Saturday, October 15, 2011

அனுகூலங்கள் அருளும் அனுமன்





ஆபதாம் அபஹர் தாரம் தாதாரம் ஸர்வஸத்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்


ஆர்த்தானம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நாமாம்யஹம்.'

ராமா என்று சொன்னால் எல்லா துன்பங்களும்விலகும்; 
இழந்தன கிட்டும்; எல்லாவகையான அனுகூலங்களும் கிடைக்கப் பெறும்;மனம் மகிழும்; நன்மைகள் ஏற்படும்; 
ஸ்ரீராமபிரானை எப்பொழுதும் வழிபடுகிறேன். 

வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலும் தாழ்வுகளிலும் மனம்கலங்காத பக்குவத்தையும் மனஉறுதியையும் தருபவரும், பயத்தைப் போக்குபவரும்;வல்லமை அளிப்பவரும், நம் எதிரிகளை நமக்கு முன்பாகச் சென்று அழித்துநம்மைக் காப்பவருவமான 
ஸ்ரீராமச்சந்திரனை நான் முழுமனதுடன் வணங்குகிறேன்'
அடிக்கடி சொன்னாலே அனைத்து நலன்களும் நம்மைத் தேடி வரும் சுலோகம்..


கைகேயி என்ற பெண் மான் கேட்ட வரத்தில் தசரதன் 
என்னும் சிங்கம் தளர்ந்து, உயிர் நீங்கியது. 

சீதாபிராட்டி கேட்ட பொன் மானைத் தொடர்ந்து ராமபிரான் என்ற சிங்கக் குருளை சென்றதால் ராவண சம்ஹாரத்துக்கு "பிள்ளையார் சுழி' போடப்பட்டது.

ராம பட்டாபிஷேகத்துடன் மங்கள நிறைவு காண்கிறது ராமாயணம்.
 
தமிழகத்தில் நாகையநல்லூர் என்னும் திருத்தலத்தில் கொண்டாடப்படும் கோலாகல ஸ்ரீராமநவமி உற்சவம் சற்று வித்தியாசமானது.
Hanuman Salisa wallpaper
நாகையநல்லூர் திருத்தலத்தில் அக்ரஹாரம் தெருவில் உள்ள
ஸ்ரீராமர் கோயிலில் நடைபெறும் விழாவில் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்

நாகையநல்லூரில் ஸ்ரீராம நவமி உற்சவம் முன்னிட்டு தினமும் உபன்யாசம், நடிப்புடன் கூடிய கதா காலட்சேபம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.

இந்த விழாவின் கடைசி நாளன்று சீதாராம திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண விருந்து அளிக்கப்படும்.
.
ஸ்ரீசீதாராம திருமண வைபவத்திற்குப் பின் பக்தர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி சிறப்பானது.
இந்த விருந்தில் கலந்து கொண்டாலே நம் பாவங்கள் 
நசிந்து புண்ணியம் சேரும் என்கிறார்கள்.
Hanuman Wallpapers For Desktop
தார்சாலையில் அமைக்கப்பட்ட சுமார் 200 மீட்டர் நீளமும், 
ஐந்து மீட்டர் அகலமும் கொண்ட கீற்றுப் பந்தலின் கீழ், 
எவ்விதத் தரை விரிப்பும் இன்றி  பக்தர்கள் 
வரிசையாக அமர்ந்து கொள்வார்கள். 

அனைவருக்கும் தலைவாழை இலை போடப்படும். 

இனிப்புடன் பதினாறு வகைக் காய்கறிகளுடன் வடை, 
அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது. 

அத்துடன் விருந்து உண்ணும் பக்தர்களுக்கு 
ஒரு ரூபாய் தட்சணை வழங்குகிறார்கள். 

விருந்து சாப்பிட்டதும் இலையை மூடக்கூடாது. 
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அந்த இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். 
சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

இத்திருமண வைபவத்தில் ஸ்ரீஆஞ்சநேயருடன் முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் மானசீகமாக விருந்தில் கலந்து கொண்டு, அடியார்களோடு அடியார்களாகச் சாப்பிட்டிருப்பார்கள் என்பது நம்பிகை. 

