Wednesday, August 1, 2012

சீர் மிகு சித்ரான்னங்கள்



https://sites.google.com/site/tamilcult/golu010.jpghttps://sites.google.com/site/tamilcult/golu010.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG1NfMLL1YpzHpeMfw_KOmPaJZK4lLbVW_anAyfzH4qeDLrps9BrxoeJHIWm3fDiwVwryS4plopAjY7joFlZ8VpvRf2b_0qjHqNaavrgL40jvcb6TI3pZE6va3xniM2_MOHvxCwhSkGn4/s1600/perumaal+thaayar.jpghttp://aravarasan.files.wordpress.com/2010/08/e_1280554222.jpeg
http://www.heritagewiki.org/images/2/2a/Mandapam_with_amman.jpghttp://foodcourt.files.wordpress.com/2006/08/dsc00213.JPG?w=455&h=96

 http://jiboombaa.com/wp/wp-content/uploads/2011/01/P1250745-Small.jpg
காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண்டு ; 
அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்யும். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி,தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படி செய்கிறார்களாம். 

சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரி அதிக சக்தி யையும் புனிதத்தையும் பெறுகிறாள். , 
ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாளாகவும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும்  அமைகிறது..
  அம்மா மண்டபத்தில் ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார்.  ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். 
சீர் வரிசைகளில் விதவிதமான  மங்கலப் பொருட்கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில்  காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்லும் அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.
ஆடிப்பெருக்கு அன்று அருகில் உள்ள நதியில்  சித்ரான்னங்கள் செய்து பெருமாளுக்கு ஆராதனம் செய்வார்கள். 
சித்ரான்னங்கள் கூட்டு அப்பளம் வடகம் போன்றவை பொரித்து  ஆற்றங்கரைக்கு சென்று சாப்பிடுவார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLsiNXb-r2aBAZn8LhO-13sWrPnICUNuClgD-pdq7EdrXmZiEUCVBWAtz0Stf8PH2WKU68oT3kRtjPBE5jJsPaS5o-BsnMvl5vdPdlEvZSI4LuO4Mb4MXZ2uiFnK9mnmgm1H4GX6rMng6I/s400/aadi+18+a.jpg
காவிரியில் தண்ணீர் இல்லாத காலங்களிலேயே ஊற்று வெட்டி மிகுந்த உற்சாகமாக கொண்டாப்படும் விழா ஆடிப்பெருக்கு,
தண்ணீர் பெருக்கெடுத்தால் உற்சாகமும் கரைபுரளும்.....

படித்துறையை , பசுஞ் சாணத்தால் மெழுகி  வாழை இலைவிரித்து, மஞ்சள் பிள்ளையார் வைத்து  விளக்கு ஏற்றி பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், ரவிக்கைத்துணி, காதோலை, கருகமணி, திருமங்கல்யச் சரடு , வெல்லம்+அரிசி சேர்த்து படைத்து, கற்பூரம் காட்டி, காவிரிக்கு பூஜை செய்து, புதிதாக திருமணமானவர்களுக்கு பெரியவர்கள்  ஆசிர்வாதம்செய்வது வழக்கம்..













சுற்றத்தோடு சேர்ந்திருந்து சித்ரான்னங்கள் உண்டு பனையோலையை வட்டமாக மடித்து அதை ஒரு சிறு கருநிற வளையலால் இறுக்கியிருக்கும் காதோலை , கருகமணி வெற்றிலை பாக்கு மஞ்சள் மங்கலப் பொருட்களை ஓடிக் கொண்டிருக்கும் நதியில் போட்டு, காவிரித்தாயை வணங்கி குளித்து கரை ஏறுவார்கள்.  
காப்புக் கயிறு எனும் மஞ்சள் சரடை கட்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு
கொங்கு மண்டலத்தில்  ஊஞ்சல் கட்டி சிறுவர் முதல் 
பெரியவர் வரை ஆடுவார்கள
 http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a8/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_7%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.jpeghttp://anzzcafe.com/wp-content/uploads/2011/03/photo0810.jpg?9d7bd4

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7a0j-9dxZwIKRT5bTOuechFnYst2ecZV_DPkBBq93cA744Qw4ckQBlXx6KsFy89SfruK0wKRSm1ZLBZDV_zLZ3bnKWRztIXbKzekMYWrOAVNAtCuSMVyXct_b6eL9rFTXoJ0zZsKEEQ4/s400/Lemon+Rice.JPGhttp://2.bp.blogspot.com/_PrAvgW_UQiM/SDsrpDQIohI/AAAAAAAACXo/OtGd-lSJHGA/s400/urad_rice.jpg
http://lh6.ggpht.com/-RCKXZmg9P7I/TpuS6vtEU2I/AAAAAAAAJfA/aQH0zmATQoY/DSC_3161_thumb%25255B6%25255D.jpghttp://insidetheindiankitchen.files.wordpress.com/2008/10/26102008-103.jpg
http://chollukireen.files.wordpress.com/2012/02/p1010843.jpg

22 comments:

  1. பதினெட்டாம் பெருக்கு பற்றிய அழகிய செய்திகள் உள்ளம் கவர்ந்தன.

    ReplyDelete
  2. ஆஹா! பிரமாதம்!!

    இதை இதை இதைத்தான் நான் நேற்றே கேட்டிருந்தேன்.

    மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  3. அந்தப்பட்டு வேஷ்டி கட்டி, மைனர் செயின் போட்டு ஆளுக்கொரு அப்பளமாக கையில் வைத்திருக்கும் பொடிப்பயல்களும், அவர்களுக்கு நுனி இலை போட்டு பரிமாறப்பட்டுள்ள பதார்த்தங்களும் அழகோ அழகோ ... என் இரு பேரக்குழந்தைகளையும் நினைவு படுத்துவதாக உள்ளது.

    ஒருவன் இப்போது என்னிடம் கள்ளப்பூணல் போட்டுக்கொண்டு, அமர்ந்து லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறான். ;)

    ReplyDelete
  4. குண்டுப்பயலுக்குக் கீழே காட்டியுள்ள அருமையான சேமியா, முந்திரி, திராக்ஷை முதலியன போட்ட பால் பாயஸத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

    பாயஸத்தை அப்படியே எடுத்துப் பருக வேண்டும் போன்ற ஆசையாக உள்ளது.

    பாயாஸம் குடித்தால் ஆயாஸம் தீரும் என்பார்கள். ;)

    ReplyDelete
  5. காட்டப்பட்டுள்ள சித்ரான்னங்களில் அந்த தேங்காய் சாதம் சூப்பராக உள்ளது.

    அதன் அருகே கேஸரியோ, சர்க்கரைப்பொங்கலோ, அக்கார அடிசலோ அதுவும் ஜோராகத் தான் உள்ளது.

    புளியஞ்சாதம் நாக்கில் நீர் வரவழைப்பதாக உள்ளது. நல்ல காரசாரமாகக் காட்டப்பட்டுள்ளது. ;)

    ReplyDelete
  6. பதிவைப் படித்தவுடன் சித்தரான்னம் சாப்பிட்டது போலவே இருக்கிறது.

    ReplyDelete
  7. அடுத்த அந்த லெமென் ரைஸ் படு ஜோராகக் காட்டப்பட்டுள்ளது.

    அந்த முள்கரண்டி மிகவும் தொல்லையாக இருக்கும். சாதாரண முரட்டு ஸ்பூனாகவே போட்டிருக்கலாம்.

    இதில் எடுத்துச் சாப்பிட்டால், பாதியும் இடைவெளிகள் வழியாகக் கீழே விழுந்து விடும். எச்சில் செய்து சாப்பிட்டால் சமயத்தில் எகிறைப் பதம் பார்த்து விடும்.

    ReplyDelete
  8. இன்று, இந்தப்பதிவினில் முதல் படத்திலிருந்து ஆரம்பித்து பல படங்கள் திறக்க மறுக்கின்றன.

    திறந்த படங்கள் எல்லாமே எனக்கு மிகவும் மனதுக்கு நிறைவாக உள்ளன.

    ஆடிப்பதினெட்டுக்கு மிக மிக்கியமான சித்ரான்னங்களைப் படத்திலாவது காட்டக்கூடாதா என ஓர் ஏக்கத்துடன் நேற்று நான் கேட்டதற்கு, நிறைய நுனி இலைகளாகப் போட்டு, பலவிதமான பதார்த்தங்களை அன்புடன் பரிமாறி அசத்தி, எந்த இலையில் வேண்டுமானாலும் அமருங்கள், எதை வேண்டுமானாலும் ருசித்துச் சாப்பிட்டு மகிழுங்கள் எனச் சொல்லி விட்டீர்கள்.

    பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பது போல, நானும் மயங்கிப்போய், சொக்கிப்போய், பின்னூட்டங்களும் இட ஆரம்பித்து விட்டேன்.

    தங்களின் சாமர்த்தியமே சாமர்த்தியம் தான். ஒவ்வொரு முறையும் எப்படியும் உங்களுக்கே இறுதியில் வெற்றி கிடைத்து விடுகிறது.

    அதனால் என்ன? உங்களின் வெற்றியில் தான் என் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள்.

    தாங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான மிகப்பெரிய சித்ரான்ன விருந்தே வைத்து விட்டீர்கள்.

    நானும் எல்லாவற்றையும் மறந்த சாப்பாட்டு இராமனாகி விட்டேன்.

    வாழ்க!

    ReplyDelete
  9. நிறைந்த வயிற்றுக்கு நீர் மோர் பானகமாம் என்பார்கள்.

