Monday, November 14, 2011

செல்லமே செல்லம் குழந்தைகள் தினம்





அன்பான குழந்தைகள் தின விழா நல்வாழ்த்துக்கள்


Childrens Day Scraps



Childrens Day Cards
  • ஒரு குழந்தை நேருவின் சட்டையில் ரோஜா அணிவித்ததிலிருந்து எப்போதுமே தனது மேல் அங்கியில் ரோஜா அணிவதை வழக்கமாக கொண்டார் ரோஜாவின் ராஜா ..

  • அவரது பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியே குழந்தைகள் தினமாக சிறப்பிக்கப்படுகிறது..
  • குழந்தைகள் பூந்தோட்டத்தில் உள்ள மொட்டுகள் என்று அவர் வர்ணித்தார். நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது என்று அவர் அடிக்கடி கூறுவார். குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலை அமைய வேண்டும் என்று விரும்பினார். குழந்தைகள் அவரை நேரு மாமா என்றே அழைத்தார்கள்.

குழந்தைகளிடம் ஆண் மற்றும் பெண் என்ற பேதம் பார்க்கக் கூடாது என்று கூறினார்.



நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி 
இந்த நாடே இருக்குது தம்பி 
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி 
இந்த நாடே இருக்குது தம்பி 
சின்னஞ்சிறு கைகளை நம்பி 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி 
சின்னஞ்சிறு கைகளை நம்பி 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் 
கடமை இருந்தால் வீரன் ஆகலாம் 
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் 
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் 
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும்


நேரு மிகச்சிறந்த பேச்சாளர், தி டிஸ்கவரி ஆப் இந்தியா மற்றும் ஆட்டோபயாகிராபி எனும் அவரது புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை.


அவர் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில்...

குழந்தைகளுடன் இருப்பதை நான் விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். ஏன்... விளையாடவும் விரும்புகிறேன். அப்படி விளையாடும் போது, நான் வயதானவன் என்பதை மறந்துவிடுகிறேன். குழந்தைப் பருவம் மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதையும் மறந்து விடுகிறேன். ஆனால் நான் எழுத உட்காரும் போது, என் வயதும் தூரமும் குழந்தைகளாகிய உங்களிடமிருந்து என்னை பிரித்து விடுகின்றன. வயதானவர்கள் இளையோருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்... என்று எழுதியிருந்தார். 
குழந்தைகள்...விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்படும் வெள்ளை உள்ளங்கள்! இவர்களுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1959ம் ஆண்டும் முதல் நவம்பர் 20ம் தேதியை  குழந்தைகளுக்கான தினமாக உலகமே கொண்டாடினாலும், இந்தியாவில் மட்டும் குழந்தைகள் தினம் நவம்பர் 14. காரணம், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. 


நாம் குழந்தைக்காக பாடும் பாட்டுகளில், பாரதியாரின் பாப்பா பாட்டு, மிகவும் சிறந்தது. 

இந்த பாட்டை பாட்டினால், எப்படி திறமையோடு வளர வேண்டும், பிறரிடம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும், தேசப் பற்றும், மொழிப் பற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டும், விலங்குகள் நமக்கு நண்பன் போன்ற நல்ல கருத்துகளை வளர்க்கும். 
ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. 
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! (9)

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!

தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். (15)

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா

47 comments:

  1. ஆஹா! குழந்தைகள் தினம். என்னோட தினம் தானே!

    மீண்டும் வந்து படுத்துவேன்.

    ReplyDelete
  2. அருமையான எம்.ஜி.ஆர் படப் பாடலைக் கொண்டு வந்து காட்டியுள்ளது அருமை.

    ReplyDelete
  3. கண்ணடித்தபடி டைப் அடிக்கும் பெண் குழந்தையும், அவளுக்காக் தானும் கண்ணடித்து வாய் அசைக்கும் நாயும் சூப்பர்.

    ReplyDelete
  4. ஸ்பூனால் ஊட்டிவிடச் செல்லும் போது கரெக்டாக வாயை மூடிக்கொள்கிறதே!

    பாரதியார் பாடலும் அருமையாக அசத்தலாகக் கொண்டுவந்து சேர்த்துள்ளீர்கள்.

    ஆங்காங்கே பழமொழிகள் பொருத்தமாகவே!

    நாயுடனும் பூனையுடனும் அன்பு செலுத்தும் குழந்தைகள் .,,, ஆஹா அருமை தான்.

    ReplyDelete
  5. "A" is for Australia

    ஆ ஊன்னா ஆஸ்திரேலியா தான் உங்களுக்கு.

    குழந்தைகள் இருக்கும் இடமல்லவா! அதன் மேல் தனி பிரியம் இருக்கத்தானே செய்யும்; ))))

    பாய்ந்து செல்லும் கங்காரு போல பதிவுகளில் உங்களின் வேகம் தெரிகிறது.

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said.../

    குழந்தைகள் தின விழாவை இனிமையாய் கருத்துரை வழங்க்கி சிறப்பித்த தங்களுக்குப் பாராட்டுக்கள்..

    குழந்தைகள் தின விழா வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. மரத்தைச் சுற்றுகிறாளா?
    மனிதனைச் சுற்றுகிறாளான்னே தெரியவில்லை. ஒரே சுத்தலாக உள்ளது. அவன் தூங்கிவழிவது போலவும் உள்ளது. ஏதாவது வேண்டுதலையாக இருக்குமோ?

    குதிரைகளும் குட்டிகளும் ஓடுவது போலப் பார்த்தேன். திடீரென்று நின்று விட்டனவே? ஏனோ தெரியவில்லை.

    நல்ல அழகிய பதிவு.
    குழந்தைகளுக்கான பதிவு.

    குழந்தையை விட்டுப்பிரியவே கூடாது.ஏமாறி விடும். ஏங்கி விடும். அழுது விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    குழந்தை மனதுடன் vgk

    ReplyDelete
  8. அழகான படங்கள்..

    குழந்தையுள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  9. நேரு குழந்தைகளிடம் மட்டுமா அன்பு காட்டினார்...!

    ReplyDelete
  10. படங்கள் பாடல்கள் கலக்குது

    ReplyDelete
  11. முன்னாள் குழந்தைகள் மற்றும் இந்நாள் குழந்தைகளுக்கு என்னுடைய குழந்தைகள் தின வாழ்த்துக்கள் (எனக்கும் சேர்த்துதான் )


    எல்லா படங்களும் அருமை .பிடில் வாசிக்கும் குட்டி பொண்ணும் அருகே இருக்கும் குட்டி மியாவும் அழகோ அழகு

    ReplyDelete
  12. அருமையான பாடல்களுடன் நல்லதொரு ஞாபகமூட்டல்.

    ReplyDelete
  13. அருமையான பதிவு
    பூமி தொடர்ந்து நண்டவனமாய் இருக்க்க் காரணமே
    குழந்தைகள் தானே
    அவர்கள் குறித்த மிக அழகான பாடல்களை
    பதிவாக்கி மீண்டும் சிறிது நேரமாவது
    நனடவனத்தில் உலவ விட்டமைக்கு வாழ்த்துக்கள்
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இதெல்லாம் மறந்தே போச்சுங்க.
    குழந்தைகளுக்காகவென்று ஒரு தினத்தைக் கொண்டாடும் வழக்கம் இந்தியாவைத் தவிர மற்ற எந்த நாடுகளில் கூகல் செய்யவேண்டும்.

    ReplyDelete
  15. வாழ்த்துடன் அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு.

    அனைத்து குழந்தைகளுக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. குழந்தைகள் எங்களுக்கு வாழ்த்து சொன்னதுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  17. குழந்தைகள் தினத்தில் குதூகலமான பகிர்வு

    ReplyDelete
  18. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. உங்கள் வலைப்பூ மிகவும் நன்றாக இருக்கிறது. முதல் முறை உங்கள் பதிவிற்கு கருத்துரை இடுகிறேன். குழந்தைகள் தினத்தன்று நல்ல பதிவு.

    ReplyDelete
  20. பாடல்க‌ள் தேர்வும், படங்களின் அழகும் பதிவின் சிறப்பும் அசர வைக்கிற‌து! உங்கள் சுறுசுறுப்பு எல்லாவற்றையும்விட அதிகமாய் அசர வைக்கிறது ராஜராஜேஸ்வ‌ரி!!!

    ReplyDelete
  21. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    வித்தியாசமான பதிவுக்கு.
    மாறுபட்ட விஷயங்களில் எழுதுங்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  22. அருமையான பகிர்வு ... குழந்தைகள் தின வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  23. படங்கள் அருமை. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. அருமயான பாடல்கள் , அருமையான படங்கள்.

    குழந்தைகள் தின வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  25. மழலையர் தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  26. விசேஷ தினத்திற்கேற்ப சிறப்பாக பதிவினை வெளியிட தங்களுக்கு சொல்லியா தரவேண்டும்!

    ReplyDelete
  27. வணக்கம் சகோ..

    மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

    படங்கள் ஓவ்வொன்றும் அழகு..

    ReplyDelete
  28. அருமையான தொகுப்பு படங்களும் நன்று

    ReplyDelete
  29. அனைவருக்கும் என் சார்பிலும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்... உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  30. அன்பான வாழ்த்துச் சொல்லி அழகாக வளர்ப்போம் !

    ReplyDelete
  31. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. படங்களின் தொகுப்பு அருமை மேடம்

    ReplyDelete
  33. அருமையான படங்கள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.நேரு மாமாவிற்கும் வாழ்த்து சொல்லலாமா?

    ReplyDelete
  34. படங்கள் ஓவ்வொன்றும் அழகு..

    குழந்தைகள் தின விழா வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  35. அழகான பாடல் அது, சூப்பர் படங்கள்.

    மொத்தத்தில் தொகுப்பு அருமை.

    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. படங்களின் தேர்வு அருமை.பொருத்தமான பாடலுடன் கூடிய பதிவு.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  37. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  38. குழந்தைகள் உள்ளத்தில் ஆண்டவன் குடியிருப்பான்.குழந்தைகள் உள்ளத்தில் ஏற்ற தாழ்வு கிடையாது. வளர வளர மனிதர்கள் ஆகிறார்கள். வளர்ந்தாலும் மனதளவில் குழந்தைகளாக இருக்க முயல்வோம்.

    ReplyDelete
  39. படங்களின் தேர்வு அருமை.பொருத்தமான பாடலுடன் கூடிய பதிவு.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  40. சிவன் கண்சிமிட்டுவது கலக்கல்..

    ReplyDelete
  41. நான்கு பதிவுகள் படிக்காமல் தவறவிட்டுவிட்டேன்.. மன்னிக்கவும். மறக்காமல் வந்து படிக்கிறேன்.. நன்றி.

    ReplyDelete
  42. ;) ஓம் ஸுமுகாய நம:

    ;) ஓம் ஏகதந்தாய நம:

    ;) ஓம் கபிலாய நம:

    ;) ஓம் கஜகர்ணகாய நம:

    ;) ஓம் லம்போதராய நம:

    ReplyDelete
  43. 1329+7+1=1337 ;)

    ஒரு குட்டியூண்டு [குழந்தை போன்ற] பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  44. குழந்தைகள் தினத்துக்கான, படங்களுடன் பகிர்வு அருமை. மிகவும் ரசித்து படித்தேன்.நன்றி

    ReplyDelete