அதனால் அவர்கள் சாப்பிட்ட இலைகளில், குறிப்பாக அனுமனும் சாப்பிட்டிருப்பதால் அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். இதனால் ராமனின் திருவருள் எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்.
"ராமா' என்ற திருநாமத்தை யார் ஒருவர் பன்முறை ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு சீதாபிராட்டி, லட்சுமணன், ஸ்ரீஆஞ்சநேயருடன் ஸ்ரீராமபிரான் காட்சி தருவார் என்பது ஆன்றோர் கூற்று.

ஒரு கோடி ராமநாமம் ஜபித்ததும்வைகுண்டத்திலிருக்கும் ஸ்ரீராமபிரானின் கோதண்டத்திலிருக்கும் மணி ஒலிஎழுப்புமாம். அந்த ஒலியைக் கேட்டதும் தன் பக்தருக்கு ஸ்ரீராமபிரான் காட்சிகொடுப்பாராம். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து காட்டுப் புத்தூர் என்னும் ஊருக்குச் சென்றால் நாகையநல்லூர் செல்லலாம். நாமக்கல்லிருந்தும் காட்டுப்புத்தூர் சென்று நாகையநல்லூரை அடையலாம்.


பக்தரைப் காக்கும் பஞ்சமுக அனுமன்


Anjaneya Swami WallpaperHanuman Ji wallpaper


38 comments:

  1. ஹே ஆஞ்சநேயா..

    ReplyDelete
  2. அருமையான விளக்கப் படங்களுடன் ”அனுமன்”..

    நன்றி நல்லதோர் பகிர்விர்க்கு..

    ReplyDelete
  3. அழகாய் இருக்கிறது படங்கள் .பதிவும் அருமை மேடம்

    ReplyDelete
  4. ░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
    ░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░
    ░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░
    ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░
    ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░▓░
    ░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░▓░░
    ░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் அருமை.....

    ReplyDelete
  6. எனக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்... ஆஞ்சநேயர் சூரியனை நோக்கி தாவும் பொழுது இந்திரன் சூரியனை காக்க அவரை அடித்ததால் தான் அவர் முகம் வீங்கி குரங்கு போல் ஆனார்... அவர் தாய் தந்தை சார்ந்து பார்த்தாலும் அவர் குரங்கு அல்ல.. அப்படி இருக்க அவருக்கு எப்படி வால் வரையப் பட்டது... வால் இருப்பதாக கதைகள் எழுதப் பட்டது... நான் காமடி பண்ணவில்லை... சீரியோசாக தான் கேக்கிறேன்

    ReplyDelete
  7. ஜெய் ஆஞ்சனேயா

    படங்களும் விளக்கமும் அருமை

    ReplyDelete
  8. http://youtu.be/WR4DVeRRMKU

    For the third Consecutive Saturday, I am inspired to recite and worship Sri Ram and Hanumath Slokas . I am really obliged to you heartily.
    you may at your leisure visit the above link to listen to the slokas you have written.
    pictures are really wonderful.
    subbu rathinam.

    ReplyDelete
  9. சின்ன வயசில் தூர்தர்சனில் ஜெய்ஹனுமான் பார்த்த நினைவு வருகிறது!

    ReplyDelete
  10. வாயு மகன் வானர தீரன் - துதிக்க வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  11. படங்களும், நாகையநல்லூர் கோவில் பற்றிய தகவல்களும் அருமை.

    ReplyDelete
  12. வடை மாலையுடன் அனுமார்-படம் அற்புதம்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  13. சமைய அறிவு அரிகிவரும் இன்றைய காலகட்டத்தில் உங்கள் சமைய அறிவூ ட்டும் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஆஞ்சநேயரின் அருள், அருமையான படங்களுடன், முழுமையாக கிடைத்திட்டது.நன்றி சகோ.