    அதுபோல சித்ரான்னங்களுடன் கூட, நொறுக்குத்தீனிகளான, முறுக்கு, கொழுக்கட்டைகள், சங்குச்சக்கர வடிவில் வடாம்கள், கேரட் வெள்ளரி போன்ற பச்சைக்காய்கறிகள் [நடுவில் முழுப்பச்சைமிளகாய் வேறு] எலுமிச்சைச்சாறுடன் .....

    அடடா, ஒரே அசத்தல் .... தான்! ;)

    எது செய்தாலும், எது காட்டினாலும் எங்க ஆள் படைப்புக்களில், படையல்களில் ஒரு தனி அழகு
    தான் ..

    கண்ணைக்கட்டி என்னை அப்படியே சொக்க வைக்குதே! ;)))))

    ReplyDelete
  10. பாதிப்படங்களுக்கு மேல் திறக்காமல் உள்ளதும், எழுத்துக்களின் alignment சரியாக இல்லாமல் உள்ளது ஏதோ சற்றே அவசர அடியில் அள்ளித் தெளித்து ப்ரிமாறியது போன்ற ஒரு சிறு குறை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அந்தக்கால படம் ஒன்றில் “மாயாபஜார்” என்று நினைக்கிறேன். கல்யாண சமையல் சாதம் ... காய்கறிகளும் பிரமாதம் ..... பாட்டு மட்டுமல்ல; வேறு ஒரு நகைச்சுவையும் வரும். அதாவது அண்டா அண்டாவாக எல்லா உணவு வகைகளும் அடுக்கப்பட்டிருக்கும்.

    காமெடியன் இருவர் வருவார்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து சோதிப்பார்கள். ஏதாவது ஒரு குறை கண்டு பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

    என்ன இருந்து என்ன பிரயோசனம். கிஞ்சித்து கீரை உண்டா ... அது இல்லையே ... பிறகு என்ன பிரயோசனம் என்பார்கள்.

    அந்தக்காட்சி மிகவும் நகைச்சுவையாக இருக்கும். நான் சிறுவயதில் பார்த்து சிரித்து மகிழ்ந்துள்ளேன்.

    கிஞ்சித்து கீரை உண்டா? என்பது போலவே, நான் ஒருசில குறைகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

    தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். எல்லாவற்றையும் பார்த்ததில் மகிழ்ச்சியில் “பார்த்தாலே பசி தீரும்” என்பது போல என் பசியைத் தீர்த்து விட்டீர்கள்.

    வயிறாற உங்களை நானும் வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வாழ்க வாழ்க!

    vgk

    ReplyDelete
  11. இன்று நீர் இல்லாமல் வற்றியுள்ள காவிரித்தாயை தங்களின் படத்திலாவது [அன்பென்னும் தாகம் தீர்க்கும் நீர்] பொங்கி வழியும் காவிரியாகக் காட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அனைத்தும் அருமை. நல்ல பதிவு. நேர்த்தியான பகிர்வு. ;)))))

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

    ReplyDelete
  12. இன்று நீர் இல்லாமல் வற்றியுள்ள காவிரித்தாயை தங்களின் படத்திலாவது [அன்பென்னும் தாகம் தீர்க்கும் நீர்] பொங்கி வழியும் காவிரியாகக் காட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அனைத்தும் அருமை. நல்ல பதிவு. நேர்த்தியான பகிர்வு. ;)))))

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

    ReplyDelete
  13. "ஆடிப்பெருக்கு" என்பது வழக்கொழிந்து போகும் நிலையில் காவேரி உள்ளது. இதனை திரு.கோபால க்ருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுவார் என எண்னியபடி குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete
  14. நல்ல படங்கள்... இவையெல்லாம் இப்போது குறைந்து விட்டது...
    இனி வரும் காலங்களில் இப்படி எல்லாம் நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  15. காவிரிக்கரை மக்களின் ஆடி பதினெட்டாம் பெருக்கு பற்றிய தகவல்களும் படங்களும் மிகவும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. படங்களும் பதிவும் சூப்பர் அந்த ரெண்டு குழந்தைகளும் கொள்ளை அழகோஅழகு திருஷ்டி சுத்தி போடனும்.

    ReplyDelete
  17. Superb! inru chittrannnangal saapidum pOthu ungaLai ninaiththuk kondEn! :-))

    Thanks for the wonderful pictures.

    ReplyDelete
  18. என்ன இருந்தாலும் இந்த குழந்தைகள் சாப்பிடுவது ஒரு தனி அழகுதான் எங்கும் கான கிடைக்காதது :)

    ReplyDelete
  19. ஆடிப்பெருக்கு விழாவில் கலந்துகொண்ட மகிழ்ச்சியைத் தருகின்றது.

    வயிறு நிறைய பிரசாதம் சாப்பிட்டோம்.

    அருமை.

    ReplyDelete
  20. சீர்மிகு சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete