Friday, June 10, 2011

மல்லிகை மகாலட்சுமி

Jasmine Flower Collection IsolatedJasmine Flower Collection IsolatedJasmine Flower Collection Isolated




மல்லிகைப்பூவில் அவதரித்த மகாலட்சுமியான புஷ்பவல்லி சென்னை  பூந்தமல்லியில்  அருளுகிறாள். 
God+lakshmi+venkateshwara
ராமானுஜரின்  குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலம் ..

திருக்கச்சி நம்பிகள்
 1009ம் ஆண்டில் இங்கு வசித்த வீரராகவர்- கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்த திருக்கச்சி நம்பி தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார்.  

சுவாமிக்கு ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். 

வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினார். தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.  
[Image1]

[Gal1]
ராஜகோபுரம்

வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே,  சூரியத்தலமாக கருதப்படுகிறது. 

ஜோதிடரீதியாக சூரியதசை நடப்பவர்கள், தந்தையுடன்  கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். 

உற்சவர் ரங்கநாதர்
[Gal1]

உற்சவர் வரதராஜர்



















மல்லிகையில் தாயார்: இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்ததால்  "புஷ்பவல்லி" என்று அழைக்கிறார்கள். 

 பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு "பூவிருந்தவல்லி" எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி "பூந்தமல்லி" ஆகிவிட்டது. 
புஷ்பவல்லித் தாயார்
[Gal1]
மூலவர் சீனிவாசப்பெருமாள்
புஷ்பவல்லிக்கு மல்லிகை மாலை அணிவித்து வழிபடுவது விஷேசம் ..

வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது அன்னைக்கு  புஷ்பயாகம் விழாவின்போது சுவாமி பள்ளியறையில் சயனக்கோலத்தில் எழுந்தருளுவார். 

பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், புஷ்பவல்லி தாயார்களுடன் சேர்த்தி காட்சி தருவார்.


மூலவர் வரதராஜர்
[Gal1]










திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள் முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். 

அவருக்கு காட்சி தந்த சுவாமி, தான் காவிரிக்கரையில் இருப்பதால் குளிர்ச்சியாக இருப்பதாகவும், எனவே விசிறத் தேவையில்லை என்றும் சொன்னார். 
திருப்பதி வெங்கடேசர்  தான் மலை மீதிருப்பதால் தனக்கு குளிர் அதிகம் என்றார். 

காஞ்சிபுரம் வரதராஜர், பிரம்மா நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றியதால் உக்கிரமாக இருந்தார். 

அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, திருக்கச்சிநம்பிகள் அவருக்கு விசிறி சேவை செய்தார். 

இந்தக் கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது.  

பங்குனியில் வரும் ஒரு ஞாயிறன்று மூவரும் திருக்கச்சிநம்பிக்கு கருடசேவை காட்சி தருவர்.

குரு தரிசனம்: திருக்கச்சிநம்பிகள் கையில் விசிறியுடன் காட்சியளிக்கிறார்.  ராமானுஜரின் குரு ஆவார். 

ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவரது திருநட்சத்திர விழா நடக்கும்போது, இங்கிருந்து மாலை, பரிவட்டம், பட்டு கொண்டு செல்வர். 

மாசியில் திருக்கச்சிநம்பியின் அவதார விழா நடக்கும்போது, காஞ்சி வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று வரதராஜர் இவரது சன்னதிமுன் எழுந்தருளுவார்.  

அப்போது நம்பி இயற்றிய தேவராஜ அஷ்டகம் பாடி விசேஷ பூஜை செய்வர்.  வருடத்தில் இந்நாளில் மட்டும் மூலவர் நம்பிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். 

ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து, வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும்திருக்கச்சிநம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பிரகாரத்தில்உள்ள திருக்கச்சிநம்பியின் குரு ஆளவந்தாருக்கு, ஆடியில் திருநட்சத்திர விழா நடக்கும். 

இருப்பிடம்: சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் பூந்தமல்லி உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே கோயில்  இருக்கிறது. திறக்கும் நேரம்: காலை 6.30- 11.30 மணி, மாலை 4.30- இரவு 8.30 மணி.போன்:  044 - 2627 2066.





Jasmine Flower Collection IsolatedJasmine Flower Collection IsolatedJasmine Flower Collection Isolated

42 comments:

  1. பூவிருந்தவல்லி கேள்விப்பட்டிருந்தாலும் கோவிலை பற்றிக் கேள்விப்பட்டது இல்லை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆஹா, வெள்ளிக்கிழமை காலையில் அழகிய மஹாலக்ஷ்மி தரிசனம்.