    ReplyDelete
  15. As usual very fine posting Rajeswari.
    Animations are super.
    The virunthu is a news to me.
    Happy to know.
    Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  16. குமுதத்துக்கு ஒரு பிரியாராமன், பதிவுலகத்துக்கு ஒரு ராஜராஜேஸ்வரி...!!!

    ReplyDelete
  17. உங்கள்பதிவுகளைப் படித்து கருத்து எழுதும்போது சிலர் சொல்வது போல் டெம்ப்லேட் காமெண்ட் தான் போட முடிகிறது. பெரும்பாலும் கோவில் சார்ந்த பதிவுகளும் அழகான படங்களும் எப்பவுமே மிக நேர்த்தி. ஆன்மீக ,கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்களாதலால், கருத்து தெரிவிப்பது நல்லதல்ல என்றே தோன்றுகிறது. பதிவுகள் பற்றிக் கூறும்போது, சர்க்கரை இனிக்கிறது எனச் சொல்வதுபோல்தான் இருக்கமுடியும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. நாகையநல்லூர் ஸ்ரீராமநவமி விழாவைப் பற்றிய தகவல்கள் அருமை.
    அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  19. கண்ணையும் கருத்தையும் கவரும் படங்கள். திருச்சியில் பல ஆண்டுகள் இருந்தும் இந்த நாகையநல்லூர் பரி அறிந்ததில்லை. மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  20. கீழே இருந்து ஐந்தாவதாக உள்ள வடைமாலை சாத்திய ஆஞ்சநேயரைத் தாங்கள் எவ்வளவு முறை காட்டினாலும் பார்த்துப் பார்த்து பரவசம் ஏற்படச் செய்கிறது.

    நல்ல அழகான அபூர்வமான தரிஸனம்.

    ReplyDelete
  21. 100 கோடி முறை நீ ராம நாமத்தை ஜபித்து முடிக்கும் போது, அந்த கோதண்டராமன் பிரத்யக்ஷமாக உன் முன் தோன்றிடுவார் என்று, தன் மரணப் படுக்கையில் இருந்தபோது “ஸ்ரீ தியாகப்பிரம்மத்திற்கு” அவர் தகப்பனார் கூறினாராம்.

    அந்த ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் அவர்களும், அவரின் முன்னோர்களும் ஆராதித்து வந்த பூஜா விக்ரஹங்களைத்தான், தாங்கள் தஞ்சை செல்லும்போது, யாரோ ஆட்டோக்காரரோ டாக்ஸிக்காரரோ கூட்டிச்சென்று, தரிஸிக்க வைத்ததாக முன்பே எழுதியிருந்தீர்கள்.

    ராம நாம ஜபத்திற்கு அவ்வளவு சிறப்புகள் உள்ளது என்பது உண்மையே!

    இதைப்படித்ததும் ஸ்ரீ தியாகராஜரின் தந்தையாகிய ஸ்ரீ ராமப்பிரும்மம் அவர்கள் சொன்னது தான் என் நினைவுக்கு வந்தது.

    ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!

    ReplyDelete
  22. அன்புள்ள தோழிக்கு ,
    வணக்கம் .தங்களின் ஹனுமான் பற்றிய படைப்பு மிக பிரமாதம்.தங்களின் புதிய படைப்பு குறித்து அறிய தரவும் .மிக்க நன்றி

    ReplyDelete
  23. என் ஆத்திலிருந்து 5 நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ள, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, தங்களுடனேயே முசிறிக்குச் சென்று, அங்கிருந்து தங்களுடனேயே காட்டுப்புத்தூருக்குச் சென்று, அங்கிருந்து நாகையநல்லூருக்கும் சென்று, தார் சாலையில் அமர்ந்து, தலைவாழை இலையில், இனிப்புடன், 16 வகை காய்கறிகளுடன், வடை அப்பளம் பாயஸம் பிரஸாதங்கள் தங்களுடனேயே கொஞ்சூண்டு மட்டும் சாப்பிட்டு, ஒரு ரூபாய் தக்ஷணையை வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, உங்கள் திருக்கரங்களால் தொட்டுத் தரச்சொல்லி, அதை தனியே ஒரு பேப்பரில் மடித்து ஆத்து பணப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்தது போல கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்!

    அதுவே ஸ்ரீ ராமரின் அருளும், ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளும் ஒருசேரக் கிடைத்த்து போன்ற திருப்தியை அளித்தது என்றால், நேரிலேயே இது போல நடந்து விட்டால் .... !)))))

    ReplyDelete
  24. இன்று விடியற்காலம் முதல் நெட்வொர்க் சர்வர் கிடைக்காமல் பிரச்சனையாகி விட்டது. பலமுறை முயற்சித்துப் பார்த்து சலித்துப்போய் புகார் கொடுத்து விட்டு படுத்துத் தூங்கி விட்டேன்.

    மதியம் 3 ம்ணிக்கு என் மனைவி முயற்சித்த போது அது கிடைத்து, தங்கள் மெயிலை ஓபன் செய்து வடமாலை ஆஞ்சநேயரை அவளே முதலில் தரிஸித்து, என்னை எழுப்பி ஒரு ‘குட் நியூஸ்’ சொல்லட்டுமா என்றாள்.

    என்ன என்று கேட்டேன். நேராக இங்கு வந்து பாருங்கோ! வடமாலையுடன் ஆஞ்சநேயர் எவ்வளவு சூப்பராக உங்கள் Friend திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள் பாருங்கோ!! என்றாள். இந்த நிகழ்வே எனக்கு ஒரு அதிசயமாகத் தோன்றியது.

    எப்போதுமே என் வலைப்பூப்பக்கமே திரும்பிப்பார்க்காத என் மனைவி, உங்கள் மெயிலை மட்டும் ஓபன் செய்தது ஆச்சர்யம் தானே!

    எல்லாம் அந்த ஹனுமனின் திருவிளையால்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  25. ஆபதாம் ...... நாமாம்யஹம்

    எவ்வளவு அழகானதொரு ஸ்லோகம்!

    சனிக்கிழமையான இன்று ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிஸித்து வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  26. அருமையான படங்கள்.

    ReplyDelete
  27. படங்களும் விவரங்களும் அருமை. கல்கி தீபாவளி மலர் 1971ஆ! எங்கிருந்து பிடித்தீர்கள்?!
    நாகையநல்லூர் நம்பிக்கைகள் வியக்க வைக்கின்றன.

    ReplyDelete
  28. அஞ்சனை புதல்வனின் அருள் பெற்றோம் சகோதரி..

    ReplyDelete
  29. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  30. தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

    ReplyDelete
  31. மனம் கவர்ந்த அருமையான பதிவு
    வை,கோ சார் குறிப்பிட்டிருப்பதைப் போல
    அந்த வடைமாலை அனுமன் தரிசனம்
    கண்கொள்ளாக் காட்சி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - வழக்கம் போல் படங்கள் அத்தனையும் சூப்பர் - பார்க்காத படங்களாகவும் இருக்கின்றன - வைடை மாலை சாத்திய அனுமனைக் காணக் கண் கோடி வேண்டும். நாகைய நல்லூர் ராம நவமி விழாவில் கலந்து கொண்ட தரிசிக்க வேண்டும். GMB சொல்வது போல சர்க்கரை இனிக்கிறத் எனச் சொல்ல வேண்டுமா என்ன. நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

    ReplyDelete
  33. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. ;)
    ஸ்ரீ ராம ராம ராமேதி
    ரமே ராமே மநோரமே!

    ஸஹஸ்ரநாம தத்துல்யம்
    ராமநாம வராநநே!!

    ReplyDelete
  35. 1178+6+1=1185 ;)))))

    பதில் யாருக்குமே அளிக்கவில்லை. என் பின்னூட்டங்களையாவது மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கோ.

    ReplyDelete
  36. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete