Thursday, January 3, 2013

நலமே நல்கும் நவக்கிரக விநாயகர்ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்திரன் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே! - 
விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் 
தனது உடலில் இடம் கொடுத்துள்ளார். 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! -ஔவை
வரம் தரும் நவக்கிரக விநாயகர் என்று போற்றபட்டு - திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அமருதபுரி 
என்ற ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்......... 

பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.

உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது. 
நவக்கிரகங்களின் அதிபதியாக வீற்றிருக்கும் நவக் கிரக விநாயகர், தனது திருவுடலில் நவக்கிரகங்களை அடக்கி வைத்திருக்கும் பகுதிகள் 
நவக்கிரக விநாயகர் தனது குருவான சூரியனை நெற்றியிலும், 
குளுமை பொருந்திய சந்திரனை வயிற்றிலும், 
பூமிக்கு அதிபதியான செவ்வாயை வலது தொடையிலும், மகாவிஷ்ணுவின் அம்சமான புதனை வலது கீழ் தொடையிலும், உலகிற்கே குருவான வியாழனை தலையிலும், 
அசுர குருவான சுக்கிரனை இடது கீழ்கரத்திலும், 
தெற்கு பார்த்திருக்கும் காகத்துடன் கூடிய சனிபகவானை வலது மேற்கரத்திலும், 
ராகுவை இடது மேற்கரத்திலும், 
கேதுவை இடது காலிலும் கொண்டு அருள்புரிகிறார்.
நவக்கிரக விநாயகரை வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகுவதுடன், சகல செல்வங்களும் கிட்டும். 

எடுத்த காரியங் களில் வெற்றி பெறலாம். 

விநாயகரை மட்டுமன்றி, நவக்கிரகங்கள், யோக நரசிம்மர், அனுமன், கருடன் போன்ற தெய்வங்களையும் வணங்கியதற்கான பலனையும் பெறலாம்.

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, சாதனை, சோதனைகளை தந்து மனிதர்களை ஆட்டிப்படைப்பது நவக்கிரகங்களே. 

இப்படி பாதிக்கப்படுபவர்கள் துன்பங்களில் இருந்து தெய்வ பலத்தால் மட்டுமே விடுபட முடியும். இதற்கு  நவக்கிரக விநாயகர் துணையாக அருள்பாலிக்கிறார். 
Karpaga_vinayagar_f_thangakamalavaahanam__pillayarpatti_largeGod - Vinayakar - Ganesh - Ganapati - Pillaiyar - விநாயகர் - பிள்ளையார் - கடவுள் - கணபதி
முருகன் விநாயகர் அர்த்தநாரீஸ்வரர் அற்புத தரிசனம்.


21 comments:

 1. வரம் வர்ஷிக்கும் வினாயகரை தரிசிக்க முதல் ஆளாக வந்து விட்டேன் அம்மா. படங்கள் எங்கேந்து கிடைக்கிறது. அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. நன்றிங்க.

  ReplyDelete
 2. பிளையாரப்பா எனக்கு நல்ல புத்தியை கொடுப்பா?

  ReplyDelete
 3. //விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார்.//

  முழு முதற் கடவுளாயிற்றே ! இருக்காதே பின்னே...?

  ReplyDelete
 4. விநாயகர் பற்றி அருமையான பதிவு

  ReplyDelete
 5. விநாயகனே வினை தீர்ப்பாய்.

  ReplyDelete
 6. amazing pictures thanks for sharing

  ReplyDelete
 7. வெகு அற்புதமான படங்கள். இத்தனை விநாயக்ர்களைத் தரிசித்ததே பெரிய புண்ணியம். மிக நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 8. விநாயகரை வணங்கினால் நவக்கிரகங்களை வணங்கியபலன் உண்டு.நான் அறிந்தது.நவக்கிரகவிநாயகர் நான் அறியாதது. படங்கள் அருமை.

  ReplyDelete
 9. அற்ப்புத படங்கள் . நன்றி

  ReplyDelete
 10. அனைத்து படங்களும் மிக மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....


  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. 8 அடியில் ஒரே கல்லில் சிலை அறிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 12. அற்புத நவக்கிரக விநாயகர்....
  அறிந்திராத விடயம்..அழகான படங்கள்...

  பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரி...

  ReplyDelete

 13. அப்பப்பா, எத்தனை விதமான விநாயகர்கள்....எத்தனை விதமான நம்பிக்கைகள்....!

  ReplyDelete
 14. சித்தி விநாயகன் பாதம் தொழுவோம்.

  சிறப்பான பகிர்வு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. எத்தனை விநாயகர்கள்.

  பார்க்க பார்க்க புண்ணியம்.
  பகிர்விற்கு நன்றி.

  ராஜி

  ReplyDelete
 16. வித்தியாச விநாயகர்! புதிய தகவல்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 17. காணக்கிடைக்காத அரிய படங்களுடன் சிறப்பானதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 18. மறுபடி மறுபடி பார்க்க தூண்டும் படங்கள். அற்புதமானதொரு தொகுப்பு!
  வளரட்டும் உங்கள் பணி!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - நவக்கிரக விநாயகர் - எத்தனை எத்தனை படங்கள் - ஐங்கரனின் அற்புத தரிசனங்கள் - அததனையும் அருமை - கண்டு களீத்தேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 20. பிள்ளையாரப்பா

  தொந்திப்பிள்ளையாரப்பா

  உனக்கு என் இனிய வந்தனங்களப்பா

  நீ கல்லுப்பிள்ளையாராட்டமா ரொம்பவும் அழுத்தமப்பா

  என்னிக்குத்தான் நீ என்னோட கலகலப்பாகப் பேசப்போகிறாயோ?

  அந்த நாளும் வந்திடாதோ !!

  -oOo-

  கடைசியிலே காட்டியிருக்கும் படம் மிகவும் அருமை, மேடம்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  அழகான பகிர்வுக்கு நனறிகள்.

  ReplyDelete
 21. அருமையான பதிவு.
  நன்றி அம்மா.

  ReplyDelete