா இப்படிச் சுட்டி கொடுத்திருந்தா உடனே வந்துடுவேன். :))))

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வும் படங்களும் நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  7. இன்றைய ரத ஸப்தமிக்கு ஏற்ற மிக அருமையான பதிவு. ;)))))))

    >>>>>

    ReplyDelete
  8. படத்தில் காட்டியுள்ள சர்க்கரைப் பொங்கல் போல மிகவும் இனிமையான தித்திப்பான தகவல்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. ரத ஸப்தமி தேர்க்கோலங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. தொடர்புடைய பதிவுகளுக்கான இணைப்பு கொடுத்துள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. அர்த பிரும்மோத்ஸவம் பொருள் விளக்கம் அர்த்தமுள்ளதாக உள்ளது.

    எருக்க இலை ஸ்நானம் பற்றிய விபரங்கள் எல்லாமே ஜோர்.

    படங்கள் அத்தனையும் வழக்கம்போல படு ஜோர்.

    >>>>>

    ReplyDelete
  12. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    நல்லதை நயம்படச் சொல்லும் தங்களின் இந்தப் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooo ooo

    ReplyDelete
  13. ரதசப்தமி விவரங்களுக்கு நன்றி. கடைசி இரண்டு படங்களும் ரொம்பவே அழகு.

    ReplyDelete
  14. ரத சப்தமி தகவல்கள் சிறப்பு! படங்கள் வெகு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. இங்கும் ஒரு பகிர்வு : http://annaiparasakthigoshala.blogspot.in/2014/02/blog-post.html

    நன்றி அம்மா...

    ReplyDelete