Saturday, February 15, 2014

சகல நலம் தரும் சர்வேஸ்வரன் -ஸ்ரீ இராம நாம மகிமை’*

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்பதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் 
ராஷஸான் அஷதீன் விநிஹத்ய வீஷய தசகம் தக்த்வா புரீம் தாம் 
புள தீரணாபதி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே  

- தினமும் காலையிலும், மாலையிலும் கூறி வந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்..


ஜயத்யதிபலோ ராமோ லஷ்மணஸ்ச மஹாபல
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட 
கர்மன ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர 
மாருதாத்மஸ ராவண ஸஹஸ்ரம்மே  யுத்தே ப்ரதி 
பலம் பவேத்ஸலாபிஸ்து ப்ரஹரத பாத வைச்ச ஸஹஸ்ரஸ.

- சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள் ஸ்ரீ ஜெய பஞ்சகம்  சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும். .
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய கோலாகல சகல 
பிரம்மாண்ட பாலகாய சப்த சமுத்ர நிராலங்கிதாய, 
பிங்கள நயனாய அமித விக்ரமாய சூர்யபிம்ப பலசேவகாய, 
துஷ்ட நிராலம்பக்ருதாய சஞ்சீவினி சமாநயன சமார்த்தாய 
அங்கதலட்சுமண கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்க
ஸ்ரீ ஜெய பஞ்சமுக ஹனுமதே நம:

- இந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக   தோஷங்கள் , கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள்  நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.


ஸ்ரீ இராம நாம மகிமை’

ஸ்ரீ ராமச்சந்த்ர ஸரிதபாரிஜாத: சமஸ்த கல்யாண குணாபிராம: |
சீதா முகாம்போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்களம் ஆதநோது ||

விஸ்வாமித்திரர்  மிகச் சிறந்த ரிஷி ..

உலகம் போற்றும் உத்தம இராமர், எல்லாருடைய உயிராய் உள்ள
இராமர் அவருடைய சீடன்..ஆனால் விஸ்வாமித்திரர் இராமர் சர்வேஸ்வரன் என்பதையோ,இராம நாமத்தின் மகிமையையோ துளிகூட உணரவில்லை.
ஆஞ்சனேயரின் உயிரான இராமனது நாம மஹிமையை வெளியிட நாரதர் சொன்ன் உபாயத்தின் படி  அடுத்தநாள்   இராம இராஜ சபை.யில் -- . ஆஞ்சனேயர், வசிஷ்டர், பரதன், சத்ருக்னன், இராம, லக்ஷ்மணர், சீதை யாவருக்கும் வணக்கம் தெரிவிக்கிறார்.
விஸ்வாமித்திரரை வணங்காமல் சென்று விடுகிறார்.

விஸ்வாமித்திரர் ஆஞ்சனேயர் தன்னை வணங்காததை
அவ்வளவாக கவனித்ததாகவும் தெரியவில்லை. 

 நாராயணா! நாராயணா!  நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் சதா  வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வம் அவ்யயம்.

.என்று நாராயண கீதத்தைப் பாடி விஸ்வாமித்திரரின் கவனத்தை ஈர்த்து
அவரது  சீடன் இராமனது பணியாள் அவையில் அவமதித்ததை
ஆஞ்சனேயன் எல்லாருக்கும் வணக்கம் தெரிவித்ததோடு
விஸ்வாமித்திரரை வணங்காது சென்ற நிகழவை சுட்டிக்காட்டுகிறார்..!
அனுமனை தன் சீடன் இராமனைக் கொண்டே அழிப்பேன்.
அழித்தே தீருவேன்! இது உறுதி. என உறுதி பூணுகிறார்..!
பாவம் ஆஞ்சனேயர்! 
விஸ்வாமித்திரரின் கோபமோ தாபமோ 
ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை. 
அனுமன் அணிந்துள்ள இராம நாம கவசம் அவனைக் காப்பாற்றும்.  

