Monday, July 18, 2011

தலைநகரில் தங்கத் தமிழ்க் கடவுள்


























குன்றுதோராடி குறைகள் களையும் தமிழ்க்கடவுள் அழகு முருகன் குமரனுக்கு
தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்று விளங்கும் சுவாமிமலை முருகன் கோவில் போன்று புது தில்லியிலும் புகழுடன் திகழ்ந்து வருகிறது மலை மந்திர் எனும் உத்தர சுவாமிமலை திருக்கோவில்.

ஓம் எழுத்தில் அந்தம் அருளும் சரவணபவ குகன்
சிவாய நம என்னும் நாமம் ஒரு காலும் அறியாத திமிராகரனையும் வா வென அழைத்து அருளும் முருகன்
தன் கால் பட்டு அயனின் கையெழுத்தாம் தலை எழுத்தை அழிக்கும் சேயோன்
தந்தைக்கு உபதேசம் செய்த ஞான பண்டித குமரன்
திருமகள் உலாவும் இருபுய முராரி திருமருக நாம பெருமான் -
காண தலைநகரில் பக்தி உலா போகும் நேரம் கண் நிறைய கண்டோம்... 
Lord Uttara Swaminatha Swami presiding deity of Malai Mandir, New Dehli (13447 bytes)

தில்லியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த "ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி சேவா சமாஜம்' அமைப்பு மூலம் பல கட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது இத்திருக்கோவில்.


தகப்பனுக்கே உபதேசித்த சற்குருநாதனாக தமிழக சுவாமிமலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சுவாமிநாதப் பெருமாள், தில்லியில் உத்தர சுவாமிமலையிலும் அருளாசி வழங்குகிறார்.மயிலேறிய மாணிக்கத்துக்கு, வள்ளிக்கு வாய்த்தவனுக்கு பிரகாசமான நீலப் பளிங்குக் கல்லிலான ஆலயத்தைக் கண்டதும் மனம் மகிழ்ச்சிப் பட்டது.

புது தில்லி ராமகிருஷ்ணாபுரத்தின் சிறிய குன்றின் மீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகக் கடவுளான சிவ ஸ்கந்த மூர்த்தியை வழிபட தென்னிந்தியர் மட்டுமின்றி வட இந்தியரும் அதிகம் வருகின்றனர்.

தென்னிந்தியாவில் முருகன், சண்முகம், ஆறுமுகம், கந்தன் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் போற்றப்படும் முருகப் பெருமான், வட இந்தியாவில் கார்த்திகேயனாக வணங்கப்படுகிறார்.

 வட இந்தியாவில் மூலவருக்கான முக்கியத்துவம் வாய்ந்த கோவில் ஏதும் இல்லாத குறையைப் போக்கும் வகையில் உத்தர சுவாமிமலை  கோவில் அமையப்பட்டுள்ளது ...

உத்தர சுவாமிமலை கோவிலில் பாண்டியர், சேரர், சோழர்களின் கட்டடக் கலையை நினைவுபடுத்தும் வகையில் சன்னதிகளும், கோவில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோவில் வளாகத்தில் அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் சன்னதிகள் பாண்டியர் காலக் கட்டடக் கலையையும், 
ஸ்ரீ கற்பக விநாயகர் சன்னதி சேரர் காலக் கட்டடக் கலையையும், 
மலையில் உள்ள முருகன் கோவில் முற்றிலும் கருங்கல்லால் அமைக்கப்பட்டு சோழர் காலக் கட்டடக் கலை வடிவத்தையும் நினைவுபடுத்துவதாக உள்ளன.
Meenakshi Sundareswara Temple

















 ஸ்தபதிகள் முத்தையா, கணபதி ஸ்தபதி அவர்களின் பிரம்மாண்டக் கலைத் திறனையும் ,குழுவினரின் தெய்வீக அர்ப்பணிப்புப் பணி சிற்பங்கள், சுதைகளில் அழகுற மிளிர்கிறது.
Silpa Kala MandapamSilpa Kala MandapamSilpa Kala Mandapam
















கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சில்ப கலா மண்டபத்தின் நடுப் பகுதியில் ஒரே கல்லில் ஆன கோயில் மணி, இசைத் தூண், கல் பலகணி ஆகியவை தமிழர்களின் கட்டடக் கலைத் திறத்தைப் பறைசாற்றும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.


 மண்டபத்தின் மேல்புற விதானத்தில் பலவித வர்ணங்களால் வரையப்பட்டுள்ள தெய்வ உருவங்கள் காண பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நந்தி சிலையின் மூக்குத் துவாரத்தில் நீளமான குச்சியைச் சொருகினால் அதன் காது துவாரத்தின் வழியே குச்சி வருவதும் காண்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

உத்தர சுவாமிமலை கோயில் பகுதியில் சித்தர்கள் சூட்சுமமாக இருந்து அருள்பாலிப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.


மலைமந்திர் முருகப்பெருமான் வெயில் கொடுமை குறைய அருள் புரிந்தார் என்பதை படியேறி மேலே செல்லு முன்பாக கீழே இடும்பன் சன்னதியில் தோகை விரித்தாடி அசைந்தாடும் மயில் காட்சிப்பட்டது.
61 வது கந்த சஷ்டிக்காக வரைந்த முருகனின் ஓவியம் 
அருமையாக இருக்கிறது.

உத்தர சுவாமிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாளுக்கு நாள் 
அதிகரித்து வருவது இங்கு வருவோருக்கு முருகன் மீதான 
நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்குச்சான்று.
City Monument - Malai Mandir, RK Puram
1944-ம் ஆண்டின்போது புதுதில்லி பகுதியில் இருந்த சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழாவை நடத்த ஆரம்பித்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு ராமகிருஷ்ணாபுரம் பகுதியில், பயன்பாடின்றிக் கிடந்த மலைக் குன்றைக் கண்டறிந்து கோயில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

குன்றின் அமைப்பையொட்டியே இரண்டு நிலைகளாகக்
கட்டி இருக்கிறார்கள்.

















நீலங்கொண் மேகத்தின் மயில்மீதேறி ஒரு நொடி அதனில் உலகை வலம் வரும்  திருநீலக்கண்டரின் மகனுக்கு,  

நீள் புவியடங்கக் காக்கும் அன்னை பார்வதி புத்திரனுக்கு,

நீலவண்ணக் கண்ணனின் மருகனுக்கு 

நீலவண்ணக் மார்பிள் கற்களால் ஆலயம் அமைத்த பாங்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. 

நீல எழில் மயில் ஆகம வேலனுக்கு நினைத்தபோது வந்து துயர் துடைக்கும்  தேவசேனாபதிக்கு நீலஇயற்கைக் கல்லில் ஆலயம்..

தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகே உள்ள தட்சிண சுவாமிலை போன்று வடக்கில் உள்ள இந்த மலைமந்திர் உத்தர சுவாமிமலையாக அறியப்படுகிறது.
உத்தர சுவாமிமலை கோவில் கட்டுவதற்கு காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியும் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, 1965-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி கோயில் கட்டுமானப் பணிக்கு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சார்பில் அபோது தமிழக முதல்வராக இருந்த எம்.பக்தவத்சலம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஸ்தபதி வை.கணபதி தலைமையிலான குழுவினர் சுவாமிமலை திருக்கோவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். . 

இதற்கான சிற்பங்கள் செய்வதற்கு வாலாஜாபாத் அருகே உள்ள பட்டுக்குப்பம் பகுதியில் இருந்து கற்கள் எடுத்து வரப்பட்டன.

முருகன் திருவுருவச் சிலை செய்வதற்கு நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் உள்ள குறுக்குத்துறை பகுதியில் கல் எடுக்கப்பட்டது.

7.6.1973-ல் கோவில் கும்பாபிஷேகத்தை காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இந்த சேவா சமாஜத்தின் தலைவராக இருந்து பல அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளார்.
அவரது வேண்டுதலின்பேரில் தனக்கு அளிக்கப்பட்ட விலை மதிப்பில்லாத ஒரே ஸ்படிகத்தில் செய்யப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் சிலையை இக்கோயிலுக்கு வழங்கினார் மகா பெரியவர்.

His Holiness Sri Chandrasekarendra Swamigal blesses
the vigraha at Kanchipuram, April 1970.
























உத்தர சுவாமிமலை கோவில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் மண்டபத்தில் இந்த ஸ்படிக சிலை வைக்கப்பட்டு நாள்தோறும் பூஜிக்கப்பட்டு வருகிறது. 

 கோவில் வளர்ச்சியில் திருப்பனந்தாள் மடத்தின் பங்கும் அளப்பரியது.
உத்தர சுவாமிமலை கோயில் பணிகள் அனைத்தும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே நடைபெற்று வருகிறது.

