Sunday, October 14, 2012

கொலு கொண்டாட்டம் !






ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே”

“ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ
மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ”

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான்  சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி 
இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.


நவராத்திரியின் சிறப்பு அம்சமான கொலு மேடை 9 படிகள் கொண்டதாக 
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக முதலாம் படி:  புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களினாலும்  படிப்படியாக அறிவு நிலை வளர்ச்சியுற்று ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைத்து கொலு அமைத்திடுவது வழக்கம்.

தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் உருவாக்கிய பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம்..

துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் 
விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர். 

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி .விஜயதசமி பண்டிகை. 





11 comments:

  1. படங்களை ரசித்தேன்.

    ReplyDelete
  2. A successful harmony of divinity and art is felt through this festive pictures, a visual treat!

    ReplyDelete
  3. படங்களுடன் நவராத்திரி
    சிறப்புப் பதிவை அருமையாகத் துவங்கியுள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - கொலு பற்றிய பதிவு அருமை. படங்கள் அத்தனையும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கொலு வைப்பதின் காரணம் - 9 படிகள் அமைப்பதின் தாத்பர்யம் - அனைத்துமே அருமை -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. ஒரு நாள் முன்னால் கொலு வைத்துவிட்டீர்கள். வருகிறேன்!

    ReplyDelete
  6. முப்பெரும் தேவிய‌ர் திருவ‌ருள் ந‌ம‌க்காக‌...

    ReplyDelete
  7. இன்னைக்கு முதல் நாள் கொலு பார்த்தாச்சு உங்கள் பதிவில்.

    ReplyDelete
  8. சிறப்பு பகிர்வுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  9. அருமை . அழகு. வரிசையாக வாசிப்பதற்காக கொலுவிலிருந்து ஆரம்மிக்கிறேன். நல்வாழ்த்துகள் சகோதரி. மீண்டும் வருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. காட்டியுள்ள கொலு பொம்மைப்படங்கள் நல்ல அழகு.

    மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளின் தாத்பர்யங்களும், அதனால் ஏற்படும் நன்மைகளும். மிக அழகாக விளக்கிக்கூறியுள்ளீர்கள்.

    பார்க்கவும் படிக்கவும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete