Monday, June 23, 2014

அருள் விருந்தளித்து மகிழும் ஸ்ரீவிருந்தீஸ்வரர்விஸ்வநாயகி





எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய்என்று உன்னையே உள்குகின் றேன்உணர்ந்து உள்ளத்தால்
புற்றாடு அரவா புக்கொளியூர்அவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.

 பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, 
மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக் கொளியூரில் உள்ள 
அவினாசி என்னும் திருக்கோயிலில் விரும்பியிருப்பவனே. 
ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே 
எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்
உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; 
உன்னை எக்காரணத்தால் மறப்பேன் !
 அவினாசி தேர்                           அவினாசி கோபுரம்..                      

வாழ்வாவது மாயம்இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்  பசிநோய்செய்த பறிதான்
தாழாதுஅறம் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமென் னீரே.

 உலகத்தார்க்கு உறுதிப் பொருளை உணர்த்தி அருளிச் செய்த  சுந்தரர் திருப்பதிகம்,

உலகில் செல்வம் முதலியவற்றோடு வாழும் வாழ்க்கையானது நிலையில்லாதது. இவ்வாழ்வு மண்ணாய்ப் போவது நிச்சயம். 

பசி நோயினால் கொள்ளை கொள்ளப்படுதலின், பிறப்பென்னும்
கடலிலே தத்தளித்து அமிழ்ந்து இவ் உடல் வாழ்க்கை வீண் போகும். 

ஆதலால், பின்னே பார்த்துக் கொள்வோம் என்று தாமதியாமல் 
நல்வினை செய்யுங்கள். 

பெரிய தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும் அவருடைய திருவுந்தித் தாமரை மலரில் உள்ள பிரமனும் முறையே திருவடியையும் முடியையும் காணும் பொருட்டுப் பூமியின் கீழும், ஆகாயத்தின் மேலும் போகும்படி சோதி வடிவுடன் நின்ற பெருமானது திருக்கேதாரம் என்று சொல்லுங்கள். அதுவே உம்மை உய்விக்கும்.

சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் 
தோறும் சென்று வழிபட்டு வந்தார்
அவினாசியில் அவினாசிலிங்கேஸ்வரையும்  
கருணாம்பிகை அன்னையையும் தரிசித்து விட்டு,  

கோவையிலுள்ள விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது  
மிகுந்த பசி ஏற்பட்டது. ,தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். 

பெரிய மரங்கள் எதையும் காணவில்லை. ஒரு முருங்கை மரத்தடியின் 
கீழ் கிடைத்த சிறு நிழலில் அமர்ந்து விட்டார்.

அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர்  வேடுவ தம்பதி வடிவில் அங்கே வந்த சிவனும், பார்வதியும் முருங்கை இலைகளைப் பறித்து அதனை சமைத்து சுந்தரருக்கு விருந்து படைத்தனர்.
கணவன், விசிறி விட, மனைவி  வன முருங்கைக்கீரையுடன் 
அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் 
சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது.
இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக 
வந்தது இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை 
அறிந்த சுந்தரர் நெகிழ்ந்து போனார். 

சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் 
"விருந்தீஸ்வரர்' ஆனார்.

இந்த சம்பவம் நடந்த தலம் கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. இங்குள்ள சிவன் 'விருத்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார் 

மணலால் செய்யப்பட லிங்கமாக காட்சி தரும் இவருக்கு 
முருங்கை இலை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது 

 ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார்.  

சிவன், விருந்தீசுவரர் என அழைக்கப்படுகிறார். 
அம்மன் விஸ்வநாயகி அம்பாள் (பார்வதி, 
தனிச் சன்னிதியில் தாமரைப் பீடத்தில் காட்சியளிக்கிறார்
[Gal1]
இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. 

சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஜடாமுடி விரிந்து கிடக்க நடனமாடுவார். 
ஆனால், இங்கு தலை முடித்து அருள்பாலிக்கிறார். 

சிவன் தனது வாகனமான நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்தார். இதையடுத்தே கோயில்களில் "அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் ஏற்பட்டதாக ஐதீகம்....
[Gal1]
அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் 
கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து,  வேண்டியதை கொடுத்து குளிர்விப்பார்
[Gal1]
கோவிலுக்குள்  ஒரு சிறிய தனிச் சன்னிதியில் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை  வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும். லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்வது விஷேசம்..
[Gal1]
சிறிய திருவடியும் பெரிய திருவடியும்,,,

மிகவும் பழமையான இத்தலம் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி என மூன்று யுகங்களிலும் அழைக்கப் பட்டது

கோயிலில் உள்ள கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறுவப்பட்டது என தெரிகிறது.



[Gal1]
.கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் துடியலூருக்கு அருகேயுள்ள K.வடமதுரை என்னும் பகுதியில்  சாலையோரமாக கோவில் அமைந்துள்ளது

 வடமதுரை விருந்தீஸ்வரர் ஆலயமும் 
இடிகரையில் அமைந்துள்ள வில்லீஸ்வரர் ஆலயமும், மற்றும்
அருகே உள்ள கொங்குநாட்டுத்திருக்கடையூர் என்று புகழ்பெற்ற  கோவில்பாளையம் காலகாலேஸ்வரர்  ( சுட்டவும்)
ஆலயங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. 

இந்த மூன்று ஆலயங்களின் இடையே ஆதியில் சுரங்கப்பாதையும் இருந்துள்ளது.

போர் நடக்கும் காலங்களில், இம்மூன்று ஆலயங்களுக்கும் இடையே உள்ள சுரங்கப்பாதை வழியாக மன்னர் சென்று சிவனை வழிபட்டாராம்.
[Image1]

18 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    அறியமுடியாத தகவல்கள் அறிந்தேன்.படங்கள் ஒவ்வொன்றும் அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. விருந்தீசுவரர் விசுவநாயகி அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. அதிகார(ம் பெற்ற) நந்தி தகவல் அறிந்தேன். சேர ராஜ்ஜியத்தில் சோழ ஆலயம்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..

      கோவையில் நிறைய கோவில்கள் சோழர்களால் கட்டப்பட்டிருக்கின்றன..
      புத்திர பாக்கியம் வேண்டி கரிகால சோழமன்னனால் எழுப்பட்ட கோட்டை சங்கமேஸ்வரர் புகழ் பெற்றவர்..
      http://jaghamani.blogspot.com/2013/12/blog-post_1.html
      பேரூர் ஆலயத்திலும் திருப்பணிகள் சோழர்களால் மேற்கொள்ளப்படிருக்கின்றன..

      Delete
    2. ஆம். அறிந்திருக்கிறேன். அந்த நேரத்தில் சேர ராஜ்ஜியம் சோழர்களால் ஆளப்பட்டதா, இல்லை கோவில் திருப்பணி மட்டுமா என்று யோசித்துப் பார்த்தேன்.

      Delete
  4. புதிய தகவல்... சிறப்பான தகவல்... நன்றி அம்மா...

    ReplyDelete
  5. ஸ்ரீ விஸ்வநாயகி சமேத ஸ்ரீ விருந்தீஸ்வர ஸ்வாமி அனைவருக்கும் நல்லருள் பொழியட்டும்!..

    ReplyDelete
  6. வித்தியாசமான பெயர் விருந்தீஸ்வரர்.முதல் படம் மிகவும் நன்றாக இருக்கு.சிவன்,பார்வதி வித்தியாசமான படங்கள்.அழகான படங்கள்.கோவிலின் சிறப்புகள்,தகவல்கள் கொண்ட நல்பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஆஹா, இன்றைய தலைப்பிலேயே மிகப்பெரிய விருந்தளித்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    எனக்குத்தான் காலாகாலத்தில் நேரப்படி சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை.

    நேற்றும் இன்றும் சகுனமே சரியில்லை. அதனால் மனதும் சரியில்லை.

    வரவேண்டும் என நினைத்து நினைத்து பலமுறை வருகை தந்தும் எதுவுமே மனதுக்குப் பிடிக்காமல் திரும்பச் செல்லும்படியாக மனதில் நீண்ட நேரப் போராட்டம் நடந்தது.

    விருந்து சாப்பிட ஏனோ வயிற்றில் பசியும் இல்லை. நாக்கில் ருசியும் இல்லை. மனதினில் ஓர் மகிழ்ச்சியும் இல்லை.

    சரி, என் சொந்தக்கதை + சோகக்கதையெல்லாம் கேட்க உங்களுக்கு நேரம் இருக்காது, தான். OK .... OK .....

    >>>>>

    ReplyDelete
  8. ’சோதி வடிவுடன் நின்ற திருக்கேதாரம்’

    என்று நானும் இப்போது சொல்லிவிட்டேன்

    எப்படியோ என்னையும் உய்வித்தால் சரியே !

    >>>>>

    ReplyDelete
  9. கோவை மாவட்டம் துடியலூருக்கு உடனே புறப்பட்டு வர என் மனமும் துடியாய்த் தான் துடிக்கிறது.

    நான் அங்கு வந்தால் என்னை அங்கு யார் வரவேற்கப்போகிறார்கள்?

    நான் என்ன சுந்தரரா ?

    மிகச் சாதாரணமானவன் அன்றோ !

    >>>>>

    ReplyDelete
  10. Replies
    1. முருங்கை இலைகளைப் பறித்து வந்து, நன்கு கழுவிவிட்டு அடை வார்க்கும் போது, அடை மாவில் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்பார்கள்.

      பொதுவாக முருங்கைக்காய், முருங்கை இலை முதலியன நல்லதொரு சத்துள்ள பொருட்கள் தான்.

      அதிலும் பகவானே சமைத்துக்கொடுத்தது என்றால் ‘சிவனே’ன்னு உள்ளவனும் ‘சக்தி ஏற்படக்கூடுமே !

      Delete
  11. அதிகார நந்தி ...... அரிதாரம் பூசாத .......
    அழகான பெயராகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. ஏழாம் நூற்றாண்டு >>>> சோழர் காலம் >>>> கல்வெட்டு >>>> ஒரே நேர்க்கோடு >>>> சுட்டவும் >>>> சுரங்கப்பாதை என ஏதேதோ சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    படங்களெல்லாம் வழக்கம் போல ஜோர் ஜோர்.

    அனைத்துக்கும். அனைத்துக்கும், அனைத்துக்குமே என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள். Bye !

    ;) 1314 ;)

    ooo ooo

    ReplyDelete
  13. விருந்தீஸ்வரர் தர்சனம் கிடைத்தது.

    ReplyDelete
  14. நண்பனைக் காண சில வருடங்களுக்கு முன்னர் துடியலூர் வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட சிறப்பான கோவில் இருப்பதெல்லாம் தெரியாது. தெரியாத செய்தியை அழகான படங்களுடன் தந்திருக்கிறீர்கள் அம்மா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான படங்கள். கோவை பல முறை சென்றிருந்தாலும் இக்கோவில் பற்றி அறிந்ததில்லை.

    ReplyDelete