இப்போது கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்தரத் திருவிழா, கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 

உற்சவ காலங்களில் இலைபோட்டு 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
Malai Mandir Yagasalai
விழாக் காலங்களில் பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோவில் பிராகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில் சனிக்கிழமைதோறும் ஆயிரம் பேர் அர்ச்சனை செய்கின்றனர்.
இதில் வட இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்

24 comments:

  1. தங்கத்தமிழ் கடவுள்
    தந்திடும் அருள்
    எங்கனும் நிறையுமே.

    ReplyDelete
  2. nice post...please continue..

    ReplyDelete
  3. தலை நகரில் நம் தமிழ்க் கடவுள் கோவில் குறித்து
    அதிகப் படங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்
    குடும்பத்தோடு கண்டு ரசித்தோம்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையான தகவல்.

    ReplyDelete
  5. பக்திமணம் கமழ்கிறது

    ReplyDelete
  6. என் தில்லி நாட்கள் நினைவுக்கு வருகின்றன!வசந்த விஹார் அலுவலகத்திலிருந்து ஹௌஸ்காஸ் வீட்டுக்குப் போகும்(வரும்) வழியில் தினமும் மலை மந்திரைத் தாண்டித்தான் செல்வேன்!பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. தலை நகரின் தமிழ் கடவுள் படங்களுடன் அருமையாக உள்ளது ....

    ReplyDelete
  8. அற்புதமான பதிவு.
    நிறைய படங்கள். கண்ணைக் கவர்கின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. படங்கள் கோவிலை நேரில் பார்த்தது போல் உள்ளது .
    தலைநகரில் உள்ள கோவிலை வீட்டிலிருந்தே தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி .

    அருமையான பதிவு .

    ReplyDelete
  11. அழகான பதிவு. படங்கள் அற்புதம். அதிலும் மஹா பெரியவாளின் படம் மிக அருமை.கார்திகேயன் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  12. //தனக்கு அளிக்கப்பட்ட விலை மதிப்பில்லாத ஒரே ஸ்படிகத்தில் செய்யப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் சிலையை இக்கோயிலுக்கு வழங்கினார் மகா பெரியவர்.

    His Holiness Sri Chandrasekarendra Swamigal blesses
    the vigraha at Kanchipuram, April 1970.//

    ஆஹா, அருமையான தகவல்கள்.
    படங்கள் யாவும் வெகு அழகு அந்த மயிலினைப்போலவே.

    தங்க விக்ரஹமாக பேரக் குழந்தை வருகையும், என் அருமைப்பேத்தி பவித்ராவின் பிறந்த்நாளுமாகிய 18th July ஆகிய இன்று, தலை நகரில் தங்கத் தமிழ்க்கடவுளின் தரிஸனம் கிடைக்கச்செய்துள்ளீர்கள்.

    அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா+ஸ்படிகத்தில் ஆன ஆதிசங்கரர் விக்ரஹத்தை அனுக்கிரஹம் செய்வது போல.

    மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    மடியில் குட்டிப்பயலை போட்டுக்கொண்டு மடிக்கணனியில் இதை அடிப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  13. சிறப்பான பகிர்வு.முழுமையாக இருக்கிறது.

    ReplyDelete
  14. டில்லியில் தமிழ்க் கடவுள் படங்களும் தல விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  15. படங்களுடன் சிறப்பான பகிர்வு!!

    ReplyDelete
  16. தில்லியில் இருக்கும் தமிழ் கோவில்களில் பிரதானமான ஒன்று மலை மந்திர். அதன் பற்றிய தகவல்கள் அருமை.

    ReplyDelete
  17. பக்திமணம் கமழும் அருமையான பகிர்வுகளைத்
    திறம்படப் பொறுமையுடன் எழுதும் உங்கள் சிந்தனைக்கும் விரல்களுக்கு
    பலநூறு வாழ்த்துக்களை முதலில் சொல்ல வேண்டும்
    என்று என் மனம் துடிக்கின்றது சகோதரி.காரணம்.நீங்கள்
    எழுதும் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் மிக நீளமானவையாக
    இருக்கின்றது. நல்லதொரு தகவலை இன்றும் பகிர்ந்தளித்த
    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
  18. முருகன்=அழகன். பெயருக்கேற்றா மாதிரி படங்கள் அருமை. அழகு. விவரங்களும் அருமை. கார்த்திகேயா கலியுக வரதா கந்தா கடம்பா...

