Tuesday, June 7, 2011

சயன கோல நரசிம்மர் - திருவதிகை





ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

திருக்கோயில்களில், அருள்மிகு நரசிம்மரை - யோக நரசிம்மராகவும், மகாலட்சுமியை மடியில் அமர்த்திய கோலத்திலும், உக்கிர நரசிம்ம ரூபத்திலும் தரிசித்திருக்கிறோம் ..

 சயனக் கோலத்தில் காட்சி தரும் நரசிம்மரைத் தரிசிக்க திருவதிகை செல்லலாம்.

கடலூர் மாவட்டம், திருவதிகை அருள்மிகு சர நாராயணப் பெருமாள் திருக்கோயிலில், அருள்மிகு நரசிம்மர் தெற்கு நோக்கி சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
[Image1]
திருவதிகை சிவன் கோயிலில் இருந்து ஒரு கி.மி. கடலூர் சாலையில் செல்லவேண்டும்.
முப்புரம் எரிக்க சிவனுக்கு அம்பாக பெருமாள் இருந்தததால் சரநாராயணர்
என்று அழைக்கப்படுகிறார்!

தாயார் ஹேமாம்புஜவல்லி .
கண்ணாடி அறையில் பெருமாளும் ,தாயாரும் அமர்ந்து இருக்கும் காட்சி
காண கிடைக்காதது.

எந்த கோவிலிலும் இல்லாத இன்னொரு விசேஷம் நரசிம்ம மூர்த்தி சயன கோலத்தில்இருப்பதாகும். மிகவும் அழகான கோவில்

இதற்கு மிக அருகாமையில் ரங்க நாதர் கோயில் ஒன்றும் உள்ளது.

ஸ்ரீ ரங்கம் ரங்க நாதரை போல் பெருமாள் வலக்கையை தலைக்கு வைத்து காலைவடக்கு நோக்கி நீட்டி ஓய்வாக படுத்திருக்கும் கோலம அற்புதமானது .

வக்கிராசூரன் என்ற அசுரனை அழித்த பின், அமைதி பெறுவதற்காக இத்தலத்தில் நரசிம்மர் சயனக் கோலம் கொண்டார் என்பது வரலாறு. 

சயனத்திலிருக்கும் நரசிம்மருடன் தாயாரும் வீற்றிருப்பதால் இவரை, 
போக சயன நரசிம்மர்’ என்று அழைக்கிறார்கள். 
பிரதோஷ நாட்களில், சயன நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 
வேதாந்த தேசிகர் வழிபட்டு, தயா சதகம்’ நூலைப் பாடியுள்ளார் என வரலாறு கூறுகிறது.


சரநாராயணப்பெருமாள், சயன நரசிம்மர், ஹேமாம்புஜ வல்லித்தாயார் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது.
[Gal1]
 நிகமாந்த மகா தேசிகரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரதத்தில் அர்ஜுனன் குருக்ஷேத்திரப்போர் முடிந்து, பிராயச்சித்தத்திற்காக இங்கு வந்து வழிபட்டதாக புராணம் கூறுகிறது.பிரமாண்ட புராணத்தில் இந்த பெருமா ளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் பல்லவ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

சரநாராயணப்பெருமாள் திருக்கோயில் உள்ள இடம் அதிகாபுரி க்ஷேத்திரம் ஆகும். விமானம் - நளினகவிமானம். இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். இவர் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.திருக்கோவிலூர் தேஹளீசப்பெருமாளால் அபிமானம் பெற்ற திருக்கோயில்,
மூலவர் சரநாராயணப்பெருமாள்


மூலவர் விமானம்
[Gal1]
தேவர்களைத் துன்புறுத்திவந்த திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக சிவன் திருவுளம் கொண்டு அவர் செல்வதற்காக தேவர்கள் ஒரு தேரை உருவாக்கிக் கொடுத்தார்கள். 

சூரிய, சந்திரர்கள் தேர்ச் சக்கரங்களாகவும், பூமிதேவி தேர்த் தட்டாகவும், நான்கு வேதங்களும் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் வில்லின் நாணாகவும், பெருமாள் அம்பாகவும் (சரம்), பிரம்மா தேர் ஓட்டுபவராகவும் சிவனுக்கு உதவினார்கள்.

சிவனுக்குச் சரமாக (அம்பு) பெருமாள் உதவியதால், இங்குள்ள பெருமாளுக்கு சர நாராயணப் பெருமாள்’ என்ற திருநாமம் விளங்குகிறது. 

இந்தப் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சங்கு சக்கர, கதாபாணியாகக் காட்சி தருகிறார். 

