Monday, April 11, 2011

முதலையோ முதலை!!


இந்திரத்துய்மன் என்னும் பாண்டியமன்னன் நாராயண விரதத்தில் ஆழ்ந்திருக்கும்போது,அதிதி உபசாரம் நாடிவந்த கும்பசம்பவரான அகத்திய முனிவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. யானையாக மாறுமாறு சபித்துவிட்டார் அகத்தியர்.
ஹூஹூ என்னும் கந்தர்வன் குளித்துக்கொண்டிருந்த தேவலமுனிவரின் கால்களை விளையாட்டாகப் பற்றி இழுக்க ,முதலையாக சபித்தார் தேவல மகரிஷி.
பூஜைக்கு தாமரை பறிக்க வந்த இந்திரத்துய்ம யானையின் காலைப் பற்றியது முதலை.
ஆதிமூலமே! நாராயணா !!அகிலகுரு பகவன் நமஸ்தே!என்று பூர்வ ஜென்ம வாசம் மாறாமல் கதறிய யானையை கருடன் மேல் வந்து, சக்ராயுதத்தால் முதலையின் கழுத்தை வெட்ட முதலை கந்தர்வனாகி சாபவிமோசனம் பெற்றது.
யானையின் நம்பிக்கை என்னும் தும்பிக்கை பற்றி, வைகுண்டம் ஏகிய பகவான் இந்த கதையை விடியற்காலையில் துதிப்பவர் எல்லா நலன்களும் பெறுவார்கள் என்று அருளிச் செய்தார்.


அவினாசியில் முதலை உண்ட பாலகனைப் பதிகம் பாடி
உயிர்ப்பித்து உபநயனம் காணச் செய்தார் சுந்தரர் பெருமான்

கங்கா நதியின் வாகனமாக முதலை கருதப்படுகிறது.

நாவற்பழம் கொடுத்த குரங்கை ஈரலுக்கு ஆசைப்பட்டு முதுகின் மேல் அமரவைத்து அழைத்துச் சென்ற முதலையை மரத்தின் மேல் வைத்திருப்பதாகச் சொல்லி குரங்கு தப்பித்த பஞ்ச தந்திரக் கதையும் அறிவோம்.

ஸ்டீவ் இர்வின் என்னும் ஆஸ்திரேலிய முதலை பயிற்றுன வீரரை முதலைக்குப் பலிகொடுத்த அவரது மகன் அவரது குளோனிங்கோ என்று வியக்கும் வண்ணம் இப்போது முதலை பயிற்றுவிக்கிறார்.




ஆத்தா ஆடு வளர்த்தா,கோழி வளர்த்தா நாயை மட்டும் வளர்க்கலியே மயிலு இந்த சப்பாணியைத்தானே வளர்த்தா- என்ற பாராதிராஜாவின் வசனம் உலகநாயகனான கமலஹாசனால் உயிரூட்டப் பட்டது.

இந்த ஆஸ்திரேலிய ஆத்தாவைப் பாருங்களேன் முதலையைச் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்.
ladycroc1.jpg (634×478)
நடைப்பயிற்சிக்கும் அழைத்துச் செல்கிறார்.
நடையா! இது நடையா ! ஒரு முதலை அல்லவா நடக்கின்றது??
வெள்ளிக்கண்ணு மீனா வீதிவழி போனா
தைய்ய தக்க தைய்ய தக்க உய்யா என்று நடிகர் திலகம் இருந்தால் பாடியிருப்பாரோ??
ஊர்கோலம் போகும் முதலை காண மெல்போர்ன் நகரம் வியக்கிறது.
ladycroc4.jpg (306×423)
என் கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன்.அதில் முதலைக் கண்ணீரையும் ஆனந்தக்கண்ணீரையும் தவிர வேறு கண்ணீரைக் காணக்கூடாது என்று வழியும் கண்ணீரைத் துடைத்தவாறு இவரிடம் முதலையை ஒப்படைத்திருப்பார்களோ?
ladycroc6.jpg (634×467)
ஆனந்தக் கண்ணீராலும் முதலைக் கண்ணீராலும் குளிப்பாட்டுவாரோ!!
குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகும் முதலை.
ladycroc5.jpg (634×375)
   இவரை ஆஸ்திரேலிய மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர்.


இவருக்கு முதலைப் பெண் என்று பட்டப் பெயரும் சூட்டி உள்ளார்கள்.
ladycroc2.jpg (634×356)
இவரது மகனின் பெயர் அன்ரூ.  அன்ரூவின் படுக்கை அறையில் படுக்கையில்கூட இவை அமர்ந்து இருக்கும். முதலைகள் மகனை விழுங்கி விடக் கூடும் என்கிற அச்சம் தாய்க்கு கிடையாது.

முதலைகளை மடியில் வைத்து கொஞ்சுவார் விக்கி.

முதலைகளும் விக்கியின் அரவணைப்பில் மகிழும்.

காரில்கூட முதலைகள் ஏற்றித் திரிவார்.

நம் நாட்டு அரசியல் முதலைகளும்,பணமுதலைகளும் , முதலைக் கண்ணீர் வடிப்பவர்களும் தான் இந்த முதலைகளைக் கண்டு கொள்வதில்லை.

அழைத்து வந்து தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினால் சிம்பாலிக்காக இருக்குமே!!