    ReplyDelete
  19. சிறப்பான இந்த மலைக்கோவில் பற்றிய பதிவு அருமை. டில்லி சென்றால் கண்டிப்பாக தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கோவில் என்பதால்தான் நேயர் விருப்பம் கேட்டிருந்தேன். மதுரையிலிருக்கு எங்கள் குடும்பம் சிவவிரதங்களை குறையில்லாமல் கடைபிடிக்கும் விருப்பம் உள்ளவர்கள். தொலை தூரம் சென்றும் இறைவன் இறைவியின் கருணை பார்வையை உணர்ந்தது அங்கேதான். அதனை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தோழி.

    ReplyDelete
  20. நாங்கள் தலை நகர் சென்றது ஒரு குளிர் காலத்தில். அந்த சமயத்தில் திருவாதிரை விரதம் வரும். அலுவலக விசயம் ஆதலால் கர்ம யோகம் என்று - தவிர்க்கமுடியாமல் கிளம்பினோம். முதல் நாள் ஆரம்பிக்கும் விரதம் ஆருத்ரா தரிசனம் பார்த்தபின் உணவருந்தி முடியும். அன்றுதான் எங்களுடைய ரிட்டர்ன் டிக்கெட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டிய கட்டாயம். இறைவன் மீது நம்பிக்கை வைத்து இந்த விரதத்தினை ஆரம்பித்து விட்டேன். கணவர் அருகே இருந்ததால் நமஸ்காரம் செய்து ஆரம்பித்ததில் தடையில்லை. எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. சிவ தரிசனம் செய்தபின்தான் விரதம் முடியும் என்று நம்பினேன். அன்று அலுவலக வேலை முடிய மதியமாகிவிட்டது. என் கணவர் காரோட்டியிடம் ஏதாவது கோவிலுக்கு செல்ல முடியுமா என்று கேட்டார். அவர் ஒரு பஞ்சாபி , இருந்தாலும் விசாரித்து ஒரு தமிழ் கோவிலுக்கு அழைத்துச்சென்றார். கோவில் மூடியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. " சென்று பார்த்து விடுவோம்" என்று என் கணவர்தான் அழைத்தார். மதியம் இரண்டு ஆகிவிட்டது. கோவிலுக்கு சென்றால் , ஒரே கோலாகலம். மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு ஆருத்ரா தரிசன ஏற்பாடாகியிருந்தது. குளிர் காலம் என்பதாலும், பாதுகாப்பு கருதியும் நம் ஊர் போலல்லாமல் அங்கு இரவில் செய்ய வேண்டிய மகா அபிசேகத்தை முதல் நாள் மதியமே செய்துவிடுவார்களாம். கண்ணீல் நீர் வர சிறப்பான தரிசனம் செய்தோம். அங்கேயே இறைவனின் பிரசாதத்தை அன்னதானம் செய்தார்கள் , திருவாதிரை களியும் உண்டு. அதையே அருந்தி விரதத்தை முடித்தேன். சற்றும் தடையில்லாமல் விரதம் முடித்த மகிழ்ச்சி அங்கு அருளாக கிட்டியது. இன்றைக்கும் என்னுடைய விருப்பம் மலைக் கோவில்தான். தமிழ் நாட்டு பாணியிலேயே அமைந்திருப்பது வேறு சிறப்பு. மதுரை மீனாட்சி அன்னையின் அன்பு அங்கும் பரவிக் கிடக்கிறது. அதை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று, சற்றும் பெருமையடித்துக் கொள்ளும் நோக்கம் இல்லாமல் இறைவனின் புகழ்பாடும் எண்ணத்தில்தான் இதனை பதிவிடுகிறேன் நன்றி, தோழி.

    ReplyDelete
  21. ராமாய ராமபத்ராய

    ராமசந்த்ராய வேதஸே!

    ரகுநாதாய நாதாய

    ஸீதாயா: பதயே நம:!!-4


    அக்ரத: ப்ருஷ்டதச்சைவ

    பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!

    ஆகர்ண பூர்ணதந்வாநெள

    ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5


    ஸந்நத்த: கவசீ கட்கீ

    சாபபாணதரோ யுவா!

    கச்சந் மமாக்ரதோ நித்யம்

    ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6

    ReplyDelete