Sunday, February 16, 2014

பயணங்கள் முடிவதில்லை..தொடர்கின்றன..


ஆண்டின் இறுதி நாளான டிசம்பர்  மாதம் 31 ஆம் தேதி ரயிலில் ஏறி அமர்ந்ததும் - தன் பயணத்தை நிறைவு செய்து அடுத்த பிளாட்பாரத்திலிருந்து உறவினர் குடும்பம் வந்து இறங்கி எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார்கள்..
மற்றொரு உறவினர் குடும்பமும் வந்து பயணத்தில் என்னுடன் கலந்துகொள்ள - ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அன்று ரயில்வே ஸ்டேஷனில் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டு வாழ்த்துகள் கூறிக்கொண்டோம் ..!

 திரு ..வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் வேக வேகமாக 
கடந்து சென்று கொண்டிருந்தார் ..
ஆன்மீக பயணமாக இருக்கும்  என்று நினைத்துக்கொண்டோம் ..

இந்த மாதிரி ஆன்மீக குழுக்களுடன் இணைந்து பயணம் செய்தால் பயணநேரம் இனிமையாக இருக்கும் ..நாங்கள் எங்கள் குழுவினருடன் செல்லும் போது கம்பார்ட்மெண்ட் முழுவதும்  நம் குழுவினரே இருப்பதால் விஷ்ணு சகஸ்ரநாமம் , பாடல்கள் என்று உற்சாகமாக பயணம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கும் ..!

ரயில் ஈரோடு அடைந்த போது சரியாக இரவு 12 மணி ..சுற்றிலும்
விண்ணில் பட்டாசுகள்  வெடித்து வர்ணஜாலம் காட்டி புத்தாண்டு
பிறந்ததை கட்டியம் கூறியது
Gingko Large Red LED Alarm Clock - Teak
கோவை திரும்பும் போது அழகான பெண்குழந்தை ஒன்று தாத்தா மடியில் தலையும் பாட்டி மடியில் காலும் வைத்து படுத்துக்கொண்டு ஒரு நோட்டில் படங்களை வரைந்து , வண்ணங்கள் தீட்டி தன் தாயிடம் காட்டி மகிழ்ந்துகொண்டிருந்தது ..
வெளிச்சக்கீற்றுகள் - ரோஷ்ணி நினைவுக்கு வந்தது ..!

தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி பேத்தியை  கொஞ்சிக்கொண்டார்கள்..

ரயிலில் விற்பனைக்கு வந்த குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் புத்தகங்கள் , பேனாக்கள் , கலர்பென்சில்கள் , எழுது பலகை , பர்ஸ் , பொம்மை , சாப்பிட சிப்ஸ் , பானங்கள் என்று இடைவிடாமல் வருவதை எல்லாம் வாங்கித்த்ந்தார்கள்..

தாங்கள் ஷோரனூர் செல்லவேண்டுமென்றும் கோவையில் இறங்கி எந்த ரயிலில் ஏறவேண்டுமென்றும் டிக்கெட் பரிசோதிப்பவரிடம் விசாரித்தார்கள்..

ஷோரனூருக்கு சென்னையிலிருந்தே நேரடியாக ரயில் இந்த ரயில் கிளம்புவதற்கு சற்று முன் இருந்திருக்குமே அதில் சென்றிருக்கலாமே என்றார் டிடிஆர்..
அந்த ரயிலில் டிக்கெட் இல்லாததால் இதில் வந்ததாக சொன்னார்கள்..

டிடிஆர் நீங்கள் கோவையில் இறங்க வேண்டாம் - இந்த ரயில் மங்களூர் வரை செல்கிறது .நீங்கள் மங்களூர் சென்று இறங்கினால் உடனே ஷோரனூருக்கு அடுத்த பிளாட்பாரத்திலேயே ரயில் புறப்படும் அதில் பயணம் செய்யுங்கள்..என்று தகவல் தந்ததோடு கோவையில் தன் டியூட்டி முடிவதால் கோவையிலிருந்து மங்களூருக்கு தனியாக டிக்கெட் எடுக்கும்படியும் தகவல் தந்தார் ..

பக்கத்து பெட்டியில்  பயணம் செய்தவர்கள் பதிவர்கள் போல தெரிந்தது ..
பதிவுகள் பற்றி காரசாரமாக விவாதித்துக்கொண்டும் ,
ஜெயமோகன் அவர்கள் எழுதும் மகாபாரதக் கதையான வெண்முரசு பற்றியும் , நீவா நதி பற்றியும் சுவாரஸ்யமாக உரையாடிக்கொண்டு வந்தார்கள்..

புத்தக கண்காட்சி பற்றியும் , பதிவர் சந்திப்பு பற்றியும் 
மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு வந்தார்கள்..

பதிவுலகில் நான் மட்டும்தான் எந்த சக பதிவரையும்  
நேரில் பார்த்ததில்லை என்கிற மனக்குறை அகன்றது..!   

இந்த முறை ரயில் பயணத்தின் போது ரயில் வடகோவை வருவதற்கு கொஞ்சநேரம் முன்பிருந்தே கோவையிலிருந்தும் , கான்பரன்ஸ்கால் வந்துவிட்டது..

