Sunday, August 26, 2012

அற்புத ஆவணி மூலத் திருநாள்








ஈசன் அடிக்கு அன்பு இல்லார் போல் எளியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு உடையார் போல் வலியார் இல்லை யாவர்க்கும்
ஈசன் அடிக்கு அன்பு இன்மையினால் எளிதாய் திரிந்த இக் கயவாய்
ஈசன் அடிக்கு அன்பு உடைமையினால் வலிது ஆயிற்றே எவ்வுயிர்க்கும்.

தென்னாடுடைய சிவமே எந்நாட்டவர்க்கும் இறைவனாய் கருணை கொண்டு அருளும் ஆவணி மூலம் நட்சத்திர நாள், தட்ப வெப்பநிலையை தெளிவாக நிர்ணயிக்கும் அற்புதத் திருநாள். 

ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று காலையில் சூரியன் உதயமாகும் போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால், அந்த ஆண்டு முழுவதுமே வெயில் கடுமையாக இருக்கும். 

மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான சீதோஷ்ணம் காணப்படும். 

சூரியன்  போன்ற கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் ,  இறைவனால் படைக்கப்பட் கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.  

மதுரையில் மாதங்களின் பெயரால் தெருக்கள் உள்ளன.. 

ஆவணித் தெருவுக்கு மட்டும் மூல நட்சத்திரத்தைச் சேர்த்து ஆவணி மூல வீதி  என்பதன் மூலம் ஆவணி மூல  நாளின் முக்கியத்துவம் புரிகிறது. 

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும்  ஆவணி மாத திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லீலைகள் நடைபெறும்.
கருங்குருவிக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சி 

நாரைக்கு முக்தி கொடுத்தல் நிகழ்ச்சி
 
தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை 
சுந்தரேசுவரருக்கு பட்டா பிஷேகம் நிகழ்ச்சி  
நரியை பரியாக்கிய லீலை 
தங்கசப்பரத்தில் ஆவணி மூலவீதி வழியாக திருக் கல்யாண மண்டபத்தில் சுவாமியும், அம்மனும்  எழுந்தருளி குதிரை கயிறு மாற்றிக் கொடுத்த லீலையில் பங்கேற்ற பின் ஆவணி மூல வீதியில் எழுந்தருளுவார்கள்.புட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கும் ... 
விறகு விற்ற லீலை நிகழ்ச்சி பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி ஆகியவை சிறப்பாக நிகழும்..
மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. 

வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர். 
கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார். அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. 

 படிப்பதைப் பயன்படுத்தும் சமயோசித அறிவு, தைரியம், கடலையே தாண்டுவது போன்ற அமானுஷ்ய சக்தி போன்றவை பெற்ற அந்த நட்சத்திரத்தை தன் ஜென்ம நட்சத்திரமாக்கிக் கொண்டார் ஆஞ்சநேயர். 

சுந்தரேஸ்வரப் பெருமானுக்கு பட்டம் சூட்டி, அவரது கருணையால் சீதோஷ்ணம் நல்லபடியாக இருக்க வேண்டும் என வேண்டி , மழை வளமும் நன்றாக இருக்க. ஆவணி மூலத்தன்று, சிறந்த சீதோஷ்ணம் கிடைக்க பிரார்த்திப்போம்..

12 comments:

  1. அற்புத ஆவணி மூலத்திருநாள்

    அழகிய படங்களுடனும்

    அற்புத விளக்கங்களுடனும்

    மிகவும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு..
    படங்கள் மிக அழகாக உள்ளது

    ReplyDelete
  3. இடையில் காட்டப்பட்டுள்ள முழு கோபுரம் வெகுஅழகாகப் பளிச்சென்று உள்ளது.

    அதன் கீழ் காட்டப்பட்டுள்ள குளம் இரவின் மின்னொளியில் கண்ணைக் கவர்வதாக உள்ளது.

    அதற்கு அடுத்த படத்தில் கோபுரத்தின் உச்சி மட்டும், ஒரு பக்கமாகக் காட்டியுள்ளதும் நல்ல கலர்ஃபுல்லாக உள்ளது.

    உச்சியில் உள்ள முழியும், கோரப்பற்களும் தான் சற்றே பயமுறுத்துவதாக உள்ளன.

    ReplyDelete
  4. கருங்குருவிக்கு உபதேசம்

    நாரைக்கு முக்தி

    தருமிக்கு பொற்கிழி

    நரியை பரியாக்கியது

    குதிரை கயிறு மாற்றிக் கொடுத்தது

    புட்டுக்கு மண் சுமந்தது

    விறகு விற்றது

    அடேங்கப்பா எத்தனை லீலைகள்!

    சும்மாவா 64 லீலைகள் அல்லவா!!

    மனிதர்களே இன்று ஆயிரக்கணக்கான திருட்டு லீலைகள் செய்து வருகிறார்கள். பிறகு மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள், அவஸ்தைப்படுகிறார்கள்.

    பகவானின் லீலைகள் அப்படியல்ல!
    அவைகள் திருவிளையாடல்கள். கேட்கவே ஸ்வாரஸ்யமானவைகள்.

    ReplyDelete
  5. வாக்தேவியான அன்னை சரஸ்வதி தேவியின் நக்ஷத்திரமும் ’மூலம்’

    கேது என்ற கிரஹத்திற்கான நக்ஷத்திரமும் ’மூலம்’

    எல்லா ஆற்றல்களும் ஒருங்கே பெற்ற ஸ்ரீ ஹனுமனின் நக்ஷத்திரமும் ’மூல்ம்’

    என்ற அரிய தகவல்களை இன்று தங்கள் ’மூலம்’ எல்லோரும் அறிந்து கொண்டோம்.

    நன்றி. சந்தோஷம்.

    ReplyDelete
  6. கீழிருந்து ஆறாவது வரிசையில் உள்ள நம்மாளு தொந்திக்கணபதி :
    முக்குருணிப் பிள்ளையாரா?

    அவர் ஜோராக அமர்ந்துள்ளார்.

    மிகப்பெரிய கொழுக்கட்டை போன்ற வயிறு! சூப்பர்!!

    ReplyDelete
  7. ”ஆண் ’மூலம்’ அரசாளும்
    பெண் ’மூலம்’ நிர்மூலம்”

    என்று தவறுதலாக ஓர் சொல் உலா வருகிறது.

    இது யார் ’மூலம்’ பரவியதோ தெரியவில்லை.

    வாக்குக்கும், அருள் வாக்குக்கும், அனைத்துக்கல்விக்கும் இருப்பிடமான சரஸ்வதி தேவியின் நக்ஷத்திரமே ’மூலம்’ என்னும் போது, இந்த தவறான மூட நம்பிக்கைப் பிரச்சாரம் செய்து வருபவர்களை நாம் என்ன செய்வது?

    ஒருவேளை அவர்களுக்கு மூளைப்பிசகோ அல்லது மூலக்கடுப்போ இருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம் !

    ’மூலம்’ நக்ஷத்திரத்தின் மஹிமையை இந்தப்பதிவின் ’மூலம்’ இன்று அனைவரும் அறிந்து கொண்டோம்.

    இனி அவ்வாறு பேத்துபவர்களை நாம் யார் ’மூலம்’ ஆவது தண்டிப்போம் அல்லது நாமே கண்டிப்போம்.

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் அற்புதம்.

    ReplyDelete
  9. smiling sundareswarar picture is superb

    ReplyDelete
  10. ஆஹா நேற்று ராமநாமம் இன்று ஈசன், மதுரை மீனாட்சி, சரஸ்வதி தாயாரைப்பற்றிய பகிர்வா.... அருமை அருமை ராஜேஸ்வரி....

    சரஸ்வதி தேவிக்கு மூல நட்சத்திரமா நான் இதுவ்ரை அறிந்திராத தகவல் அனுமன் பிறந்த நட்சத்திரம் தான் மூல நட்சத்திரம் என்பதால் மாதத்தில் மூல நட்சத்திர நாளன்று நாங்கள் வீட்டில் அனுமனின் ஜாதகம் வைத்து பூஜை செய்வது வழக்கம்...

    அழகிய படங்கள் அம்பாள் என்னமாய் புன்னகை முகத்துடன் ஜொலிக்கிறாள்....

    நரிக்கு முக்தி கொடுத்த சுந்தரேஸ்வர ஸ்வாமிகள் படம் மிக அருமை...

    அத்தனை விஷயங்களும் படங்களும் அடங்கிய அற்புதமான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
  11. // ”ஆண் ’மூலம்’ அரசாளும்
    பெண் ’மூலம்’ நிர்மூலம்”

    என்று தவறுதலாக ஓர் சொல் உலா வருகிறது.

    இது யார் ’மூலம்’ பரவியதோ தெரியவில்லை.

    வாக்குக்கும், அருள் வாக்குக்கும், அனைத்துக்கல்விக்கும் இருப்பிடமான சரஸ்வதி தேவியின் நக்ஷத்திரமே ’மூலம்’ என்னும் போது, இந்த தவறான மூட நம்பிக்கைப் பிரச்சாரம் செய்து வருபவர்களை நாம் என்ன செய்வது?

    ஒருவேளை அவர்களுக்கு மூளைப்பிசகோ அல்லது மூலக்கடுப்போ இருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம் !

    ’மூலம்’ நக்ஷத்திரத்தின் மஹிமையை இந்தப்பதிவின் ’மூலம்’ இன்று அனைவரும் அறிந்து கொண்டோம்.

    இனி அவ்வாறு பேத்துபவர்களை நாம் யார் ’மூலம்’ ஆவது தண்டிப்போம் அல்லது நாமே கண்டிப்போம்.//

    ரசித்தேன் கோபாலக்ருஷ்ணன் சார் :)

    ReplyDelete
  12. மஞ்சுபாஷிணி said...
    *****”ஆண் ’மூலம்’ அரசாளும்
    பெண் ’மூலம்’ நிர்மூலம்”

    என்று தவறுதலாக ஓர் சொல் உலா வருகிறது.

    இது யார் ’மூலம்’ பரவியதோ தெரியவில்லை.

    வாக்குக்கும், அருள் வாக்குக்கும், அனைத்துக்கல்விக்கும் இருப்பிடமான சரஸ்வதி தேவியின் நக்ஷத்திரமே ’மூலம்’ என்னும் போது, இந்த தவறான மூட நம்பிக்கைப் பிரச்சாரம் செய்து வருபவர்களை நாம் என்ன செய்வது?

    ஒருவேளை அவர்களுக்கு மூளைப்பிசகோ அல்லது மூலக்கடுப்போ இருக்குமோ?

    இருக்கலாம் இருக்கலாம் !

    ’மூலம்’ நக்ஷத்திரத்தின் மஹிமையை இந்தப்பதிவின் ’மூலம்’ இன்று அனைவரும் அறிந்து கொண்டோம்.

    இனி அவ்வாறு பேத்துபவர்களை நாம் யார் ’மூலம்’ ஆவது தண்டிப்போம் அல்லது நாமே கண்டிப்போம்.*****

    //ரசித்தேன் கோபாலக்ருஷ்ணன் சார் :)//

    தங்கள் ரசிப்புக்கு மிகவும் சந்தோஷம். என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன்
    VGK


    ReplyDelete