Tuesday, February 11, 2014

சகல சௌபாக்கியங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி



ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி சுப்ரபாதம் - இங்கு கிளிக் செய்து கேட்கலாம் ..பார்க்கலாம்..!  http://www.naraharikrupa.com/

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி ஸ்லோகம்

ஸத்ய ஞான ஸுக ஸ்வரூப மமலம் க்ஷீராப்தி மத்யே ஸ்திதம் |
யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம் || 
த்ர்யக்ஷம் சக்ர பினாக ஸாபயகரான் பிப்ராண மர்க்கச்சவிம் | 
சத்ரீபூத பணீந்த்ரமிந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே ||

கட்டவாக்கம் நரசிம்ம பெருமாள் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், 
அனந்த பீடம், யோக பீடம், ஆகிய ஐந்து பீடங்களின் மேல் 
கம்பீரமாக வீற்றிருக்கிறார்..!

பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி  அபய வரத ஹஸ்தத்துடன்அருள் மழை பொழியும் அன்பு விழிகளால் குளிர கடாக்ஷித்து வந்தாரை வாழவைக்கும் வண்ணம் திகழ்கிறது..!

மகாலக்ஷ்மியுடன் கூடி - த்ரிநேத்ரம் அமைந்துள்ள நரஸிம்ஹர் அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கும் பாங்கு வியப்பளிக்கிறது..!

மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளி அருள் பொழியும் 
திவ்ய தம்பதியரைக்  காணக்கண்கோடி வேண்டும்..!

நரஸிம்ஹர் வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருப்பவராக 
எழுந்தருளி அருள்பாலிக்கிறார்..!.
பன்னிரண்டு - கோரைப்பற்கள் -வஜ்ரதம்ஷ்ட்ரங்கள்
 27 நக்ஷத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.

திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், 
நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான்,
ஆக நவக்ரஹங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்யமாகி இருப்பதால் மிகுநத சக்தி வாய்ந்த பரிஹார ஸ்தலமாகத் திகழ்கிறது.

நவக்ரஹ தோஷங்கள் உள்ளவர்கள் அத்ற்கான  ஸ்லோகங்களை தக்கவாறு பாராயணம் செய்துகொண்டு ஸ்ரீ நரஸிம்ஹன் சந்நிதியை 
வலம் வர தோஷ நிவர்த்தி அடைந்து சகல சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை..!

சூரியன்:
காலானல ஸமப்ரக்யம் ஷட்கோணாந்தஸ்திதம் விபும்
ஜ்வாலாமாலாதரம் தேவம் பஜே ஜ்வாலா ந்ருகேஸரிம்
சந்திரன்:
அனந்த மச்யுதம் தீரம் விஸ்வரூபம் ப்ரபும் விபும்
ந்ருஸிம்ஹம் தேவதேவேசம் தம் பஜே ஸர்வதோமுகம்
புதன்:
ஸர்வாபரண பூஷாங்கம் ஸச்சிதானந்த விக்ரஹம்
பத்மசக்ரதரம் வந்தே ஹயக்ரீவ ந்ருகேஸரிம்
சுக்ரன்:
ஸ்ரீ பூ நீளா ஸஹிதம் ஸர்வாபரண பூஷிதம்
விரூபாக்ஷம் மஹாவிஷ்ணும் பஜே பத்ர ந்ருகேஸரிம்
செவ்வாய்:
சதுஸ் சக்ரதரம் தேவம் அங்காராந்தர் பஹிஸ்திதம்
ஜ்வாலாமாலா தரம் வந்தே பஜேதுக்ர ந்ருகேஸரிம்
குரு:
வேதாந்த வேத்யம் யக்ஞேஸம் ஸர்வதேவ நமஸ்க்ருதம்
பஜாமி ஸததம் தேவம் மஹாவிஷ்ணும் ந்ருகேஸரிம்
சனி பகவான்:
அஷ்ட சக்ரதரம் தேவம் விபும் சனி ஹ்ருதிஸ்திதம்
நீலாபரண பூஷாங்கம் பாதாள ந்ருஹரிம் பஜே
ராகு:
சக்ராஷ்டக தரம் தேவம் த்ரிநேத்ரம் சோக்ரவிக்ரஹம்
விஸ்வரூப மஜம் ஸௌம்யம் வராஹ ந்ருஹரிம் பஜே
கேது:
ஆதிமத்யாந்த ரஹிதம் ஸச்சிதானந்த ரூபிணம்
நமாமி ந்ருஸிம்ஹம் தம் ஸர்வ சத்ரு விநாஸனம்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோட காரஞ்ச பார்கவ:
யோகானந்தஸ் சத்ரவட: பாவனோ நவஹரிர் நம:

17 comments:

  1. ஸ்ரீ விசுவரரூப லட்சுமி நரசிம்மர் அருமை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அறியாத ஸ்தலம்
    அறியாத தகவல்கள்
    படங்களுடன் பகிர்வுமிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நரசிம்மர் படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா... சிறப்பான தகவல்களுக்கும் நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இன்றைய [11.02.2014] வலைச்சரத்தில் தங்களின் தளம் பற்றி மீண்டும் மிகச்சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 27 நக்ஷத்திரங்களில் இரண்டாவது பரணி .... பரணி தரணியாளும் என்பது போல ..... தங்கள் தளத்திற்கு இரண்டாம் இடம் கொடுத்து மகிழ்வித்துள்ளார் மஞ்சு.

    மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  5. எங்கள் மனங்களைக்கட்டிப்போட்டு, எங்களைக் கட்டவாக்கத்திற்கே நேரில் அழைத்துச்சென்று, ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸ்வாமியை தரிஸிக்க வைத்து, சகல செளபாக்யங்களும் வர்ஷிக்குமாறு செய்துள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி.

    >>>>>

    ReplyDelete
  6. ஸ்லோகங்களும், விளக்கங்களும், ஸ்தல வரலாறுகளும், சுப்ரபாதம் கேட்க இணைப்பும் கொடுத்துள்ளது அழகோ அழகு !


    >>>>>

    ReplyDelete

  7. படங்கள் அத்தனையும் படு ஜோர் ..... அதுவும் மேலிருந்து கீழ் ஐந்தாவது படத்தில் ..... ஒரே வஸ்திரத்திற்குள் பெருமாளும் தாயாரும் சேர்ந்து அமர்ந்துள்ள காட்சி .... அருமையாக உள்ளது.

    என் வக்ஷஸ்தலத்தில் மட்டும் அவள் இல்லை .... அவளின் வஸ்த்ர ஸ்தலத்துக்குள்ளேயே நானும் .... எப்போதும் ..... என பெருமாள் பெருமையாகச் சொல்லாமல் சொல்வது போல உள்ளதே ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. நவக்கிரஹ ஸ்தோத்ரங்கள் கொடுத்துள்ளது மேலும் தனிச்சிறப்பாக உள்ளது.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    o o o o o

    ReplyDelete
  9. சுப்ரபாதம் கேட்டுக் கொண்டே பதிவின் படங்களில் உள்ள நரசிம்மரை தரிசித்து விட்டேன்.நவக்கிரஹ ஸ்தோத்ரங்கள் பகிர்வுக்கு நன்றி.
    ஸ்ரீவிஸ்வரூப லட்சுமி நரசிம்மர் எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் தரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. விஸ்வரூப லட்சமி நரசிம்மர் படங்களும் விளக்கங்களும் அருமை பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. எல்லாம் ந்ருஸிம்மன் செயல்.படங்கள் அருமை.

    ReplyDelete
  12. நவக்கிரகங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்யமாகி இருப்பதால், கண்டிப்பாக ஒரு முறையாவது அந்த கோவிலுக்கு போக வேண்டும். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  13. நேற்றும் இன்றும் முகப்புப் படம் பிரமாதம்.

    ReplyDelete
  14. அருமையான பதிவு! விஸ்வரூப நரஸிம்மர் தரிசனம் கண்டு பரவசமடைந்தேன்! நன்றி!

    ReplyDelete
  15. அருமையான பகிர்வு.....

    படங்கள் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete