Thursday, April 26, 2012

கருணை வள்ளல் ஸ்ரீ ராமானுஜர்







ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் உருவம், விக்ரஹமோ அல்லது வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.  
இது ஸ்ரீ ராமானுஜரின் திருமேனியே. 
இதை "தான் உகந்த திருமேனி" என்பார்கள்.

தான் உகந்த திருமேனியாக ராமானுஜர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனி சந்நிதி கொண்டிருக்கிறார்.

உடையவர் சந்நிதியில் மூலவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் இருக்கிறார். அந்த மூலவருக்கு இளையாழ்வார் என்ற திருப்பெயர்.

இந்த மூலவருக்கு முன் செப்புச் சிலை வடிவில் உற்சவ மூர்த்தியாக கூப்பிய கையுடன், திரிதண்டம் சாத்தியபடி தானுகந்த திருமேனியாக விளங்கும் உடையவருக்குத்தான் திருமஞ்சன பூஜைகள் விசேஷமாக நடைபெறுகின்றன.

ஆஜானுபாகுவாக இருந்திருப்பார் என்பதற்கு அவரது கம்பீரம், எடுப்பான நாசி, புன்னகை புரியும் வதனம், காண்பவரை வசீகரிக்கும் கருணையுள்ள கண்கள் என்று சர்வலட்சணங்களுடன்கூடிய ராமானுஜரின் திருமேனியை வாழ்நாள் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

திருநாராயணபுரத்திலிருந்து ராமானுஜர் விடைபெற்றபோது, அங்கிருந்த அடியார்கள் அவரைப் பிரிந்து வாழவேண்டுமே என வருந்தினார்கள். 

அப்போது ராமானுஜர் தம்மைப் போல விக்கிரகம் ஒன்றை செய்வித்து, அதில் தம் சக்திகளை பிரதிஷ்டை செய்து, அவர்களிடம் அதை ஒப்படைத்து, ‘‘நான உங்களுடன் இருப்பதாக எண்ணி இந்த விக்கிரகத்தை கண்டு மன அமைதி பெறுங்கள்..’’ எனக் கூறி விடைபெற்றார். 

இதுவே ‘தமர் உகந்த திருமேனி’ என்றழைக்கப்படுகிறது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீ ராமானுஜர், பத்மாசன திருக்கோலத்தில் மேலெழுந்து வந்ததாகும். குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைகளால் திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள்.

உடையவரின் விக்கிரகத்தில் முறைப்படி கண்களைத் திறக்கும்போது உளி கண்ணில்பட்டு ரத்தம் கசிந்தது. 

அதேசமயம் திருவரங்கத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த உடையவரின் கண்களிலும் ரத்தம் வழிந்தது என்றும் ஒரு கருத்துண்டு. 

தம் விக்கிரகத்தை தான தழுவித் தந்ததால் ‘தான் உகந்த திருமேனி’ என்று வழங்கலாயிற்று.

எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்தி லேயே ராமானுஜருடைய திவ்ய மங்கள திருமேனியை பிரதிஷ்டை செய்தார்கள். 

ஸ்ரீரங்கத்தில் இது ‘தானான திருமேனி’ என்ற புகழுடன் விளங்கி வருகிறது.
படிமம்:Shri Ramanujar pics 2.jpg
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீ ராமானுஜர், பத்மாசன திருக்கோலத்தில் மேலெழுந்து வந்ததாகும். 

குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைகளால் திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள்.

பஞ்சமரை திருக்குலத்தாராக்கி, அவர்களுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமைகளைப் பெற்றுத் தர போராடிய ஆன்மீகவாதி .எல்லா ஜாதியினரையும் ராமானுஜர் நாராயணன் என்ற குடைக்குக் கீழே கொண்டு வர முயன்றார், 

ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். 

தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். 

"ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தின் விளக்கத்தைக் கூறி, "உலகங்களுக்கு எல்லாம் இறைவனான நாராயணனே முழு முதல்வன். உயிர்கள் அனைத்தும் அவனது உடமைகள். 

ஸ்ரீமந் நாராயணனுக்கும் அவரின் அடியார்களுக்கும் தொண்டு செய் வதே வைகுண்டம் செல்லும் வழி' என்று அனை வருக்கும் வைகுண்டத்துக்கான வாசலைத் திறந்து காட்டினார். கோபுரத்தின் கீழே இருந்த மக்கள் ஸ்ரீராமானுஜரை வைகுண்ட வாசனாகவே வணங்கினார்கள். 

பெருமாளுடன் வாசம் செய்யும் பரமபதத்தில் மோட்சம் பெற வழிகாட்டுங்கள்'' என்று கேட்ட மோர் விற்கும் இடையர் குலப்பெண்மணி  நம்பிக்கையை மதித்து சிபாரிசு கடிதம் வாங்கிய மோர் விற்கும் பெண், திருமலை பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள். 

ராமானுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். 

பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,""உனக்கு மோட்சம் கொடுத்தேன்'' என்றார். 

அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. 

விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு 
பரமபதம் கிளம்பிவிட்டனர்.



நாலூரான் சதியால் சோழ அரசன் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் அவரது பிரதம சிஷ்யரான கூரேசர் தான்தான் ராமானுஜர் என்று சொல்லி கைதாகிறார். கூரேசரை குருடாக்குகிறான் நாலூரான். இன்றைய கர்நாடகத்துக்கு தப்பிச் செல்லும் ராமானுஜர் ஒரு இளவரசியை பிடித்திருக்கும் பேயை ஓட்டி ராஜாவின் ஆதரவைப் பெறுகிறார். அங்கே வைஷ்ணவத்தை வலுப்படுத்துகிறார்.

துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார். 120 வயது பூர்ண ஆயுளுடன் வாழ்ந்தவர்..

கூரேசரால் காப்பாற்றப் பட்ட ராமானுஜர் இவரின் ஆலோசனையின் பேரில் திருநாராயணபுரம் சென்று தங்கினார். 

கூரத்தாழ்வானும் திருமாலிருஞ்சோலை சென்று அங்கு வாசம் செய்தார். 

சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும் ஆழ்வா னும் காஞ்சியில் சந்தித்தபோது, பகவத் ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டியபடி கூரத்தாழ்வான் மீண்டும் பார்வை பெற்றார்.

புருஷ குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவரும்; ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்கியம், பகவத் பாகவத தொண்டு, பாண்டித்யம் பெற்றவரும்; தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில்  பிரார்த்தித்துக் கொண்டவருமான ராமானுஜரை  வணங்கினால் நமது கண் பார்வை கோளாறுகளும் விலகும்.



ஓம் நமோ நாராயணாய. ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம :
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, 
அஹம் த்வா சர்வ பாபேப்யோ 
மோக்ஷயிஷ்யாமி மா சுச:



 இராமானுஜர் கடந்து வந்த பாதை கரடு முரடானது. 

'கஷ்டங்கள் வரும்போது நாம் எப்படியிருக்க வேண்டும்' என்பதற்கு உதாரணபுருஷர்களாக வாழ்ந்தவர். 

இன்பம் வரும்போது கொண்டாடவும் இல்லை; 
துன்பம் வந்துவிட்டதே என்று கலங்கவும் இல்லை. 

முக்கியமாக... துன்பத்தைத் தருபவர்களுக்குப் பதில் துன்பம் தரும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தார்.  

த்வய மந்திரத்தைச் சொல்லியபடியே இருந்தனர். 

ஆத்மாவைப் பிரித்து, இந்திரியங்களின் தன்மைக்கு ஆட்படாமல் விலகி நின்று, தன்னை உற்று நோக்கும் பக்குவத்தை அவர்அடைந்திருந்தார்
ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை ந்ம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் 
ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி அடந்த நாள். 

இன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ராமானுஜர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, என்றுமே பிரியாதிருப்பவர். 

ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே 
இருந்து உதவி புரிந்தவர்.  

ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு 
உதவி புரிந்தார். 

இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு 
தொண்டு செய்தார்.

ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாறுகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சென்றால், உடையவரான ஸ்ரீராமானுஜரின் சந்நிதிக்குத்தான் முதலில் அழைத்துச் செல்வார்கள். குருவின் வழியாகப் பெருமாளைச் சேவிப்பது ரொம்ப சிறப்பு...
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ராமானுஜர் ஆலய தேர் திருவிழா 

இராமானுசர் சிறந்த வேதாந்தி , பெரிய நிர்வாகியும் கூட. 

திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார்.

தற்கால ஸ்ரீவைஷ்ணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. 

ஸ்ரீரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய 
விதி முறைகளை வழிப்படுத்தினார். 

இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைஷ்ணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான்.


16 comments:

  1. avarathu udalai innum pathukathu varukirargala, ramanujar enaku migavum piditha oruvar... avarai patriya ariya pala thagavalgal arinthen...manathirku niraivana pathivu


    # net work agathathala tamil la type panna mudiyavillai...thavaraga eduthuk kolla vendam

    ReplyDelete
  2. ”கருணை வள்ளல் ஸ்ரீ ராமானுஜர்”
    என்ற தலைப்பில் பல நல்ல அரிய தகவல்களைக்கூறி பிரமிக்க வைத்துள்ளீர்கள்.

    ஒவ்வொன்றாகப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  3. //சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீ ராமானுஜர், பத்மாசன திருக்கோலத்தில் மேலெழுந்து வந்ததாகும். குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைகளால் திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள்.//

    மிகவும் ஆச்சர்யமான தகவல்!

    ReplyDelete
  4. //ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். //

    சுயநலம் இல்லாத பொதுநலவாதியாக
    திகழ்ந்துள்ளாரே! அது தான் அவரின் தனிச்சிறப்பு !

    ReplyDelete
  5. //பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,""உனக்கு மோட்சம் கொடுத்தேன்'' என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.//

    ஆஹா! மோர் விற்கும் அந்தப்பெண்மணியின் பக்திக்கு ஸ்ரீ இராமனுஜரால் பரமபதமே கிடைத்து விட்டதே!!

    நிகழ்ச்சியைக் கேட்க மெய்சிலிரித்துப் போகிறது.

    ReplyDelete
  6. //துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார்.//

    //தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டவருமான ராமானுஜரை வணங்கினால் நமது கண் பார்வை கோளாறுகளும் விலகும்.//

    //இராமானுஜர் கடந்து வந்த பாதை கரடு முரடானது. 'கஷ்டங்கள் வரும்போது நாம் எப்படியிருக்க வேண்டும்' என்பதற்கு உதாரண புருஷராக வாழ்ந்தவர்//

    //முக்கியமாக, துன்பத்தைத் தருபவர்களுக்குப் பதில் துன்பம் தரும் எண்ணம் இல்லாதவராக இருந்தார்.//

    //ஸ்ரீ ராமனுஜர் சரணாகதி அடைந்த நாளான ஸ்ரீரங்கள் பங்குனி உத்திரத்தன்று, சேர்த்தி - தாயாருடன் நம்பெருமாள் சேர்ந்திருக்கும் போது
    ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

    //ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர்.

    ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார்.

    இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார்.

    ஆதிசேஷனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்//

    எவ்வளவு அழகழகான அற்புதமான பயனுள்ள தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளீர்கள்.

    ”தகவல் களஞ்சியம்” ன்னா, தகவல் களஞ்சியம் தான் என நிரூபித்து விட்டீர்கள். சபாஷ்! மேடம்.

    ReplyDelete
  7. //(1) தற்கால ஸ்ரீவைஷ்ணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரை (2) ஸ்ரீரங்கத்திற்கு நிர்வாகியாக வருபவருக்கான விதி முறைகளை வழிப்படுத்தியவரை (3) அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைஷ்ணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியவரை

    பற்றிய அனைத்து விபரங்களையும் நன்கு அறிய முடிந்தது, உங்களின் இந்தப்பதிவினால்.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    தான் உகந்த திருமேனி’
    ‘தானான திருமேனி’
    தமர் உகந்த திருமேனி’
    என்பது பற்றிய விளக்கங்களும் அருமை.

    ஒவ்வொன்றையும் அக்குவேறு ஆணி வேறாக அலசோ அலசென அலசிக் கொடுத்துள்ளீர்கள்.


    ஆஜானுபாகுவாக இருந்திருப்பார் என்பதற்கு அவரது கம்பீரம், எடுப்பான நாசி, புன்னகை புரியும் வதனம், காண்பவரை வசீகரிக்கும் கருணையுள்ள கண்கள் என்று சர்வலட்சணங்களுடன்கூடிய ராமானுஜரின் திருமேனியைப் போலவே உள்ளது ஆஜானுபாகுவான மிகப்பெரிய தங்களின் இந்தப்பதிவும்.

    ஒவ்வொன்றையும் படித்து, புரிந்து கொண்டு ரஸித்து மகிழ்வுடன் பின்னூட்டம் இடுவதற்குள் ஸ்ரீ சங்கரஜயந்தி நாள் போய் ஸ்ரீ ராமனுஜ ஜயந்தி நாளே வந்து விட்டது.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இனிய வாழ்த்துகள்.

    ஆஜானுபாகுவான பஹூத் படா சைஸ் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  8. இன்றும் ......

    காயேன வாச மன்சேந்திரியை வா புத்யாத்மநா வா ப்ரக்ருதேஸ்வபாவாத்
    கரோமி யத்யத்சகலம் பரஸ்மை
    ஸ்ரீமந் நாராயணாயேது சமர்பயாமி!

    ReplyDelete
  9. குருவின் வழியாகப் பெருமாளைச் சேவிப்பது ரொம்ப சிறப்பு//

    உண்மைதான் குருவின் மூலம் இறைவனை அடைவது மிக சிறந்தது தான்.

    திருக்கோஷ்டியூர் தெப்பதிருவிழாஅன்று குளத்தின் படிகளில் விளக்கு ஏற்றி வணங்கும் வழக்கத்தை காட்டும் படம் அழகு.
    விளக்கு எடுக்கும் திருநாள் என்று கூட அதற்கு பெயர்.
    ஸ்ரீராமானுஜர் திருவடி வாழ்க வாழ்க!

    ReplyDelete
  10. படங்கள் அனைத்தும் மிக மிக அருமை

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு. ராமானுஜரை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  12. விளக்கமான தகவல்கள்.. படங்கள் ஒவ்வொண்ணும் அழகு,.. எங்கேருந்துங்க கிடைக்குது :-))

    ReplyDelete
  13. நீங்கள் என்னதான் சுருக்கமாக எழுத முயற்சித்தாலும் அவரின் நீ..ள..மான வால் போன்று நீண்ட பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஸ்ரீ ராமானுஜர் பற்றிய அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  15. 103. ஸ்வயம் பிரகாஸ கோவிந்தா

    ReplyDelete