Saturday, June 14, 2014

இஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.




ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே
நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி
பாசமுள்ள  கணபதி ..ஈச்சனாரி கணபதி ..ஆவணியில் பூத்தவனே
நாத கணபதி கீத கணபதி ..வழிகாட்டும் மோனகணபதி
சங்கரனார் தேடி வரும் தருணகணபதி
வீர கணபதி ..விஜய கணபதி..பால கணபதி
சங்கடங்கள் தீர்த்து வைக்கும்  வகரதுண்ட நாயகனே 
ஓம் கணபதி.. ஓம கணபதி ஓம்.. கணபதி ஓம்..

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்

தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே என்னை
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே

அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகரைச் சரணடைந்தால் இஷ்ட் வரங்களும் கஷ்டமின்றி அருளுவார்..!

முதலில் பிள்ளையார் சுழி போட்டுதான் எந்த 
காரியத்தையும் தொடங்குவது தொன்றுதொட்ட மரபு... .

ஞானமுதல்வனான வித்தக விநாயகப் பெருமான் சிறப்புடன் விளங்கும்   கோவையில் அமைந்திருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில் தனிச்சிறப்பு மிக்கது..!

மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படுகின்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த சமயத்தில், அந்தக் கோவிலுக்காக ஒரு விநாயகர் சிலை வடிக்க மதுரையிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அங்கு அழகுற வடிவமைத்த சிலையை மாட்டுவண்டி மூலம் பேரூருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வாறு வரும்போது கோவை எல்லையில் ஈச்சங்காடு என்ற இடத்தில் வண்டியின் அச்சு உடைந்துவிட்டது. எனவே விநாயகர் சிலையை இறக்கி மேடான பகுதியில் வைத்துவிட்டு வண்டியைப் பழுதுபார்த்தனர். பின்னர் விநாயகர் சிலையை எடுத்து வண்டியில் வைக்க எவ்வளவோ முயன்றும் அதை அசைக்கவே முடியவில்லை. 

அச்சமயம் யானை பிளிரும் சப்தத்துடன் ஒரு அசரீரி குரல், "நான் இங்கேயே இருக்கிறேன்' என்று ஒலித்தது. அதைக்கேட்டு அதிசயித்த பக்தர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விநாயகர் விருப்பப்படி- ஈசன் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே ஈச்சங்காட்டு விநாயகர் என்ற திருநாமத்துடன் சிறிய அளவில் கோவில் எழுப்பினர். 

அதன்பின் ராஜகோபுரம், உள்சுற்று மண்டபம், வெளிச்சுற்று மண்டபம், யாகசாலை மண்டபம், மகாமண்டபம் என எழிலுடன் வடிவமைத்து 
1977-ல் சிறப்பாக கும்பா பிஷேகம் செய்தனர். 

ஈச்சங்காட்டு விநாயகர் என்ற பெயர் மருவி ஈச்சனாரி விநாயகர் என்ற சிறப்பு டன் விளங்குகிறது ஆலயம். 

 சங்கடஹர சதுர்த்தியில்  விநாயகரை வழிபட்டால் இழந்ததைத் திரும்பப் பெறலாம் என்னும் நம்பிக்கை  உள்ளது.
அஸ்வினி முதலான ஒவ்வொரு நட்சத்திர நாளிலும், அந்த நட்சத்திரப் பெயரில் இந்த விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் படுகிறது.

அஸ்வினி- தங்கக் கிரீடம், அறுகம்புல் அலங்காரம்.

பரணி- அறுகம்புல் மாலை.

கார்த்திகை- வெள்ளிக்கவச அலங்காரம்.

ரோகிணி- சந்தன அலங்காரம்.

மிருகசீரிடம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.

திருவாதிரை- நிறைமணி (காய்கறி) அலங்காரம்.

புனர்பூசம்- தாமரைப் பூமாலை.

பூசம்- தங்கக் கிரீடம், மாலை அலங்காரம்.

ஆயில்யம்- பச்சிலை அலங்காரம்.

மகம்- திருநீறு அலங்காரம்.

பூரம்-  அன்னம், கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.

உத்திரம்- பழ அலங்காரம்.

ஹஸ்தம்- வஸ்திர அலங்காரம்.

சித்திரை- தங்கக் கிரீடம், வெள்ளிக்கவச அலங்காரம்.

சுவாதி- தங்கக் கவசம், அன்ன அலங்காரம்.

விசாகம்- தங்கக் கிரீடம், ரோஜா மாலை.

அனுஷம்- தங்கக் கிரீடம், வெள்ளிக்கவசம், அறுகம்புல் அலங்காரம்.

கேட்டை- வெள்ளிக் கவசம், குங்கும அலங்காரம்.

மூலம்- வெற்றிலை அலங்காரம்.

பூராடம்- சம்பங்கி மாலை அலங்காரம்.

உத்திராடம்- சுவர்ண அலங்காரம்.

