Tuesday, January 31, 2012

ஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை









“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து 
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்நின்னை உள்ளவண்ணம் 
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன் 
தாயேமலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!”

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை. 
அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை. 
மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை. 
முதலும் முடிவும் இல்லாதவள்...


வைரத்தை பட்டை தீட்டினால்தான் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.


இந்த வைரத்தின் அடிப்பாகம் கூராக  காணப்படும.  உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைத்திருக்கிறார்கள்..


அகிலாண்டேஸ்வரி, நித்ய கன்னியென்பதால், 
திருவானைக்கா திருத்தலத்தில், சுவாமி-அம்பாள் திருமணம் கிடையாது. 
அம்பிகையே அதிசயமானவள்  குருவாக விளங்குகிற பராசக்தி, அகிலாண்டேஸ்வரி என்னும் வடிவில், உபதேசம் பெறும் சிஷ்யை ஆகிறாள்.  சிற்சில சமயங்களில் ஆண் வேடமும் பூணுகிறாள். 

. ஞானவாணியாக நிற்கிறாள்; வணங்குபவரை ஞானவான்கள் ஆக்குகிறாள். 

திருவானைக்காவில் நடைபெறும் பஞ்சப் பிராகார விழாவில் 
(ஐந்து திருச்சுற்றுத் திருவிழா),  ஆண் வேடம் அணியும் திருவிழாவை பிரம்மா செய்வதாக ஐதீகம்.

அம்பிகையை ஸ்ரீசக்ர நாயகி என்பார்கள். தாமரை இதழ்கள் முக்கோணங்கள், வட்டங்கள், பிந்து என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட அமைப்பிலான சக்கரங்கள் அல்லது யந்திரம் உண்டு.

சக்கர அமைப்புள்ள கோயில்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பது ஐதிகம்.

சிதம்பரத்தில் ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தில் "திருவம்பலச் சக்கரம்' என்னும் சிதாகாச சக்கரம் அமைந்துள்ளது.

மதுரை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வாயிலின் மேற்புறத்தில் தமிழ்வருடங்கள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டுள்ளது.

திருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தி சந்நதியில் செப்புத் தகட்டால் ஆன மிருத்யுஞ்ஜய யந்திரம் வழிபடப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் சூரிய சக்கரம், கமல யந்திரம் என்று அழைக்கப்படும் விதத்தில் ஒரே பீடத்தில் சக்கர வடிவில் நடுவில் பெரிய தாமரையும், அதைச் சுற்றி சூரியன் நீங்கலாக எட்டுக் கோள்களும், 12 ராசிகளும் செதுக்கப்பட்ட அமைப்பு உள்ளது.

மாங்காட்டில் காமாட்சி ஸ்ரீ சக்கர வடிவாகவே விளங்குகின்றாள். பெரிய பீடத்தின்மீது அமையப்பெற்றுள்ள சக்கரமே அங்கு மூல காமாட்சியாக வழிபடப்படுகிறது. மூலிகைகளாலான அர்த்தமேரு சக்கரம் இது.

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் சக்கரத்திற்கு என்றே தனியாக ஒரு சந்நதி உள்ளது. இந்தச் சக்கரம் உயரிய பீடம் இட்டு அதன்மீது நாகம் குடை விரித்தாற்போல் அமைக்கப்பெற்று பெரிய திருவாட்சியுடன் விளங்குகிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மனின் முன்புறத்தில் ஸ்ரீ சக்கரம் ஒரு தொட்டி போன்ற அமைப்பிற்குள் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் பாதத்தின் கீழ் சடாட்சரச் சக்கரம் அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளியினாலான மிகப்பெரிய சக்கரம் காணப்படுகிறது.

திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் திருச்செவிகளில் விளங்கும் தாடங்கங்களில் ஸ்ரீசக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் முருகன் மார்பில் அணியும் பதக்கங்கள் அறுகோணமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை ஷாடாட்சரத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றன.

திருவாரூர் தியாகராஜர் திருமார்பிலும் சக்கரம் அமைந்துள்ளது.

26 comments:

  1. அம்பிகைத்தாயார் தர்சனம் கிடைக்கப்பெற்றோம்.

    ReplyDelete
  2. "ஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை"
    வெகு அழகான பதிவு. ஒரு முறை விறுவிறுவென்று படித்துவிட்டேன்.
    இனி ரஸித்துப்படித்து மீண்டும் மீண்டும் நினைத்த போதெல்லாம் வருவேன்.

    ReplyDelete
  3. //அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி அம்பிகை.

    அணியும் அணிக்கு அழகு தருபவள் அம்பிகை.

    மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத திருஉடையவள் அம்பிகை.

    முதலும் முடிவும் இல்லாதவள்...//

    பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கும் வரிகளே ! ;)))))

    ReplyDelete
  4. //பட்டைகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்குப் பூரிப்பும் அதிகம். மதிப்பும் அதிகம். விலையும் அதிகம்.//

    பட்டைகள் பற்றி இந்தப்பதிவிலுமா!;)

    [அது இலவங்கப்பட்டை, அதிலேயே சக்கைபோடு போட்டு பட்டையைக் கிளப்பியிருந்தீர்களே;

    இது வைரப்பட்டை என்பதால் கேட்கவா வேண்டும்; ஜமாய்த்து விட்டீர்கள் அம்பிகையே! அந்த அம்பிகையை.

    மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்திலேயே மிதக்கின்றோம் நாங்களும்!;)))))]

    ReplyDelete
  5. //இந்த வைரத்தைப் பதிக்கும் முன் திருப்பிப் பார்த்தால். அடிப்பாகம் கூராக பர்வதத்தின் சிகரம் போலக் காணப்படும. இதன் உயரம் அதிகமிருந்தால் பூரிப்பும் அதிகம். ஸ்ரீசக்ர தத்துவமே இவ்வைரம். ஸ்ரீசக்ரத்தை அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கமாக அமைந்த ரகசியம் இதான் //

    என்னைப் பூரிக்க வைத்த வரிகள், அதுவும் எங்கள் ஊர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுத் தாடங்கத்தைப் பற்றி அல்லவா சொல்லியுள்ளீர்கள். இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! ;)))))

    ReplyDelete
  6. //அம்பிகையே அதிசயமானவள் -- ஆகவே, அவளிடத்தில் இன்னும் சில அதிசயங்களும் உள்ளன. பிற நேரங்களில் குருவாக விளங்குகிற பராசக்தி, அகிலாண்டேஸ்வரி என்னும் வடிவில், உபதேசம் பெறும் சிஷ்யை ஆகிறாள். பெண்மையின் மென்மைக்கே உரித்தான இவள், சிற்சில சமயங்களில் ஆண் வேடமும் பூணுகிறாள். //

    அதிசய அம்பாள் பற்றி ஆச்சர்யமான செய்திகள், அதுவும் ஓர் அம்பாள் கடாக்ஷம் பெற்றவர்கள் மூலம். மென்மை மட்டுமல்ல அது மிகவும் மேன்மையாகத்தானே இருக்கும்! ;)))

    ReplyDelete
  7. //ஞானம் முழுமையும் கைவரப் பெறுவதற்காகத் தவமியற்றிய அன்னை, அது முற்றுப்பெறாத நிலையில் திருமணம் வேண்டாமென்று முடிவெடுத்தாளாம்.

    எனவே, கன்னித் திருக்கோலம் பூண்டுவிட்டாள்.

    ஞானவாணியாக நிற்கிறாள்;

    வணங்குபவரை ஞானவான்கள் ஆக்குகிறாள். //

    அந்த அம்பிகையை வணங்கி ஞானவான்கள் ஆகும் அனைவருமே பாக்யவான்கள் தான்! கேட்கவே மனம் ஜில்லிட்டுப்போய் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  8. //திருவானைக்காவில் நடைபெறும் பஞ்சப் பிராகார விழாவில் (ஐந்து திருச்சுற்றுத் திருவிழா), ஆண் வேடம் அணிவாள். இந்தத் திருவிழாவை பிரம்மா செய்வதாக ஐதீகம்.//

    இந்தத் திருவானைக்கா பஞ்சப்பிரகார ஸ்வாமி புறப்பாட்டு விழா வெகு அருமையானதே. என் தந்தைக்கு இதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஐந்து பிரகாரங்களிலும் விடியவிடிய ஸ்வாமி புறப்பாடு நடைபெறும். கூடவே வேதபாராயணம் பல வேத வித்துக்களால் அமைதியான இரவில் ஒலிக்கப்பட்டுக்கொண்டே செல்லும் போது திவ்யமான உணர்வுகள் ஏற்படும்.

    ReplyDelete
  9. //அம்பிகையை ஸ்ரீசக்ர நாயகி என்பார்கள். தாமரை இதழ்கள் முக்கோணங்கள், வட்டங்கள், பிந்து என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட அமைப்பிலான சக்கரங்கள் அல்லது யந்திரம் உண்டு.

    சக்கர அமைப்புள்ள கோயில்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பது ஐதிகம்.//

    சக்கரமாகச் சுழன்று, எங்களுக்குப் பல தகவல்களைத் தேடித்தேடிக்கொடுத்து, எங்களையும் உங்களுடனேயே சுழல வைத்து விட்டீர்களே ஜோர் ஜோர் !

    ReplyDelete
  10. முதல் அம்பிகை + கீழிருந்து மேலாக நாலாவது அம்பிகையின் புடவைக்கட்டுகள் விசிறி மடிப்புகள் நல்ல அழகு.

    காமதேனு வாஹனமும், யானை வாஹனமும் சூப்பர்.

    ReplyDelete
  11. ஸ்ரீ சக்கர அமைப்புள்ள கோவில்கள் பற்றி அறியத் தந்தமைக்கு
    நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  12. மடியில் சிவலிங்கத்தை அமர்த்தி, கால்களை மடக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அம்மன் நல்ல அழகோ அழகாக தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளது, என்னை வியப்பில் ஆழ்த்தியது.

    திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி படத்தின் கீழே காட்டியுள்ள வீணையைக் கையில் வைத்து வாசிக்கும் அம்மனின் புடவைக்கலர் படு அமர்க்களம். செந்தாமரையே செந்தேன் நிலவே எனப்பாட வைக்கும் அற்புதமான கலர் அது. புடவை பார்டரும் நேவிப்ளூ+தங்க ஜரிகையுடன் சூப்பர்.

    கீழிலிருந்து இரண்டாவது படத்தில் கட்டைகுட்டையாகக் காட்டியுள்ள அம்மனின் அனைத்து அலங்காரங்களும் சிறப்பாகவே உள்ளன. ஒவ்வொரு அம்மனும் எந்த ஊர் எந்தக்கோயில் என்ன திருநாமம் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  13. ஜனவரி 31 க்குள் 34 பதிவுகள்.

    இது தங்களின் தங்கமான ...
    ஸாரி .....
    வைரமான ....
    ஸாரி ...
    பல பட்டைகள் தீட்டப்பட்ட வைரமான
    314 ஆவது
    பட்டையைக்கிளப்பும்
    பக்குவமான
    அழகான
    அசத்தலான
    அருமையானதொரு பதிவு.

    படித்ததில் ஓர் முழுத்திருப்தி.

    படங்கள் பார்த்ததில் ஓர் சொல்ல முடியாத பரவஸம்.

    இனம் புரியாததோர் இன்பம்.

    ஸ்ரீ சக்ர நாயகி அம்பிகையின் அருளை அள்ளி அள்ளித் தந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    தொடரட்டும் தங்கள் அருந்தொண்டு!
    மலரட்டும் மகிழ்ச்சி அனைவருக்கும்!!

    ReplyDelete
  14. அம்பிகையின் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நன்றி

    ReplyDelete
  15. கிடைத்தற்கரிய அற்புதமான படங்கள்.

    ReplyDelete
  16. ஸ்ரீ சக்கர அமைப்பு தகவல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  17. அம்பிகையின் அழகிய தருசனத்தை தந்தீர்கள் நன்றி பகிர்விற்கு.
     ஒரு வேண்டுகோள் கிச்சனூர்(தேனிமாவட்டத்தில் இருக்கும் மூங்கில் அம்மனைப்பற்றி கொஞ்சம் பதிவு செய்வீர்களா கடந்த வாரம் போயிருந்தோம் திருத்த வேலையில் தருசனம் கிடைக்க வில்லை வரலாறும் அறியமுடியவில்லை. 
    இதை கவனத்தில் எடுப்பீர்களா அம்மா.

    ReplyDelete
  18. சக்கரங்கள் சக்கரம் சுற்றின மனதுள் மிக்க நன்று. அத்துடன் வை. கோபாலகிருஷ்ணன் சாரின் கருத்துகளும் சுவை. இருவருக்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  19. அம்பா ஜ‌காத‌ம்பா அருள் செய்ய‌ வா! என‌ ம‌ன‌முருகி அழைப்ப‌த‌ற்கொப்பான‌ ப‌திவு!

    ReplyDelete
  20. I came here to read the leftover posts(since i am out of town for a week). But i spent hours together in this one post itself.
    Wow Thakaval kalangyam you Rajeswari.
    I am nnot satisfied reading one time. Sure i will come again.
    Pictures are very great.
    You are also great in writing such a nice posts. Keep doing dear.
    viji

    ReplyDelete
  21. அழகான படங்களுடன் அரிய தகவல்களும் திக்கு முக்காட வைக்கின்றன. எப்போதும் போல் இம்முறையும் மனமுவந்த பாராட்டுக்கள். உங்கள் எல்லாப் பதிவுகளையும் பார்க்கிறேன், படிக்கிறேன். மீண்டும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. அருமையான பதிவு.
    ஏராளமான விபரங்கள்.
    கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவில் படங்கள்.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  23. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  24. JAI HANUMAN ;)

    VGK

    ReplyDelete