21 comments:

  1. த்கவல் அருமை , ஐய்யோ முதலையுடம் படுத்து தூங்குட்வது பார்த்தால் ரொம்பபய்மா போச்சுங்கோ

    ஆன்மீக பதிவு அனைவருக்கும் பயன் படும் என நினைக்கிறேன்.
    வாழ்த்துகக்ள்

    இராஜராஜேஸ்வரி என் வலை தள்ம் இப்ப சமையல் அட்டங்காசம் மட்டும் தான் , அனுபவங்கள் கிடையாது,\இருந்தாலும் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ங்க

    நேரம் கிடைக்கும் போது வாஙக்
    http://samaiyalattakaasam.blogspot.com/

    ReplyDelete
  2. கூடுதல் விளக்க படங்களுடன் பதிவு மிக அருமை. தொடர்ந்து நிறை எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. முதலை பற்றி நிறைய தகவல்கள். அந்த ஆஸ்திரேலிய பெண்மணி.. சான்சே இல்லை. முதலை சம்பந்தப்பட்ட எல்லா வார்த்தைகளையும் வச்சு பதிவு எழுதிட்டீங்க. பதிவு.. முதலைப் பிடி. ;-))

    ReplyDelete
  4. நடத்துங்க தல


    புகையால் எரியும் வாழ்வு
    படிக்க வேண்டிய பதிவு http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4879.html

    ReplyDelete
  5. ஆஹா, கஜேந்திர மோட்சத்தில் ஆரம்பித்து, சுந்தரர் பாடிய பதிகம்*, கங்கா நதியின் வாகனம்*,ஆஸ்திரேலிய முதலைப்பயிற்றுனர்* (*இந்த மூன்றும் நான் கேள்விபடாத புதுத்தகவல்கள்), பஞ்ச தந்திரக்கதை;குருவம்மா-சப்பாணி-மயிலு-பாரதிராஜா-16 வயதினிலே சூப்பர் படம்; அன்னை இல்லம் சிவாஜி/தேவிகா நடையா....இது நடையா.... சூப்பர் தய்யத்தக்கா பாட்டு என அற்புதமாக நல்ல நகைச்சுவையாகக் கொண்டு வந்து, பிறகு கடைசியில் படுக்கை அறையில் பக்கத்தில் முதலையுடன் படுத்திருக்கும் பெண் மணியைக்காட்டி
    இப்படி பயமுறுத்தி விட்டீர்களே.

    முதலையோட வலிமை என்ன! அடித்தால் ஆள் காலி, கடித்தால் அட்ரஸூம் காலி, பார்த்தலே குலை நடுங்குகிறது நமக்கு. குண்டு தைர்யம் அவங்களுக்கு, அதைக்காட்டியுள்ள உங்களுக்கும் தான்.

    எலெக்‌ஷனுக்கு, அரசியல் வாதிகளின் முதலைக்கண்ணீரை சிம்பாலிக்காகக் காட்ட இங்கு கூட்டிவரலாமா, என்று கேட்டுள்ள உங்களின் குறும்புத்தனத்தை மிகவும் ரசித்தேன்.

    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    மிகவும் RICH ஆகப்பதிவுகள் தரும் நீங்களும் சாதாரண ஆள் இல்லை.

    பதிவுலகில், வலைப்பூவினில்
    நான் கண்ட மிகச்சிறந்த முதலையே!

    அன்புடன் vgk

    ReplyDelete
  6. த்கவல் அருமை , முதலையுடம் படுத்து தூங்குட்வது பார்த்தால் ரொம்பபய்மா போச்சு

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    வித்தியாசமான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பார்த்தாலே பயமா இருக்குங்க.

    ReplyDelete
  9. படுக்கையில் முதலையா!என்ன துணிச்சல்!

    அழகாகக் கோர்த்து வழங்கியுள்ளீர்கள்

    ReplyDelete
  10. கடவுளும் முதளையும் கலக்கல் பதிவு.பொருளாதாரம் கூடினால் என்னதான் செய்யமுடியாது !

    ReplyDelete
  11. மிக நல்ல பகிர்வு

    ReplyDelete
  12. "அழைத்து வந்து தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினால் சிம்பாலிக்காக இருக்குமே!!"
    முதல்ல முதலைய பார்த்து எப்படி தூங்க போறோமோன்னு பயந்தேன்
    இந்த கடைசி வரிய பார்த்ததும் பயம் எல்லாம் போயி போச்சு ,போயிந்தே
    its gone.ஹா ஹா ஹா !

    ReplyDelete
  13. அருமையான பதிவுக்கு அழகு சேர்க்கும் படங்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  14. அந்த ஆத்தா முதல வளர்க்குறாங்களா?
    ஹா,ஹா...

    பதிவின் ஆரம்பமும்,முடிவும் அருமை

    ReplyDelete
  15. //அவினாசியில் முதலை உண்ட பாலகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்து உபநயனம் காணச் செய்தார் சுந்தரர் பெருமான்//
    இது அவிநாசியப்பர் கோவில் தானே அம்மா... நான் போய் இருக்கேன் ஒரு முறை அம்மா கூட...

    //வெள்ளிக்கண்ணு மீனா வீதிவழி போனா
    தைய்ய தக்க தைய்ய தக்க உய்யா என்று நடிகர் திலகம் இருந்தால் பாடியிருப்பாரோ??//
    ஹா ஹா ...சூப்பர் அம்மா...:)

    //என் கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன்//
    ஹா ஹா... :)

    //அழைத்து வந்து தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினால் சிம்பாலிக்காக இருக்குமே//
    செம... ரெம்ப ரசித்தேன்...:)

    ReplyDelete
  16. alongwith crocodile,all associated anecdotes have been clearly explained.Thanks a lot for your sharing.

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. அனைத்தும் கடவுளின் செயல்களே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுவாமிஜி...

      தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் இனிய நன்றிகள்..

      தாங்கள் கோவையில் நடத்திய தன்வந்திரி பூஜையில் கலந்து கொண்டிருக்கிறேன் ..

      Delete