வடகோவை வந்துவிட்டதா என்று கேட்டார்கள்.. 
ஆம் வந்துவிட்டது என்றேன் .
அங்கே இறங்க்கூடாது என்று பதற்றத்துடன் உத்தரவு வந்தது..
அம்மா அந்த ரயில் மங்களூர் செல்லும் .. மங்களூர் நாம் ஏற்கெனவே தங்கி சில நாட்கள் சுற்றுப்பயணமாக கோவில்களுக்கெல்லாம் சென்ற ஊர்தான். 
ஆகவே சென்றமுறை போத்தனூர் வரை சென்றது போல் 
இந்த முறை மங்களூர் வரை சென்றுவிடாதீர்கள்..
அநேகமாக நாம் செல்லாத கோவிலோ ஊரோ எதுவும் 
இருந்தால் கூகிளில் தேடி கண்டுபிடித்து செல்லலாம் .. 
இப்போது கோவை ஜங்ஷனில் இறங்குங்கள்..செல்போனையும் ஆஃப் செய்யவேண்டாம் கோவையில் அப்பாவின்  செல்போன் எண்ணுடன் -.  
வந்து அழைத்துச்செல்லும் வரை தொடர்பிலேயே இருக்கவும் ..
என்று  முன் எச்சரிக்கையுடன் சொன்னார்கள்..!
சரி என்று சொல்லி  கோவை ஜங்ஷன் வந்ததும் பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினால் முதல் பிளாட்பாரத்திற்கு அடுத்த பக்கம் இருளாக இருந்தது..ஆட்களின் நடமாட்டமும் குறைவாக இருந்தது.. கோயமுத்தூரைக் காணோமே என்று  செல்போனில் கூறினேன்..

ஏற்கெனவே ஒருமுறை இந்தப்பக்கம் இறங்கி பிளாட்பாரத்தின் முடிவு வரை நடந்து சென்று பார்த்து வந்தது இப்போதுதான் நினைவுக்கு வந்தது..!

கோயமுத்தூரையே யாராவது தொலைத்துவிட்டு தேடுவார்களா ரொம்ப அழகுதான் .. நின்றுகொண்டிருக்கும் ரயிலில் ஏறி அடுத்தபக்கம் இறங்கவும்  என்று தகவல் தந்தார்கள்..மங்களூர் செல்லும் ரயில் புறப்பட தயாராக உள்ளதாக் ரயில் நிலைய அறிவுப்பு செல்போன் வழியாக கேட்கிறது எனவே எச்சரிக்கையாக ரயிலில் ஏறி இறங்கும்போது கவனமாக இருக்கவும் அறிவுறுத்தினார்கள்..! 
மங்களூர் புறப்படத்தயாராக இருந்த ரயிலில் ஏறி மறு பக்கம் இறங்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது..பிளாட்பார போர்ட்டர்கள், கடைகள் , பயணிகள் என்று சுறுசுறுப்பான இயக்கத்தைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது..

light Animated Gif on Giphy


skate Animated Gif on Giphy

17 comments:

 1. பயண அனுபவங்கள் வெகு சுவாரசியம். கோயமுத்தூரைக் காணாமல் தேடியது நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 2. வடகோவையில் இறங்கி விட கூடாது எப்போதும் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும்.
  பயணங்கள் முடிவது இல்லைதான்.
  பயணத்தில் பதிவர்கள், பதிவர்களின் பெண் ரோஷ்ணி நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி. பயணத்தில் பதிவர் சந்திப்பும் அருமை.
  குழந்தைகளின் எச்சரிக்கை மிக அழகு. பார்க்காத கோவில்களை கூகுளில் தான் தேட வேண்டும் நீங்கள். தேடினால் நீங்கள் பகிர்ந்த கோவில்கள் தான் வரும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பயணங்கள் மனதிற்கு உற்சாகத்தினை தரும் ஒரு நிகழ்வு. காலங்கள் சென்றாலும் மனதில் அசை போட வைக்கும். நிம்மதி, ஏக்கம், ஏமாற்றம் போன்ற சுகமான நினைவுகளை நினைக்க வைக்கும். சுவையான பகிர்வு!

  ReplyDelete
 4. பயணங்கள் என்றும் சுகம் தான்... கோவை காணாமல் போய் விட்டது - நல்ல நகைச்சுவை... படங்கள் ஒவ்வொன்றும் அசர வைக்கிறது அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. தலைப்பு:

  ’பயணங்கள் முடிவதில்லை ... தொடர்கின்றன’....

  தொடரட்டும் ... தொடரட்டும் .... அதுதான் என்றும் நல்லது.

  அப்போதுதானே அதைப்பற்றிய பதிவுகளும் தொடர்ந்துகொண்டே இருக்க முடியும். சந்தோஷம்.

  >>>>>

  ReplyDelete
 6. நான் சொல்லவந்ததோர் விஷயத்தை திருமதி கோமதி அரசு அவர்களே மேலே அழகாகச் சொல்லிவிட்டார்கள்.

  கூகுளில் தேடினாலும் நீங்கள் ஏற்கனவே போய் தரிஸித்து, எங்களுடன் பகிர்ந்துகொண்ட பதிவுகள் மட்டுமே கிடைக்கக்கூடும் ;)))))

  அவ்வளவு ஆயிரக்கணக்கான கோயில்களுக்கல்லவா சென்று வந்து, அவைபற்றி பதிவிட்டுள்ளீர்கள் போல பிரமை ஏற்படுகிறதே !

  >>>>>

  ReplyDelete
 7. திருமதி கீதமஞ்சரி அவர்கள் சொல்லியுள்ளதுபோல ....

  வழக்கம்போல தாங்கள் கோயம்புத்தூரையே காணாமல் போக்கி எங்கோ தொலைத்து விட்டு, பிறகு ஒருவழியாக குடும்பத்தாரின் சரியான வழிகாட்டுதல்களால் தேடிக்கண்டுபிடித்தது நல்லதொரு நகைச்சுவையே.

  கைபேசியின் அருமையையும் உதவியையும் இன்று நம் ஒவ்வொரு செயலிலும் பாராட்டி மகிழத்தான் வேண்டியுள்ளது.

  உலகத்தையே நம் உள்ளங்கையில் அடக்கிவிடுகிறதே; பிறகென்ன கவலை ;)

  >>>>>

  ReplyDelete
 8. நானும் என்னுடைய அடுத்தப் பதிவு ஒன்றுக்கு ஓடும் ரயிலினைத் தேடினேன் தேடினேன் ..... கடைசிவரை அது எனக்குக் கிடைக்கவே இல்லை.

  தாங்கள் தான் ஒட்டுமொத்தமாக எல்லா ஓடும் படங்களுக்கான [ALL ANIMATIONS] உரிமைகளையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விட்டீர்களே ! ;)

  எனக்கு எப்படி அது கிடைக்க முடியும் ? ;(

  >>>>>

  ReplyDelete
 9. அத்தனைப்படங்களும் அழகோ அழகாக உள்ளன.

  புகையைக்கக்கிக்கொண்டிருக்கும் அந்தக்கால ரயில் எஞ்சின் நம் பழைய நினைவலைகளையும் சேர்த்துக் கக்குவதாக உள்ளதே ! ;)

  வெளிநாட்டு மாடர்ன் ரயில்கள் / எலெக்ட்ரிக் ட்ரெயின் என எல்லாமே பார்க்கப்பார்க்க பரவஸம் அளிப்பதாக உள்ளன.

  அருமையான குளிர்ச்சியான குதூகலமளிக்கும் இனிய காட்சிகள்.

  >>>>>

  ReplyDelete
 10. தங்களுக்காவது .... தங்களின் நெடுநாள் மனக்குறையொன்று அகன்றது கேட்க மிக்க மகிழ்ச்சியே.

  தங்கள் மேல் தங்கள் குடும்பத்தாருக்கு உள்ள [முன்னெச்சரிக்கையான] அக்கறை சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

  ஏற்கனவே ஏற்பட்டுள்ள ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு எச்சரிக்கைகளைத் தந்து உதவுகிறது, போலிருக்கு. ;)

  >>>>>

  ReplyDelete
 11. தங்களின் பயணங்களும், சுகமான அனுபவங்களும் தொடரட்டும் .... அவை பற்றிய இதுபோன்ற பதிவுகளும் தொடரட்டும்.

  இதுபோன்ற பதிவுகளில் யாராலும் எதுவுமே முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாதபடி, பட்டும் படாததுமாக எழுதுவதே தங்களின் தனித்தன்மை + தனிச்சிறப்பு.

  அன்பான வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் + மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்.

  oo oOo oo

  ReplyDelete
 12. சுவையான பயணப் பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 13. இனிமையான பயணம். உங்களுக்கு இந்த புத்தாண்டு கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத புத்தாண்டாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

  படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் அந்த நகரும் புகைவண்டி படம் மிக அருமை.

  ReplyDelete
 14. கோயம்புத்தூர் காணாமல் போய் திண்டாடிய அனுபவம் சுவாரஸ்யம்.
  விரையும் ரயில்கள் காண மிக அழகு. நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 15. நாங்களும் உங்களைப் பார்த்ததில்லை, இராஜராஜேஸ்வரி. கூடிய சீக்கிரம் சந்திக்க ஏற்பாடு செய்யுங்களேன்.
  பதிவைத் திறந்ததிலிருந்து ரயிலில் போய்க் கொண்டிருப்பது போலவே ஒரு அனுபவம்.

  ReplyDelete
 16. பயணங்கள் முடிவதில்லை தொடர்கின்றன.
  சரியாக அத்தனை வாகனங்களும் அசைந்தபடியே இருந்தது. பிரமாதம்.
  பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. அருமையான பயணம்..... பயணத்தின் போது என் மகள் நினைவுக்கு வந்ததில் மகிழ்ச்சி......

  தொடரட்டும் பயணங்கள்.

  ReplyDelete