    கால்ங்களில் அவள் வஸந்தம்
    கலைகளிளே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை

    ம ல் லி கை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    கூடைகூடையாக மல்லிகையைக்காட்டி மனம் மயங்கச்செய்துவிட்டீர்கள்.

    அடடா இந்தப் பதிவு பூராவும் ஜாஸ்மின் மணம் வீசுதே!

    மொட்டு மலர்வது போன்ற அசையும் படம் அருமை.

    பூவிருந்தவல்லி விளக்கம் அருமை.

    புஷ்பவல்லித்தாயார் ஆஹா நல்ல பெயர் ஆயிற்றே!

    இராமனுஜரின் குருவான திருக்கச்சிநம்பியின் அவதாரம் ஸ்தலம் பற்றிய அரிய தகவல்கள், அவரின் நந்தவனப்பராமரிப்பு, புஷ்பாஞ்சலி, விசிறி சேவை முதலியன கேட்கவே சந்தோஷமாய் உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி வெங்கடேசர், காஞ்சி வரதராஜப்பெருமாள் அமைவிடத்தின் சீதோஷ்ண நிலைகள் பற்றிய அரிய விளக்கங்கள் அறிய முடிந்தது.

    கஞ்சி வரதர் திருக்கச்சி நம்பிக்காக தானே புறப்பட்டு வந்து காட்சி கொடுத்த இடமே பூந்தமல்லி என்பது புதிய தகவலாக இருந்தது.

    வழக்கம்போல் படங்களும், விளக்கங்களும் அருமையோ அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    மல்லிகை மணத்தில் கொள்ளை கொண்ட மனத்துடன் vgk

    ReplyDelete
  3. வானளவு உயர்த்திக்காட்டியுள்ள பூக்கள், பளீர் பளீரென ஜொலிக்கும், கரிய நிற பின்னனியுடன் காட்டியுள்ள அந்த நக்ஷத்திரப்பாதை, ஆஹா .... காணக் கண்கோடி வேண்டும்.

    கோபுர தரிஸனம் கோடி புண்ணியம்!

    பரமார்த்த குரு:
    ஆளவந்தார்

    பரமகுரு:
    திருக்கச்சி நம்பி

    குரு:
    இராமானுஜர்

    குரு பரம்பரையையும் அறிய நல்ல தகவல்கள்.

    வாழ்க, வாழ்க, வாழ்கவே !

    ReplyDelete
  4. @எல் கே said...//
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. @வை.கோபாலகிருஷ்ணன் sai//
    நன்றி ஐயா.
    தங்கள் பின்னூட்ட வெளிச்சத்தில் மீண்டும் பதிவைப் பார்த்தால் தான் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  6. படங்கள் அருமை..நன்றி

    ReplyDelete
  7. வெள்ளி காலையிலே மஹாலக்ஷ்மி தரிசனம் அதுவும் மணக்க மணக்க புஷ்பவல்லி தாயார் தரிசனம். மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  8. படங்களும் பகிர்வும் அமர்க்களம்!!

    ReplyDelete
  9. வலைச்சர அறிமுகத்திற்கு
    என் அன்பான வாழ்த்துக்கள்.
    vgk

    ReplyDelete
  10. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html

    ReplyDelete
  11. இராஜேஸ்வரி, காலை வேளை இந்தப்
    பதிவு பாத்தோடனே மனசெல்லாம்
    பரவசமா இருக்கு.

    ReplyDelete
  12. @ சமுத்ரா said...
    படங்கள் அருமை..நன்றி/

    கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  13. @ வெங்கட் நாகராஜ் said...
    வெள்ளி காலையிலே மஹாலக்ஷ்மி தரிசனம் அதுவும் மணக்க மணக்க புஷ்பவல்லி தாயார் தரிசனம். மிக்க நன்றி சகோ//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. @ middleclassmadhavi said...
    படங்களும் பகிர்வும் அமர்க்களம்!!//

    அமர்க்களமான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. @வை.கோபாலகிருஷ்ணன் said...
    வலைச்சர அறிமுகத்திற்கு
    என் அன்பான வாழ்த்துக்கள்.
    vgk//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  16. @Lakshmi said...
    உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html//

    பார்த்தேன்,மகிழ்ந்தேன். நன்றி அம்மா.

    ReplyDelete
  17. @ Lakshmi said...
    இராஜேஸ்வரி, காலை வேளை இந்தப்
    பதிவு பாத்தோடனே மனசெல்லாம்
    பரவசமா இருக்கு.//

    பரவச மனத்துக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  18. வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் தரும் மகாலக்ஷ்மியை பற்றிய மஹா விஷயங்கள் மனதுக்கு நிறைவை தருகின்றன , நானும் இத்தளத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன், மனதுக்கு நிறைவு தரும் தரிசனம் உங்களின் பதிவைப்போலவே

    ReplyDelete
  19. வெள்ளிக்கிழமை அம்மன் தரிசனம் அருமை.

    ReplyDelete
  20. Aha!!!!!!!!!!!!
    Today being Friday, i had the darshan of Mahalakshmi and able to read about the Guru parambara.
    Thanks Rajeswari.
    Nice pictures and well write up.
    Thanks again.
    viji

    ReplyDelete
  21. பதிவு மணக்கிறது என்று சொன்னால் அது அப்படியே பொருந்துகிற பதிவு இதுதான்!
    திருக்கச்சி நம்பிகள் அவதார ஸ்தலம் பற்றிய நேர்முக வர்ணனை இப்போது மனசில் மணக்கிறது.

    ReplyDelete
  22. மல்லிகை மகாலட்சுமி மனதிற்கு மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  23. கணணி மற்றும் இணையத்தின் பலன் தங்களின் பதிவின் மூலம் அடைந்தேன். நன்றியுடன்,பத்மாசூரி.

    ReplyDelete
  24. 'பூவிருந்தவல்லி' ஊர் பெயர் காரணம் -நல்ல தகவல் பகிர்வு.

    ReplyDelete
  25. @A.R.ராஜகோபாலன் said...
    வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் தரும் மகாலக்ஷ்மியை பற்றிய மஹா விஷயங்கள் மனதுக்கு நிறைவை தருகின்றன , நானும் இத்தளத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன், மனதுக்கு நிறைவு தரும் தரிசனம் உங்களின் பதிவைப்போலவே//

    Thank you sir.

    ReplyDelete
  26. @ கடம்பவன குயில் said...
    வெள்ளிக்கிழமை அம்மன் தரிசனம் அருமை//

    Thank you.
    கடம்பவன குயில் - What a sweeeet Name. I admire very much..

    ReplyDelete
  27. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
    Good one!//

    Thank you.

    ReplyDelete
  28. @ சந்திர வம்சம் said...
    கணணி மற்றும் இணையத்தின் பலன் தங்களின் பதிவின் மூலம் அடைந்தேன். நன்றியுடன்,பத்மாசூரி.//

    Thank you.
    சந்திர வம்சம் - Very Bright Name.

    ReplyDelete
  29. @ viji said...
    Aha!!!!!!!!!!!!
    Today being Friday, i had the darshan of Mahalakshmi and able to read about the Guru parambara.
    Thanks Rajeswari.
    Nice pictures and well write up.
    Thanks again.
    viji//

    Welcome dear viji. Thank you.

    ReplyDelete
  30. @ரிஷபன் said...
    பதிவு மணக்கிறது என்று சொன்னால் அது அப்படியே பொருந்துகிற பதிவு இதுதான்!
    திருக்கச்சி நம்பிகள் அவதார ஸ்தலம் பற்றிய நேர்முக வர்ணனை இப்போது மனசில் மணக்கிறது.//

    Thank you for மனசில் மணக்கிற comment.

    ReplyDelete
  31. @ FOOD said...
    'பூவிருந்தவல்லி' ஊர் பெயர் காரணம் -நல்ல தகவல் பகிர்வு//

    Thank you sir.

    ReplyDelete
  32. @ சாகம்பரி said...
    மல்லிகை மகாலட்சுமி மனதிற்கு மகிழ்ச்சி. நன்றி//

    Thank you ...

    ReplyDelete
  33. உங்களின் அனைத்து இடுகைகளும் பரட்டுகளுக்குரியான ஆயினும் இந்த படங்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள் சிறப்பாக காட்சிபடுத்துகிறீர் பாராட்டுகள்

    ReplyDelete
  34. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. @போளூர் தயாநிதி said...
    உங்களின் அனைத்து இடுகைகளும் பரட்டுகளுக்குரியான ஆயினும் இந்த படங்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள் சிறப்பாக காட்சிபடுத்துகிறீர் பாராட்டுகள்

    நன்றி ஐயா பாராட்டுக்களுக்கு.

    ReplyDelete
  36. @Rathnavel said...
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  37. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
    வழக்கம்போல் படங்களும், விளக்கங்களும் அருமையோ அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி ஐயா. மனப்பூர்வமான தங்களின் ஆசியுரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  38. ;)

    குரவே ஸர்வ லோகானாம்
    பிஷஜே பவ-ரோஹிணாம்

    நிதயே ஸர்வ வித்யானாம்
    தக்ஷிணாமூர்த்தயே நம:

    ReplyDelete
  39. படங்களும் , விளக்கங்களும் அருமை . நன்றி சகோதரி .

    ReplyDelete
  40. 574+4+1=579

    ;))))) தங்களின் ஆத்மார்த்தமான பதில்கள் மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி. ;)))))

    ReplyDelete