Saturday, November 19, 2011

"உடனே உதித்த உத்தமர்'






திருமாலின் காக்கும் தன்மை தெளிவாக வெளிப்பட்ட அவதாரம் 
"நரசிம்ம அவதாரம்'. 

மற்ற அவதாரங்களில் திருமால் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக அவதரித்து, அந்த அவதார நோக்கம் முடிந்ததும் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளினார். 

ஆனால் ஸ்ரீநரசிம்மரோ அவதரித்த தினம் முதல் இன்று வரை எங்கும் எதிலும் வீற்றிருந்து இவ்வுலகைக் காத்தருளுகிறார். 

நரஸிம்ஹ ரூபத்துடன் திருமால் திருக்கோயில் கொண்டு 
அருள்புரியும் தலங்களில் ஒன்றுதான் தேவர்மலை.

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் 
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் 
ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம்
மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்
 தேவர்மலை எனப்படுவதால் இங்கு ஏதாவது மலை உள்ளது என்றோ அதன் மீது பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது என்றோ நினைக்க வேண்டாம். 

நரசிம்ம அவதாரத்தின் போது, இரண்ய வதம் முடிந்த பின்னும் உக்கிரம் சிறிதும் குறையாமல் இருந்த இறைவன் நிலைகொள்ளாமல் திரிந்தார்.

அவரது உக்கிரத்தைத் தணிப்பதற்காக தேவர்கள் ஒன்றுகூடி இறைவனை மறித்து சாந்தப்படுத்திய இடம்தான் "தேவர் மறி'.  பிற்காலத்தில் மருவி "தேவர்மலை' ஆனது. 

இங்கே எம்பெருமான் உக்கிர ரூப மூர்த்தியாய் விளங்கிய போதிலும் 
ஒரு திருக்கரம் அபய ஹஸ்தமாக விளங்குகிறது. 

மற்றொன்றில் யோக முத்திரை காட்டியருளும் நரசிம்மர், 

பின்னிரு கரங்களில் சங்கு சக்கரதாரியாய், இடது காலை மடித்து 
வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார்.


இந்தத் திருக்கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டும். 

சற்று உற்று நோக்கினால் திருமுகமண்டலத்தில் மூன்றாவது கண் இருப்பதையும், புன்னகை பூத்த வதனத்தையும் சேவிக்கலாம். 


நரசிம்ம அவதாரம் பற்றிக் குறிப்பிடுகையில் "சிங்கம் சிரித்தது' (சிரித்தது செங்கச் சீயம்) என்பார் திருமங்கையாழ்வார். 

அந்த வாக்கியம் முற்றிலும் இந்தப் பெருமானுக்குப் பொருந்தும். 

 கமலவல்லி என்னும் திருநாமத்துடன் தாயார் சந்நிதி அமைந்துள்ளது.

லட்சுமி நாராயணருக்கும், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மகான்களுக்கும் தனித்தனியே சந்நிதிகளும், திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் விசேஷமாக பைரவர் சந்நிதியும் இருக்கின்றன. 


 "மோட்ச தீர்த்தம்'  திருக்குளம் மிகவும் புனிதமானது. சகல தோஷங்களையும் போக்கவல்லது. 

 கல்வெட்டுக் குறிப்புகள் ஆலயத்தின் பழமையைப் பறைசாற்றுகின்றன.


பாண்டிய மன்னர்கள் பேராதரவுடன் ஒரு காலத்தில் எந்நாளும் விழாக்கோலம் பூண்டிருந்த திருக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்தது. 

 ஆன்மீக அன்பர்களின் துயரத்தைப் போக்குவதற்கு நரசிம்மரே அருள்புரிந்தார். 
"ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பக்த சபா டிரஸ்ட்' என்ற அமைப்பு சிங்கக் குகையில் சீரான விழா! நடை பெற சிறப்பாக செயல்பட்டுவருகிறது..


திருக்கோயில் அமைவிடம்:-
கரூர் - குஜிலியம்பாறை - திண்டுக்கல் மார்க்கத்தில் கரூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள பாளையத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது தேவர் மலை. 

பாளையத்திலிருந்து கோயிலுக்கு செல்ல டிரஸ்ட் சார்பில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம 
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம
Prahlada crowned the king of the demons 

20 comments:

  1. Good Post with excellent pictures.
    Very Nice. Thanks for sharing. vgk

    ReplyDelete
  2. உடனே உதித்த உத்தமருக்கு
    உடனே கருத்துரைத்தமைக்கு
    மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. இப்படி ஒரு இடம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.தகவலுக்கு நன்றி.

    அதையெல்லாம் தாண்டி அந்த கடைசிப் படத்துக்கு முந்தின படம்.அதுல நரசிம்ம மூர்த்தி ப்ரஹ்லாதன் சிரசில கருணையாய் கரம் வைத்துக் கொண்டு... ஆஹா!அற்புதம்.பகிர்விற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  4. Narasimmar pakka payama irunthalum malls kadavul

    ReplyDelete
  5. உடனே உதித்த உத்தமர்.தலைப்பே பதிவைப் பார்க்க வைக்குது.
    எப்பவும்போல படங்கள் பக்தியைத் தருது !

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல
    அத்தனை அற்புதம்
    அற்புதமான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. படங்கள் அருமை

    ReplyDelete
  9. தங்களது நிறைய பதிவுகள் படித்து மனதில் பதிக்க வேண்டும்... மீண்டும் வந்து படிக்கிறேன் சகோ!

    ReplyDelete
  10. புதிய தலத்தை பற்றி தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  11. அருமையான படங்களுடன், அசத்தல் பதிவு வழக்கம் போல, நன்றி சகோ..

    ReplyDelete
  12. அருமை. பரவசமூட்டும் பகிர்வு.

    ReplyDelete
  13. படங்கள் அத்தனையும் அருமை... சகோ...
    தலத்தின் தகவலும் தெரிந்து கொண்டேன்...

    பகிர்வுக்கு நன்றி... சகோ...

    ReplyDelete
  14. Pala thagavalgal therindhu konden. Pagirvuku nanri

    ReplyDelete
  15. என்ன அழகான படங்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. கோயிலின் தகவலுக்கு நன்றி. படங்கள் தெய்வீகமாக உள்ளடு.

    ReplyDelete
  17. மனதைக்கவர்ந்தது,வழக்கம்போல! நன்று

    ReplyDelete
  18. மனதைக்கவர்ந்தது,வழக்கம்போல! நன்று

    ReplyDelete