Saturday, September 1, 2012

மலரும்..மனமும் ....




வழி அனுப்பிவைக்க விமான நிலையம் சென்றிருந்தோம் .. 

அங்கே  உறவினர் பெண் குடும்பத்தோடு யாரையோ வரவேற்கக் காத்திருந்தார்...

அன்று நிறைய உறவினர்கள் வழியனுப்பவும் , வரவேற்கவுமாக காத்திருந்தது வியப்பளித்தது..

அவரது மகன் ஜெர்மனி நாட்டிலிருந்து தகவல் தந்திருந்தாராம்..
தன் வகுப்புத்தோழன் விமானத்தில் வருவதாகவும் ,வரவேற்று வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறும் கூறியிருந்தாராம்...

அடையாளம் கேட்டார்களாம்.. நீங்கள் சிறு வயது
முதலே பார்த்திருக்கிறீர்கள்..விமான நிலையத்தில் காத்திருங்கள் .. 
வருபவரை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றாராம்..

பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மா என்ற குரல் கேட்டு நம்பமுடியாமல் திகைத்து திரும்பிப்பார்க்க சாட்சாத் அவரது மகனே நின்றிருந்தார்..

ஆனந்த அதிர்ச்சியுடன் ஒரு வருடம் கழித்து வந்த மகனுடன்
களிப்புடன் பேசிக்கொண்டிருந்த காட்சி மனம் நிறைத்தது..


எங்கள் இல்லத்தில் மீண்டும் நிஷாகந்தி மலர்கள் மலர்கள் மலர்ந்திருக்கின்றன.


பிரம்மக் கமலம்,நைட் குயின் ,நிஷாகந்தி ,அனந்த சயனப் பூ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது


நான் அவதானித்த வரையில் மழை பெய்த பிறகு வரும் அமாவாசை நாளுக்குப் பிறகு மிகச்சிறிதாக மொட்டுகள் இலையில் ஒட்டியவாறு தோற்றம், பெறுகின்றன..

அல்லது பிள்ளைகள் வருவதாக தகவல் தெரிவித்தவுடன் மொட்டுவிட்டு , அவர்கள் வந்தவுடன் மனம் மலர்வது போல் மலர்ந்து மகிழ்விக்கின்றன...

பௌர்ணமி முழு நிலவு நாளில் மொட்டுகள் முழு வளர்ச்சியடைந்து முழுதாக மலர்ந்து மணம் பரப்புகின்றன.. அடுத்த நாள் காலை வாடிவிடுகின்றன..

http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_12.html 
 நிஷாகந்திப்பூ 
http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_03.html
நிஷாகந்தி- பூப்பூக்கும் ஓசை
File:Koenigin der Nacht Der Film wikipediaversion.ogg
மலரும் வீடியோபதிவு காண ........
http://en.wikipedia.org/wiki/File:Koenigin_der_Nacht_Der_Film_wikipediaversion.ogg



32 comments:

  1. azhakiya padangal!

    vaazhthukkal!

    ReplyDelete
  2. ஆஆஆஆஆஆ இம்முறை நான் தான் முதலவது, அதனால எனக்கொரு ஃபிரீ விமானச் சீட்டு.. ஜேர்மனிக்கு ...:)

    ReplyDelete
  3. அனைத்தும் அழகழகான படங்கள்.. அந்தப் பூ கொள்ளை அழகூ.

    ReplyDelete
  4. மலரும்.. மனமும்..

    குதூகலிக்கிறது பதிவில்! :)

    ReplyDelete
  5. படங்கள் எங்குதான் கிடைகிறதோ !
    உங்களுடன் போட்டி போடுவது 'கான மயிலாட கண்டிருந்த வான் கோழி' கதிதான்!

    ReplyDelete
  6. சந்திர வம்சம் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன்..
    உங்கள் பதிவுகளின் சிறப்பு அம்சமே படங்களும்தான்..
    நிஷாகந்தி பூ மிக அழகு.

    ReplyDelete
  7. நிஷாகந்தி பூ மிக மிக அழகாக இருக்கிறது... நன்றி அம்மா...

    ReplyDelete
  8. நிஷ்கந்திப்பூ கொள்ளை அழகு
    வண்ண்ப் புகைப்படங்கள்
    மனதை கொள்ளை கொண்டது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நிஷாகந்தி பூக்கள்.

    எத்தனை எத்தனை படங்கள். போட்டு அசத்தறீங்க!

    ReplyDelete
  10. பறவையைக்கண்டான் .......!
    விமானம் படைத்தான் .......!!

    ஆஹா ! உலகில் தான் எத்தனை எத்தனை விமானங்கள்!!!!!

    அத்தனை விமானங்களிலும் ஏறிச் சென்றது போன்ற மகிழ்ச்சியை அளிக்குதே இநதத்தங்களின் ஒரு பதிவு மட்டுமே !

    எங்கோ பலவித ஆகாய விமானங்களில் பறந்து பறந்து போயல்லவா இதுபோன்ற ஒவ்வொரு அனிமேஷன் படங்களையும் கடத்தி வந்து காட்டுகிறீர்கள் !! ;))))) .

    எப்படிப்பாராட்டுவது என்றே புரியாமல் பிரமித்துப்போய் இவைகளைப் பார்த்துக்கொண்டே இருந்ததில் செப்டம்பர் ஒன்று போய் செப்டெம்பர் இரண்டே வந்து விட்டது. அதனால் பின்னூட்டமிட சற்றே தாமதம் ஆகி விட்டது.

    மன்னிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. மலரும் ... மனமும்

    மிக நல்லதொரு தலைப்பு !

    மலர் போன்ற மனம் தான் வேண்டும்.
    அது உங்களிடம் மட்டுமே உள்ளது.

    இப்போது இதுபோன்ற அழகான பதிவுகள் மூலம் எங்களிடமும் அந்த பாசமலர் தன் மணம் பரப்பி எங்கள் மனதையும் மயங்கத்தான் செய்கிறது.

    தங்களின் பதிவுகள் என்றாலே எனக்கு ஒரே மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.

    அதுவும் இன்றையப்பதிவு கேட்கவே வேண்டாம். எதைச்சொல்வது எதை விடுவது என ஒரேயடியாகத் திக்கு முக்காட வைத்து அசத்தியுள்ளீர்கள்.

    ஒவ்வொன்றாகப்பார்த்து ரஸித்துப் பின்னூட்டம் இடுவதற்குள் விடிந்தே போய்விடும், என்பது உண்மையாகி விட்டது.

    ReplyDelete
  12. Vazhakkam pol super! :-)) thanks for sharing.

    ReplyDelete
  13. விமானங்கள் முடிந்து கீழே பூக்களைப் பார்க்க வரும்முன், அடடா மூன்று அழகான பொம்மைகள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல .... ஆனால் மாடர்ன் ஆக ............
    சூப்பரோ சூப்பர்.

    ஆண் பெண் குழந்தை போல மூவரும் அசத்தலோ அசத்தல்.

    எல்லோருமே கேட்பதுபோல எங்கே தான் போய்ப் படங்களைத் தேர்ந்தெடுப்பீர்களோ!

    பனிக்கட்டி போன்ற வெள்ளைக் கலரில் அவர்களின் பாடிகள் ...

    கழுத்தினில் நல்ல சிவப்பில் ஸ்வெட்டெரோ மப்ளரோ போன்ற ஏதோ ஒரு சூப்பரோ சூப்பர் ஐட்டம்.

    அதில் ஆங்காங்கே குஞ்சலம் போன்ற அமைப்புகள் ...

    பட்டுக்குட்டிகளாய் ஜொலிக்கின்றனவே ;)))))

    தலையில் கொண்டையுடன் கூடிய நீல வண்ண பனிக்குல்லாக்கள் .......... ஜோர் ஜோர் ! ;))))))

    கருப்பு ஸ்டிக்கர்ப் பொட்டு போல ஆளுக்கு இரண்டு கண்ணுகள்.....

    மொத்தத்தில் அவைகள் யாவும் கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக் குட்டி போலத்தான் ... உள்ளன. ;)))))

    ஹல்வாத்துண்டு போல ஆளுக்குக் கொஞ்சூண்டு மூக்கு ! ;)))))

    அழகாக டிஸைன் செய்துள்ளார்கள்.

    அவர்களுக்கும், உங்களுக்கும் மிக மிக ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;))))

    ReplyDelete
  14. வித்தியாசமான மகன். அவர் கொடுத்த சர்ப்ரைஸ் எதிர்பாராதது. பூக்கள் மிக அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
  15. அடுத்து நிஷாகந்திப்பூக்கள்!

    உங்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்தின் ஸ்பெஷாலிடி ஐட்டம். கேட்கவே வேண்டாம்.

    நீங்கள் மொட்டு இடச்சொன்னால் மொட்டு இடும்.

    நீங்கள் பூக்கச்சொன்னால் பூத்திடும்.

    பூப்பூக்கும் ஓசையை நீங்கள் மட்டும் கேட்டு, அதன் அழகினை கண்டு ரஸிப்பதோடு நில்லாமல் எங்களுக்கும் கேட்க வைத்து அவ்வப்போது அசத்துகிறீர்கள்.

    நீங்கள் ஒரு தனிப்பிறவி தான். ! )

    ReplyDelete
  16. அந்த மலரும் வீடியோ பதிவு காண ...

    காணக்காணக் கண் கோடி வேண்டும்.
    எவ்ளோ ஓர் அழகு. அதை மட்டுமே நான் மணிக்கணக்கானப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

    மேலிடம் வைத்துவிட்டுச் சென்ற சூடான காஃபியையும் குடிக்க மறந்து போனேன். அது ஆறியும் போனது.

    நீங்காத நினைவுகள் அளிக்கும் அழகான அந்தப் படம் .... ரொம்ப ரொம்ப ஜோராக உள்ளது. ;)))))

    ReplyDelete
  17. அடடா!

    அடுத்து வரும் அனிமேஷன் அதைவிட அசத்தலாக அல்லவா கொடுத்து விட்டீர்கள். ஏதோ நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வரிசையாக வந்து நிற்பது போலல்லவா விமானம் ஸர்ஸர்ரென்று வந்து நிக்குது. குறுக்கே குறுக்கே வரும் மஞ்சக்கலர் பஸ்ஸிகளில் ரெஸ்க்யூ டீம் ஆட்களோ?

    அதுல ஒண்ணு பார்த்தீங்களா .....
    நடுவே தவக்களை போல ஒண்ணு ப்ளேனைத் துரத்திப்போகுதே, அது என்னங்க? பயணிகள் இறங்கும் படிக்கட்டாக இருக்குமோ?

    மகப்பேறு மனைகளில் எலிகள் என இப்போது செய்தி வந்திச்சே ... அதுபோல விமான நிலையத்திலும் நடமாடும் வேறு ஏதாவது ஜந்துக்களா ஒருவேளை இருக்குமோ, படத்தில் அவை பல இடங்களில் ஓடுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

    உலகம் சுற்றும் வாலிபியான தகவல் களஞ்சியம் தான் இதற்கு பதில் சொல்ல வேணும்.

    ReplyDelete
  18. அதற்கு அடுத்த படத்தில், அடடா ....

    ப்ளேனிலிருந்து இறங்கியதும், காரில் ஏறி சொகுசான பயணங்கள்,

    அழகான சொகுசான சாலைகள்,

    சூப்பரான கட்டடங்கள்,

    பாங்கான பாலங்கள்,

    சிக்கல் இல்லா சிக்னல்கள்

    எனக் கண்ணைப்பறிக்கும் விதமாகக் கலக்கலாக காட்டி,

    இப்படி எங்களைப்போன்ற சாமான்யர்களை அப்படியே சொக்க வைக்கிறீகளே! ;)

    ReplyDelete
  19. //நான் அவதானித்த வரையில் //

    இது இலங்கைத் தமிழ் அல்லவா? கோயமுத்தூருக்கு எப்படி வந்தது?

    ReplyDelete
  20. //பிள்ளைகள் வருவதாக தகவல் தெரிவித்தவுடன் மொட்டுவிட்டு , அவர்கள் வந்தவுடன் மனம் மலர்வது போல் மலர்ந்து மகிழ்விக்கின்றன...//

    ம க் க ளை ப் பெ ற் ற

    ம க ரா சி

    வா ழ் க

    வா ழ் க வே ! ;)))))

    ReplyDelete
  21. //பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மா என்ற குரல் கேட்டு நம்பமுடியாமல் திகைத்து திரும்பிப்பார்க்க சாட்சாத் அவரது மகனே நின்றிருந்தார்..

    ஆனந்த அதிர்ச்சியுடன் ஒரு வருடம் கழித்து வந்த மகனுடன் களிப்புடன் பேசிக்கொண்டிருந்த காட்சி மனம் நிறைத்தது//

    பாசமிகு காட்சியை வேறு யாரோ போலச் சொல்லி வெகு அழகாகக் காட்டிவிட்டீர்கள். உணர்ந்து கொண்டோம்.

    ஓராண்டுக்குப்பின் தாயும் அவள் பெற்ற சேயும் சந்திப்பதென்றால்
    ..................

    ”பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ...............”

    ”சந்தித்த வேளையில் ...... சிந்திக்கவே இல்லை ......
    தந்துவிட்டேன் .... என்னை”


    காதலர்களாய் இருந்தாலும்,

    பாசமிகு தாயும் பிள்ளையுமாக

    இருந்தாலும் அந்தத்தருணம்

    மகிழ்ச்சியின் எல்லை அன்றோ !

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளதே;
    சந்தித்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

    மன நிறைவான அழகிய காட்சியை
    படம் பிடித்துக் காட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறதே ... ;))))))

    ReplyDelete
  22. //சந்திர வம்சம் said...
    படங்கள் எங்குதான் கிடைகிறதோ !
    உங்களுடன் போட்டி போடுவது '
    கான மயிலாட
    கண்டிருந்த வான் கோழி'
    கதிதான்!//

    அன்புள்ள ”சந்திர வம்சம்” மேடம்,

    உங்களை நான் கூட என்னுடைய சமீபத்திய பின்னூட்டம் ஒன்றில் உசுப்பி விட்டிருந்தேன்.

    தங்களுக்கு நினைவிருக்கலாம்.

    மயிலும் வான் கோழியையும் விட

    நான் சொல்லப்போவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

    தாங்கள் ”சந்திர வம்சம்”

    இவர்களோ ”சூரிய வம்சம்”

    [சூர்யனைக் கண்டால் மலரும் செந்தாமரையே இவர்களின் சின்னம்]

    என்ன இருந்தாலும் சூரிய ஒளிக்கு முன்பு சந்திரன் காணாமல் போவது இயற்கை தானே!

    ஆனாலும் நிலவொளியை இரவினில் நாம் நன்கு குளுமையாக அனுபவிக்க முடிகிறது அல்லவா?

    ஒரே பகலாகவோ அல்லது ஒரே இரவாகவோ இருந்தால் நம்மால் நிம்மதியாகவே இருக்க முடியாது அல்லவா?

    அதனால் இரண்டுமே உலக வாழ்க்கைக்கு அத்யாவஸ்யத் தேவைகள் தான்.

    சூரியனிடமிருந்து ஒளியைப்பெற்று இரவினில் நிலா வெளிச்சம் தருவது போல, தாங்களும் இவர்கள் பாணியில் பதிவிட தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

    செய்துகொண்டு தான் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

    மனம் தளர வேண்டாம். வான்கோழி, மயில் என்றெல்லாம் ஒப்பீடு செய்து மனச்சோர்வு அடைய வேண்டாம்.

    ஐந்து விரல்களும் ஒன்றாய் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது.

    ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொருவிதமான தனித்தன்மையும் மதிப்பும் உண்டு தான். அதைத் தாங்கள் என்றும் மறக்க வேண்டாம்..

    இந்தத் தங்களின் தோழி NUMBER ONE ஆகவே இருக்கட்டும்.

    அவர்களை நாம் ஓர் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, நாமும் அவர்களைப் போலவே கடுமையாக உழைத்து, அவர்கள் அளவுக்கு நம்மால் வர முடியா விட்டாலும், ஏதோ கொஞ்சம் முன்னேற முயற்சிபோம்.

    ”வெற்றி வேண்டுமா ......
    போட்டுப்பாரடா ..........
    எதிர் நீச்சல் .............”

    நமக்காகவே எழுதப்பட்டுள்ள அழகான தன்னம்பிக்கையளிக்கும் பாடல் அல்லவா!

    நம் இருவருக்குமாகவே எழுதப்பட்டுள்ள பாடல் ! ;)))))

    அன்பான வாழ்த்துகள்.

    VGK

    ReplyDelete
  23. பழனி.கந்தசாமி said...
    //நான் அவதானித்த வரையில் //

    இது இலங்கைத் தமிழ் அல்லவா? கோயமுத்தூருக்கு எப்படி வந்தது?

    ஆஸ்திரேலியாவில் நிறைய இலங்கைத்தமிழ் அம்மணியருடன் உரையாடியதில் இந்த வார்த்தை மிகவும் கவர்ந்தது ....

    இதற்கு சரியான கோயமுத்தூர் தமிழ் சிக்கலீங்க ஐயா..

    தங்களுக்குத்தெரிந்தால் சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்..

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மா என்ற குரல் கேட்டு நம்பமுடியாமல் திகைத்து திரும்பிப்பார்க்க சாட்சாத் அவரது மகனே நின்றிருந்தார்..

    ஆனந்த அதிர்ச்சியுடன் ஒரு வருடம் கழித்து வந்த மகனுடன் களிப்புடன் பேசிக்கொண்டிருந்த காட்சி மனம் நிறைத்தது//

    பாசமிகு காட்சியை வேறு யாரோ போலச் சொல்லி வெகு அழகாகக் காட்டிவிட்டீர்கள். உணர்ந்து கொண்டோம்.//

    நன்றி ஐயா சிறப்பான கருத்துரைகளுக்கு....

    அது உண்மையிலேயே என் தோழிதான்..

    நான் வாரிசை வழி அனுப்பச்சென்றிருந்தேன்..

    அவர் யாரையோ வரவேற்க வந்திருக்கிறோம் ..அடையாளம் தெரியுமோ தெரியாதோ என எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார் ...

    ReplyDelete
  25. "அவர்களை நாம் ஓர் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, நாமும் அவர்களைப் போலவே கடுமையாக உழைத்து, அவர்கள் அளவுக்கு நம்மால் வர முடியா விட்டாலும், ஏதோ கொஞ்சம் முன்னேற முயற்சிபோம்.அன்பான வாழ்த்துகள்.

    VGK" --உண்மைதான்! ம்ய்ர்ச்சிக்கிறேன்!

    ReplyDelete
  26. இன்றைய பதிவில் அழகாக ஏரோப்ளேனாக பறந்துக்கொண்டே இருக்கிறது அதுவும் விதவிதமாக ரசித்து குதூகலிக்கும் விதமாக.... கலர் கலராக... வரிசையாக....

    அனிமேஷன்லயும் அசத்துறீங்கப்பா நீங்க....

    தலைப்பு வெகு பொருத்தம்...

    பனிப்பொழிவில் அழகிய பொம்மைகளாக்கி அதற்கு தொப்பி ட்ரெஸ் இட்டு நிற்கவைத்ததும் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவதையும் தங்கள் கேமரா விட்டுவைக்கவில்லை. க்ளிக்கிவிட்டதே....

    ஃப்ளைட் வந்து நின்னதும் டொயிங்குன்னு படிக்கட்டு போய் நிற்கிறது பார்க்க ரொம்ப க்யூட்டாக இருக்கிறது...

    நுணுக்கமான விஷயங்களை கூட விடாமல் படம் பிடித்து போடும் உங்க நேர்த்தி எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்குப்பா....

    நிஷாகந்தி பூவைப்பற்றி ரொம்ப விரிவாக சில தினங்களுக்கு முன் பகிர்ந்தீர்கள்.. இப்ப அதன் தொடர்ச்சியாக இலையோடு மொட்டு சேர்ந்திருப்பதை இத்தனை தத்ரூபமாக படம் பிடித்து போட்டிருப்பது மிக மிக அழகு.. ஆச்சர்யமாக இருந்தது.. இலையில் மொட்டு விட்டிருக்கே என்று...

    பூ மலரும்போது மனதை கொள்ளையடிக்கும் மணம் முழுக்க பரவும் என்பதை நான் படித்ததை இப்ப உணரவும் முடிந்தது... இனி நிஷாகந்திப்பூ என்றாலே இராஜராஜேஸ்வரிம்மா தான் நினைவுக்கு வருவீங்க....

    ரோஸ் அழகாக மலர்கிறது....

    கார் ஸ்டியரிங் திருப்புற வேகமும் சாலையின் தூய்மையும் சிக்னல் எல்லாம் தாண்டாம ஒழுங்கா வண்டிகள் எறும்புகள் போல ஊர்வதையும் ரசிக்க முடிந்தது....

    வித்தியாசமான வரவேற்பு பிள்ளைக்கு தாயிடம் இருந்து கிடைக்க பிள்ளை செய்த மிக அருமையான யோசனை ரசிக்க வைத்ததுப்பா....

    யாருன்னே தெரியாம எப்படி இருப்பாங்களோன்னு தெரியாம ஏர்போர்ட்ல வந்து காத்திருக்கும்போது ஆயிரம் சூரியனை பார்த்த சந்தோஷ மலர்ச்சி கண்டிப்பா அந்த தாயின் முகத்தில் தெரிந்திருக்கும்.. உங்க கிட்ட கேமரா இருந்திருந்தா அதையும் தவறாம படம் பிடிச்சிருக்கும்.... உங்கள் எழுத்துகளிலேயே அந்த தாய் திடுக்குனு தன் மகனே வந்து நிற்பதை பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி இருந்திருப்பதை மனக்கண்ணால் பார்க்க முடிந்ததுப்பா...

    எல்லோருக்குமே ஒரு தனித்தன்மை உண்டு... அழகிய படங்கள், அதிலும் அனிமேஷன் கூடவே தெளிவான ரசிக்கும்படியான கட்டுரைகளும் இதற்கு முன்னரும் நான் யாருடைய வலைப்பூவிலும் கண்டதில்லை.. இனியும் இல்லை.. எப்பவும் த ஒன் அண்ட் ஒன்லி ஒன் எங்க இராஜராஜேஸ்வரி தான்....

    என்றும் உங்கள் சிரத்தையும் உழைப்பையும் இதோ சாட்சியாக்குகின்றன அழகிய உங்கள் பகிர்வு....

    எப்போதும் போல் ரசிகர்களான நாங்கள் உங்களை பின் தொடர்கிறோம் உங்களுக்கு அன்பு நன்றிகள் சொல்லிக்கொண்டு....

    அழகு அழகு.....கொள்ளை அழகு.... உங்களுக்கு கண் பட்டுவிடுமோ என்று எனக்கு எப்பவும் பயமும் உண்டு... திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்கப்பா... இறைவன் என்றும் உங்களுக்கு நல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன் இறைவனை....

    ReplyDelete

  27. மஞ்சுபாஷிணி said...//

    வித்தியாசமான வரவேற்பு பிள்ளைக்கு தாயிடம் இருந்து கிடைக்க பிள்ளை செய்த மிக அருமையான யோசனை ரசிக்க வைத்ததுப்பா....

    யாருன்னே தெரியாம எப்படி இருப்பாங்களோன்னு தெரியாம ஏர்போர்ட்ல வந்து காத்திருக்கும்போது ஆயிரம் சூரியனை பார்த்த சந்தோஷ மலர்ச்சி கண்டிப்பா அந்த தாயின் முகத்தில் தெரிந்திருக்கும்.. உங்க கிட்ட கேமரா இருந்திருந்தா அதையும் தவறாம படம் பிடிச்சிருக்கும்.... உங்கள் எழுத்துகளிலேயே அந்த தாய் திடுக்குனு தன் மகனே வந்து நிற்பதை பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி இருந்திருப்பதை மனக்கண்ணால் பார்க்க முடிந்ததுப்பா...//

    தென்றலாய் மகிழ்வித்த அருமையான கருத்துரைகளுக்கு நன்றி தோழி !

    கையில் காமிரா இருந்தது ...
    நொடியில் நிகழ்ந்த சந்திப்பில் மகிழ்ச்சியில் பங்கு கொண்டதில் படம் பிடிக்கவெல்லாம் தோன்றவில்லை !

    ReplyDelete
  28. அவதானித்தல் (இலங்கைத் தமிழ்) பார்த்தல் (கோவைத்தமிழ்)

    ReplyDelete
  29. பழனி.கந்தசாமி said...

    அவதானித்தல் (இலங்கைத் தமிழ்) பார்த்தல் (கோவைத்தமிழ்)


    மிகவும் நன்றி ஐயா..
    கொஞ்சும் கோவைத்தமிழை நினைவுபடுத்தியதற்கு

    ReplyDelete
  30. பதிவுலகக் கோவிலுக்குள் நுழைந்து வணங்கிவிட்டேன். தொடரவேன், என் பணிகளை.கை தொழவைக்கும் படங்கள்

    ReplyDelete
  31. பூக்கள் மலர்ந்திருந்து மகிழ்விக்கின்றன.

    ReplyDelete