திருவோணம்- மலர் அலங்காரம்.

அவிட்டம்- குங்கும அலங்காரம்.

சதயம்- அன்ன அலங்காரம்.

பூரட்டாதி- தங்கக் கவசம், ரோஜா மாலை அலங்காரம்.

உத்திரட்டாதி- தங்கக் கவச அலங்காரம்.

ரேவதி- வெண்ணெய் அலங்காரம்.

அவரவர் நட்சத்திர நாளில் ஈச்சனாரியில் வழிபடுவது 
கூடுதல் சிறப்பாகும்.
eachanari-vinayagar-temple
அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து  தரிசிக்கும் வண்ணம் திறந்திருக்கும் ஆலயம்.

அனுதினமும் பிரம்மமுகூர்த்த வேளையில் கணபதி ஹோமம் நடக்கும். 

ஆறுகால பூஜைகளுடன் அபிஷேகம், அர்ச்சனைகள் சிறப்புற நடக்கும்.

அனுதினமும் மதியம் அன்னதானம் நடக்கும்.

வெள்ளிக்கிழமையன்று வாகன பூஜைகள் விமரிசையாக நடக்கும்.
கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கினால் பதிவெண்ணை வாகனத்தில் எழுதுவதற்குமுன் விநாயகரிடம் சமர்ப்பித்த பின்தான் (அதாவது ஈச்சனாரியில் வருகைப் பதிவு செய்தபின்தான்) மற்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளனர். வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம்.

தினமும் மாலை 6.30 மணியளவில் கட்டளைதாரர்கள் அடிப்படையில் விநாயகர் தங்கத் தேரில் பவனி வந்து அருள்புரிவார்.
அம்மையப்பன் அம்சமாக (அர்த்தநாரி) இங்கு விநாயகர் அருள்புரிகிறார்.
உமையொரு பாகம் கொண்ட ஈசனின் ஒருங்கிணைந்த வடிவமுடைய ஈச்சனாரி விநாயகரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபடுவது கிடைத்தற்கரிய பெரும் பேறாகும்..!
அன்பே சிவம் என்பதற்கேற்ப,  திருக்கோவிலில் அனைவரும் 
இன்முகத்துடன் உபசரிக்கும் தன்மையை  காணலாம். 

குடும்பப் பிரச்சினைகளை நினைத்து வருபவர்கள் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின் சுமைகளை இறக்கி சுகமாக வீட்டுக்குச் செல்வர் 

தட்டு காணிக்கைகளை தனி உண்டியலில் போட்டு, 
சதவிகித அடிப்படையில் பகிர்ந்துகொள்கின்ற பண்பு 
வேறெங்குமில்லாத சிறப் பம்சம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் தரிசனம் செய்தால் பன்மடங்கு பலன் உண்டாகும்.

 சிறப்புமிகு ஈச்சனாரி ஆலயம் கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், கோவையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.!




20 comments:

  1. இன்று முதல் பதிவாய்
    விநாயகரை தரிசித்து மகிழ்ந்தோம்
    திருவுருவப் படங்களுடன் விளக்கங்களுடன்
    பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.
    விநாயகரை வழிபட்டால் என்ன பயன் கிடைக்கு என்பதையும் விசேடகாலங்களில் வழிபட்டால் பண்மடங்கு நண்மை கிடைக்கும் என்பதையும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாடல்கள் அதற்கான விளக்கமும் படங்களும் நன்று வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஒருமுறை சென்றுள்ளேன்... இப்போது ஒருமுறை தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி... படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு...

    ReplyDelete
  4. வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயக தரிசனம் காலையில்! நட்சத்திர வாரியாக சிறப்பு அலங்காரம் சிறப்புத் தகவல். அப்பா.... எவ்வளவு படங்கள்!

    ReplyDelete
  5. அழகிய திருவுருவங்கள் தரிசனம் கிட்டியது தங்கள் தயவால். அவர் மகிமையும் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  6. ஈச்சனாரி விநாயகர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியில் அவதரித்த பிள்ளையாரப்பாவுக்கு முதலில் என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. வடைகளும், நெய் கொழுக்கட்டையும், பால் பாயஸமும் முழுவதுமாகவும், சுண்டல் கொஞ்சமாகவும் நான் எனக்கே எடுத்துக்கொண்டேன். ;)

    வடை மிகவும் ஆறிப்போய் விட்டது. காரசாரமாகவும் இல்லை. ;(

    வெள்ளைப்பதார்த்தங்களான இட்லி, உப்புக்கொழுக்கட்டை, சாதம், சாதா கொழுக்கட்டை முதலியவற்றை நான் வேண்டாம் என ஒதுக்கிவிட்டேன். நீங்களே சாப்பிட்டுக்கோங்கோ.

    >>>>>

    ReplyDelete
  9. என் நக்ஷத்திரம் புனர்பூசம். மிகவும் பொருத்தமாகத்தான் தாமரைப்பூமாலை எனப் போட்டுள்ளீர்கள். தாங்களே எனக்காக மாலை போட்டு வேண்டிக்கொள்ளுங்கோ.

    >>>>>

    ReplyDelete
  10. வரவர காணொளியாகக் காட்டி அங்கு இங்கு தப்பித்துச்செல்ல முடியாதபடி கட்டிப்போட்டு அசத்துகிறீர்கள்.

    டான்ஸ் ஆடும் பிள்ளையார் பார்த்து மகிழ்ந்தேன். பாடலும் இசையும், காட்சிகளும், கோயிலும் அருமையாய் இருந்தன. ;)

    >>>>>

    ReplyDelete
  11. இழந்ததை மீட்டுத்தருவாரா தங்களின் ஈச்சனாரி விநாயகர் !!!!! சந்தோஷம்.

    என் ஆத்மார்த்த நட்பு ஒன்று பாராமுகமாக உள்ளது.

    அதில் நான் இழந்துள்ளதை முதலில் மீட்டுக்கொடுக்கச் சொல்லுங்கோ. அப்போது தான் நான் இதை நம்புவேனாக்கும். ஹூக்க்க்க்க்கும் !

    >>>>>

    ReplyDelete
  12. அச்சு முறிந்து யானை பிளிறும் சப்தத்துடன் ஓர் அசரீரி குரல் .... கதை நல்லா இருக்குது.

    திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் ‘அச்சரப்பாக்கம்’ என்ற ஒரு ஊர் உள்ளது. அங்கும் இதுபோல அச்சு முறிந்த ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  13. எல்லாப் படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல அழகோ அழகு !

    தொடர்புடைய பதிவு ஒன்றினில் ஏராளமாக [16/35] என் பின்னூட்டங்களே உள்ளன. ஆனால் அங்கு பிள்ளையார் வாயையே திறக்காமல் கம்முன்னு கருங்கல்லாக இருந்துள்ளார். ;(

    மற்றொன்றில் [03.05.2011] அருகம்புல்லு போல கொஞ்சூண்டு தான், நான் கருத்துச்சொல்லியும், பிள்ளையார் ஆறுதலாக ஒரு வார்த்தைச் சொல்லியுள்ளார். அதில் எனக்கு ஏதோவொரு மகிழ்ச்சி + திருப்தி.

    தொந்திப்பிள்ளையார் என்றாவது என்னிடம் மாட்டுவார். அப்போ பேசிக்கொள்கிறேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ;) 1305 ;)

    ooo o ooo

    ReplyDelete
  14. ஈச்சனாரி விநாயகர் வரலாறும்,அவர் எழுந்தருளியிருக்கும் கோவிலின் சிறப்புக்களையும், நட்சத்திர பெயரில் செய்யும் அலங்காரங்களை விலாவாரியாக தந்தது கூடுதல் சிறப்பு. அழகான படங்களுக்கு என்ன சொல்வது. வாழ்த்துக்கள்,நன்றி.

    ReplyDelete
  15. ஈச்சனரி விக்கினன் இன்னருள் அற்புதங்கள்
    பேச்சின்றிச் செல்லப் பணித்து!

    எத்தனை சிறப்பும் அற்புதமும் அழகிய தோற்றங்களும்...
    மிக அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  16. ஈச்சநாரி விநாயகரைப் பற்றிய இனிய பதிவில் மனம் மகிழ்ந்தது.
    வாழ்க நலம்..

    ReplyDelete
  17. பொள்ளாச்சியில் மூன்றுஆண்டுகள்(1970-73) இருந்தபோது கோவை வரும்போது ஈச்சனாரி பிள்ளையார் கோயிலுக்கு போகாமல் இருந்ததில்லை.நான் முதன் முதல் ஜாவா மோட்டார் சைக்கிள் வாங்கியபோது அங்கு சென்று அர்ச்சனை செய்துதான் வண்டியை எடுத்தேன். பின்பு 1998-2000 ஆண்டுகள் கோவையில் இருந்தபோதும் தவறாமல் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் பதிவின் மூலம் திரும்பவும் அங்கு போய் வந்ததைப் போல் உணர்ந்தேன். படங்கள் அருமை. விளக்கங்களும் அருமை. வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
  18. 1980களில் கோவையில் பணியாற்றியபோது ஈச்சனாரி கோயிலுக்குச் சென்றுள்ளேன். தங்களது பதிவு மறுபடியும் என்னை அங்கே அழைத்துச் சென்றது. நன்றி.

    ReplyDelete
  19. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈச்சனாரி விநாயகரின் தரிசனம் கிடைத்தது. இப்போது உங்கள் தளம் மூலமாக மீண்டும்......

    நல்லதொரு கோவில். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. ஈச்சனாரி விநாயகர் பற்றிய விரிவான விளக்கம் அருமை அம்மா. அதுவும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் வெவ்வேறு அலங்காரங்கள் என்பது ஆச்சிரியம். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா.

    ReplyDelete