Monday, May 7, 2012

புத்த பூர்ணிமா விழா




Lord Buddha


புத்தம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி,
என்பதே புத்த சங்கத்தின் முழக்கம். 
ஞானம் பெற வேண்டும்; அதனை மக்களுக்கு போதிக்க வேண்டும்; தர்மம் காக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படையான கருப்பொருள்.

  • அன்புதான் இன்ப ஊற்று-அன்புதான் இன்ப ஜோதி - 
  • அன்புதான் உல மகா சக்தி என்பதில் அசையா நம்பிக்கை கொண்டார் புத்தர். 

ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். 

உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

புத்த ஞாயிற்றின் ஒளி ஆசியாக் கண்டத்தில் பல நாடுகளிலும் இருளினை அகற்றி மக்கள் மனக்கண்களைத் திறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பித்து வைத்தது.

கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. 

புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார்.

பிறந்த தினமும் ஞானபோதம் பெற்ற தினமும் பூவுலக வாழ்வைத் துறந்த நாளும் வைகாசிப் பௌர்ணமியாகும்.
வைசாகா அன்று புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே  புத்த பூர்ணிமா 

புத்த பூர்ணிமா அன்று புத்த மதத்தினர் வெண் நிற உடைகளை மட்டுமே அணிந்து மடாலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும், வீடுகளிலும் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்கிறார்கள்..
கீர் எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும். 

இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் புத்தப் பூர்ணிமா விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முழுமை நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா ". . 
ஆஸ்திரேலியாவில் SOUTH BANK   என்னும் இடத்தில் புத்த பூர்ணிமா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
புத்தருக்கு அனைவரும் மண்டியிட்டு வணக்கம் செலுத்தினர் .. நீரால் அபிஷேகம் செய்தனர்.. வாசனை மிகுந்த ஊதுபத்திகளை ஏற்றி பிரார்த்தனை செய்தார்கள்..
வாணவேடிக்கை சிறப்பாக முழுநிலவுடன் போட்டியிட்டு வாணத்தை வர்ணமயமாக்கியது..
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் திருவிழாதான் என்றாலும் ஏழாம் அறிவு திரைப்படத்திற்குப் பின் வந்த விழா இன்னமும் அதிகமாக களைகட்டி சிறப்பாக்கியது.. 






Bathing Buddha. South Bank, Brisbane

Buddha Birthday Festival South Bank, Brisbane

FESTIVAL OF LANTERNS IN CHIANG MAI, THAILAND
Buddha Birthday World's Fair park. Brisbane


Sri Lankan Vesak Festival, Vihara Temple, Brisbane,

Zhong Yuan Temple in Suzhou city



17 comments:

  1. புத்தம் சரணம் கச்சாமி
    தர்மம் சரணம் கச்சாமி
    சங்கம் சரணம் கச்சாமி

    தொடரும்.......

    ReplyDelete
  2. புத்தரைப் பற்றியும் பெளத்தமதக் கொள்கைகளைப் பற்றியும் நன்கு
    அறிய முடிந்தது.

    ReplyDelete
  3. அன்புதான் இன்ப ஊற்று;
    அன்புதான் இன்ப ஜோதி.

    ஆஹா அழகாகச் சொன்னீர்கள்.

    அதே ..... அதே !!

    ReplyDelete
  4. படங்கள் யாவும் நல்லாயிருக்கு.

    //ஆஸ்திரேலியாவில் SOUTH BANK என்னும் இடத்தில் புத்த பூர்ணிமா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது//

    மிக்க மகிழ்ச்சி.

    ஆஸ்திரேலியா போகாமலேயே இங்கிருந்தே இந்தப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  5. கடைசிபடமும், கடைசியிலிருந்து ஐந்து மற்றும் ஆறாவது படமும் அருமை.

    ஏனென்றால் அவற்றில் மனிதர்கள் நிறைய பேர் இருப்பினும் யாருமே சரியாகத் தெரியவில்லை.

    இயற்கையின் ”அன்பு” மட்டுமே அவற்றில் நிறைந்துள்ளதாகத் தெரிகிறது.

    ReplyDelete
  6. Buddha Birthday Festival South Bank, Brisbane என்ற வரிகளுக்குக் கீழே காட்டப்பட்டுள்ள

    ”பொடியனாக நின்று போஸ் கொடுக்கும் புத்தர்”

    சும்மா எண்ணெய் தேய்த்துவிட்டது போல நல்ல பளபளா.... பீங்கான் பொம்மையாக இருக்கும் போலிருக்கு..

    எவ்ளோ பெரிய காது??????

    ஒரு விரலை மட்டும் உயரே தூக்கிக்காட்டி ......

    ;)

    ReplyDelete
  7. அதற்குள் கடைசியில் இன்னொரு படத்தை நுழைத்து விட்டீர்களே!

    அதுவும் ஜோர் ஜோர்.

    ஒரு நேயர் பார்த்து ரஸித்து பின்னூட்டமும் கொடுத்த பிறகு இதுபோல் புதிதுபுதிதாக படம் சேர்க்கலாமா? அது நியாயமா? சமயத்தில் அந்த நேயர் தரிஸிக்க முடியாமல் போய்விடும் அல்லவா?

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புதான் இன்ப ஊற்று;
    அன்புதான் இன்ப ஜோதி.

    ஆஹா அழகாகச் சொன்னீர்கள்.

    அதே ..... அதே !!

    அன்பான கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  9. Aha beautiful. I never never can imagine to visit the places. But you made me to see by your pictures.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  10. புத்த பூர்ணிமாவின் விளக்கத்தோடு நிறைவான படங்களோடு அருமையான கட்டுரை.

    ReplyDelete
  11. அழகான புத்தரை தரிசித்தேன். உங்களைப் போல படங்களைத் தேர்வு செய்ய இயலாது.

    ReplyDelete
  12. மிகப் பிரம்மாண்ட பதிவால் அருமையாக புத்தபூர்ணிமாவை பெருமைப்படுத்திய பகிர்வுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. புத்த பூர்ணிமாவைப் பற்றிய தெளிவான பதிவு. அணைத்து படங்களும் அருமை அம்மா

    ReplyDelete
  14. கர்நாடகாவில் இருக்கும் ஒரு புத்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன். மிகவும் ரம்யமாக அமைதியான இடம். பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  15. புத்தரை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  16. 113. பத்மதளாக்ஷா கோவிந்தா

    ReplyDelete
  17. 2962+8+1=2971 ;) ஓர் பதிலுக்கு நன்றி

    ReplyDelete