 பெருமாள்  ஸ்ரீதேவியுடன் மட்டுமே அருள்பாலிக்கிறார் (கும்பகோணம் ஒப்பிலியப்பன்கோயிலிலும், பெருமாள் பூதேவியுடன் மட்டுமே காட்சி தருகிறார்)


ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதத்தில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திரிபுரம் எரித்த திருவிழா நடக்கும். 

அப்போது சர நாராயணப் பெருமாள் சங்கு சக்கரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருள்வதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு. 

கருடன் பெருமாளுக்குக் கைகட்டி சேவை சாதிக்கும் கோலத்தில் உள்ளார்.

திருவதிகை சர நாராயண பெருமாள் ஆலயத்தில் வழக்கத்துக்கு மாறாக சங்கு, சக்கரங்களுடன் கைகளைக் கட்டியபடி சேவை சாதிக்கிறார். 

திரிபுர சம்ஹாரத்துக்குப் பெருமாள் எழுந்தருளியபோது சங்கு, சக்கரங்களைக் கருடனுக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது.

கருட பகவான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தன் இருக்கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். 

அப்போது பெருமாள், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடைப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகின்றனர்.

உத்ஸவரான ஸ்ரீகோவிந்த விண்ணகரப்பன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தாயார், ஹேமாம்புஜவல்லி என்ற திருநாமத்துடன் தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். இவருக்கு செங்கமலத் தாயார் என்ற பெயரும் உள்ளது. 

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. 

பிராகாரத்தில் அனுமன், சேனை முதலியார், மணவாள மாமுனிகள், பாண்டுரங்கன், கருடன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

தல விருட்சம் வில்வ மரம். தீர்த்தம் கெடில நதி.

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக தரிசித்தோர்க்கு வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்பது தாயுமான அடிகளார் வாக்கு. 

ஒவ்வொரு தலத்திலும் விளங்கும் இறைவடிவங்-களுக்கும் அங்குள்ள நீர்நிலைகளான தீர்த்தங்களுக்கும் தனித்தனி மகத்துவம் உண்டு. 

வட இந்தியாவில் புகழ்பெற்ற கங்கை நதிக்குச் சமமான தென்திசைக் கங்கை என்ற பெருமையுடையது ‘கெடிலம்’ என்னும் நதி. ‘தென்திசைக் கங்கையெனும் திருக்கெடிலம் திளைத்தாடி...’ என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவார். 

தன்னிடத்தில் மூழ்குவோர் கெடுதல் இல்லாத் தன்மையை அடைவர் என்பதைக் குறித்தே ‘கெடிலம்’ என்னும் பெயரைப் பெற்றதாம். 

இந்நதியில் விதிப்படி மூழ்குவோர், கங்கையில் மூழ்கினால் வரும் எல்லா நன்மைகளையும் மேன்மையையும் அடைவர்; உடல் பிணி நீங்குவர்.

 வைகானஸ ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகிறது.
செங்கமலத்தாயார்
[Gal1]

உற்சவர் செங்கமலத்தாயார்

விசேஷ பிரார்த்தனைத் தலமாகவும் திகழ்கிறது. 

வழக்குகளில் வெற்றிபெற விரும்புபவர்கள், எதிரிகளால் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள், தொழில்விருத்தி, மன அமைதி வேண்டுபவர்கள் இங்கு வந்து, ஸ்ரீபோக சயன நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். 

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், ஆதிசேஷனை வழிபாடு செய்தால் நல்ல பலன்.கிடைக்கும் ..
அமாவாசை வழிபாடு  தனிச்சிறப்பு.
உற்சவர் நரசிம்மர்
 [Gal1]

பாண்டுரங்கன் ரகுமாயி


29 comments:

  1. சயன நரசிம்மர் இப்பதான் கேள்விப் படறேன். நன்றி

    ReplyDelete
  2. நாராயணா,நாராயணா!

    ReplyDelete
  3. @ எல் கே said...
    சயன நரசிம்மர் இப்பதான் கேள்விப் படறேன். நன்றி//

    Thank you Sir.

    ReplyDelete
  4. @ FOOD said...
    நாராயணா,நாராயணா!//

    Om Na-mo Narayanayaa...!
    Thank you Sir.

    ReplyDelete
  5. புதிய இடங்கள் தெரிந்து கொள்கிறோம். போக முடியுமோ இல்லையோ...இப்படியாவது தெரிந்து கொள்ள வைக்கும் உங்களுக்கு நன்றி. ஹேமாமபுஜவல்லி தாயாரின் பெயர் கவர்கிறது.

    ReplyDelete
  6. சயன நரசிம்மர்... புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  7. சயன நரசிம்மர்...வித்தியாசம் இப்பதான் நானும் கேள்விபடுறேன்..சத்தி அருகில் புளியம்பட்டியில் பிரகலநாதனுடன் நரசிம்மர் இருக்கிறார்...1000 வருடம் பழமையான கோவில்

    ReplyDelete
  8. //வக்கிராசூரன் என்ற அசுரனை அழித்த பின், அமைதி பெறுவதற்காக இத்தலத்தில் நரசிம்மர் சயனக் கோலம் கொண்டார் என்பது வரலாறு. சயனத்திலிருக்கும் நரசிம்மருடன் தாயாரும் வீற்றிருப்பதால் இவரை, ‘போக சயன நரசிம்மர்’ என்று அழைக்கிறார்கள். மேலும் பிரதோஷ நாட்களில், சயன நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. //


    சயன கோலத்தில் நரசிம்ஹர் என்பது புதிய செய்தியாக உள்ளது. அழகான பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @@ ஸ்ரீராம். said...
    புதிய இடங்கள் தெரிந்து கொள்கிறோம். போக முடியுமோ இல்லையோ...இப்படியாவது தெரிந்து கொள்ள வைக்கும் உங்களுக்கு நன்றி. ஹேமாமபுஜவல்லி தாயாரின் பெயர் கவர்கிறது//

    நன்றி.

    ReplyDelete
  10. @ வெங்கட் நாகராஜ் said...
    சயன நரசிம்மர்... புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.../

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. @ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சயன நரசிம்மர்...வித்தியாசம் இப்பதான் நானும் கேள்விபடுறேன்..சத்தி அருகில் புளியம்பட்டியில் பிரகலநாதனுடன் நரசிம்மர் இருக்கிறார்...1000 வருடம் பழமையான கோவில்//

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ middleclassmadhavi said...
    Thanks for sharing!//
    நன்றி.

    ReplyDelete
  13. @வை.கோபாலகிருஷ்ணன் sa//

    சயன கோலத்தில் நரசிம்ஹர் என்பது புதிய செய்தியாக உள்ளது. அழகான பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி.//அழகான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. புதிய இடங்கள் தெரிந்து கொள்கிறோம். போக முடியுமோ இல்லையோ...இப்படியாவது தெரிந்து கொள்ள வைக்கும் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. //வக்கிராசூரன் என்ற அசுரனை அழித்த பின், அமைதி பெறுவதற்காக இத்தலத்தில் நரசிம்மர் சயனக் கோலம் கொண்டார் என்பது வரலாறு. சயனத்திலிருக்கும் நரசிம்மருடன் தாயாரும் வீற்றிருப்பதால் இவரை, ‘போக சயன நரசிம்மர்’ என்று அழைக்கிறார்கள். மேலும் பிரதோஷ நாட்களில், சயன நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. //பதிவுலகின் ஆன்மீக அண்ணலே..தல வரலாறு சொல்லும் தலயே.. வாழிய நீர் பல்லாண்டு..

    ReplyDelete
  16. ஆஹா ... ஆஹா
    சயன நரசிம்மர் புதுத்தகவல்
    ஆன்மீக அமுதம்
    நன்றி தாயே
    எங்கள் மன்னார்குடியின் செங்கமலத் தாயாரின் பெயரும்
    ஹேமாப்புஜநாயகி தான்

    ReplyDelete
  17. சயன நரசிம்மர் புதியதகவல்தான்.

    ReplyDelete
  18. @போளூர் தயாநிதி said...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. @மாலதி said...//
    கருத்துக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  20. @A.R.ராஜகோபாலன் said...
    ஆஹா ... ஆஹா
    சயன நரசிம்மர் புதுத்தகவல்
    ஆன்மீக அமுதம்
    நன்றி தாயே
    எங்கள் மன்னார்குடியின் செங்கமலத் தாயாரின் பெயரும்
    ஹேமாப்புஜநாயகி தான்//
    நன்றி.
    ஆம். தங்கமான பெயராயிற்றே.

    ReplyDelete
  21. @மாதேவி said...
    சயன நரசிம்மர் புதியதகவல்தான்.//

    நன்றி.

    ReplyDelete
  22. Aha!!!!!!!!!!!
    Today morning I had a very Good darshan of Perumal and Karudavahanam.
    Wounderful.
    I visited the temple longback. Thanks for making my memory renew.
    Pictures are very fine.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  23. @viji said...//
    வாங்க விஜி .
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. @kavitendral panneerselvam to me

    புதிய செய்தி !மனதில் பக்தி பரவசமாக்கிய செய்தி ! வாழ்த்துக்கள் பல!//

    நன்றிகள் பல.

    ReplyDelete
  25. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. JAI HANUMAN ! ;)

    VGK

    ReplyDelete