விஸ்வாமித்திரர் இராமனிடம் சென்று .அந்தக் குரங்கை நாளை சூரியாஸ்தமனத்திற்கு முன் கொல்ல வேண்டும்! ..நிறைவேற்று என் கட்டளையை! சத்தியம் செய்து கொடு!என்கிறார் ..
இராமர்: வேறு வழியில்லை. என்று சத்தியம் செய்துவிட்டு, 
ஆஞ்சனேயர் செய்த தவறுதான் என்ன என்று கேட்டார்..!
இராஜசபையில்  அனுமன் தன்னை மட்டும் வணங்காமல் மற்றவரை வணங்கி தன்னை அவமதித்து விட்டான்! நான் உனக்குக் கூட குரு! பெரியவன் என்பதை அனுமன் அறியாதவனா? நாளை சூரிய அஸ்தமனத்திற்கு முன்  அந்தக் குரங்கைக் தண்டித்தாக வேண்டும். .. என்றார் விஸ்வாமித்திரர்:

ஆஞ்சனேயர் சரயூ நதிக்கரையில் வடக்கு முகமாக அமர்ந்து இராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தபோது விஸ்வாமித்திரர் பாணத்தால் அனுமன் தலையை அறுக்கச்சொன்னார்..!
இராமர் தன் மகா பக்தன். தன் உயிர். ஆனாலும் குருவின் ஆணையை ஏற்று -ஹனுமனை நோக்கி - மஹாபாக! உன் சேவை, பக்தி, அன்பு, பராக்ரமம் ஆகியவை சத்தியம் என்றால் அது உன்னைக் காக்கட்டும்.
என்றபடி - ஒன்றன்மேல் ஒன்றாக அஸ்திரத்தை ஆஞ்சனேயர் மேல் பிரயோகித்தும் அவை யாவும் அனுமனை ஒன்றும் செய்யாமல் கீழே விழுந்தன..!

விஸ்வாமித்திரர் எந்த அஸ்திரமும் அனுமனைக் கொல்லாமல் சக்தியற்றுக் கீழே விழுகிறது. எடு உன் பிரம்மாஸ்திரத்தை! அதற்கு என்றுமே தோல்வியில்லை! என்றார்..!
இராமர் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தும்  என்ன ஆச்சரியம்! பிரம்மாஸ்திரம் மூன்று முறை ஆஞ்சனேயரை வலம் வந்து அனுமன் காலடியில் விழுந்தது ..!

நாரதர் : பலமாகச் சிரித்து   ரிஷியின் காரியம் பலிக்கவில்லையா? இப்போதாவது தாங்கள் இராம நாமத்தின் மகிமையை உணர்ந்தீரா? இராமன் உங்கள் சீடன் மட்டுமல்ல, சர்வேஸ்வரன்! அவனை விட உயர்ந்தது அவன் இராம நாமம்! எனவேதான் அதை அனவரதமும் ஜபிக்கும் ஆஞ்சனேயரை ப்ரம்மாஸ்திரம் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை! என்று உணர்த்தினார் ..!

விஸ்வாமித்திரர் தன் தவற்றை, ஆணவத்தை உணர்ந்தார் ..!
இராமா!என்னை மன்னித்துவிடு! நீயே சர்வேஸ்வரன்! 
உன் இராம நாமம் வாழி! என வாழ்த்தினார் ..!:
நாரத முனிவரே! இராம நாமத்தின் மகிமையை இன்று நான் உணர்ந்தேன்! ஆஞ்சனேயனே எழுந்திரு! உன் இராம பக்தியை உணராது நான் செய்த அபராதத்தை மன்னிப்பாயாக! இராமா! நான் மிகவும் தன்யனானேன்! நன்றியுடையவனே! ஆஞ்சனேயனே! இவ்வுலகில் சூரிய சந்திரர் உள்ளவரை உன் புகழும் நிலைக்கட்டும்! வெற்றி உண்டாகட்டும் உன் இராம நாமத்திற்கு! என்றார் ..!
ஆஞ்சனேயர் ,விஸ்வாமித்திரரே! தாங்கள் என்மீது கொண்ட கோபம் என் நலனுக்காகவே ஏற்பட்டது! தங்கள் ஆசியை யாசிக்கிறேன்! என்று வணங்கினார்..!

இராமர் ,ஆஞ்சனேயா! என்னைவிட என் இராம நாமம் உயர்ந்தது என்பதை நீயே இவ்வுலகில் ஸ்தாபித்துவிட்டாய்! நீடு வாழி! இராம மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இரு. என்று உற்சாகமளித்தார்..!

12 comments:

 1. ராம நாமத்தின் வலிமையையும் அனுமன் பக்தியையும் எடுத்துரைத்து சென்றமை அபாரம். நாமும் வணங்கி பயன் பெறுவோம்.
  நன்றி வாழ்க வளமுடன்....!

  ReplyDelete
 2. ராம ராம ராம ராம ராம ராம ராம்!
  ராம ராம ராம ராம ராம சீதா ராம்!
  ஜெய ஜெய ராம்! சீதா ராம்.
  ஜெய ஜெய ராம் சீதாராம்.

  என்று நாவினிக்க பாடுவோம். நாள் எல்லாம் பாடுவோம்.
  படங்கள் வெகு அருமை. அனுமன் ராமர் பாதங்களை வணங்கும் படம் மிக அழகு.

  ReplyDelete
 3. வணக்கம்
  அம்மா.
  ஆஞ்சனேயர் விஸ்வாமித்திரர் பற்றிய கதை மிக நன்றாக உள்ளது.....
  கடவுள் பக்தி உள்ளவர்களை இறைவன் எப்போதும் காப்பாற்றுவான்...படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது.... வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. சிறப்பான தகவல்கள்... உண்மையான தகவல்கள் அம்மா... படங்கள் அனைத்தும் அற்புதம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. ஸ்திர வாரத்திற்கு ஏற்ற சக்திமிக்க மிகச்சிறப்பான படங்கள்.

  >>>>>

  ReplyDelete
 6. ஹனுமனைப்பற்றிய ஸ்லோகங்களை மிகச்சுருக்கமாகவும் சுவையாகவும் கொடுத்து, அவற்றைச் சொல்வதனால் மிக அதிக பலன்களை அடையச் செய்துள்ளது, பாராட்டுக்குரியது.

  >>>>>

  ReplyDelete
 7. குரு விஸ்வாமித்திர முனிவரின் தூண்டுதலால் ஸ்ரீ ராமரே தன் தூய பக்தன் ஹனுமனைக் கொல்ல பாணங்கள் விட்டது, கடைசியாக பிரும்மாஸ்திரத்தையும் உபயோகித்துப் பார்த்தது என்ற கதையைத்தங்கள் பாணியில் அழகாகச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.

  அழகான கதைசொல்லியான சொல்லின் செல்விக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 8. ஸ்ரீராமரை விட சக்தி வாய்ந்தது ஸ்ரீ ராம நாமம் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்த அவர்கள் செய்த தேவ ரகசியமானதோர் நாடகத்தை எவ்வளவு அழகாக படங்களுடனும், விளக்கங்களுடனும் தங்கள் பாணியில் சொல்லி அசத்தியுள்ளீர்கள். !!!!!

  >>>>>

  ReplyDelete
 9. தங்கிய தங்கத் தருணங்கள் என் மனதினில் அப்படியே தங்கிப்போய் விட்டதால் அடிக்கடி மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்து வருகிறேன். நேற்று இரவு முழுவதும் பலமுறை, இப்போது காலையிலும் ஒரு முறை ;)))))

  >>>>>

  ReplyDelete
 10. ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
  ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

  அனைத்துக்கும் நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள்.

  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  o o o o o o

  ReplyDelete
 11. ஸ்ரீ ராம நாம மகிமையும், பயன் தரும் சுலோகங்களும் விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. ஜெய் ஸ்ரீராம்......

  தெரியாத தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete