Tuesday, January 29, 2013

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில்






மாங்காடு தன்னிலவள் காமாட்சி!
மதுரை மண்ணிலவள்  மீனாட்சி!
காஞ்சியிலே இன்றைக்கும் காமாட்சி!
காசியிலே என்றென்றும் விசாலாட்சி!
கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அனுவாவி மலையடிவாரத்தில்  லலிதாம்பிகையாக வீற்றிருந்து அருள் பொழிகிறாள்...

சாட்சாத் அம்பிகையே நம்முடன்  நேரில் தோன்றுவது போன்ற அமைப்பில் மனதில் நிறைந்து எழில்பொங்க அருளாட்சி நடத்துகிறாள் அன்னை ..
ஆறாக அவளருள் ஓடிவரும்  தேராக அவளுருவம் ஆடிவரும்!
தேனாக மனத்தினில் நின்று விடும்! தேடும்வரம் எல்லாமே தந்துவிடும்!
பூவாக மலர்கின்ற மென்மையவள்! நானென்றும் அவளழகை பாடிடுவேன்! நலமோடு பலகாலம் வாழ்ந்திடுவேன்; அம்மா!!!

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் வளாகத்தில் குருகணபதி, செல்வமுத்துக்குமார சுவாமி, காமேஸ்வரர், லட்சுமி நரசிம்மர், விஷ்ணு துர்கை, ஆனந்த பைரவர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரஸ்வதி, நாககன்னி, கன்னிமார் மற்றும் வன பத்திரகாளி சன்னதிகளும், ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் மற்றும் அலுவலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டும், அனுக்கிரக நவகிரக நாயகர் சன்னதி, ஆஞ்சநேயர், தன்வந்திரி சன்னதிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ வித்யா தியானப் பயிற்சி ஆரம்ப நிலை முதல் ஐந்தாம் நிலை மூல மந்திர தீட்சை வரை பெற சென்னையிலும்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன ...

Sri Maha Meru is the three dimentional realization in Samayachara Sri Vidya
Shri Lalithambika Jyothish Gurukulam has brought out a perfect carving of 
Maha Meru made out of five elements Gold,Silver,Copper,Brass and Iron. 




Scenes from Navaratri Samayachara Sri Vidya Meditation Camp







Contact us for directions at wisdom@srilalithambika.org.
We also work with volunteer student groups at universities across the cities, who arrange their own collection modes. Get in touch with us to find out if there’s one near you.



22 comments:

  1. Aha......
    I am a part of this Srividya.....
    Namaskaram to Swamiji.
    Thanks thanks a lot for the valueable post dear.
    viji

    ReplyDelete
  2. அருமை . நன்றி

    ReplyDelete
  3. லலிதாம்பிகை கோவிலுக்கும், அனுவாவி முருகன் கோவிலுக்கும் பலதடவை சென்று வந்து இருக்கிறேன். அழகான ஸ்ரீ லலிதாம்பிகை பீடம்.
    அங்கு தியான சம்பந்தபட்ட புத்தகம் வாங்கி வந்தேன்.
    படங்கள் பகிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. லலிதாம்பிகை கோவிலுக்கும், அனுவாவி முருகன் கோவிலுக்கும் பலதடவை சென்று வந்து இருக்கிறேன். அழகான ஸ்ரீ லலிதாம்பிகை பீடம்.
    அங்கு தியான சம்பந்தபட்ட புத்தகம் வாங்கி வந்தேன்.
    படங்கள் பகிவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. லலிதாம்பிகை கோவிலுக்கும், அனுவாவி முருகன் கோவிலுக்கும் பலதடவை சென்று வந்து இருக்கிறேன். அழகான ஸ்ரீ லலிதாம்பிகை பீடம்.
    அங்கு தியான சம்பந்தபட்ட புத்தகம் வாங்கி வந்தேன்.
    படங்கள் பகிவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. படங்களும் ஸ்ரீ லலிதாம்பிகை பற்றிய குறிப்பும் மிக அருமை.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  7. அழகிய அருமையான அற்புத ஸ்ரீலலிதாம்பிகையினைப்பற்றிய பதிவு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!

    ReplyDelete

  8. ஸ்ரீ லலிதாம்பிகைக் கோயில் என்ற தலைப்பைப் பார்த்ததும் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலோ என்று எண்ணினேன். ஒரு அழகிய கிராமியப் பின்னணியில் அமைந்திருக்கும் அக்கோயில் பற்றி பதிவு இட்டிருக்கிறீர்களா.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  10. படங்கள்அருமையான பகிர்வு

    ReplyDelete
  11. அம்பிகையின் முகத்தில் என்னே ஒரு தேஜஸ்.1வது படத்தில். பார்த்துக்கொண்டேஇருக்க‌
    லாம். அழகான படங்களுடன் நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  12. அம்பிகையை பார்க்கும் போது தெய்வீகமும், அமைதியும் நிலவுகிறது! நன்றி!

    ReplyDelete
  13. Wonderful beat ! I wish to apprentice while you amend your site, how can i subscribe for
    a blog site? The account aided me a acceptable deal. I had been a little bit acquainted of this
    your broadcast offered bright clear idea
    Feel free to surf my weblog - louis vuitton outlet store

    ReplyDelete
  14. இந்தப் பதிவைப் படித்தவுடன் 'ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேச்வரி ஸ்ரீ லலிதாம்பிகே' என்ற மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் 'கணீர்' குரல் பாட்டுதான் நினைவுக்கு வந்தது.

    படங்களும் செய்திகளும் அருமை!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. நாங்கள் போகாவிடிலும் தங்கள் மூலம் பார்ப்பது -
    படங்களிற்கும்
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. இந்தக் கோயில் கட்டப்பட்ட பிறகு பலமுறைகள் அனுவாவி போனபோதும் இன்னும் லலிதாம்பிகையைத் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  17. வெங்கடேசன்January 30, 2013 at 10:32 AM

    ஸ்ரீ லலிதாம்பிகைக் கோயில் , திருச்சி - முசிறி சாலையில் திருஈங்கோய்மலை எனுமிடத்திலும், மலையினடியில் அமைந்துள்ளது.இங்கு அம்பாளுக்கு துறவறம் பூண்ட மாதாக்களே பூஜைகள் செய்வது சிறப்பு.

    ReplyDelete
  18. அழகு செளந்தரியாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் லலிதாம்பிகைத் தாயை வணங்கி நிற்கின்றோம்.

    ReplyDelete
  19. முதலில் காட்டியுள்ள அம்மனின் முகத்தில் தான் எத்தனைச்சிறப்புகள்.

    காந்தக்கண்கள், கோவைப்பழ சிவப்பினில் உதடுகள்.

    [’கோவை’க்காரி இந்த அம்பாள் என்பதாலோ?]

    கும்மென்று குண்டு மூஞ்சிக்கு ஏற்ற நீண்ட நாசியில் இரட்டை மூக்குத்திகள். அடடா என்ன அழகு!

    எட்டுக்கல் பேஸ்திரி என்பதும் இது தானோ?

    நெற்றியில் கஸ்தூரித் திலகம். மஞ்சள் சந்தன முகம் சூப்பர்.

    வெள்ளிக் கிரீடம் அதன் நடுவே மாதுளை முத்துப்போல ஒளிரும் சிவப்புக்கல்.

    பக்தர்களின் குறைகளை உள்வாங்கிக்கொள்ளக்கூடிய பெரிய காதுகள், அதில் தொங்கிடும் வட்ட வடிவடிவத் தோடு - அதுவும் குளிர்ந்த பசுமையான நிறத்தினில் ....

    கழுத்தை ஒட்டி ஆபரணம் + தொங்கிடும் ஆபரணங்கள், திருமாங்கல்யம் .....

    அந்த ஷைனிங் ஆன புடவையைப்பாருங்கோ!

    பொடிப்பொடி கட்டத்துடன் கூடிய லைட் பச்சையில் சும்மா ஜொலிக்குதே ... உங்களின் பதிவுகள் போலவே.

    வைத்த கண் வாங்காமல் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேனாக்கும். ;)))))

    ஆடை ஆபரணங்கள் புஷ்ப அலங்காரங்கள் என அத்தனையும் அழகோ அழகு.

    ஆனாலும் இந்த அம்பாளை நான் முன்பே கூட “எங்கேயோ ...... பார்த்த ஞாபகம்”.

    ஆஆஆஆ நினைவுக்கு வந்து விட்டதூஊஊஊஊ.

    தைப்பூசத்தில் பார்த்துள்ளேன் ;))))))

    என் மனதுக்குப்பிடித்தமான அம்பாளுக்கு என் இனிய வந்தனங்கள்!

    ReplyDelete